யாசகம் ♥ 11
சன்விதா வீட்டை விட்டு கிளம்பும் போதே நண்பகல் இப்போது மணி ஐந்தாகி இருந்தது. ஷாப்பிங் முடித்து அவற்றையெல்லாம் தெரிந்த முச்சக்கர வண்டி மூலம் மூட்டை கட்டி வீட்டுக்கு அனுப்பி விட்டிருந்தாள். வெளிநாட்டிலிருந்து வந்த தோழி ஒருத்தி போனில் அழைத்து பீச் வர கேட்டிருந்தாள். சரி அவசர வேலை ஏதும் இல்லை எப்படியும் கரண் வந்து சேர நேரமாகும் போய் சந்தித்து வருவோம் என புறப்பட்டுவிட்டாள்.
பாதி வழியில் மீண்டும் அதே உணர்வு. யாரோ பின்தொடர்வது போல் ஸ்கூட்டி பக்க கண்ணாடியில் பார்க்க அந்த மாலை நேர போக்குவரத்து நெரிசலிலும் அந்த திறந்த ஜீப் அவளையே பின் தொடர்வது போல் ஒரு பிரமை ஏற்பட பயத்தில் கைகள் வியர்க்க தொடங்கியது. சொல்ல போனால் கடையில் நிற்கும் போதே இரண்டு தரம் அருகில் வந்து விலகி சென்றனர். கடை ஊழியர் கூட எச்சரித்து இருந்தார். அவர்களை பார்க்க சந்தேகமாக இருப்பதாக ஆனால் இப்படியே வீட்டிற்கும் போக முடியாது செல்லும் வழியில் சற்று தூரம் தனியாக செல்ல வேண்டி வரும் தற்போது கூட்டமாக உள்ள இடம்தான் பாதுகாப்பு. கண்ணா என்ன செய்ய என்று யோசித்தவளின் அவள் கண்ணெதிரே தென்பட்டது அந்த AS மால்.
♥♥♥♥♥
அவன் மெதுவே கண்விழித்து சுற்றி பார்த்தான். அது ஒரு ஒதுக்கு புறமான இடமாக இருக்கவே சமாளித்து எழுந்தவனுக்கு விபரீதம் உறைக்க இருக்காது என்று தெரிந்தும் தனது போனை தேடினான், கிடைக்கவில்லை தள்ளாடியவாறே வீதிக்கு வந்தவன் அருகே இருந்த கடையில் இருந்தவரின் போனை கடனாக வாங்கி நம்பரை அழுத்தினான்.
♥♥♥♥♥
சன்விதா ஸ்கூட்டியை கீழே உள்ள பார்க்கிங் கொண்டு செல்லாமல் அருகே இருந்த வழமையாக செல்லும் பீட்ஸா ஹட் முன் நிறுத்தியவள் உள்ளே இருந்தவர்களுக்கு ஸ்கூட்டியை பார்த்துக்கொள்ளுமாறு கையசைத்து விட்டு மாலினுள் நுழைந்தாள். கரனுக்கும் அப்பாவுக்கும் போன் பண்ணனும் அப்படியே அருகே உள்ள மகளிர் காவல் நிலையத்திற்கும் போன் பண்ணனும் இதையெல்லாம் பிட்ஸா ஹட்டில் வைத்து செய்ய முடியாது. வருபவர்கள் கொஞ்சம் ஆபத்தான ஆட்களாக தென்பட கண்ணாமூச்சி விளையாடுவதே சரி வரும் என முடிவெடுத்தாள்.
♥♥♥♥♥
போனை கடனாக கொடுத்தவன் ஜிங்கா புங்காவின் அருகில் நின்ற ஓமகுச்சி நரசிம்மன் போல் நின்றான். ஒரு நம்பர் பதிலின்றி போக அடுத்ததாக ஒரு சில இலக்கங்களை அழுத்த ஹலோ என்றவனிடம் ரத்தின சுருக்கமாக சொன்னான் "தே அர் ஹண்டிங் த டீர்"
♥♥♥♥♥
‘எங்கே போய் தொலைந்தான் இந்த டிஸ்கவரி சேனல். இந்த டைனோசர் தேவை இல்லாத நேரமெல்லாம் கண்ணுல தென்படும் இப்ப எங்க போய் ஒளிஞ்சுது என்று தெரியலையே. முதல்ல அவன் ஃபோன் நம்பர் வாங்கனும், இவ்வளவு காலம் என் பின்னால சுத்துறானே ஒரு நம்பர் தந்தானா... கொல்டன் கொரில்லா, நேஷனல் ஜோக்ரபி, கிங்கொங்’ அச்சுத கேசவனைத்தான் மனதில் தாளித்துக் கொட்டிக் கொண்டிருந்தாள்.
