நல்லூர்
 
Share:
Notifications
Clear all

நல்லூர்

(@admin)
Posts: 88
Member Admin
Topic starter
 

யாழ்ப்பாணத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான நல்லூர் முருகன் கோவிலை பற்றி பார்ப்போம். 

யாழ்ப்பான வைபவ மாலை என்ற நூலின் பிரகாரம் பழைய நல்லூர் கோவிலானது CE 9 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்தக் கோவில் ஆரம்ப காலத்தில் இன்று St James சேர்ச் இருக்கும் இடத்தில்தான் இருந்தது.

சங்கிலிய மன்னனின் அரண்மனை வாசலுக்கு அருகே அமைந்திருந்தது அன்றைய நல்லூர்... 

போர்த்துகீசரினால் வீரகாளியம்மன் கோவில் முன்னால் சங்கிலிய மன்னன் கொல்லப் பட அனுராதபுரம் வரை பரந்திருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் அழிவும் ஆரம்பமாகியது. டச்சு காலாத்தின் போது அந்தக் கோவில் இடிக்கப்பட்டு அதன் கற்களையும் குண்டு மணியில் இருந்து செய்த பசையையும் கொண்டு டச்சுக் கோட்டை, St. James சேர்ச் இனையும் கட்டினார்கள். இந்த டச்சுக் கோட்டையை பற்றி இன்னொரு பதிவில் பார்ப்போம். 

 

காலங்கள் கடந்தோட கோவில் இடிக்கபட்டு ஒரு நுற்றாண்டு கடந்திருந்தது. 

 

கதிர்காமத்தில் கார் வைத்திருந்தவர் அருகே வந்த மற்றவர் யாழ்ப்பாணம் போக வேண்டும் என கேட்கவே அவரும் மறுப்பின்றி அவரை கூட்டிக் கொண்டு வந்தார். இப்போது பருத்தித்துறை வீதியில் அமைந்திருக்கும் குருக்கள் வளவு என்னும் இடத்திற்கு வந்தவர் நான் இங்கேதான் இருக்கிறேன் எனக் கூறி மறைந்தார்.

 

இன்றும் கதிர்காமத்திலிருந்து முருகன் வந்த அந்த நாளின் போது, கோவிலை மூடுவதற்கு முன்னர் உள்ளே நுழையும் வாசலில் திருநீற்றை கொட்டி விட்டு அதிகாலை வந்து திறந்து பார்க்கும் போது அதில் காலடி தடம் இருப்பதாய் ஐதீகம் உண்டு. 

 

அதன் பின்னர் கிட்டத்தட்ட பத்து தலை முறைகளாய் இந்தக் கோவிலை மாப்பாண முதலியாரின் வம்சவளியினரே நிர்வாகம் செய்து வருகின்றனர். அது மட்டுமில்லை கிட்டத்தட்ட CE 9 ஆம் நுற்றாண்டு தொடக்கம் மூலஸ்தானத்தில் இருக்கும் அதே வேல்தான் வணங்கப்பட்டு வருகின்றது. 

 

நல்லூர் என்று சொன்னால் நினைவில் வரும் இன்னொன்று நேரம் தவறாமை. பத்து மணி அடிக்கும் போது சரியாய் கொடி ஏறும். அதே போல் ஏழு மணி என்றால் தேரில் இருப்பார். இவரை போல் ஒரு நேரகாரனை பார்க்கவே முடியாது. 

 

இங்கே ஆறுகால பூசைகள் நடை பெறுகின்றது. அபிசேக கந்தன் என்ற பெயருக்கு ஏற்ப சனிக்கிழமை தவிர மீதி ஆறு நாட்களும் முருகனுக்கு அபிசேகம் நடக்கும். 

 

மூலவராக வேலும் உற்சவ மூர்த்திகளாக ஆறுமுக சுவாமி, முத்துக்குமார சுவாமி, பழனியாண்டவர் உள்ளனர். இவர்களில் பழனியாண்டவர் மாம்பழ திருவிழாவின் போதும் கந்தசஷ்டி உற்சவத்தின் போதும் வெளியே வருவார். 

 

ஆறுமுக சுவாமி தேரின் போதும் கந்தசஷ்டி ஆறாம் நாளின் போதும் வைகாசி மாதம் வரும் மணவாள கோலத்தின் போதும் உலா வருவார். 

 

அழகு கொஞ்சும் முத்துக்குமார சுவாமி, தங்க ரதம் அல்லது மஞ்சத்தின் போதும் காத்திகை திருவிழாவன்று பூச்சப்பரத்தின் போதும் அருள் தருவார் 


 
Posted : October 11, 2025 6:55 pm
Share: