அத்தியாயம் 3
இருளின் பிடியில் அந்த இரவானது நிலவின் ஒளியால் ஜொலித்தது. ஆனால் இதையெல்லாம் ரசிக்கவோ, கவிதைகளை எழுதவோ, பாட்டு பாடவோ கூட தோணவில்லை ஆதி சக்ரவர்த்தனுக்கு அதே சமயம் கம்பீரமாகவும், கோபமாகவும் இருந்தான். ஆறடி உயரம், தீர்க்கமாக பார்க்கும் விழிகள், கட்டுக்கடங்காமல் இருக்கும் அவனது கேசம், ஆஜானு பாகுவான உடல் வாகும் கொண்டவன் மொத்தத்தில் பெண்கள் எதிர் பார்க்கும் ஆணழகனாக திகழ்பவன். சென்னையின் புகழ் பெற்ற KAS நிறுவனத்தை தனதாக்கி கொண்டவன் ( KAS நிறுவனம் என்பது கற்பனையே ) இல்லை இல்லை தனதாக்கி கொள்ள நினைப்பவன். என்னதான் அவன் இந்த நிறுவனத்திற்கு சொந்தக்காரனாக இருந்தாலும் அது அவனுக்கு சொந்தமாகவில்லை அதனால்தான் இப்பொழுது நம் கதாநாயகன் ஆதி சக்கரவர்த்தன் கடுப்பாக உள்ளான். வாங்க என்னனு போய் பாப்போம்.
"டேய் ஆதி இன்னும் என்னடா கோபமா இருக்க அதான் நீ நினைச்ச மாதிரியே உன் கல்யாணம் நின்னுருச்சே அப்புறம் என்ன மச்சான்" என அவனது உயிர் நண்பன் வருண் கேட்டான்.
வருண் ஆதியின் நண்பன். சிறு வயதிலிருந்தே இருவரும் ஒன்றாகத்தான் இருப்பர். வருண் அவன் வீட்டில் இருப்பதை விட ஆதியின் வீட்டில் இருந்ததுதான் அதிகம். அதனால் அவனுக்கென்று ஆதியின் வீட்டில் தனி ரூமே உள்ளது. கம்பெனி விஷயத்திலும் அவனுக்கும் உதவியாக இருப்பவன். சுருக்கமாக சொல்ல போனால் அவனுக்கு வலது, இடது கை எனலாம்.
"என்னடா மச்சான் நான் கேட்டுட்டே இருக்கேன் நீ இப்படி உட்கார்ந்துட்டு சரக்கு அடிச்சுட்டு இருக்க" என மறுபடியும் கேட்டான் வருண்.
விஸ்கியை ஒரு மிடறு விழுங்கியவன் அதை மேஜை மேல் வைத்துவிட்டு சிகரெட்டை எடுத்து புகைக்கலானான். "கல்யாணம் நின்னு போனதெல்லாம் எனக்கு ஒரு மேட்டரே கிடையாது. சோ நாளைக்கே எனக்கு கண்டிப்பா கல்யாணம் நடந்தே ஆகணும்" என கூலாக பேசினான்.
"டேய் என்னடா நீ ஹோட்டலுக்கு போய் எனக்கு இட்லி வேணாம் தோசை குடுங்கன்னு சொல்ற மாதிரி இருக்கு நீ பேசுறது."
"வில் யூ ஷடாப் வருண் பீ சீரியஸ்."
"சரிடா மச்சி இப்ப என்னதான் பிரச்சனை அவதான் எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லனு லெட்டர் எழுதி வச்சிட்டு ஒரு சின்ன பையன் கையில கொடுத்து அதை யாருக்கும் தெரியாம உன் கிட்ட கொடுத்துட்டு போய்ட்டாளே அப்புறம் என்னடா பிரச்சனை உனக்கு."
"எனக்கு அவ என்னைய கல்யாணம் பண்ணாதது கூட பிரச்சனை இல்லடா ஆனா கடைசிவரைக்கும் என்னைய நம்ப வச்சு கழுத்தறுத்துட்டு போய்ட்டாள்ள அதான் கோபம் கோபமா வருது எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டு அப்புறம் எதுக்கு அவள் காதலனோடு ஓடி போகணும்."
"டேய் மச்சான் சாரிடா" என பாவமாக மூஞ்சியை வைத்து கொண்டு பேசினான்.
"ஏய் ஃபூல் நீ எதுக்குடா சாரி கேக்குற ?" என ஒற்றை புருவத்தை தூக்கியபடியே கேட்டான் ஆதி.