‘ச்சு... கரண் இன்னும் வெளியவே வந்திருக்க மாட்டான் வந்தாலும் இங்கே வர எப்படியும் மூன்று மணி நேரமாவது ஆகும். அப்பாவும் சரவணனும் ஊரிலேயே இல்லை. இப்ப எப்படி என்ன செய்யலாம்’. முதலாவது மாடிக்கு செல்லும் எஸ்கிளேடரில் நின்றவாறே மனதினுள் ஏதோதோ சிந்தித்தவள் கண்களில் அந்த மாலின் மூன்றாவது மாடியில் உள்ள கடைகள் தென்பட்டது. அதிகம் நகை கடைகள் பாதுகாப்பு பலமாக இருக்கும்.
இரண்டாவது யோசனை இல்லாமல் அந்த இடத்தை நோக்கி சென்றவவளை மோதிய ஒருவன் “சாரி சாரி” என்றவாறு வேகமாக கூட்டத்தில் மறைய சன்விதாவுக்கு தனது ஃபோன் இருந்த கைபை களவு போனது புரிய அவன் பின்னால் செல்வது இன்னும் ஆபத்தை விலைக்கு வேண்டுவதற்கு சமம் என்பதை உணர்ந்தவள் வேகமாக மூன்றாம் மாடியை நோக்கி நகர்ந்தாள்.
♥♥♥♥♥
"ஷிட் ஒரு பொண்ண காப்பாத்த வக்கில்ல உங்களுக்கெல்லாம் எதுக்குடா செக்யூரிட்டி சர்வீஸ் என்று பேர்" கத்தினான் அருண். எதிரே நின்ற உதவியளரிடம் "டெக்னிகல் டீம் உடனே இங்க இருக்கணும் ரைட் நௌ" உத்தரவிட்டவன் போனில் "யூ ஆல்ரைட், உன்னால தொடர்ந்து இயங்க முடியுமா?" என கேட்க தயக்கமின்றி பதிலளித்தான் அந்த விசுவாசம் மிகுந்த செக்யூரிட்டி "எஸ் சார்"
"வெயிட் போர் ஆர்டர்"
எதிரே நின்றவர்களிடம் "இந்த ஃபோன் நம்பர் எங்க இருக்கு என்று தெரியனும் யூ ஹவ் ஒன் மினிட்" கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்சில் நொடிகள் கடப்பதை பார்த்து கொண்டிருந்தான்.
மூப்பதாவது நொடியில் பதில் வந்திருந்தது "AS மால் சார்" செக்யூரிட்டி அருண் இருவரும் நிம்மதியாக மூச்சுவிட்டனர். மறு பக்கத்திலிருந்த செக்யூரிட்டி கட்டளைக்கு காத்திருக்கவில்லை போனை கொடுத்து விட்டு வழியில் வந்த ஆட்டோவை மறித்து ஏறியவன் "AS மால்" என்றான்.
வேகமாக வெளியே ஓடிய அருணின் கார் AS மாலை நோக்கி சீறிப் பாய்ந்தது.
♥♥♥♥♥
அந்த இருக்கையில் அமர்ந்து கண்ணாடி வழியே வெளியே பார்த்து கொண்டிருந்தவன் சிந்தையை கலைத்தது அவனது அக்கா சுபத்திராவின் குரல் "இப்ப ஐயா பெரிய்ய்ய ஆள் கல்யாண நாள் பிறந்த நாள் எல்லாம் மறந்துட்டார்" மூக்கை சுருக்கி முகத்தை திருப்பி கொண்டாள். "அது எப்படி இருக்கும் சுபா, தினம் சன்வி புராணம் தான் போ ஆபீஸ்ல சன்வி பெயர் தெரியாத ஆளே இல்லை" தன் பங்குக்கு அத்தானும் வாரினார்.
அச்சுதன் பரிதாபமாக பார்த்தான் எல்லாம் தெரிஞ்சும் இப்படி கலாய்கிறங்களே என்பது போல். "சரி சரி பிழைச்சு போகட்டும் விடும்மா, ஆனாலும் உன் தம்பிக்கு தைரியம்தான்" என்றான் அர்ஜுன்.
கேள்வியாக பார்த்தவளுக்கு பதிலாக "இல்லை என்னை நிதமும் பார்கிறான் அதுக்கு பிறகும் லவ் எல்லாம் சான்சே இல்ல வேற லெவல்"
சந்தேகமாய் பார்த்த கண்ணை சுருக்கி சுபத்ரா கேட்டாள் "நீங்...க என்னோட பக்கம் தானே"
"ஆப் கோர்ஸ் ஆப் கோர்ஸ், டேபானட்லி" என சத்தமாக சொல்லியவன் "வேற வழி" என மெதுவாக சொல்ல தன் கவலை மறந்து கலீரென்று சிரித்தான் அச்சுதன். அவனது ஃபோன் சட்டைக்குள் அதிர "ஒன் செக்" என்றவாறு சற்று தள்ளி வந்து "ஹலோ" என்றவாறு நிமிர்ந்து பார்க்க தென்பட்டாள் பயத்தில் வியர்த்துக்கு விறுவிறுத்து எஸ்கேலாட்டோர் வழியாக மேலே வந்து கொண்டிருந்த சன்விதா.
ஃபோன் வழி வந்த செய்தியில் முகம் தடை எல்லாம் இறுக கை முஷ்டியாக கண்ணாடி தடுப்பில் லேசாக தட்டியவன் திரும்பி பார்த்த செக்யூரிட்டியிடம் அவளை உள்ளே அழைத்து வர சைகை செய்ததோடு உள்ளே நின்றவன் காதில் சில உத்தரவுகளை இட்டவன் அமைதியாக சென்று இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
செல்ல கோபத்திலிருந்த சுபத்ராவை சமாதானம் செய்து கொண்டிருந்த அர்ஜுன் நிமிர்ந்து கண்ணாலேயே ‘என்னாச்சு’ என்பது போல் கேட்க உதடு கடித்து மெதுவே குறுக்காக தலையசைத்தான் அச்சுதன். செக்யூரிட்டி அவனருகே சுடச்சுட காஃபி ஒன்றை அவனருகே வைத்து விட்டு சென்றான்.
சுபத்ரா நிமிர்ந்து பார்க்க சட்டென முகத்தை மாற்றி கொண்டவன் அவளது தோளை சுற்றி கை போட்டவாறே "அப்ப உங்கள் இருவரின் கல்யாண நாள் சி.... சன்வி...."
"ஹா... நான் சன்வி இல்லடா உன் அக்கா" என்று முறுக்கியவாறே நிமிர்ந்தவள் அவன் எண்ணங்கள் இங்கே இல்லை என உணர்ந்து தன் தம்பியின் பார்வையை தொடர்ந்தவள் கண்களில் தென்பட்டாள் வியர்த்து விறுவிறுத்து வந்த சன்விதா.
"அத்தான் மழை புயல் வெள்ளம் எல்லாம் சேர்ந்து வருது கவனம்" சிறு சிரிப்புடன் எச்சரித்தான். ஆனால் அந்த சிரிப்பு அவன் கண்களை எட்டவே இல்லை. அக்காவும் அத்தானும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைக்க சற்று எட்டி வெளி நிலவரத்தை ஆராய்ந்தவன் கண்களில் ஒரு திருப்தி வந்தது. பாதுகாவலனுக்கு கண் காட்டியவன் சன்விதாவிடம் திரும்பினான்.
"சன்வி..." அன்புடன் அழைத்தவள் "வாம்மா எப்படி இருக்கிறாய் ஏன் களைத்து போன மாதிரி இருக்கு" வேலையாளிடம் திரும்பி "ஒரு கூல்ட்ரிங்க்ஸ் ப்ளீஸ்" என்றவள் அச்சுதன் அருகேயிருந்த இருக்கையை காட்டினாள்.
சுபத்ரா பேசியது எதுவும் காதிலேயே விழவில்லை என்பது போல் அச்சுதனிடம் திரும்பியவள் “எங்க மேன் போய் தொலைஞ்ச, லவ் பண்றன் என்று பின்னால் சுத்தினால் மட்டும் போதுமா? ஒரு போன் நம்பர் தர வேணாம். தேவையில்லாத நேரமெல்லாம் கண்ணுக்குள்ளேயே இரு தேடும் போது...” ஆத்திரத்தில் தொடங்கி அழுகையில் தளும்பியது அவள் குரல்.
