உன்னை நான் யாசிக்கி...
 
Share:
Notifications
Clear all

உன்னை நான் யாசிக்கின்றேன்

Posts: 45
Admin
Topic starter
(@admin)
Member
Joined: 2 months ago

யாசகம் ♥ 06

அன்றிரவு பாண்ட் பாக்கெட்டில் கைவிட்டவாறு நின்றவனிடம் வந்து நின்றான் அவனது நண்பன் அருண். எதுவும் பேசாமல் பார்த்தவன் பார்வையிலேயே பெண் பார்க்கும் படலத்தில் நடந்தது அனைத்தையும் விபரித்தான். புருவங்களில் முடிச்சுடன் அருண் முகம் பார்த்தவன் " சோ அவங்க அக்கா அத்தானை மரியாதையாக தான் நடத்தி இருக்கிறார்கள்.... ஆனா....." என இழுத்தவன் கேட்டான் "ரோஸ்.. ஐ மீன் சன்விதாவை அக்கா எப்போ எப்படி பார்த்தாங்க, உன்னோட கதைப்படி அந்த டைம் அவள்தான் வீட்டில் இல்லையே"

ஒரு கணம் தயங்கியவன் "அன்று கோவிலில் ஏதோ விசேஷம் என்று அக்கா தங்கை இருவரும் சென்றுவிட்டார்கள், அக்கா அவர்களை கோவிலில் சந்தித்தார்கள்"

"ஆனால், என்னை அவள் எப்படி அடையாளம் கண்டு கொண்டாள் நான் பழகிய எந்த வட்டத்துள்ளும் அவள் வர சாத்தியமே இல்லையே" அச்சுதன் முகத்தில் குழப்பத்தின் ரேகை ஓடியது.

"இல்லாட, அக்கா உன்னோட போட்டோ காட்டினார்கள், போட்டோ பார்த்ததும் தான் உன்னை அடையாளம் கண்டு....... " இப்போது குழப்ப ரேகை அருண் முகத்திற்கு ஒரே தாவாக தாவியது.

"இதை பற்றியும் கொஞ்சம் இன்வெஸ்டிகஷன் செய்ய சொல்லு அருண்"  என்றவனிடம் விடை பெற்று திரும்பியவன் வாசலில் போய் நின்றவாறு அழைத்தான் "மச்சி.... தங்கச்சி சூப்பர் அதோட ஜோடி பொருத்தம் பிரமாதம்" பெரு விரலையும் சுண்டு விரலையும் சேர்த்து காட்டினான்.

சட்டென சிரித்தவன் அருகே இருந்த காற்றடைத்த ஜிம் பந்தை அவனை நோக்கி உதைக்க சிரித்தவாறே அங்கிருந்து ஓடிவிட்டான்.

♥♥♥♥♥

அடுத்த நாள் காலை.....

காலை நேர வாக்கிங் ஜாக்கிங் முடிந்து வரும் சீனி வந்த சீனியர்களும், கணவனுக்கு சாப்பாடு கொடுத்து விடும் மனைவிகளும், அப்படியே கணவன் பைக் பின் வேலைக்கு செல்ல தொத்தி கொண்ட பத்தினிகளும், பள்ளி செல்லும் குழந்தைகளை ஏற்றி செல்லும் பஸ்களும், பஸ் யன்னலூடே எட்டி பார்த்து குறும்பு செய்யும் குழந்தைகளும் அவர்களுக்கு டாடா காட்டும் அம்மாக்களும் என காலை நேர சுறுசுறுப்பை தத்துக்கு எடுத்தது போல் இருந்தது அந்த தெரு.

அந்த சாதாரண தெருவில் சற்று ஓரமாய் தள்ளி மர நிழலில் நின்ற BMW கார் மட்டும் அசாதாரணமாக தெரிந்தது. அதன் உரிமைக்காரன் அதன் மீது சாய்ந்தவாறு போனை கையில் வைத்து ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான். அவ் வழியே சென்ற பெண்கள் யாருடா இந்த ஹீரோ என்பது போல் பார்த்து வைக்க ஆண்கள் அரவிந்தசாமி மட்டும் இல்லடா நீயும் எங்களுக்கு வில்லன் தாண்டா என்று மனதுள் தாளித்தவாறு சென்றனர்.

அருகில் இருந்த வீட்டிலிருந்து பெண் தனது அம்மாவுக்கு பை காட்டிவிட்டு அவனது காரை தண்டி சென்றாள். அவளது ஸ்கூட்டி தெரு முனையை தாண்டுவதை கார் பக்க கண்ணாடியில் பார்த்தவன் அந்த வீட்டை நோக்கி நடந்தான்.

டொக்..... டொக்.....

இப்ப தானே போனாள் எதையாவது மறந்திட்டளோ.... மனதினுள் நினைத்தவாறே கதவை திறந்தவர் முன் நின்றான் அவன்.

அலையலையாய் கருகருவென அடர்ந்த ஆரோக்கியமான கேசம், பரந்த நெற்றி, அடர்ந்த புருவங்களின் கீழ் ஈட்டி போல் பளிரிட்ட தீர்க்கமான கண்கள், நீண்ட நேரான நாசி, வரைந்தது போன்ற உதடுகள் ஒரு அழுத்தத்துடன் மூடியிருந்தது அவனது சதுர முகவாயை இறுக்கமாய் காட்டியது. களையான முகத்துடன் ஆறரை அடிக்கு அந்த வாசலை சிறிதாக்கி கொண்டு கறுப்பு நிற ஷர்ட்டும் சாம்பல் வண்ண பான்ட் அணிந்து நின்றவன் கரம் குவித்தான்.

"வணக்கம்.... உள்ளே வரலாமா..?"

அவனது உடையின் தரமும் நின்ற விதமும் கூறியது நான் சாதாரணமானவன் இல்லை என்று.

உள்ளே வருமாறு தலையசைத்த பத்மாவதி அவனது காலைப் பார்த்தார். அதில் சோக்ஸ் மட்டும் இருக்கவே நிமிர்ந்தவர் கண்களில் பட்டது துளசி மாடத்துக்கு அந்த பக்கம் வைக்கப்பட்டிருந்த காலனி. இது மாதிரியான பழக்க வழக்கங்கள் நல்ல பண்பான வளர்ப்பிலேயே சாத்தியம் இடையில் வராதது யோசனையுடன் தலை சாய்த்து பார்த்தார்.

"நான் கேசவன் அச்சுத கேசவன், AK இன்ஸ்ட்ராரீஸ் சேர்மன்" கர்வமின்றி சொன்னவன் அளவாய் புன்னகைத்தான்.

"உள்ளே வாருங்கள்" என அழைத்தவர் நீதானே வந்தாய் நீயே பேசு என்பது போல் அவன் எதிரே சோஃபாவில் அமர்ந்தவர் அமைதியாக இருந்தார்.

"நீங்கள் மறுத்ததாக அக்கா...... "

அவன் தொடர்வதற்கு முன்னே இடையிட்ட பத்மாவதி "இதை பற்றி தான் பேச வந்தீங்க என்றால் கதவு திறந்தே தான் இருக்கு" அவரது சட்டென்ற முகத்தில் அடித்தால் போன்ற பதிலில் அச்சுதனின் கண்களில் ஒரு கடினம் கண்ணிமைக்கும் நொடியில் கடந்தது மறைந்தது. AK இன்ஸ்ட்ராரீஸ் ஏகபோக உரிமையாளனினை இதுவரை அவமதிக்க துணிந்தவர் எவருமில்லை அல்லது அப்படியானவர்களை அவன் விட்டு வைத்ததில்லை என்று கூற வேண்டுமோ. 

ஒரு கணம் கை விரல்கள் முஷ்டிகளாய் இறுக கண்ணை மூடி நிதானித்தவன் "உங்கள் கணவர் வேலை செய்வது என்னோட இன்னொரு கம்பெனில தான் சோ என்னை பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்"

"பணம் மட்டுமே வாழ்கை இல்லை"

"AK இன்ஸ்ட்ராரீஸ் என்னோட அடையாளம், பணத்தையோ அந்தஸ்த்தையோ காட்டுவதாக இருந்தால் என் பரம்பரை கம்பெனியை தான் சொல்லி இருப்பேன்" அவன் தாத்தா காலத்தில் இருந்து வரும் அந்த கம்பனி பேர் சொன்னான். உப்பில் இருந்து கார்களின் பாகம் வரை தயாரிக்கும் ஒரு கம்பெனி.

அதிர்ந்து போய் இருந்தார் பத்மாவதி. AK இன்ஸ்ட்ராரீஸ்சே அவரது எண்ணங்களுக்கு அப்பால் நிற்க அவன் பரம்பரை பரம்பரையாக வந்த கம்பனியின் பெயர் அவரது கற்பனைக்கும் எட்டாத தூரத்தில் நின்றது. இவ்வளவு பெரிய நபர்களா தன் மகளை பெண் கேட்டு நேற்று  வந்தது. அவர்கள் அந்தஸ்துக்கு வந்ததே பெரிது இதில் அவ்வளவு சாதாரணமாக வந்தது அதிர்ச்சியாக தான் இருந்தது. பணத்தில் மட்டுமல்ல பெயர் புகழிலும் உச்சத்தில் இருக்கும் குறித்து கூற கூடிய பரம்பரை அதன் வாரிசாக அவன். சட்டசபைக்கு யார் போவது என்பதை கூட எதிரில் இருப்பவன் நிர்ணயிக்க கூடும் என்பதனை நம்புவது சற்று கடினமாகவே இருந்தது பத்மாவதிக்கு. யார்தான் நம்புவார்கள் முப்பதுகளில் இருப்பவன் இவ்வளவு பெரிய ஆளாக இருப்பான் என்று. ஆனால் வெறும் பின்னணி மட்டும் இவனை இந்த நிலைக்கு கொண்டு வராது என்பது தெளிவாக புரிந்தது.

பத்மாவதி பேச்சின்றி அமர்ந்திருக்க ஒரு கணம் அவரை ஆழ்ந்து நோக்கியவன் அவனே தொடர்ந்தான் "அது என்னோட கடந்த காலம் மட்டுமே, இனி எப்போதுமே அப்படி நடக்காது இதை நீங்க நம்பலாம். இதுவரை அச்சுத கேசவன் சத்தியத்தை மீறியதில்லை இனியும் மீறமாட்டான்." கூறியவனின் கண்களில் தென்பட்ட உறுதியும் நேர்மையும் பத்மாவதியினை அசைத்துதான் பார்த்தது.

மெல்ல தலையசைத்தவர் "இப்போது பிரச்சனை உங்களின் கடந்தகாலமோ அல்லது நீங்கள் மாறிவிட்டிர்களா என்பதோ இல்லை, என் மகளுக்கு பிடிக்குமா இல்லையா என்பது தான், திருமணத்தினை பற்றி அவளுக்கு என்று ஒரு கனவு இருக்கு அதை எந்த காரணத்திற்காகவும் யாருக்காகவும் விட்டு கொடுக்க முடியாது, அவள் எங்களிடம் மல்டி மில்லியனேர் வேண்டும் என்றெல்லாம் கேட்கல அவள், ஒழுக்கமான ஒருத்தன், ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கொள்கை உள்ளவன் அவளை காதலிப்பவன் என்று ஒருவனை கேட்டாள் அதை மறுக்க எங்களால் முடியாது."

தன் கடந்த காலத்தை மனதார சபித்தவன் "நான் மாறிவிட்டேன், இனி எந்த சந்தர்ப்பத்திலும் அந்த பாதைக்கு போக மாட்டேன் என்னால் போகவும் முடியாது அதுக்கு காரணமும் அவள்தான்"

பத்மாவதி அவனை பரிதாபமாக பார்த்தார். அவனது சிவந்த முகமும் அதில் தடக்கி விழுந்த தடுமாற்றமும் கூறியது இவன் யாரிடமும் இது போல் கெஞ்சாத குறையாக கேட்டதில்லை.

"மகன் இப்ப பிரச்சனை நீங்க மாறிட்டீங்களா இல்லையா என்பது இல்லை உங்களால் கடந்த காலத்தினை மாற்ற முடியாது "

"சோ இது தான் உங்கள் முடிவு.... " கண்முடி நிதானித்தவனாய் கேட்டான். அவன் கண்முடி சோபாவில் இருந்த கம்பிரத்தினை பார்த்தவாறு பத்மாவதி அமைதியாக இருக்கவே ஒரு கணம் யோசித்தவன் "ஒருவேளை சன்விதாவுக்கு பிடித்த்திருந்தாள், அவள் என்னை காதலித்தாள்....." கண்களினை திறந்து அவரை ஊடுருவியவன் கேட்டான் "ஒருவேளை சன்விதா என்னை கல்யாணம் செய்து கொள்ள சம்மதித்தால் நீங்கள் இதே காரணத்தினை கொண்டு மறுப்பீர்களா?"

முகத்தில் வருத்தமான ஒரு புன்னகை படர "நாங்க மறுப்பதுக்கு காரணமே அவள்தானே... நடக்கவே முடியாதது" உறுதியாக சொன்னார்.

"அப்படி நடந்தால்......."

"அப்படி நடக்கும் போது பார்த்துக்கொள்ளலாம்" தாயறியாத சூல என அலட்சியமாக கூறினார். அப்படியும் ஒரு காலம் வரக்கூடும் என அறியாது, காலம் வந்தது ஆனால் இருவரும் நினைத்து போல் அல்லாமல் வேறு விதத்தில்.

தலையசைத்தவன் எழுந்து கதவினை நோக்கி நடந்தான். "மகன் நிச்சயமாக உன்னை காதலிக்கும் ஒருத்தியை சீக்கிரமே சந்திப்பாய்" பத்மாவதியின் குரல் பின்னிருந்து கேட்டது. அச்சுதன் திரும்பாமலே நடந்தவாறே சிறுநகையுடன் பதிலளித்தான் "நிச்சயமாக ஆனால் சந்தித்துவிட்டேன், அவள் பெயர்  சன்விதா, எனக்கு அவள் மட்டும் தான் வேணும், பொறுத்திருந்து பாருங்கள் யார் ஜெயிப்பது என்று" மறுப்பாய் தலையாட்டிய பத்மாவதி பதிலாய் "அவள் ஒருவரை நேசிக்கிறாள் என்று நினைக்கின்றேன்" என்றார்.

கதவருகே நின்றவன் திரும்பாமலே கேட்டான் "எப்படி சொல்கின்றீர்கள்?"

"நான் அவளது அம்மா என்னை நம்புங்கள்" வருத்தத்துடன் சொன்னார்.

கதவை தாண்டி சென்றவன் திரும்பி சொன்னான் "என்னை நம்புங்கள் அத்தை அடுத்த முறை இந்த வீட்டிற்கு வரும் போது உங்கள் மருமகனாய் என்னை ஆலம் சுற்றி வரவேற்பிங்க" அவன் அந்த வார்த்தைகளை சொன்னபோது அவன் கண்களை பார்த்த பத்மாவதியின் கண்களில் இரையை வேட்டையாட குறி வைத்த புலியின் கண்கள் தான் நிழலாடியது.

வெளியில் சென்று ஷூ அணிந்தவனை பார்த்து கொண்டிருந்தவருக்கு உண்மையிலேயே வருத்தமாக இருந்தது இப்படி ஒரு மாப்பிள்ளை தேடினாலும் கிடைக்காது. அவன் கண்களில் உண்மையையும் காதலையும் கண்டார் அந்த அனுபவமிக்க பெரியவர். அவன் சொன்னால் சொன்ன சொல் தவற மாட்டான் என்பதும் புரிந்தது ஆனால் அதற்காக மகளின் ஆசையை தூக்கி எறியவும் முடியாதே சத்தமின்றி வந்த பெருமூச்சினை வெளியேற்றியவர் கேட்டை கடந்து போகும் அவனது கம்பிர தோற்றத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்.

வெளியே சென்ற அச்சுத கேசவனின் முகத்தில் ஒரு வெற்றி புன்னகையின் சாயல். அவன் அவருடன் பேசிய போதும்  வெளியே வரும் போதும் அவரது உடல் மொழிகளை கவனித்து கொண்டுதானே இருந்தான். இல்லாவிட்டால் இவ்வளவு பெரிய தொழில் சாம்ராஜ்யத்தினை கட்டியள முடியுமா. ஒன்று புரிந்தது சன்விதாவின் சம்மதம் இவர்களின் சம்மதம்.

இந்த திருமணம் முறைப்படி நடக்க வேண்டும் என அவனது அக்காவின் உத்தரவு மட்டும் இல்லாது இருந்திருந்தால் இந்நேரம் சன்விதா அவனது வீட்டில் இருந்திருப்பாள் ஆனால் இந்திய பிரதமரின் வார்த்தையை விட அவனுக்கு அவன் அக்காவின் ஒரு சொல் வேதம். அவனுக்கே வலி தரும் விடயம் எவ்வாறு அக்காவின் வார்த்தையை அந்த ஒரு விடயத்தில் மட்டும் கேட்க மறுத்தான் என்பது தான் ஆனால் எல்லாம் அந்த பாழாய் போன பழக்கத்தால் வந்த வினை, அந்த பழக்கத்தில் இருந்து மீள்வதற்கு இந்த பெண்கள் பழக்கத்தினை தேர்தெடுத்ததன் விளைவு இது.

♥♥♥♥♥

மறுபடியும் இரவில் தூக்கமின்றி நின்ற தம்பியை பார்த்த சுபத்ராவுக்கு துக்கம் பொங்கி கொண்ட வந்தது கணவன் அர்ஜுன் தோளில் சாய்ந்து கொண்டவள் தன் வருத்தத்தினை அவனிடம் பகிர்ந்தாள் "கண்ணா காதலிக்கிறான் என்று சொன்னப்ப நான் ரொம்ப சந்தோசப்பட்டேன் ஆனா அவனை என்னால எப்படி பார்க்க முடியல இதுக்கு அவன் முன்ன மாதிரியே இருந்து இருக்கலாம் "

அவளை நெஞ்சொடு அனைத்துக்கொண்டவன் "ஸ்ஸ்... கவலைப்படாதம்மா எல்லாம் சரியாகும்"

அவனது நெஞ்சினுள் மறுப்பாய் தலை அசைத்தவள் "ஆனா நீங்க அவளுடைய கண்ணை பார்க்கல, அவ்வளவு வெறுப்பு இருந்திச்சு. அவன் இப்ப அதை ஏற்றுக்கொள்ளமால் இருக்கிறான். ஆனா அவனுக்கு புரியும் போது....." அழுகையை உதட்டை கடித்து அடக்கினாள்.

அர்ஜுன் தன்னோடு இன்னும் அவளை இறுக்கிக் கொண்டான் "அது இறுதியான முடிவு இல்ல சுபத்ரா, அச்சு கண்ணுல தெரியும் காதல் உண்மையானது அது நிச்சயமா அந்த பெண்ணுக்கும் ஒரு நாள் புரியும் ம்ம்... ஓகே ஆனா நான் யோசிக்கிறது சிலவேளை அதிரடி முடிவுகளால் அந்த பெண்ணுக்கு வலிக்க செய்து இவனும் வேதனைப்படுவான் ஆனா எல்லாம் சரிவரும் சரியா?" கனிவாக அவளை ஆறுதல்படுத்தி உச்சந்தலையில் முத்தமிட்டவன் போலியாக ஒரு பெருமூச்சை வெளியிட்டான். 

சுபத்ரா அவன் நெஞ்சிலிருந்து நிமிர்ந்து கேட்டாள் "என்ன.... " சற்று குனிந்து பார்த்தவன் "என்ன செய்ய அவனுக்கு அடுத்தவர்கள் அனுபவத்தை பார்த்து படி என்று சொன்ன கொஞ்சம் கூட புரியவேயில்லையே..... " 

குழப்பத்துடன் கேட்டாள் "என்ன படிக்கல..... "

படு சோகமான முகத்துடன் சொன்னான் அர்ஜுன் "இல்ல என்னை பார்த்து என்னோட நிலைமையை பார்த்த பின்பும் அவன் லவ் பண்ணியிருக்கான் தானே என்று நினைத்தேன்."

அவனை தள்ளிவிட்ட சுபத்ரா “ஓ அப்படியா.... நான் நினைக்கிறன் இன்று நீங்க வெளியில தான் படுக்கணும்” போலி அதிர்ச்சியுடன் சொன்னான் “டார்லிங்... நான் உன் கணவனம்மா இப்படியெல்லாம் சொல்ல கூடாது, மீ பாவம்...”

கையை தூசு தட்டியவள் “இந்த நிலைமையில் இருப்பவரை பார்த்து சொல்லலாம்” என்றவாறு அவனிடமிருந்து விலகி நடந்தாள்.

அர்ஜுனுக்கும் அச்சுதனை நினைத்து கவலையாக தான் இருந்தது  இந்த பிடிவாதம் வெற்றி பெறா விட்டால் என்னவாகும் என்பது இன்னும் புரியாமலே இருந்தது ஆனால் மனைவியின் மனதினை மாற்றும் பொருட்டு நடித்து கொண்டிருந்தான். அவளது மனநிலை மாறியது மகிழ்ச்சியளிக்க முகத்தை சோகமாக மாற்றி அருகே இருந்த பூச்சாடியில் இருந்த பூவை கையில் வைத்தவாறு அவள் முன் மண்டியிட்டான்.

“நோ நெவெர் நோ சான்ஸ்”

“ப்ளீஸ்....” அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டான் அர்ஜுன். அதை பார்த்தது சிரிப்பை அடக்கி கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள். அவள் பின்னே அவன் ஓட கைபட்டு பூச்சாடி கீழே விழுந்தது.   

அந்த சத்தத்தில் நினைவுகளில் இருந்து மீண்ட அச்சுதன் நீண்ட பெருமூச்சினை வெளியேற்றினான்.  அவள் இன்னொருவரை காதலிக்க கூடும் என்ற நினைவிலேயே  மனம் கசந்து வழிந்தது “பரவாயில்ல சன்விதா நீ என்னை காதலிப்பாய், காதலிக்க வைப்பேன், இந்த அச்சுத கேசவனிடமிருந்து அவ்வளவு எளிதாக தப்ப முடியாது” தனக்கு தானே தைரியம் சொல்லி கொண்டவனுக்கு சிறிது பயமாகவும் இருந்தது.

அவனது டிடக்டிவ் ஏஜென்சி கடந்த ஒரு வருடத்தில் அவள் யாரையும் காதலித்ததாகவோ அல்லது சந்தித்ததாகவோ எந்த தகவலும் தரவில்லை அவர்கள் நம்பகமானவர்கள் ஆனால் அவளது அம்மாவும் கூறினார் அவளும் ஏதோ தொடங்கிவிட்டு நிறுத்திவிட்டாள்.

தலையை உலுக்கிவிட்டு திரும்பிய அச்சுதன் கண்களில் விழுந்தார்கள் அவனது அக்காவும் அத்தானும், அவர்களது நோக் ஜோக் அவனுக்கு சிரிப்பை ஏற்படுத்தியது.

மனைவியை அப்படியே அலாக்காக ஒரே தூக்கில் தூக்கியவனின் கழுத்தை கட்டி கொண்டு “விடுங்கள் என்னை” என்றவளுக்கு பதிலாக “ம்ம் விடுறானே ரூமுக்கு போனதும்” என்றான்.

“ஐயோ அங்க பையன் தூங்கிறான்”

“பரவால்ல உன்னையும் தூங்கதான் விடுறன் என்று சொன்னான் நீ என்ன நினைத்தாய்”

“ஹான்....” என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்த சுபத்ராவை பார்த்தது கொண்டிருந்த அச்சுதன் அடக்க முடியமால் சிரிக்க, அந்த சத்தத்தில் உள்ளங்கைகளில் முகத்தை புதைத்து “ஐயோ, மானம் போகுது இறக்கி விடுங்கோ, ப்ளீஸ் நான் எதுவும் நினைக்கல” என்று கெஞ்சிய மனைவியை பார்த்து சத்தமாக சிரித்தவன் மச்சானுக்கு கண் அடித்துவிட்டு படுக்கையறை நோக்கி நடந்தான்.

அந்த திருமணமான காதலர்களை பார்த்தவனுக்கு அவனையறியாமலே சன்விதாவுடன் தான் இவ்வாறு செல்ல சண்டை போட்டால் எப்படி இருக்கும் என காட்சி மனக்கண் முன் விரிய வந்த சிறு புன்னகையை உதடு கடித்து அடக்கியவன் மீண்டுமாக வானத்தை பார்த்தவனுக்கு இன்று அம்மாவசை ஆனால் நாளை நிலவு வரும் என்ற நம்பிக்கை வர அவள் காதலையும் வெல்லலாம் என்ற லேசான மனதுடன் உறங்கச் சென்றான்

Reply
Posts: 45
Admin
Topic starter
(@admin)
Member
Joined: 2 months ago

யாசகம் ♥ 07

“ஹாய் ரோஸ்..” திடீரென காதில் கேட்ட அந்த குரலில் துள்ளி விழுந்தாள் சன்விதா. பின்புறமிருந்து வலிமையான இரு கரங்கள் அவள் விழாத வண்ணம் தோளை பிடித்து கொண்டன. தோளுக்கு மேலால் பின்னாள் திரும்பி பார்த்தவள் கண்களில் அந்த கண்ணணை போன்ற குறுஞ் சிரிப்புடன் நின்றான் அச்சுதன்.

சுற்றும் முற்றும் பார்த்தவள் யாரையோ தேட, புருவத்தை உயர்த்தி கேட்டான் அச்சுதன் “யாரை தேடுகிறாய்?”

ஆயிரம் வாட்ஸ் பல்பு போல் சிரிப்புடன் குழந்தையாய் கேட்டாள் “யார் அந்த ரோஸ்? நீங்க உங்கள் மனதை மாத்திட்டீங்க தானே” அத்துடன் நில்லாமல் அருகே இருந்த நிஜ கண்ணனிடம் திரும்பி “தாங்க்யூ கண்ணா ஒரு வழியா இவன்.. இல்ல இல்ல தப்பு தப்பு இவர் மனதை மாத்திட்ட” ஓரடி வைத்து அவளை நெருங்கிய அச்சுதன் கழுத்தை கூட எட்டாமல் தன் நெஞ்சுக்கு சற்று மேலே இருந்தவளின் காதில் குனிந்து சொன்னான் “அது நீதான் சன்விதா, ரோஸ்...”

அவனின் உடலில் இருந்து வந்த வெப்பத்தை உணரும் தூரத்தில் இருந்த சன்விதாவிடமிருந்து “ஹஹ்..” என்ற சத்தம் மட்டும் வெளிவந்தது.

ஆள்காட்டி விரலால் அவள் முகத்தில் கோலமிட்டவன் “ஹ்ம் அது நீதான் சன்விதா, வெட்கப்படும் போது சிவந்து, தொட்டால் மென்மையாய்” அவன் பார்வையும் குரலும் அவளை ஏதோ செய்ய மந்திரமிட்டது போல் மதிமயங்கி நின்றாள் “பேசும் போது மட்டும் முள்ளாய் இங்கே வலிக்க வைக்கிறாய்” என்றவன் நெஞ்சை தொட்டு கட்டினான். அவன் கடைசியாக சொன்னதில் அவளின் மயக்கம் தெளிய சினத்துடன் முகம் திருப்பினாள்.

அவள் கன்னத்தில் ஒரு விரலை வைத்து திருப்பி தன்னை பார்க்க செய்தவன் “என்னிடம் முகம் திருப்பதே..” மெல்லிய சினத்துடன் சொன்னவன் அப்படியே பெரு விரலால் இதழ்களின் கீழே வருடினான்.

கடித்த பற்களுக்கிடையில் வார்தைகளை மென்று துப்பினாள் “இது கோவில் மிஸ்டர் அச்சுத கேசவன்” ‘ச்சே பெயரை கொஞ்சம் சின்னதா வைச்சிருக்கான எப்பபார் நீட்டி முழங்க வேண்டி இருக்கு’ மனதுள் தாளித்தாள்.

அப்பாவி போல் “சரி வா அப்படியானால் வெளியே சென்று விளையாடுவோம் காதல் விளையாட்டை” லேசாக கண்ணடித்தவாறு கேட்க சன்விதாவின் கண்கள் தெறித்துவிடும் போல் விரிந்தது.  சரியான வெட்கங் கெட்டவனா இருப்பான் போலயே வாய்க்குள் முனகியவள் “சாமிக்கு முன் இப்படி தான் நடப்பாங்களா...” என்றவள் திரும்பி கன்னத்தில் போட்டு கொண்டாள். அவளின் சிறுபிள்ளைதனமான அந்த செயலில் தன்னை தொலைத்து மயங்கி நின்றான்

“நான் சொன்னது நீ போக நான் பின் தொடரும் விளையாட்டை நீ என்ன நினைத்தாய்?” அவளை வேண்டுமென்றே சீண்டினான்.

“ஆங்... நான் எதையுமே நினைக்கல ஆளை விடுங்க”

“இல்ல... நீ நினைக்கிற மாதிரியும் செய்யலாம் ஆனா இப்ப  இல்ல கல்யாணத்துக்கு அப்புறம்” குறும்பாய் கூறினான்.

குறும்பில் விகசித்த அவன் முகத்தை பார்த்து ஒரு கணம் இழுத்த மூச்சு காற்றை விட முடியாமல் திணறியவள் கைகளை முஷ்டியாக்க அச்சுதன் வியப்புடன் பின்புறமாக சற்றே சரிந்தான். ஆஆஆ..... என்றவாறு ஒரு காலை நிலத்தில் ஓங்கி உதைக்க அதுசரியாக அவனது கால் சிறு விரலில் பட்டு வலி உயிரை எடுத்து. "ouch" என்றவாறு காலை சற்று தூக்கியயவன் சட்டெனெ மூண்ட கோபத்தில் அவளை முறைத்தான்.

அவளோ சிறிதும் பயமின்றி முகத்தில் விழுந்த முடியை வாயால் மேல் நோக்கி ஊதியதோடு சேர்த்து அவனையும் ஊதி தள்ளிவிட்டு சென்றாள். 

“இவளை...” என்று அடி தொண்டைக்குள் முணுமுணுத்தவனை மனசாட்சி கேலியாக கேட்டது ‘இவளை என்ன செய்ய போற ஒன்னும் கிழிக்க முடியாது அவளில் சின்ன நக கீறல் விழுந்தால் கூட தங்க முடியுமா உன்னால்? முடியாது இல்லல்ல பேசாம மூடிட்டு போ’

கோவிலை சுற்றி வந்தவளை இரண்டே எட்டில் அடைந்தவன் அவளருகே நடந்தவாறு “இன்று எதாவது விசேஷமா?”

கேள்வியாய் நோக்கியவளிடம் “இல்ல கோவில் எல்லாம் ஒரே தேவிகள் தரிசனமாக இருக்கு அ....” அவளது முறைப்பில் அடங்கியவன் “எல்லாம் ஒரு அறிவுக்குதான்” என சமாளித்தான்.

“ஹ்ம்ம்... இன்று கௌரி பூஜை” என்றவள் அவன் புருவம் கேள்வியால் உயர “கன்னி பெண்கள் நல்ல கணவன் வேணும் என்றும் கல்யாணமான பெண்கள் சுமங்கலியாக இருக்கனும் என்று விரதம் இருப்பார்கள்” என விளக்கமாய் பதிலளித்தாள்.