"அது வந்து.... மச்சான் அது வந்து.......... நா.... இப்ப உன்கிட்ட என்ன சொல்றது என்று வடிவேல் லாங்குவேஜில் சொல்ல அதற்கு அவன் சீ சொல்லித்தொலைடா முண்டம்."
"அது நான்தான் மச்சான் அவளை ஓடி போக சொன்ன" என படபடவென்று பேசி முடித்தான்.
"வாட் நீதான் அவளை ஓடி போக சொன்னீயா யூ இடியட் ஏண்டா இப்படி பண்ண" என அவனது சட்டை காலரை பிடித்து கேட்டான்.
"ஆமா டா நீ போடுற கண்டிஷனுக்கு யார்தாண்டா கல்யாணம் பண்ணிப்பாங்க பத்தாததுக்கு கோவம் வேற மூக்குக்கு மேல வருது அந்த பொண்ணு இல்ல வேற எந்த பொண்ணா இருந்தாலும் உன் கூட வாழ மாட்டா."
"டேய் போதும் நிறுத்து நீதான அந்த பொண்ண அனுப்பி வச்ச நீயே போய் அவளை கண்டுப்பிடிச்சு கூட்டிட்டு வா"
"மச்சான் அது எப்படிடா முடியும் அவதான் போய்ட்டாளே இதுக்கு மேல என்னால ஒன்னும் பண்ண முடியாது."
"முடியாதுங்கற வார்த்தைக்கே இடமில்லை நீ போற போய் அவளை கூட்டிட்டு வர காடிட்" என கோபமாக பேசினான்.
"என்ன வேனாலும் சொல்லு நான் செய்யுறேன் இப்ப சொன்னீயே அது மட்டும் என்னால முடியாது. அவளுக்கும் உனக்கும் கல்யாணம் நடக்காது, நடக்கவும் கூடாது என கூறியவன் மேலும் அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு ஏண்டா இவ்ளோ பேசுறீயே வேணும்னா உன்னோட ஆளு வர்ஷாவை வரவச்சு கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே அவளுக்காகத்தான இப்படி கண்டிஷன்ஸ், கருமாந்திரமெல்லாம் பண்ணிட்டு இருக்க இது மட்டும் உன் பெரியப்பாவுக்கு தெரிஞ்சுது அவ்ளோதான்" என வருணும் கோபமாகவே கூறினான்.
"டேய் வேணாம் வருண் என்னோட கோபத்தை கிளறாதே"
"ஆமா சாரு இப்ப மட்டும் அப்பிடியே கூலா இருக்கீங்க பாரு போடா" என கூறியவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
"டேய் எங்கடா போற அவளை கூட்டிட்டு வாடா அவதான் நான் போட்ட கண்டிஷன்ஸுக்கு சம்மதம்னு சொல்லிட்டாலே ஐ திங்க் அவளுக்கு வேற ஏதாவது பிரச்சனை இருக்குனு நினைக்குற அவளை கூட்டிட்டு வா அதை நான் சால்வ் பண்றேன்" என பொறுமையாகவும், நிதானமாகவும் பேசினான்.
"டேய் பரவாலடா, உனக்குள்ளையும் ஒரு நல்லவன் இருக்கான் போல, கொஞ்சமாவது மனுஷங்க மனசையும் புருஞ்சுக்குறீயே அவளையே கூட்டிட்டு வரேன் ஆனா நீ அவளோட குழந்தைக்கு நீதான் அப்பாவா இருக்கனும் அதுக்கு ஓகேவா அது மட்டுமில்லாம குழந்தை மட்டும் வந்துருச்சு அப்புறம் உங்க பெரியப்பா அவளோடவே ஜென்மா ஜென்மத்துக்கும் வாழ சொல்லுவாங்க ஓகேவா மச்சான். நீ போட்ட அத்தனை பிளானும் ஊத்திக்கும்" என அவனது ஆட்காட்டி விரலை கீழ் நோக்கி கமித்தியவாறே காமித்து பேசினான்.
"என்னது குழந்தையா என்னடா சொல்ற ?" என்ற சிறு நடுக்கத்துடன் கேட்டான் ஆதி.