பேசிக் கொண்டிருக்கும் போதே அச்சுதனின் கண்கள் வேக வேகமாக அவளை ஆராய்ந்தன. பயந்து வியர்த்தது தவிர அவளிடம் வேறு காயமே அடிபட்ட கண்டலே இல்லை என்பதை உறுதி செய்தவன் முதலில் அவளது மனதை மாற்ற நினைத்து "வை டோன்ட் யூ சீட்" நிதானமாய் கேட்டவனை உச்ச கட்ட கோபத்தில் பார்த்தாள் சன்விதா.
எங்கே போக எனத் தெரியாமல் மருண்டு நின்றவளை அந்த கடைக்கு முன் நின்ற செக்யூரிட்டி கை காட்டி உள்ளே போக சொல்ல யோசியாமல் வந்துவிட்டாள். உள்ளே வந்தவளுக்கு சீராக மூச்சு வந்தது அவனை பார்த்த பின்புதான். ஏனோ பயம் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிட அவ்விடத்தை கோபம் அக்கிரமித்தது கொண்டது. அவனுமே ஒர விழியில் அவளைத்தான் கவனித்து கொண்டு இருந்தான். அவளது விறைத்த உடல் தன்னை கண்டதும் ஆசுவாசத்தில் தளர்வது தெளிவாகவே புரிய, அவள் பயம் சென்றுவிட்டது என்பதை விட எவ்வளவு நேரம் இப்படி பயந்து கொண்டிருந்தாளோ என்று தான் வருந்தினான். ஆனால் முகம் உணர்ச்சியற்று இருந்தது.
அவனிடம் பொரிந்து தள்ளிய பின்னர் தான் சுபத்ரா கேட்டதே அவள் நினைவுக்கு வர "இல்ல அக்கா நான்... " என்று ஆரம்பித்த வார்தைகளை இடைவெட்டியது அச்சுதன் செயல், அவள் இடது கையை பிடித்து அமர வைத்தவன் "முதலில் இரு" என்றவாறு தன் அருகே சூடாக இருந்த காபியை அவள் புறம் நகர்த்தினான் "குடி" சொன்னோதோடு அல்லாமல் கண்களாலும் காட்டினான். தன் கரங்களுக்குள் சிறைப்பட்டிருந்த சில்லிட்ட அவள் கரத்தையும் வியர்வை முத்துக்கள் அரும்பிய முகத்தையும் பார்த்தவன் உள்ளுற எழுந்த சினத்தை அடக்க கீழ் உதட்டை இறுக கடித்தான்.
மறு பேச்சின்றி குடித்தாள் சன்விதா. கிட்ட தட்ட இரண்டு மணி நேரம் தன்னை பின் தொடர்ந்தவர்களை சுத்த விட்டு கொண்டிருந்தாள். நல்ல வேளை இங்கே வந்து சேரும் முன் பெற்றோல் முடியவில்லை. உண்மையில் நன்றாக களைத்து போய் விட்டிருக்குந்தாள் அவள் கடைசி முயற்சியாக மாலின் உள்ளே வந்து போன் செய்வோம் என்று இங்கே வந்தாள். வந்த இடத்தில் போன் தொலைந்தாலும் அச்சுதனை பார்த்ததும் வீடு வந்து சேர்ந்த உணர்வு. அதை அவள் சரியாக உணரவில்லை. காலம் கடப்பதற்குள் உணர வேண்டுமே.
திரும்பி சுபத்ராவை நோக்கி "என்ன அக்கா எதாவது விசேஷமா இல்லை சும்மா பார்ச்சஸா?" புன்னகையுடன் வினவினாள்.
"அதுவா என்னோட பிறந்தநாள் கல்யாண நாள் இரண்டையும் மறந்திட்டான் அதான் சமாளிக்க கூட்டிட்டு வந்திருக்கான்" புன்னகைத்தாள் சுபத்ரா.
"ஓஹ் வாழ்த்துக்கள், எப்ப அக்கா முடிஞ்சுதா இல்ல இனிதான" அச்சுதனை பார்த்ததில் பயம் ஜகா வாங்கி விட சற்று இயல்பாகியிருந்தாள். “நானும் ஹெல்ப் பண்ணட்டுமா?” கேட்டவாறு வலது கையால் ஒவ்வென்றாக எடுத்து பார்க்க தொடங்கினாள்.