“ஓ... ஆனா நீ விரதம் இருக்க அவசியமில்லை” இப்போது அவள் புருவம் கேள்வியால் உயர “இல்ல அதான் நான் கிடைச்சிட்டானே அப்புறம் ஏன் இன்னும் விர....” அவள் முறைப்பில் மறுபடியும் வார்தைகளை பாதியில்விட்டான்.

“மிஸ்டர் அச்சுத கேசவன், நான் விரதம் இருக்கிறது ஒரு நல்ல கணவனுக்காக” ‘நல்ல’ வில் ஒரு அழுத்தம் கொடுத்தவள் “ஆணவம் பிடித்த சொல்வழி கேளாத ஒரு வூம....” அவ்வளவு நேரம் புன்னகையுடன் கேட்டு கொண்டிருந்தவனின் சிரிப்பு நொடியில் துடைத்து எறிந்தால் போல் போயிற்று. அவன் கண்களில் வலியை காட்டாத ஒரு கவனம் வர கடைசி வார்தையை விழுங்கினாள். இருவரும் சந்நிதியை சுற்றி முடித்து இருக்க சன்விதா அர்ச்சகரிடம் செல்ல சற்று பின் தங்கியவன் இயல்பாக மூச்சுவிட்டு  தலையை குலுக்கி விட்டு கொண்டான்.     

அர்ச்சகர் அவள் தலையில் சடாரி வைத்து ஆசீர்வாதம் செய்ய, ஜென்ம வைரியாய் அவரை முறைத்தவன் “ஹே என்ன செய்கிறாய்?” என்றவாறு அவள் அருகில் வந்தான். திரும்பி மறுபடியும் முறைத்தவள் ‘அச்சோ இவனை முறைச்சு முறைச்சே எனக்கு கண்னு வெளியே வந்துரும் போல இருக்கே’ என்று புலம்பியவளாய் “முன்ன பின்ன கோவில் வந்தது இல்ல” லேசாய் கடிந்தவள் அவனுக்கு ஆசீர்வாதம் செய்ய வந்தவருக்கு வாகாய் நிற்க வைத்தாள்.

ஓ... என்று நின்றவனை ஆசீர்வதித்தவர் “ஏம்மா குழந்தை, கல்யாணம் கட்டின்டேள் அப்படியே ஆம்புடையானோட வந்து ஒரு பூஜைக்கு கொடுத்திருக்க கூடாதோ.... இந்த பிடி பிரசாதம் ஜோடி பொருத்தம் நான்னாயிட்டு இருக்கு நல்ல இருங்கோ...” தட்டில் போட கையில் எடுத்த காசு அந்தரத்தில் நிற்க ஆவென பார்த்தவாறு நின்றாள் சன்விதா.

பொங்கி வந்த சிரிப்பை உதடு கடித்து அடக்கியவன் பாக்கெட்டிலிருந்து ஆயிரம் ரூபாவை தட்டில் போட்டான். அதிர்ச்சி விலகாமல் அவனை பார்க்க தோளை குலுக்கியவன் சாதாரணமாய் சொன்னான் "நான் முன்ன பின்ன இந்த கோவில் வந்ததில்லை இவரை இதுக்கு முதல் பார்க்கவும் இல்லை"

“நீ.. நீங்...” ஒற்றை விரல் நீட்டி வார்த்தைகளோடு மல்லு கட்டியவள் ஒரு காலை தரையில் உதைத்துவிட்டு சென்றாள். “ஷாப்ப்பா..... நில்லுடி வீட்டில் கொண்டு விடுறன்”  காலை பிடித்தவன் சற்றே விந்தியவாறு முகம் கொள்ள புன்னகையுடன் அவள் பின்னே சென்றான். 

வெளியே செல்லும் வழியில் இருந்த தூணின் அருகே அமர்ந்திருந்தாள் சன்விதா, முழங்காலை நெஞ்சொடு அணைத்து முட்டியில் தலை வைத்து அவள் இருந்த விதம் பார்த்தவனின் புன்னகை மெதுவே நழுவியது. எழுந்த பெருமூச்சை சத்தமின்றி வெளியேற்றியவன் அணிந்திருந்த கோட்டை கழட்டி தரையில் போட்டுவிட்டு டையை தளர்த்தியவாறு அமைதியாக அவளருகே இருந்த படியில் இரு கால் முட்டிகளிலும் முழங்கைகளினை ஊன்றியவாறு அமர்ந்தான்.

அச்சுதன் அருகே அமர்ந்ததை சன்விதா உணர்ந்தே இருந்தாள் ஆனாலும் அசையாது அமைதியாக அமர்ந்திருந்தாள். காற்றை கற்றையாக வாய் வழியே ஊதியவன் "ஏன் சன்விதா நான் உன்னிடம் முறையான திருமணத்திற்கு தானே கேட்கிறேன் வேறு எந்த தப்பான உறவுக்கும் இல்லையே" சிறு பிள்ளைக்கு கூறுவது போல் அவளுக்கு விளங்க வைக்க முயன்றான். அவளிடம் சிறு அசைவு கூட இல்லாமல் இருக்க அவன் கண்களில் ஒரு கடினம் வந்தது. “எனக்கும் பொறுமைக்கும் ரெம்ப தூரம் சன்விதா, நான் கேள்வி கேட்டால் பதில் சொல்லனும்” அவன் குரல் உயர தாழவோ இல்லை ஆனால் அந்த குரலில் இருந்த அழுத்தமும் அதன் த்வனியும் கூறியது பதிலளிக்காது இருப்பது அபாயமானது என்று.

கண்களில் நிரம்பி விழவா வேண்டாமா என்று நின்ற கண்ணீருடன் நிமிர்ந்து அவனை சினத்துடன் பார்த்தாள் சன்விதா. “உங்களுக்கு பதில்தானே வேனும், எனக்கு உங்களை கல்யாணம் பண்ண பிடிக்கவில்லை, போதுமா?” எழுந்து அர்ச்சனை தட்டை கையில் எடுத்தவள் “இந்த மாதிரி என் பின்னால் வந்து என்னோட பெயரை கெடுக்காதீங்க” அத்துடன் உனக்கும் எனக்கும் என்ன கதை என்பது போல் படிகளில் இறங்கினாள்.

போய் கொண்டிருக்கும் அவள் உருவத்தையே பார்த்தவாறு அசையாது அமர்ந்திருந்தான் அச்சுத கேசவன். இந்த மாதிரி உன்னை பார்க்கும் போது ஒரு பக்க மனம் உன்ன விட சொல்லுதுடி.... ஆனா நீ இல்லமால் என்னால் முடியாதுடி எப்படிடி உனக்கு புரிய வைப்பன்.

“உனக்கு வேறு வழியே இல்லை ரோஸ், என்னை லவ் பண்ணிதான் ஆகணும்

Reply
Posts: 45
Admin
Topic starter
(@admin)
Member
Joined: 2 months ago

யாசகம் ♥ 08

நாளாக நாளாக சன்விதாவுக்கு வாழ்கை வெறுத்து விட்டது அத்துடன் அச்சுதன் இன்றில்லாவிட்டால் நாளை போய்விடுவான் என்ற நம்பிக்கையும் மடிந்துவிட்டிருந்தது. அவனது வேலைக்காவாது அவளை விட்டு செல்வான் என்று பார்த்தால் ஏதோ நீண்ண்ண்டட... விடுமுறையினை என்ஜோய் பண்ணுபவன் கணக்காய் அவள் பின்னே சுற்றினான். பிரகலாதனுக்கு தூணிலும் துரும்பிலும் நாராயணன் தெரிந்தாரோ இல்லையோ அவளுக்கு அச்சுதன் எல்லா இடத்திலும் காட்சி அளித்தான். எங்கு போனாலும் அவளுக்கு முன் அங்கு நின்றான். அவள் இரண்டே இடத்தில் தான் நிம்மதியாக இருந்தாள். ஒன்று வீடு, சில வேளைகளில் ஆச்சரியத்துடன் நினைத்திருக்கிறாள், ஏன் வீட்டுக்கு வரவில்லை என்று, நிச்சயமாக பயம் ஒரு காரணமில்லை என்பது தெளிவு அதுவும் ஐயமற என்பார்களே அது போல், நினைத்த உடனே தனக்கு தானே தலையில் குட்டி கொண்டவள் கண்ணனிடம் அவசரமாக மனு போட்டாள். ‘அது என்ன கண்ணறாவி காரணமோ அப்படியே இருக்கட்டும் குறைந்தது நான் நிம்மதியாக நித்திரையாவது கொள்ள முடியும். வேணுமெண்டா நான் உனக்கு லட்டு வாங்கி தரேன் கண்ணா’ என்று லஞ்சமும் ரெடி பண்ணினாள்.  அடுத்தது அலுவலகம் அவன் அங்கு வரத்தான் செய்தான் ஆனால் அங்கு அவளை தொந்தரவு செய்யவில்லை.

 

வெளியில் அவள் எதாவது வாங்கினால் இவன் பணம் கொடுத்தான். இவள் ஆட்டோவை நிறுத்தினால் தன் மந்திர புன்னகையால் அவர்களை அனுப்பி வைத்தான். அவளுக்கு உச்சகட்ட கடுப்பேற்றியது அவன் என்ன சொன்னாலும் அவர்கள் அப்படியே கேட்டு நடந்தது. அதையெல்லாம் விட அவளது மூளையே அவளுக்கு எதிராக அன்று சரவணன் சொன்னதை ஞாபகப்படுத்தியது. 'அவன் கேசவன் அச்சுத கேசவன், AK அவனை எதிர்த்து ஜெயித்தவர் இல்லை ' அவனுடன் கண்ணாமூச்சி விளையாடுவதிலேயே காலம் கழிந்து கொண்டிருந்தது எல்லாத்தையும் விட ஒவ்வொரு முறையும் அவனே ஜெயிப்பது ஆதங்கத்தையும் ஏற்படுத்தியது.  இந்த கண்ணாமூச்சியில் அந்த கண்களை, அவள் உடலுக்கு வேதியல் பாடம் எடுத்து உணர்வுகளை பூக்க செய்த அந்த கண்களினை தேடுவதை விட்டுவிட்டாள் இல்லை இல்லை மறக்கடித்து விட்டான்.

 

‘கண்ணா அவனை நான் எங்கே போய் தேட எங்க திரும்பினாலும் இந்த கொல்டன் கொரில்லா தான் வந்து நிக்குது எப்படி தேடுறது’ என்று கன்னத்தில் கை வைத்தவளை பார்த்து ‘நீ இன்னும் வளரனும் குழந்த’ என்ற ரேஞ்சில் சிரித்த கண்ணன் அமைதியாக இருந்தான். 