"ஆமாடா நீ போட்ட கண்டிஷன்ஸுக்கு சம்மதிச்சு அவளும் கையெழுத்து போட்டாதான் இல்லனு சொல்ல முடியாது. ஆனா அவ யாரையோ காதலிச்சுருக்கா போல அது அவங்க வீட்டுல இருக்கிறவங்களுக்கு பிடிக்கல. அதனால போர்ஸ் பண்ணி கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சுருக்காங்க. என்ன பண்றதுனு அவளும் ஓகே சொல்லிருக்கா பட் நீ போட்ட கண்டிஷ்ன்ஸ் அவளுக்கு ஓகேனு தோன அவளும் சம்மதம்னு சொல்லிட்டா ஆனா அன்பார்ச்சுனேட்லீ அவளோட காதலனோடு நெருங்கி பழகிருபாங்க போல அதான் கன்சீவ் ஆகிட்டா. போன் பண்ணி காதலனுக்கு சொல்ல அவனும் வந்து கூடிட்டு போய்ட்டான். அவங்க எஸ்கேப் ஆகும் போது அவங்களை கையும் களவுமாக புடிச்சுட்ட அப்புறம் உண்மை தெரிஞ்சதுக்கப்பறமாத்தான் சரி போங்கன்னு வழி அனுப்பி வச்ச. ஆனாலும் சும்மா சொல்ல கூடாதுடா மச்சான் சும்மா நாடோடிகள் பட ரேஞ்சுக்கு சசிகுமார் ஸ்டைல்ல அனுப்பி வச்சன்னா பாத்துக்கோயேன்."
இதை கேட்ட ஆதிக்கு அவனை கொன்று போடலாம் போல இருந்தது. "இங்க பாரு வருண் விடிஞ்சா கல்யாணம். எனக்கு இப்பவே இந்த நிமிஷமே ஒரு பொண்ணு வந்தாகணும் அதுவும் என்னோட கண்டிஷன்ஸுக்கு எல்லா விதத்துலையும் ஓகே சொல்லணும் அப்படிப்பட்ட பொண்ணை நீ காலையில மணமேடையில் கொண்டு வரணும் அவ்ளோதான் சொலீட்ட."
"மச்சி அது எப்படிடா முடியும்" என பதைபதைப்புடன் கேட்டான்.
"நீதான அவளை அனுப்பி வச்ச அதனால நீதான் வேற பொண்ணை ரெடி பண்ணனும். என்ன பத்தி தெரியும்ல உனக்கு?" என கோபமாக பேசினான்.
"டேய் ஆனா........." அவன் இழுக்க
"நான் சொலிட்ட நீ செய்யுற அவ்ளோதான்" கம்பீரமாக பேசிவிட்டு சரக்கு பாட்டிலையும் கையில் எடுத்துக்கொண்டு மாடியிலிருந்து கீழே இறங்கினான்.
வருணோ பீதியுடன் நின்றிருந்தான். அட பாவி நான் எங்க எப்படி இருக்க வேண்டியவன் கடைசியில என்னைய மாமா வேலை பாக்க வச்சுட்டானே பொறுக்கி வாயில நல்லா பச்சை பச்சையா திட்டணும்னு தோணுது என்னோட பேன்ஸ்செல்லாம் படிச்சுட்டு இருக்காங்களேன்னு அமைதியா இருக்கேன். நான் எப்படி இந்த ஒரு நைட்டுக்குள்ள பொண்ணை தேடுவ அதுவும் இவன் போட்ட கண்டிஷன்ஸுக்கு ஒத்துக்குற பொண்ணு. புள்ளையாரப்ப நீதான் எனக்கு ஒரு நல்ல வழிய காமிக்கனும் ஐயோ சாரி சாரி நல்ல பொண்ணை காமிக்கனும் என நினைத்தபடியே அந்த மண்டபத்தை விட்டு வெளியேறி அவனுடைய காரில் சென்றான்.
புது தாலி கழுத்தில் ஏறியதும் தன் கணவனுடன் எப்படியெல்லாம் சந்தோசமாக வாழ போகிறோம் என நினைத்து புன்னகையுடன் வீட்டின் அனைத்து வேலைகளையும் செய்து முடித்து விட்டு அவளுக்கு என்று ஒதுக்க பட்டிருக்கும் சிறிய அறைக்குள் நுழைந்தாள். நேராக அவளது அம்மாவின் புகை படத்தை எடுத்து, அம்மா இன்னைக்கு நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன். என்னாடா எப்பையுமே சித்தி என்னைய அப்படி பண்றா, இப்படி கொடுமை படுத்துறா, வீட்டு வேலையெல்லாம் என் தலையில கட்டிட்டு அவங்க மட்டும் சந்தோசமா இருக்காங்கனு சொல்லுவா இன்னைக்கு என்ன புதுஷா சந்தோசமா இருக்காளேன்னு பாக்குறீயா. ஆமாமா நான் காதலிச்ச பையனையே கல்யாணம் பண்ணிக்க போறேன். எனக்கு வேற வழி தெரியாமதான் வீட்டை விட்டு ஓடி போய் கல்யாணம் பண்ண போறேன். நான் இப்படி பண்ணலைனா அந்த ராட்சசி என்னைய அவன் தம்பி குணசேகரனுக்கு கல்யாணம் பண்ணி வச்சுருவா. அதனாலதான் இப்படி பண்ண வேண்டியதா போச்சு என்னைய மன்னிச்சுருமா அப்பா நீங்களும் என்னைய மன்னிச்சுருங்க என அவளது அம்மாவின் பக்கத்தில் இருந்த அவளது அப்பாவின் போட்டோவிடமும் மன்னிப்பு கோரினாள்.