"ஹ்ம்ம் இன்னும் மூன்று நாளில் இரண்டும் சேர்ந்து வரும்" புன்னகையுடன் சுபத்ரா கூற குழப்பத்துடன் பார்த்தவள் கேட்டாள் "மறந்துட்டார் என்று சொன்னீங்க".
“அது வழமையா பெரிய பங்க்சனா செய்வான் இந்த முறை எதுவும் அரஞ் பண்ணல அதான்” உதட்டை பிதுக்கினாள்.
சுபத்ராவுக்கு சுற்றி நடப்பது தெரியவில்லை எனவே இன்னமும் அச்சுதனின் கையிலிருந்த சன்விதாவின் கையை பார்த்து சிரித்தாள். அவளை இருக்க வைப்பதற்காக பிடித்த கையை அச்சுதன் விடவேயில்லை. அவள் கை சில்லிட்டிருந்தது. மெதுவே தன் பரந்த உள்ளங்கைக்குள் வைத்து அவள் அறியாமலே தேய்த்து தன் வெப்பத்தை கொடுத்து கொண்டிருந்தான். அவளை அறியாமலே பாதுகாப்பாக உணர்ந்தாளோ இல்லை சில்லிட்டிருந்த கரத்துக்கு அந்த வெப்பம் இதமாய் இருந்ததோ அவளும் கைகளை விலக்கில் கொள்ளவில்லை.
வைர ஆரமொன்றை எடுத்து அவள் கழுத்தில் வைத்து பார்க்க இடது கையை எடுத்தால் அது எங்கேயோ மாட்டி கொண்டு வருவேனா என முரண்டு பிடிக்க திரும்பி தன் கை எங்கே என தேடியவளுக்கு அவன் கரங்களில் இருந்தது புரிய நிமிர்த்து அவனது கண்களைப் பார்த்துவிட்டு ஒரு விரலால் சுபத்ராவை சுரண்டினால் சன்விதா. ஆச்சரியத்துடன் திரும்பியவள் கண்களாலேயே என்னவென்று கேட்டவளுக்கு பதிலாய் "உங்கள் பிறந்த நாளும் கல்யாண நாளும்தானே மறந்தது" எனக் கேட்டாள் சன்விதா.
"ஹ்ம்ம்" சிறு சிரிப்புடன் ஆமோதிப்பாய் தலையசைத்தாள் சுபத்ரா. அர்ஜுன் இருவரையும் கவனித்து கொண்டிருந்தான். "இல்ல அப்ப நீங்கதானே கோபமா இருக்கனும் ஏன் அவர் கோபமா இருக்கார்" யோசனையுடன் கேட்டாள் சன்விதா. ஒரு புறம் தலை சாய்த்து சிறு சிரிப்புடன் வேண்டுமென்றே மறுத்தாள் சுபத்ரா "அவனா கோபமா இல்லையடா".
"இல்லக்கா கோபமா தான் இருக்கார், கொஞ்சம் விட்டால் இங்கே இருக்கும் திங்ஸ் எல்லாத்தையும் உடைத்து விடுவார் போல கோபம் எனக்கு தெரியும்" உறுதியாய் சொன்னாள்.
அர்ஜுன் அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தான்.
சுபத்ரா சந்தோசமாய் பார்த்தாள்.
அச்சுதன் கண்கள் மின்ன புன்னகையுடன் பார்த்தான்.
அவர்கள் இருவருக்கும் ஏற்கனவே புரிந்திருந்தது அச்சுதன் ஏதோ விடயமாக சினந்துள்ளான் என்று ஆனால் அவள் உள்ளே வந்து இரு நிமிடங்கள் கூட ஆகாத நிலையில் இவ்வளவு துல்லியமாக அச்சுதன் உணர்வை கண்டுபிடிப்பாள் என நினைக்கவில்லை. இத்தனைக்கும் அவள் உள்ளே வரும் போது சாதாரண மன நிலையிலும் வரவில்லை.