 

ஆனால் இருளுக்கு பின் வரும் ஜோதியாக, கடந்த இரண்டு மாதங்களின் பின் கடந்த இரண்டு நாட்களாக சன்விதாவின் வானத்தில் சூரியோதயம் அழகாக தென்பட்டது. அந்த ஒளியில் அவனது நிழல் கூட அவள் கண்ணுக்கு தட்டுபடவில்லை

 

அலுவலகத்தில் காணவில்லை......,

 

பஸ் நிறுத்தம் அருகேயும் இல்லை.....

 

கோவிலில் அவன் இல்லவே இல்லை.

 

ஒவ்வொரு தடவையும் ஓரொரு இடத்தில் அவன் இல்லையென அறிய சன்விதா கைகளை காற்றில் குத்தியவளாய் ஓரடி இல்லை பத்தடி உயரத்துக்கு துள்ளினாள்.  கண்ணனுக்கு கை குவித்து குனிந்து தன் நன்றியை தெரிவித்தாள்.

 

மூன்றாவது நாள் கால் தரையில் நிலைகொள்ளாமல் அலுவலகம் வந்தவள் அப்படியே கண்ணனுக்கு ஒரு பெரிய வணக்கத்தையும் சேர்த்து போட்டவள் “கண்ணா நீ தான் என்னோட பெஸ்டி, ப்ளீஸ் இன்றைக்கும் அவனுக்கு ஏதாவது வேலை கொடுடா என் கண்ணு இல்ல மூக்கு இல்ல செல்லம்ல” விரல்களை குவித்து உதட்டில் வைத்து ஒரு முத்தத்தை வானில் பறக்கவிட்டாள்.

 

♥♥♥♥♥

 

ஏய் ஏதே என்று கண்ணன் பார்க்க அருகே ருக்கு முறைக்க (அதாங்க ருக்மணி) 'அது குழந்த' என்று சமாளித்து பார்த்தும் ருக்கு தொடர்ந்து முறைக்க இன்று ‘உன் பேச்சை கேட்டால் நான் நடு வழியில் நிற்க வேண்டி வரும் அதனால’ என்று  அச்சுதனை அனுப்பிவிட்டு அவன் எஸ்கேப் ஆனான்.

 

♥♥♥♥♥

 

அது புரியாமல் அவளது மேஜையில் கணணியை உயிர்ப்பித்தவாறே “கண்ணன் வரும் வேளை அந்தி மாலை....” ‘ஏய்ய் இது கண்ணன் பாட்டு இல்லையே’ என ஆர்ப்பரித்த மனசாட்சியை 'அதுல கண்ணன் என்று வருதில்ல' என்று அடக்கியவளை ‘எப்ப இருந்தடி சினிமா பாட்டெல்லாம் பக்தி பாட்டாய் மாற்றினாங்க நீ என்ன பாடுற என்று உனக்கு புரியுதா அவன் வந்தான் என்று வை....’ என எதிர்த்தது துள்ளிய மனசாட்சியை அவன்தான் இங்க இல்லையே என உடைப்பில் போட்டவள் "நான் காத்திருந்தேன், சின்ன சின்ன தயக்......" மனசாட்சி சொன்னது உறைக்கவும் பின்னாலிருந்து வந்த "ரியல்லி...." என்ற அந்த சிரிப்பு நிறைந்த குரலிலும் அவள் பிரீஸ் பாய் விளையாடிய சிறுமியாய் அப்படியே உறைந்து போய் நின்றாள்.

 

மூன்று நாட்களுக்கு முன் அவளை கோவிலில் பார்த்துவிட்டு சரியாக சொன்னால் வெறுப்பேற்றிவிட்டு போன அச்சுதனுக்கு எப்போதடா திரும்ப அவளை பார்ப்போம் என்று இருந்தது. ஒரு விருது கிடைத்திருக்க அதை வாங்கவும் ஒரு பேச்சு வார்தை தொடர்பாகவும் டெல்லி செல்ல வேண்டிய கட்டாயம். விருது மட்டுமென்றால் அத்தானை விட்டுவிட்டு வந்திருப்பான். ஆனால் சில பெரிய தலைகளுடனான பேச்சு வார்தை தவிர்க்க முடியாதது. அதுவும் பத்து நாளை இரண்டு நாளாக்கி மீதியை அத்தான் தலையில் கட்டிவிட்டு வந்தவன் விமான நிலையத்திலிருந்து நேரே வந்தது சரவணன் அலுவலகத்துக்கு தான். சரவணனின் அறையிலிருந்த கண்ணாடி தடுப்பின் அந்த பக்கமிருந்து அவள் வந்ததிலிருந்து நடந்து கொண்டதை பார்த்தவனுக்கு தெளிவாகவே புரிந்தது தன்னை காணாதாதற்கு அவள் கண்ணனுக்கு நன்றி சொல்லுகிறாள் என்பது.

 

கடந்த நான்கு நாட்களாக அவன் உறங்கிய நேரம் மொத்தமே ஆறு மணித்தியாலத்தை தாண்டாது. உண்மையில் இன்றும் அவனுக்கு ஒரு வினாடி கூட ஓய்வு என்று கூற நேரமில்லை. ஆனால் அவளை பார்க்காமல் உன்னை வேலை செய்ய விடுவேனா பார் என மனம் அவனிடம் முரண்டு பிடிக்க வந்துவிட்டான். அங்கேயிருந்தும் வேலை செய்து கொண்டிருந்தவன் அவள் வந்ததும் கண்ணாடி வழியே பார்த்துவிட்டு சென்று விட வேண்டும் எனத்தான் நினைத்தான். ஆனால் இதோ அவள் முன்னால் வந்து நிற்கிறான்.

 

தொழில் வட்டத்தில் அவன் மனோதிடத்தை பற்றி பேசாதவர் இல்லை. அவன் வேலை என்று இறங்கிவிட்டால் எதுவும் அவனை அசைக்க முடியாது அதை முடிக்கும் வரை மனம் வேறு திசையில் அசையாது. அது அவனது பசி தூக்கமாக இருந்தாலும் சரி பெண் விடயமாக இருந்தாலும் சரி எடுத்த வேலையை முடிக்காமல் அசைய மாட்டான். அவனிடம் வேலை செய்பவர்கள் பாடுதான் திண்டாட்டம். ஆனால் இப்போதெல்லாம் அவள் விடயத்தில் அவன் சொல்வதை மனம் கேட்கவில்லை மனம் சொல்வதை தான் அவன் கேட்டுக் கொண்டிருக்கின்றான்.

 

அவன் நிஜமாகவே தன் முன்னே நிற்கிறான் என்பதை உறுதிப்படுத்தி கொள்ள சன்விதா மெதுவே ஒரு கண்னினை மட்டும் திறந்து பார்த்தாள். அவளது செயலை புன்னகையை அடக்க முடியாமல்  பார்த்துக் கொண்டிருந்தான். இது போன்ற சிறுபிள்ளைத்தனமான செயல்களால்தான் அவள் அவனை சின்னாபின்னமாக்கி கொண்டிருந்தாள்.

 

"ரியல்லி... ரோஸ் ஆனா இன்று கண்ணன் என் பக்கம் நிற்பது போல் தோன்றுதே" என்றவனிடம் சுட்டு விரல் நீட்டியவள் சொன்னாள்

 

"நான் சொல்லல பொது இடத்தில் வைத்து ரோஸ் சொல்ல கூடாது"

 

"சரி நம்மிருவருக்கமான தனிப்பட்ட தருணத்தில் அழைக்கிறேன் போதுமா" அந்த 'தனிப்பட்ட' வில் ஓர் தனிப்பட்ட அழுத்தம்

 

"ஹா.."

 

"ஹா டீல்"

 

"அலுவலகத்தில் வைத்து என்னை டிஸ்டப் செய்ய வேண்டாம்"

 

"ஏனோ..."

 

"ஏன்னா இது என்னோட அலுவலகம்"

 

"ஓஹ் ரியலி...”

 

"ஓஹ் ரியலி, அப்ப இது உங்கள் அலுவலகமா?"

 

"நிச்சயமா இல்லை, நம்முடையது "

 

"ஹாங்..."

 

"உனக்கு தெரியும் தானே சன்விதா இதன் ஐம்பது வீதத்திற்கும் அதிகமான பங்கு என்னுடையது"

 

"ஹா..."

 

"யா அதற்கு அர்த்தம் இது என்னுடைய அலுவலகம் கூட"

 

"நோ...."

 

"ஓஹ் எஸ் நான் என் விருப்பம் போல் வருவேன் போவேன்"

 

"அப்படின்ன நான் இப்பவே ரிசைன் பண்ணுறேன்"

 

"ஓஹ் ரியலி நீ மூன்று மாத நோட்டிஸ் கொடுக்கணுமே "

 

"அதற்கு இணையான பணத்தை தருகிறேன்"

 

"என்னிடம் போதியளவு இருக்கு"

 

"சோ....."

 

"சோ, நீ அடுத்த மூன்று மாதத்திற்கு வேலை செய்தே ஆக வேண்டும் அதாவது 90 வேலை நாட்கள்"

 

"ஆனா அது மூன்று மாதத்தை விட அதிகம்"

 

"யா ரைட்"

 

"இரண்டு நாளாக கண்ணில் படாத காரணம் இது தானா... "

 

அச்சுதன் பதிலளிக்காமல் புன்னகையுடன் நின்றிருந்தான்

 

சன்விதா அருகே இருந்த நாற்காலியில் தொப்பென அமர்ந்தாள்.

Reply
Posts: 45
Admin
Topic starter
(@admin)
Member
Joined: 2 months ago

யாசகம் ♥ 09

அருகே இருந்த நாற்காலியில் தொப்பென அமர்ந்த சன்விதாவுக்கு சட்டென பொறி தட்டியது "ஆனா நான் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடும் போது வாசித்து பார்த்தனே அதில இப்படியெல்லாம் இருக்கவில்லையே" புருவம் நெறித்து கேட்டாள்.

மெச்சுத்தலோடு பார்த்தவன் "நல்ல பழக்கமா இருக்கே, இது புதிய ஒப்பந்தம்...."

"நான்தான் இனி கையெழுத்து போட மாட்டனே" சந்தோசமாய் ராகமிழுத்தாள் சன்விதா.

அவள் இருந்த நாற்காலியின் கைகளில் கையை ஊன்றி குனித்தவன் அவள் கண்களை ஊடுருவியவாறே, ஒரு சவால் பார்வையுடன் ஒரு பக்க உதட்டால் மட்டும் சிரித்தவன் "யூ ஆல்ரெடி டிட்" என்றான்.