மணியை பார்த்தாள் அது பத்து என காட்ட மடமடவென்று அவளது துணிகளை ஒரு பையினுள் வைத்து அடக்கினாள். எப்படியும் அசோக் என்னை நன்றாக பார்த்து கொள்வான் இருந்தாலும் அம்மாவின் ஞாபகமாக அவளுக்கென்று விட்டு போயிருந்த நகைகளை எடுத்து கொண்டு மெல்லமாக அந்த வீட்டை விட்டு வெளியேறினாள். கேட்டை திறக்கும் போது சத்தம் கேட்க அதில் முழித்து கொண்ட தருண் அம்மா எந்திரி எந்திரி யாரோ கேட்டை திறக்கும் சத்தம் கேக்குது என பதட்டத்துடன் சொன்னான்.
திலகவதியும் என்னவென்று எட்டி பார்க்க அஞ்சனா கேட்டை திறந்து கொண்டு வீட்டை ஒரு பார்வை பார்த்தபடியே நகர்ந்தாள். "டேய் டேய்... தருண் அஞ்சனாதான் போறாடா அவ வீட்டை விட்டு ஓடி போற மாதிரி இருக்கு புடிடா புடிடா அவளை என கூற தருணும் அவளை, ஏய் அஞ்சனா அஞ்சனா நில்லு நில்லுடி" என கூறிய படியே அவளை பிடிக்க ஓடினான்.
யார் நம்மை அழைப்பது என பின்னாடி திரும்பி பார்த்தவள், ஐயோ இவனா போச்சு போச்சு எல்லாம் போச்சு பாத்துட்டானே எப்படி தப்பிச்சு போறது என நினைத்தவள் கால்கள் தன்னிச்சையாக ஓடியது.
அவனும் அவளை பின் தொடர்ந்துகொண்டே இருந்தான். அவளும் எப்படியாவது அவனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என நினைத்து பலம் கொண்ட மட்டும் ஓடிக்கொண்டிருந்தாள். ஓடிக்கொண்டே இருந்தவள் சாடாரென்று எதிரே வந்த நபர் மீது மோதினாள்.
நாம் யார் மீது மோதினோம் என நிமிர்ந்து பார்க்க அதிர்ச்சியானாள்.
தொடுவானம் தொடரும்.
அத்தியாயம் 4
பலவித கனவுகளுடனும் ஆசைகளுடனும் வீட்டை விட்டு வெளியே வந்து காதலனுடன் திருமணம் செய்து கொண்டு வாழலாம். இதுவரை தன் வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்களையும், துன்பங்களையும் அனுபவித்து விட்டேன். இனியாவது மனதுக்கு பிடித்த ஒரு நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என நினைத்து வீட்டை விட்டு வெளியே வரும் போது வீட்டின் கேட்டின் சத்தம் கேட்க சரியாக அவளது சித்தியின் மகன் தருண் குமார் கேட்டின் கிரீச்..... என்ற ஒலியுடன் கேக்க தூக்கம் களைந்து எழுந்தான். உடனே அவனது அம்மாவை எழுப்பினான் அவளும் அஞ்சனாதான் போறா அவளை பிடி என கூறினாள். அவனும் அவள் பின்னே ஓடினான். அஞ்சனா தன் பின்னே தருண் துரத்தி கொண்டு வருவதை பார்த்து, பயந்து ஓடினாள் இறுதியில் யாரோ ஒருத்தர் மேல் மோதினாள். அது யாரென்று பார்க்க அதிர்ச்சியானாள், கூடவே அவளுக்கு சிறு நம்பிக்கையும் பிறந்தது.
"அஷோக் நீங்களா நான் யாரோன்னு நினைச்சு பயந்துட்டேன்" என கூறி அவனை இறுக்கமாக கட்டி அணைத்தாள். அதற்குள் தருண் அங்கு வந்து சேர்ந்தான்.
"ஏய் எங்கடி வீட்டை விட்டு ஓடி போக பாக்குற ஒழுக்க மரியாதையா வீட்டுக்கு வா" என்று கோபமாக பேசினான்.
"நான் வரமாட்டேன் நீ வந்த வழியை பார்த்துட்டு போ" என அவளும் தையிரியமாகவே பேசினாள்.