அதற்குள் சன்விதாவின் கருத்தை கவர்ந்தது அவள் முன் இருந்த டைமென்ட் பென்டன்ட் அதை கைகளில் எடுத்து பார்த்தவள் "அழகாயிருக்கு இல்லை" ஒரு சென்றிமீட்டரை விடை குறைவான அளவில் AS என்ற இரு எழுத்துக்களும் பின்னி பிணைந்து அதன் மேல் டைமென்ட் பதிக்கப்பட்டு இருந்தது. "ஓஹ் என்னோட விசா கார்ட் இப்ப என்னிடம் இல்லையே இத ரிசெர்வ் பண்ணி வைக்கலாமா?" என கேட்க விற்பனை பெண் அச்சுதனை பார்த்தாள். ஆம் என்பது போல் தலையாட்டினான் அச்சுதன். "ஷுயர் மாம்" புன்னகையுடன் பதிலளித்தாள் விற்பனை பெண்.
அதற்குள் கடை வாசலில் சிலரின் நடமாட்டம் தென்பட அதைப் பார்த்த சன்விதாவின் கையில் ஓடிய சிறு நடுக்கம் அச்சுதனுக்கு தெளிவாகவே புரிந்தது. அச்சத்துடன் திரும்பி அச்சுதனை நோக்கினாள். அவள் விரல் இடைவெளிகளை தன் விரல்கள் கொண்டு நிரப்பியவன் லேசாக தட்டி கொடுத்தான். வெளியில் உள்ளவர்களுக்கு தான் உத்தரவிட்ட வேலையை முடிக்க இன்னும் சிறிது நேரம் தேவைப்படும் என்று நினைத்தவனாய் அவளுடன் உரையாட தொடங்கினான்.
"சோ சன்வி என்னை ஏன் தேடினாய்? தெரிந்....து கொள்ளலாமா?"
அர்ஜுன் புருவத்தை நெரித்தவாறு அவனை பார்க்க சிறு கண்ணசைவில் வெளியில் நடப்பதை கட்டினான்.
"நான் உங்களை தேடினேனா என்னோட வோர்ஸ்ட் நைட்மைர்ல கூட இல்லை"
"அப்ப உன்னோட ஸ்வீட் ட்ரீம்ஸ்லய ஹா " புருவத்தை உயர்த்தினான்.
சன்விதா சஞ்சலத்துடன் மீண்டும் கடையின் வாயிலை நோக்கினாள்.
"பிறகு உனக்கு எப்படி தெரியும் நான் இங்கே இருக்கிறேன் என்று"
அவனது வார்தையில் கவனமின்றி பதிலளித்தாள் "ஹா எனக்கு எப்படி தெரியும்? எனக்குத் தெரியாதே நீங்க இங்க இருப்பீங்க என்று "
“அப்ப இங்க ஷாப்பிங் செய்ய வந்தாயா?”
"ஹான்"
"கிரெடிட் கார்ட் மணி எதுவும் இல்லாமலா?"
"ஹா...." இதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்த சான்விதாவை கேள்வியாக பார்த்தான் அச்சுதன்.
"அ அது... வந்து " என்று தடுமாற பொங்கி வந்த சினத்தை அடக்க முடியாமல் "enough" என்றவாறு நகைகளை காட்சிபடுத்தி வைத்திருந்த மேஜையில் ஓங்கி அடிக்க அழகான அந்த கண்ணாடி மேஜை தூள் தூளாக நொறுங்கியது.
“வந்து இவ்வளவு நேரத்தில் ஒரு வார்தை சொன்னியாடி கையில போனும் இல்ல” சீற்றத்துடன் கேட்டான். அவள் கையை விட்டுவிட்டு எழும்பவே இவ்வளவு நேரம் ஓடியிருந்த மறுபடி வந்து ஒட்டிக்கொள்ள சன்விதா அவன் பின்னாலே எழுந்து அழைத்தாள் “அ அச் கே கேசவ்...” வெறும் காற்று மட்டுமே வர அவன் திரும்பியதில் வாயை மூடிக்கொண்டாள்.
சுபத்ரா ஏதோ சொல்ல வர அர்ஜுன் அவளை தடுத்து நிறுத்ததினான்.
கடகடவென கோட் ப்ளஸர் இரண்டையும் கழட்டியவன் அணிந்திருந்த கரு நீல ஷிர்டின் கைகளை முட்டி வரை ஏற்றிவிட்டான். அருகே நின்ற செக்யூரிட்டியின் கையிலிருந்த ஹாக்கி ஸ்டிகை வாங்கியவன் "வா" என்ற ஒற்றை சொல்லில் அழைத்தவாறு வெளியே சென்றான்.
அவன் முதுகின் பின்னால் இருந்து எட்டி பார்த்த சன்விதா தென்பட்ட காட்சியில் உறைந்து போய் நின்றாள்.