குழப்பத்துடன் பார்த்த சன்விதா "இல்லையே நான் புதிதாக எந்.........." இடையில் நிறுத்தியவள் சிந்தனை அவன் வந்து சென்ற சில நாட்களின் பின் EPF என்று சரவணன் கையெழுத்து வேண்டிய பத்திரங்கள் நினைவுக்கு வர அவ்வளவுநேரமிருந்த புன்னகை மறைந்தது. அருகே இருந்த மேசை மீது சாய்ந்து நின்றவாறு உதடு பிதுக்கி அழுவதற்கு தயாரானவளை அழகாய் அழும் குழந்தையை ரசிக்கும் ரசனையுடன் நோக்கினான்.

இந்த ஒப்பந்தத்தை சரவணன் மூலம் எப்போதோ செய்துவிட்டான். அவள் வேலையை விட்டு நிற்கிறேன் என்று சொன்னால் மட்டுமே அதை ஆயுதமாக பயன்படுத்த எண்ணினான். ஆனால் இன்று அவளோடன வார்தை விளையாட்டில் தன்னையுமறியது விட்டுவிட்டான். எத்தனையே பேரை விரல் சொடுக்கும் நேரத்தில் கணித்து முடிவுகளை தனக்கு சாதகமாக்கி கொள்பவன் இன்று முதன் முறையாக அவளிடம் தோற்று போக ஆசை கொண்டான். ஆனால் அந்த தோல்வியில் அவளையே இழக்க கூடும் என்ற ஒரே ஒரு எண்ணம் மட்டுமே அவனை கட்டி போட உதடு கடித்து அந்த உணர்வை அடக்கியவன் கண்களில் பட்டது அழகாய் பிதுங்கிய அவள் செவ்விதழ்களும் கோபத்தில் சுருங்கிய மூக்கும் தான். இதற்கு மேல் தாங்காது என்பது போல் சட்டென குனிந்தவன் ஒரு பக்கமாக அவள் மூக்குக்கும் இதழ்களுக்கும் நடுவில் தன் இதழ்களை புதைத்தான்.

அதிர்ச்சியில் கண்கள் தெறித்துவிடும் போல் விரிய அவன் மூக்கும் குருந்தாடியும் உரசியதில் கன்னங்கள் சிவக்க "சே கரண் என்னை கொல்ல போறா..." என்ற வார்தைகள் உதட்டுக்குள் உறைந்தது அச்சுதனுக்கு தெளிவாகவே கேட்டது.

"ஏய்ய்..." உடலில் எஃகுகின் விறைப்புடன் நிமிர்ந்தான் அச்சுத கேசவன். அவ்வளவு நேரம் கண்களில் இருந்த இலகு தன்மை மறைந்து ஒரு கடினம் வர, தடை இறுக நிமிர்ந்தவனைப் பார்த்து நாற்காலியோடு ஒன்றினாள் சன்விதா.  அவன் முகத்தில்  அப்படி ஒரு ரௌத்ரம். இத்தனை நாட்களில் அவனது மெல்லிய கோபத்தை கூட காணாதவளுக்கு இந்த ரௌத்ர முகம் அச்சத்தையளிக்க நாக்கு மேலண்ணத்துடன் ஒட்டிக் கொண்டது.

"கரண் எதுக்கு உன்னை கொல்லனும்" இரும்பு சாலகைகள் மோதியது போல் வெளிவந்தது அவன் குரல்.

"வா.. வாசி.. சச..  சரியா.. வா.. வாசிக்கமா சைன் ப.. ப.. பண்ணதுக்கு" அச்சத்தில் வார்தைகள் தந்தியடிக்க பயத்தில்  ஒடுங்கியவளுக்கு புரியவேயில்லை வுமனைசர் என்ற போது வராத கோபம் கரணை பற்றி பேசும் போது ஏன் வந்தது. (படுபாவி கிஸ் பண்ணும் போதா பேசுவ) அவளது அச்சத்தை கண்டு கண்மூடி தன்னை கட்டுக்குள் கொணர்ந்தவன். "என்னோடு வா" சரவணன் அறையை நோக்கி நடந்தான்.

பயத்தில் நகர முடியாமல் அமர்ந்திருந்தவளை தலையை மட்டும் பக்கவாட்டில் திருப்பி பார்த்தவன் "இப்ப நீயே வருகின்றாயா? அல்லது நான் தூக்கி செல்லவா?” மறுபடியும் வார்தைகள்  தந்தியடிக்க "வே வேனாம், வாறன்" விழுந்தெழும்பி அவன் பின்னே சென்றாள்.

விறுவிறுவென நடந்தவனுக்கு சினம் அடங்கவில்லை. அவனுக்கு கிடைத்த தகவல்களின்படி அந்த கரண் சன்விதாவின் லவ்வர் இல்லை. ஆனால் நேரம் காலம் இல்லாமல் இருவரும் இன்னும் இரண்டு பெண்களுடனும் சேர்ந்து சுற்றி இருந்தார்கள் அத்துடன் சன்விதா ஆசைப்பட்ட அனைத்து தகுதிகளும் அவனுக்கு இருந்தது.  அது வேறு அச்சுதனுக்கு காந்தியது. அன்று சன்விதா ஒருவனை நேசிப்பதாக சொன்னது உண்மையா பொய்யா என்று சரியாக தெரியாத நிலையில் இந்த கரண் என்ற பெயரை கேட்டாலே சுர்ர்ர் என்று உச்சி வரை ஏறியது கோபம்.

அங்கே அருணுடன் ஆகாஷும் நிலாவும் இன்னும் இரண்டு பெண்களும் நின்றார்கள். அன்று சரவணன் அலுவலகம் வரவில்லை. அதனால் அவனது அறையிலேயே அச்சுதன் தன் வேலைகளை செய்து கொண்டிருந்தவன் சிறு கண்ணசைவில் அவர்களை சத்தமின்றி வெளியேற்றினான்.

மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவர்கள் சன்விதாவை கவலையாய் நோக்கினார்கள் ‘அவளைப் பார்க்க முகம் கொள்ளாத சிரிப்புடன் சென்றவன் இவ்வளவு கோபமாக திரும்பி வந்திருக்கின்றானே! என்ன சொல்லி வைத்தாளே’.

"மிஸ். சர்மா" யாரை அழைத்தான் என்பது போல் சுற்றும் முற்றும் பார்த்தாள் சன்விதா. "உங்களைத்தான் சொல்கின்றேன்" அவளது செயலுக்கு பதிலளித்தான் அச்சுதன். அவனுக்கு அவள் பயத்திலும் செயலிலும் பாதி கோபம் வந்த வழியே திரும்பிவிட்டது. இமை தட்டி விழித்தவள் 'ஆக என்ன திடிரென்று மரியாதையை எல்லாம் கொடுக்கிறான், சூதனமா இருந்துக்க' வடிவேல் மைண்டில் வந்து சொல்லி செல்ல எல்லா பக்கமும் தலையாட்டி வைத்தாள்.

ஆனால் அச்சுதனின் கோபத்திற்கு முன் அவனது அனுபவமிக்க தொழில் வல்லுனர்களே பயப்படும் போது சிறுமி சன்விதா எம்மாத்திரம். அவளது தலையாட்டலில் முகத்தில் வந்த இளக்கத்தை மறைக்க சட்டென வெளி கதவை நோக்கி திரும்பியவன் "உங்களை எனது பிஏவா அப்பாயிண்ட் பண்ணியிருக்கன்"

அப்போது பார்த்து கதவை தட்டிவிட்டு வந்த அருணுடன் உள்ளே வந்த அவனது ஒரிஜினல் பிஏ ஆகாஷ் 'அப்ப நானு' என்பது போல் பார்த்து கொண்டிருந்தான்.

அருணுக்கு ஒரு பார்வையில் புரிந்துவிட்டது இங்கிருந்து சென்றது அச்சுதன் வருவது AK என்று சின்ன பெண் வேறு என்ன சொல்லி தொலைத்தாளோ மனதினுள் கவலை கொண்டான். அவனின் கோபத்தை, சின்ன பெண் தாங்குவாளா என யோசித்தவன் தன்னை பற்றி யோசிக்காமல் உள்ளே வந்துவிட்டான். கேள்வியாய் நோக்கிய அச்சுதனுக்கு "இல்ல மீட்டிங் போகனும் அதான்... " என இழுத்தான்.

"போகலாம்" என அவனிடம் தலையாட்டியவன் "எனது இந்த கம்பெனிக்கான என் பிஏவாக நீங்க செயல்படனும்" அவ்வளவுதான் நீண்ட கால்களினால் இரெண்டே எட்டில் அறையினை விட்டு வெளியேறிவிட்டான்.

திரும்பி சன்விதாவை பார்த்த அருண் ‘தைரியமாய் இரு’ என்பது போல் கண்மூடி சைகை செய்தவன், ‘இவனையெல்லாம் தலை கீழா கட்டி காவோலை கொளுத்தணும் லவ்வர் கிட்ட பேசுற மாதிரியா பேசுறான், கிறுக்கு’ மனதினுள் வைதவாறே சென்றான்.

அவன் செல்ல பின்னே விழித்தவாறு நின்றாள் சன்விதா.

“ஹாய்..” உற்சாகமாய் கை கொடுத்த நிலா கேட்டாள். “என்னை ஞாபகம் இருக்கா?”

ஆச்சரியத்துடன் பார்த்த சன்விதா “ஹேய் மூன் தானே” அவளைக் கட்டிக் கொண்டாள். அதற்குள் வெளியே இருந்து “மிஸ். நிலா” அச்சுதனின் எரிச்சல் நிறைந்த குரல் கேட்கவே “நீதான் என் பாசுக்கே பாஸா? நைட் கோல் எடுக்கிறேன்” வெளியே ஓடினாள்.

வெளியே வந்தவளைப் பார்த்தவன் “எப்படி தெரியும்” சிடுசிடுத்தான். அவனைத் தவிர அனைவருடனும் நன்றாகவே பழகுகின்றாள்.

“ஒரே காலேஜ்” அவன் பொறாமையை இனம் கண்ட நிலா சிரிப்பை அடக்கப்பாடுபட்டாள்.

“ஏன் சொல்லவில்லை?”

“சான்விட்ச்தான் உங்கள் லவ்வர் என்று தெரியாதே” என்றாள் அப்பாவியாய். 

உள்ளே உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த சன்விதா மூக்கைச் சுருக்கினாள்.