பொதுவாக இவள் இப்படியெல்லாம் பேசமாட்டாளே ரொம்ப திமிரா பேசுறா என நினைத்தவன் அப்பொழுதுதான் அவள் கூட இருந்த ஆடவனை பார்த்தான். "ஓ இதுதான் காரணமா காப்பாத்தறதுக்கு ஒரு ஆள் கிடைச்சதும் அவ்ளோ தையிரியமா பேசுறீயா பொட்டச்சி நாயே உன்னை என்ன பண்றேன் பாரு என மனதிற்குள் அவளை கேவலமாக திட்டியவன் அவளது கரத்தினை இழுத்து ஏய் வாடி" என இழுத்தான்.
"டேய் விடுடா என் கையை அஷோக் பார்த்துட்டே இருக்கீங்க ஏதாவது பண்ணுங்க ப்ளீஸ்" என்று அவனிடம் திமிறி கொண்டே பேசினாள்.
"என்னது அஷோக்கா யாரடி அது ஓ உன் காதலனா இவனுக்காகத்தான் வீட்டை விட்டு ஓடி போக பார்த்தியா சீ ஓடுகாலி நாயே" என்று சொன்னதுதான் தாமதம் அவனது மூக்கில் அடி படீரென்று விழுந்தது.
அவன் ஐயோ அம்மா என கதறியபடியே மூக்கை பிடித்துக்கொண்டு கீழே விழுந்தான்.
இன்னொரு முறை என் மனைவியை தப்பா பேசுன பேசுறதுக்கு வாயும் இருக்காது, உடம்புல உயிரும் இருக்காது என கூறி அவனை கண்ட படி அடித்து நொறுக்கினான். தருண் வெறும் வாய் ஜம்பம்தான் உடல் வலிமை அவனிடத்தில் இல்லை. அசோக் அடித்ததில் பலவீனம் அடைந்தவன் இதற்கு மேல் நம்மால் அடி வாங்க முடியாது என நினைத்தவன் சார் வேணாம் சார் விட்றுங்க இனி உங்க பக்கம் தலை வச்சு கூட படுக்க மாட்டேன் என்று அவனது காலை பிடித்து கெஞ்சினான்.
"சரி விடுங்க அஷோக் அவனை விட்றுங்க செத்து போயிற போறான்" என அவனது கரத்தினை இழுத்தாள் அஞ்சனா.
"இல்ல அஞ்சு அவன் எப்படி இப்படி சொல்லலாம் கொஞ்சமாவது உன்னைய அக்கானு நினைச்சு பார்த்தானா பொறுக்கி பையன் என்னை தடுக்காத அவனை கொன்னு போட்டாதான் எனக்கு ஆத்திரம் அடங்கும்."
"ஐயோ விடுங்க அஷோக் நான் சொல்றேன்ல ப்ளீஸ் விட்ருங்க நம்ம இப்ப உடனே இங்கிருந்து போயாகனும் இல்லைனா எங்க சித்தி வந்து இந்த தெருவையே கூட்டிருவா வாங்க போகலாம்" என கூறி அவனது கரம் பற்றி இழுத்து கொண்டு நடக்கலானாள்.
"டேய் இன்னொரு தடவை நீ கண்ணுல பட்ட அப்புறம் நான் என்ன செய்வன்னு எனக்கே தெரியாது ராஸ்கல்" என கோபமாக உரைத்து விட்டு அஞ்சனாவுடன் கிளம்பினான்.
இருவரும் அவனது காரில் ஏறினர். அசோக் வண்டியை ஸ்டார்ட் செய்தபடியே "என்ன அஞ்சனா என் போனை அட்டன் பண்ணவே இல்ல உனக்கு எத்தனை டைம் கால் பண்றது."
"எனக்கு கால் பண்ணீங்களா அசோக் சாரி எனக்கு தெரியல அவன் என்னை துரத்திட்டு வரும் போது எனக்கு வேற எதை பத்தியும் யோசிக்க முடியல. எப்படியாவது தப்பி பொயிரணும்னு மட்டும் இருந்தது அதான் உங்க போனை எடுக்க முடியாம போச்சு. நல்ல வேலை நீங்க வந்து என்னை காப்பாத்துனீங்க இல்லைனா என் நிலைமை என்ன ஆகிருக்குமோ ?"
"உன்னைய அவ்ளோ சீக்கிரம் யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன் அஞ்சு" என வண்டியை ஓட்டிய படியே பேசினான்.
"சரி அஷோக் இப்ப நாம எங்க போறது" என வினவினாள்.
"நாம ஒரு ஹோட்டல்ல ரூம் எடுத்து தங்க போறோம் அங்க என்னோட பிரண்ட் எல்லா அரேஞ்மெண்ட்ஸும் பண்ணி வச்சுட்டான் விடிஞ்சதும் கல்யாணம்தான் நீ எதுக்கும் பயப்படாத எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்" என கூறிய படியே அவளது கன்னத்தில் முத்தம் வைத்தான்.
அவன் தீடிர் முத்தத்தில் அதிர்ச்சியானவள் "அசோக் என்ன இது ?"
"ஹே கமான் யா நமக்குத்தான் நாளைக்கு கல்யாணம் ஆக போகுதுல அப்புறமென்ன?" என கூறினான்.
"என்னதான் இருந்தாலும் கல்யாணத்துக்கு அப்புறமாதான் இதெல்லாம் அது வரைக்கும் கையும் காலும் வச்சிகிட்டு கொஞ்சம் சும்மா இருங்க."
"ஓகே ஓகே லீவ் இட் ஹோட்டல் வந்தாச்சு கீழ இறங்கு" என கூறியபடியே அவன் வெளியே வந்து அவளுக்கும் காரின் கதவை திறந்து விட்டான்.
அஞ்சனாவும் கீழே இறங்கி வந்து ஹோட்டலை ஒரு பார்வை பார்த்தாள். பக்கத்தில் எந்த கடையும் இல்லை சுற்றி பொட்டல் காடுதான் இருந்தது அது பார்க்க ஹோட்டல் மாதிரியும் தெரியவில்லை. அஞ்சனாவிற்கு ஏதோ தோன்ற என்ன மாதிரியான ஹோட்டல் இது என நினைத்தவள் அசோக்கிடம், என்ன அஷோக் இது பார்க்க ஒன்னும் ஹோட்டல் மாதிரி தெரியலயே ஒரு மாதிரியா இருக்கு.
"சாரி டியர் எந்த ஹோட்டலும் இல்லடா இது அந்த காலத்து கல்யாண மண்டபம் யாரும் இப்ப யூஸ் பண்றது இல்ல ஆனா நான் மண்டபத்தோட உரிமையாளர்கிட்ட பேசிட்டேன் அவர் ரூமெல்லாம் சுத்தம் பண்ணி பிரெஷா வச்சிருக்காரு நீ ஒன்னும் பயப்படாத இன்னைக்கு ஒரு நாள் நைட் தான் அப்புறமா நாம இந்த இடத்தை காலி பண்ணிரலாம்."
"என்ன அசோக் எந்த ஹோட்டலும் கிடைக்கலன்னு இப்படி அசால்ட்டா சொல்றீங்க. நீங்களே பாருங்க சுத்தியும் பொட்டல் காடா இருக்கு அடிச்சு போட்டா கூட யாருக்கும் தெரியாது அந்த மாதிரி இருக்கு இந்த இடம் எனக்கு என்னமோ சரியா படலை நீங்க பேசாம வேற நல்ல ஒரு ஹோட்டலா பாருங்க. எனக்கு இங்க இருக்கவே பயமா இருக்கு" என பதை பதைப்புடன் பேசினாள்.
"வேற நல்ல ஹோட்டலா ஏய் விளையாடுறீயா இப்பவே மணி பதினொன்னு ஆச்சு. இல்ல அஞ்சு முடியாது சுத்தியும் எங்க அப்பா ஆளுங்க என்னைய தேடிட்டு இருக்காங்க.அவர் கண்ணுல நான் மாட்டுனேனா அப்புறம் உனக்கும், எனக்கும் கல்யாணமே நடக்காது. சொன்னா புருஞ்சுக்கோ அதான் இந்த மாதிரி இடத்தை பிடிச்சேன். ஒரு நாள் நைட் மட்டும்தான் அட்ஜஸ் பண்ணிக்கோ விடிஞ்சதும் நமக்கு கல்யாணம் ஆகிடுச்சுனா அப்புறம் அப்பாவால நம்மள பிரிக்க முடியாது.நாம கல்யாணம் ஆன உடனே இந்த இந்த ஊர்லயே இருக்க போறதில்லை. டெல்லிக்கு போக போறோம் அங்க என் பிரண்ட் எனக்கு நல்ல வேலை ஒன்னு வாங்கி தறதா சொல்லிருக்கான். நான் உன்னைய கண்ணும் கருத்துமா வச்சு பாத்துக்குவேன்டா நீ எதுக்கும் பயப்படாத தங்கம்" என பேசி அவளை தன் பக்கம் இழுத்து அணைத்தான்.
அஞ்சனா அவன் மேல் சாய்ந்தபடியே, "அசோக் எனக்காக உங்க சொத்து, சுகம் எல்லாத்தையும் விட்டு வரீங்க உங்க காதலுக்கு நான் தகுதியானவதான" என கண்களில் கண்ணீர் கரை புரண்ட படியே கேட்டாள்.
"ஏய் லூசு எதுக்குடி இப்ப ஏதேதோ பேசிட்டு இருக்க இனி எனக்கு நீ உனக்கு நான். நம்ம வாழ்க்கையை சந்தோசமா வாழலாம் கிறுக்கு தனமா ஏதாவது பேசிட்டு இருக்காம உள்ள போவோமா" என்க இவளும் சரி என கூறியபடியே அந்த மண்டபத்திற்குள் நுழைந்தனர்.
"வாங்க.... வாங்க...." அஞ்சனா என குரல் இவளை அழைத்தது.
அவன் யாரென்று சந்தேகத்துடன் அஞ்சனா பார்க்க, "அஞ்சு இவன் என்னோட பிரண்ட் வாசு இவன்தான் நாம தங்கறதுக்கு எல்லா அரேஞ்சமென்ட்ஸும் பண்ணான்" என அஷோக் கூறினான்.
"ஓ அப்படிங்களா ரொம்ப தேங்க்ஸ் அண்ணா" என நன்றியுடன் கூறினாள் அஞ்சனா.
"பரவாலம்மா இருக்கட்டும் இவன் எனக்கு செஞ்ச உதவிக்கு முன்னாடி இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே கிடையாது."
"டேய் அஷோக் உங்களுக்கு மேல ரூம் இருக்கு அங்க போய் தூங்கிக்கோங்க உங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு மேல வரேன்" என்று அசோக்கின் நண்பன் வாசு கூறினான்.
"சரிடா" என கூறிய படியே அஞ்சனாவை அழைத்து கொண்டு ரூமிற்கு சென்றான்.
அறைக்குள் வந்த இருவரும், "அஞ்சனா பாத்ரூம் இங்க இருக்கு நீ போய் பிரெஷப் ஆகிட்டு வா நான் என் பிரண்டக்கிட்ட பேசிட்டு வந்தறேன் என சொல்லியவன் நகர ஒரு அடி எடுத்து வைத்தான். அதற்குள் அசோக் நீங்களும் இங்கே இருங்க எனக்கு பயமா இருக்கு" என பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு பேசினாள்.
"ஹேய் இங்கதான்டா கீழ இருக்க பயப்படாத சீக்கிரம் வந்தறேன் சரியா ?"
"ம் சரி சீக்கிரமா வந்துருங்க."
"தட்ஸ் குட் கேர்ள் ஓகே கீழ போயிட்டு அப்பிடியே உனக்கும் எனக்கும் சாப்பாடு எடுத்துட்டு வந்தறேன் ஓகே. அவளும் பதிலுக்கு ம்" என மட்டும் கூறி குளியலறைக்குள் சென்றாள்.
குளியலறைக்குள் வந்தவள் முகம் கை, கால் கழுவலாம் என பைப்பை திறக்க அதில் தண்ணீர் வரவில்லை. ஐயோ என்ன இது தண்ணீர் வரவில்லையே ச்சே என அஞ்சனா சலித்த படியே அஷோக்கிடம் சொல்லலாம் என நினைத்து கீழே இறங்கினாள்.
அசோக்கும் அவனது நண்பன் வாசுவும் மண்டபத்தின் இன்னொரு அறையிலிருந்து பேசி கொண்டிருந்தனர்.
அஞ்சனா எங்கெல்லாமோ தேடி பார்த்து கடைசியில் பேச்சு சத்தம் வந்த திசையை நோக்கி நடந்தாள். உள்ளே செல்ல எத்தனித்தவள் அவர்கள் பேசுவதை கேட்டு அதிர்ச்சி அடைந்தாள்.
"டேய் ஒரு பொண்ணை மடக்க இவ்ளோ மாசமா ? நம்ம டார்கெட் ஆறு மாசம்தான் ஏன்டா இவ்ளோ லேட்டா பண்ண" என வாசு கூற
"சனிய புடிச்சவடா அவளை கவுக்க எனக்கு முழுசா மூணு மாசம் ஆச்சுடா. பொண்ண பாத்தில எப்படி இருக்கு ?"
"சும்மா சொல்ல கூடாதுடா படு சோக்கத்தான் இருக்கு குட்டி. எப்படியும் நாம ஒரு ரெண்டு லட்சம் வரை கமிஷன் அடிக்கலாம். சரிடா ஏன் மூணு மாசம் ஆச்சு நீ இருபதே நாள்ள எந்த பொண்ணா இருந்தாலும் கவுத்துருவியே ஏண்டா இவ்ளோ லேட்."
"அதை ஏண்டா கேக்குற நல்ல குடும்பத்து பொண்ணுல அதான் மானம், மரியாதை அது இதுன்னு என்னைய சாவடிச்சுருச்சு. லாரி, பாட்டினு நிறைய ஆளுங்களை வச்சு செட் பண்ணி கடைசியிலதான் ஓகே சொன்னா. இவனால என் பணம்தான் நிறைய செலவாச்சு. இப்ப கூட பாரு ஏதோ இவன் தம்பி வந்து மொத்த பிளானையும் சொதப்பிருப்பான் நல்ல வேளை நான் அங்க போனேன் இல்லைனா அந்த கல்கத்தா காரனுக்கு பதில் சொல்லியே என் உசுரு போயிருக்கும்" என அஞ்சனா வீட்டை விட்டு வெளியே வந்ததுக்கப்பறம் அங்கு நடந்ததை தெளிவாக சொன்னான்.
"சரிடா சீஸ் இஸ் வெர்ஜின் ?"
"எஸ் டா மச்சான். அதான் அந்த கல்கத்தாக்காரன் கன்னித்தன்மையா, பிரெஷ்ஷான பொண்ணுதான் வேணும்னு சொல்லிட்டானே அப்புறம் எப்படி நான் அவளை தொட முடியும். இல்லனா இந்த அசோக் இந்நேரம் அவளை விட்டு வச்சுருப்பான. நான் அப்படி ஒழுக்கமான பையனா இருந்ததுனாலதான் அவள் என்னை முழுசா நம்புன்னா இல்லைனா சந்தேகம் வந்து என்னைய கழட்டி விட்டுருப்பா."
"எல்லாம் சரிடா ஆனா ஒழுக்கமான பையன் மட்டும் வேணாம் கேக்கவே கண்றாவியா இருக்கு அவன் அப்படி கூறியதும் அசோக் முறைத்து பார்க்க சரிடா இப்ப பிளான் என்ன ?" என வாசு பேச்சை மாற்றினான்.
"எப்பவும் போலதான்டா நீ வாங்கிட்டு வந்த சாப்பாட்டுல மயக்க மருந்து கலந்து அதை அவளுக்கு கொடுப்போம் அவளும் மயக்கம் போட்டு விழுவா அப்புறம் மெல்லமா தூக்கிட்டு போய் காரில் ஏத்தி அவளை சேப்பா கல்கட்டாக்காரன் கிட்ட விட்டுட்டு நமக்கு சேர வேண்டிய பணத்தை வாங்கிட்டு வந்துரவேண்டியதுதான். அப்புறம் இன்னொரு விஷயம் மச்சி இது எல்லாமே அவள் மயக்கம் தெளியறதுக்குள்ள நாம பண்ணி ஆகணும் கொஞ்சம் அவள்கிட்ட அசைவு தெரிஞ்சாலும் மறுபடியும் மயக்க மருந்து கொடுத்து சுய நினைவை இல்லாம செஞ்சரனும். நாம்தான் இந்த நிலைமைக்கு காரணம்னு எக்காரணத்தை கொண்டும் அவளுக்கு தெரியவே கூடாது ஓகே."
"ம் சரிதான் இந்தா சாப்பாடு நீ சொன்ன மாதிரியே இதுல மயக்க மருந்து கலந்துட்ட எப்படியும் 5 மணிநேரத்துக்கு அவ எந்திரிக்க மாட்டா புடி" என கூறி அவனது கையில் சாப்பாடு பொட்டலத்தை கொடுத்தான் வாசு. அவனும் அதை எடுத்து கொண்டு மேலே உள்ள அவனது அறையை நோக்கி நடக்கலானான். இவன் வெளியே வருவது தெரிந்ததும் வேகவேகமாக அஞ்சனா அறைக்கு சென்று கதவை பூட்டினாள் ஆனால் அது தாள்பாழ் இல்லாமல் இருந்தது.
அஞ்சனாவிற்கு பயம் தொற்றிக்கொண்டது. எப்படியாவது இந்த இடத்தை விட்டு தப்பித்து போகவேண்டும் என்ன செய்வது என பயத்துடன் அவள் போட்டிருந்த சுடிதார் ஷாலின் முனையை பிடித்தபடியே நிற்க அதே நேரத்தில் அவன் வரும் காலடி ஓசை கேட்டது.
"ஹை அஞ்சு குட்டி உனக்கு நான் சாப்பாடு கொண்டு வந்துருக்கேன்" என்று கூறியபடியே அவள் அருகில் வந்தான் அஷோக்.
தொடுவானம் தொடரும்.