‘பெரிய கோபகாரனா இருப்பானோ’ 

இன்றே வேலையை விட்டு சென்றாலும் வீட்டில் எவரும் எதுவும் சொல்ல போவதில்லை ஆனால் வீட்டிலும் உறவினர் மத்தியிலும் கடைசி குழந்தை என்பதால் எல்லோரும் செல்லம் கொடுத்து அவளுக்கு எல்லாம் செய்து கொடுக்க சன்விதாவுக்கு பயம் தானாக வந்து ஒட்டிக் கொண்டது. கரண் சொல்படி பயத்தை வெளியே கட்டி கொள்ளாமல் இருக்க பழகி கொண்டாள். ஆனால் யாரவது நன்றாக தெரிந்த ஒரு நபர் அருகே இருந்தால் தைரியமாக எதையும் செய்வாள். இல்லமால் வேறு யாரவது இரண்டு அதட்டு கூட போட்டால் அழுதுவிடுவாள் இந்த குணம் இல்லமால் போக வேண்டுமென்று தான் வீட்டில் பேசி அவளை, அவர்கள் இருவருக்கும் நண்பனான சரவணனின் கம்பனிக்கு கரண் வேலைக்கு அனுப்பி வைத்திருந்தான். இந்த லட்சனத்தில் சன்விதா கரனுடன் பந்தயம் வேறு பிடித்துள்ளாள் ஒரு வருடத்திற்கு முன் வேலையை விட்டு நிற்க மாட்டேன் என்று இன்னும் ஆறு மாதங்கள் மிச்சம் இருக்கே! அதற்கு முன் வேலையை விட்டு நின்றாள் அவளது வீரதீர பராக்கிரமம் என்ன ஆவாது என்ற கவலை.

♥♥♥♥♥

அடுத்த நாள் காலை.....

அனைவருக்கும் அழகாய் புலர்ந்த பொழுது அவளுக்கு மட்டும் கொஞ்சம்.. கொஞ்சமில்லை ரொம்பவே கொடூரமாக இருந்தது. காலின் கீழே விழுந்து இழுபட்ட பெட்ஷீடுடன் தன்னை தானே இழுத்தவாறு எழும்பி வேலைக்கு சென்றவளை கண்டு குழம்பி போய் நின்றாள் அவள் அக்கா மானஸா.

"இந்த லெட்டர் மிகவும் முக்கியமானது அதனால் இதை நீங்களே டைப் பண்ணிருங்க.." என்றான் முன்னே இருந்த மடிகணினியில் எதையோ தட்டியவாறு இருந்த அச்சுதன். அவன் முன்னே பென்னுடன் இருந்த சன்விதாவின் முகம் சட்டென பிரகாசிக்க "எனக்கு ஷார்ட் ஹண்ட் தெரியாது சார்" பளிச்சென சொன்னாள்.

செய்த வேலையிலிருந்து கண்ணெடுக்கமால் "பரவாயில்ல மெதுவாவே சொல்றன்" என்றவனை பார்த்து பல்லை கடித்தவள், வேணாம் வேணாம் பல் பத்திரம் என நினைத்தவாறு ‘இருடா ஏண்டா இந்த பெண்ணை இந்த வேலைக்கு வைச்சம் என்று அழ வைக்கல’ அடி குரலில் மனதினுள் சபதம் எடுத்தவள் "சொல்லுங்க.... சார்" என ராகமிட்டாள்.

சட்டென நிமிந்து சந்தேகமாய் பார்த்தவனுக்கு தெரியவில்லை, எவ்வளவு தூரம் பயந்தவளோ அவ்வளவு தூரம் குறும்புக்காரி என்று. அது  புரியாமல் தலையசைத்தவன் “டெல்லி தலைமை அலுவலகத்தில் உள்ள ரொனால்ட் ராய்க்கு அனுப்ப வேண்டும் எலக்ட்ரானிக் சைன் பண்ணி அனுப்புவோம்...” அப்படியே தொடர்ந்து கடகடவென எழுத கூடிய வேகத்தில் சொல்லிக்கொண்டு போனவன் திடீரென நிறுத்தி கேட்டான் “மிஸ். ஷர்மா, நீங்க எழுதியதை நான் பார்க்கலாமா?”

‘மிஸ் ஷர்மாவாம் மிஸ் ஷர்மா’ என மனதினுள் தாளித்து உதட்டை சுளித்தவள் "நிச்சயமாக சார்" எழுதி வைத்திருந்த கல்வெட்டை மகிழ்வாகவே தூக்கி கொடுத்தாள்

"வாட் த" ஒரு கணம் வந்த கோபம் திசை தெரியாமல் ஓடிவிட அவளது குழந்தைதனமான செயல் வேடிக்கையாக இருந்தது. ரொனால்ட் என்ற பெயரை மட்டும் பெரிய எழுத்தில் எழுதி வைத்திருந்தாள். பொங்கி வந்த சிரிப்பு அவனையு மீறி உதட்டில் வழிய நிமிர்ந்தவனிடம் ஏதுமறியா குழந்தை போல் அப்பாவியாய் பதிலளித்தாள் "தாங்க சார் நான் ட்ரை பண்ணி எழுதிருவன் சார் நீங்க சொல்லுங்க"

"ஹ்ம்ம் சன்விதா, உனக்கு என்னோட டைம் ஸ்பென்ட் பண்ண ஆசை இருக்கா இது எனக்கு தெரியாம போச்சே" போலியாக வருத்தப்பட்டான்.

‘நான் எப்படா அப்படி சொன்னேன்’ என்பது போல் பார்த்து வைத்தாள்.

ஒரு பக்க உதட்டால் மட்டும் சிரித்தவன் "நேரடியா சொல்லல தான் பட் யுவர் ஆக்ஷன் ஸ்பீக்ஸ், நான் நினைத்தேன், இந்த வேலையை முடித்து விட்டு போகலாம் என்று பட்...." என இழுத்தவனை இடையிட்டாள் சன்விதா "சொல்லவே இல்ல..." கேள்வியாய் ஒற்றை புருவம் தூக்கியவனிடம் "என்ன வெட்டி கதை வேண்டி கிடக்கு வேலையை செய்வோம்...." என்றவள் லெட்டர் பாடை திருப்பி வாங்கினாள்.

அதன் பின் இருவரும் சில வேலைகளை விரைவாக செய்து முடித்தனர். வேலையில் அச்சுதனின் வேகத்திற்கு சன்விதா ஈடு கொடுத்தாள். இடையிடையே தன்னை மறந்து அவள் முகத்தில் லயித்தவனின் எண்ணங்களை அவளது கேள்வி நிரம்பிய விழிகள் நடப்புக்கு கொண்டு வந்தது. அவன் பார்க்கவில்லை என நினைத்த போது சன்விதாவும் அவனை யோசனையோடு நோக்கினாள்.

மின்னஞ்சல் மூலமாக அனுப்பியவை போக மீதியை கூரியர் மூலமாக அனுப்ப பார்சலினை தயார் செய்து கொண்டிருந்தாள் சன்விதா. அவளையே வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தவன் மேசையை சுற்றி அவளருகே மேசையின் விளிம்பில் சாய்ந்தால் போல் நின்றவன் பாண்ட் பாக்கெட்டினுள் கைவிட்டவாறு அழைத்தான் "சோ சன்விதா...." அவன் சுற்றி வந்து அருகே நின்றதை உணர்ந்த சன்விதாவின் விரல்கள் ஒரு கணம் நின்று மீண்டும் வேலையை தொடர்ந்தது.

அவள் அமைதியாக வேலையை தொடர்ந்தாள்.

"சன்விதா நான் கேட்டால் பதில் சொல்லனும்" கடினமான குரல் அவளின் முதுகு தண்டினை சீலீரென்று ஊடுருவியது. கோபம் நிரம்பிய அவன் கண்களினை நிமிர்ந்து பார்த்தவளுக்கு புரிந்தது தன் முன்னால் நிற்பது நேற்று பார்த்த AK என்று. தொண்டையில் அடைத்ததுடன் சேர்த்து பயத்தையும் விழுங்கியவள் தைரியத்தை கூட்டி பதிலளித்தாள். "நீங்கள் எந்த கேள்வியையும் கேட்கவில்லை Mr. அச்சுத கேசவன், சோ சன்விதா என்பது கேள்வியில்ல"

சற்று முன்புறமாக குனிந்து முறைத்தவன் பல்லை கடித்தான். "ஆல்ரைட், நீ ஏன் கல்யாணம் செய்ய மறுக்கிறாய்....?"

"நான் கல்யாணம் செய்ய மறுக்கவில்லை உங்களை தான் மறுக்கிறேன்" தெளிவாக கூறினாள். அவளை ஒரு பார்வை பார்த்தவன் மேசையிலிருந்து எழுந்து டையை தளர்த்தி ஷர்ட் பட்டன்களை விடுவித்தான். அவனது செய்கைகளை நாற்காலியோடு ஒன்றி போனவளாக பார்த்திருந்தாள் சன்விதா.

காற்றை கற்றையாக வாய் வழியே ஊதியவன் கேள்வியை மாற்றி கேட்டான் “என்ன செய்தால் திருமணத்திற்கு சம்மதிப்பாய்?” தலையை குறுக்கே ஆட்டியபடி ஏதோ சொல்ல வந்தவளை இடைமறித்தவன் "என்னோட கடந்த காலத்தை பற்றி திரும்ப கொண்டு வராதே, இந்த AK ஒரு முறை வாக்களித்தால் அது உயிர் பிரிந்தாலும் மாறாதது" என்றான்.

"இதற்கு பதிலை நான் ஏற்கனவே சொல்லிட்டன். எனது....." கைகளால் சட்டென ஓங்கி மேசையின் மீது அடித்தான் அச்சுதன். "என் கடந்த காலத்தை பற்றி உனக்கு என்னடி தெரியும், நான் எதனால அப்படி மாறி....." அவளது பயமும் தான் சொல்ல வந்த உண்மையின் தீவிரமும் உறைக்க, கோப மூச்சுகளை வெளியேற்றியவன் மேசை மீது இருந்த பொருட்கள் அனைத்தையும் ஒரே தட்டில் தட்டிவிட்டான். கடந்த மூன்று மாத காலத்திலும் ஏன் நேற்று கூட இவ்வளவு கோபத்தை பார்க்காதவள் கைகளை முஷ்டியாக்கி கண்களை இறுக மூடி மனதினுள் 'கிருஷ்ணா கிருஷ்ணா' என அவளது கண்ணனை துணைக்கழைத்தாள்.

♥♥♥♥♥

“இவள் வேற நேரம் காலம் தெரியாம ஏற்கனவே உனக்கு உதவியதில் ருக்கு காண்ட் ஆக இருக்கிறாள். இப்ப ஹெல்ப் பண்ண உனக்கு எதிரா எதாவது செய்தாலும் செய்திருவாள், அவன் உன்னை அடிக்க மாட்டான் சும்மாயிரு” என்றவாறு வெண்ணையை தேடிக் கொண்டிருந்தான் அவளது கண்ணன்.

♥♥♥♥♥

அவளது பயத்தை பார்த்து தன்னை தானே கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தவனாய் "சோ, எனது கடந்த காலம் பற்றி உனக்கு என்ன தெரியும், வாட் இஸ் த கோட் டாமன் ரீசன்...."

பரிதாபமாக நிமிர்ந்து பார்த்த சன்விதா கேட்டாள் "எதுக்கு நான், என்னை விட அழகான அறிவான நிறைய பெண்கள், முக்கியமா உங்களை மணமுடிக்க ஆசைப்படும் பெண்கள் நிறைய பேர் இருக்காங்களே"

மெல்ல அவளை நோக்கி குனிந்த அச்சுதன் நாற்காலியின் முதுகு புறத்தில் ஒரு கையை ஊன்றி மறு கையால் அவளது கன்னத்தை தாங்கியவன் அவள் கண்களை பார்த்தவாறே சொன்னான் "உண்மையிலேயே எனக்கு தெரியலடி, ஆரம்பத்தில இதெல்லாம் எனக்கு சரி வராது என்று விடத்தான் நினைத்தேன், ரெம்ப ட்ரை பண்னேன்..... ஆனா என்னால முடியல..., என்னை நம்பினால் நம்பு உன்னை தவிர வேறொரு பெண்ணை தொடுறது என்ன மனதால் நினைக்க கூட முடியலடி" அந்த செங்கபில நிற கண்களினை பார்த்தவள் அதிலிருந்த நேசத்தில் அதை கூறும் போது தென்பட்ட தவிப்பிலும் உண்மையிலும் மெதுவே அக்கண்களில் கரைந்து போனாள் சன்விதா.

அவளின் கண்களில் தென்பட்ட மாற்றத்தை உணர்ந்தவன் உணர்ச்சி கொந்தளிக்க கூறினான் "நீ இல்லாம ஒரு நாளை கூட என்னால் நினைக்க கூட முடியலடி"

அச்சுதனின் உணர்வு மிக்க கண்கள் அவளையே பார்த்தது கொண்டிருந்தன. மெதுவே கன்னத்தை தன் பெரு விரலால்  வருடியவனின் செங்கபில கண்களில் தன்னை தொலைத்துக் கொண்டிருந்த சன்விதாவுக்கு தனக்கு என்ன நடக்கின்றது என புரிந்தும் புரியாமலும் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். நொடிகளோ மணி துளிகளா என தெரியாமல் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருக்க அச்சுதனின் கண்களில் தென்பட்டுக் கொண்டிருந்த தவிப்பு சன்விதாவை ஏதோ செய்ய அவளையுமறியாமல் அவள் கரம் உயர அச்சுதன் பார்வை அவள் கரங்களை நோக்கியது.

மெல்ல அவள் விரல்கள் அவனின் கன்னத்தை மென்மையாகவும் லேசாகவும் பட்டும் படாமல் தொடவே, நடப்பதை நம்ப முடியமால் மெதுவே கண்ணிமை மூடி அந்த கணத்தினை தனக்குள் உள்வாங்கினான் அச்சுதன். அவன் கரம் தானாக உயந்து அவள் விரல் இடைவெளிகளை தன் விரல்கள் கொண்டு நிரப்ப, மிக மிக மென்மையாக ஒரு மில்லி மீட்டரே  வைத்திருந்த தாடி கன்னத்தில் வைத்து அழுத்தினான்.  அவளது உள்ளங்கையின் மென்மையை பதம் பார்த்த அவனது தாடி அவளது நாடி நரம்புகளில் மின்னலை பாய்ச்சி சில பட்டாம் பூச்சிகளை வயிற்றில் சிறகடிக்க விட்டது. அவன் இதழ்களை பார்த்தவளின் பார்வை மெதுவே உயர்ந்து மெல்ல திறந்த இமைகளின் பின் தென்பட்ட வேட்கை கொண்ட விழிகளை  நோக்கியது.

சொர்க்கத்திலிருந்தான் அச்சுதன், அவள் விரல்களில் தன் விரல்களை கோர்த்தவாறே கைகளை இதழுக்கு நகர்த்தினான். மெல்லிய வெப்பத்துடன் உறுதியான மென்மையான அவனின் இதழ்கள் அவளது உள்ளங்கையில் பதிவதை உணர்ந்த சன்விதாவின் விரல்கள் அவனது விரல்களை சற்று அழுத்தமாக பற்றியது.     

மெல்லிதாக நடுங்கிய குரலுடன் அவளது பெயரையே மூச்சாக சுவாசித்தான் அச்சுதன் "சன்விதா ...."

“ஹா....” இமை தட்டி விழித்தவளின் மயக்கம் கலைந்தது.

சட்டென கைகளை இழுத்து கொண்ட சன்விதா, இருக்கையிலிருந்து எழ முயற்சிக்க முன்னே நின்ற அவன் மீது மோதி தடுமாறியவளின் தோளினை பற்றி நிறுத்தியவன் "ஷ்ஷ் சன்விதா ரிலாக்ஸ்.." அவளை அமைதிப்படுத்த முயன்றான். அவளோ தீயை மிதித்தவள் போல் துள்ளி அவனிடமிருந்து விலகி தடுமாறிக் கொண்டிருந்தாள்.

அசையாது அதே இடத்தில் நின்று அவளை பார்த்த அச்சுதன் அழுத்தமான குரலில் "சன்விதா லிசின் டு மீ, நான் உன்னை தொடல சரியா, நான் அசையல, நான் இங்கே... நீ அங்கே... ஓகே கூல்...".

அதன் பின்பே நிதானத்துக்கு வந்தவள் தன்னை நிலைப்படுத்தி கொண்டு அவனது கையை பார்த்தவள் பின் தன் கையை திருப்பி பார்த்தாள் நிமிர்ந்து அச்சுதனின் இதழ்களை நோக்கினாள். கண்களில் சற்று முன் என்ன நடந்தது, எப்படி நடந்தது என குழப்பம் கூடாரமிட மிரண்டு போய் நின்றிருந்தாள்.  அச்சுதன் நின்ற இடத்திலிருந்தே முகத்தில் எதுவித உணர்ச்சியையும் காட்டி கொள்ளாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். சன்விதாவோ அவனை தவிர அனைத்து இடத்தையும் பார்த்தாள்.

அவளின் சுட்டுவிரல் மெதுவே உயர்ந்து ஓரிடத்தை சுட்டி காட்டியது. கேள்வியுடன் நோக்கியவனின் கண்களில் பட்டது அவளது கைப்பை. அதை எடுத்து அவளிடம் கொடுக்க கையை சுட்டுவிடும் என்பது போல் படு கவனமாக வாங்கி கொண்டவள் திரும்பி கூட பார்க்காமல் கதவிடம் சென்றவள் திறப்பதற்கு முன் அவன் அசைகிறானா என்பது போல் பார்த்தாள்.

அவன் அதே இடத்தில் நிற்கவும் அவ்விடத்தை விட்டு ஓடி போயிருந்தாள். அதுவரை உணர்ச்சியற்று இருந்த முகத்தில், கண்களில் மின்னல் மின்ன உதடுகளில் அழகாய் திருப்தியான புன்னகை மலர விரல் நுனிகள் கன்னத்தை வருடின.

அவன் கண்கள் கண்ணாடியூடே கட்டுப்பாடற்று துடிக்கும் நெஞ்சை அழுத்தியவாறு பெரு மூச்சுகளை விட்டு தன்னைத்தானே நிலைப்படுத்த முயன்ற சன்விதாவை பார்த்தான். 

"மூன்று மாதம் எனக்கு தாராளம், சன்விதா" உதட்டில் பூத்த திருப்தியான புன்னகை முகம் முழுவதும் பரவியது.

Reply
Posts: 45
Admin
Topic starter
(@admin)
Member
Joined: 2 months ago

யாசகம் ♥ 10

வீடு திரும்பிய சன்விதா முதலில் செய்த காரியம் கரணுக்கு கால் எடுத்தது தான். ஆனால் நோட் ரீச்சபிள் என்று வர "ச்சு...." என எரிச்சலுடன் போனை தூக்கி மெத்தையில் போட்டவள் குளித்து பிரெஷ் ஆகி வந்தாள் அலமாரியை குடைந்த போது தான் நியாபகம் வந்தது சில அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வைக்க வேண்டும் மனதில் குறிப்பெடுத்தவள் அதை தொலைபேசியில் பதிந்து வைத்தாள். அக்கா மனசா தொலைக்காட்சியில் செய்தி போட ஏதோ தேர்தல் சம்பந்தமாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

"அக்கா... கார்ட்டூன் சேனல் டாம் அண்ட் ஜெர்ரி வையேன்" என்றவாறு மானசா அருகே அமர்ந்தாள். நம் நாயகிக்கு உலக நடப்பில் அத்தனை நாட்டம். மனசா திரும்பி முறைத்தவள் கேட்டாள் "நீ யாருக்கு ஒட்டு போட போற" ஒரு கணம் விழித்தவள் "ஹி ஹி.. நீ இல்லாட்டி கரண் சொல்லுற ஆளுக்கு தான்" எச்சில் வராமல் ‘து’ என துப்பினாள் மனசா. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா எனற கணக்கில் டீலில் விட்டவள் "ஏன் கரண் போன் நோட் ரீச்சபிள் வருது" என தீவிரமாக வினவினாள். "ஏன்னா அவன் பிலைட்ல இருக்கான் அதான்" புன்னகையுடன் சொன்னாள் மனசா.

"ஐ..." ஆயிரம் வாட்ஸ் பல்ப் முகத்தில் பிரகாசிக்க சிறுமியாய் குதூகலித்தாள். "எப்ப வாறன், எந்த ஏர்போர்ட், எத்தனை மணிக்கு, நீயும் வருவாயா? நாம் போய் கூட்டி வருவோமா? ஏன் எனக்கு சொல்லாமல் வந்தான்? வரட்டும் அவனுக்கு இருக்கு நானும் எத்தனை தரம் கால் பண்ணன் எனக்கு அன்சார் பண்ணவே இல்லை சைத்தான் கே பச்ச உனக்கு இருக்குடா". வடையையும் தேநீரையும் கொண்டு வந்த பத்மாவதி அவள் தலையில் தட்டி "கொஞ்சம் மூச்சுவிடு" என்றவாறு அருகே அமர்ந்தார்.

"நாளைக்கு வருகிறான் ஏர்போர்ட் போவோமா?" கேட்டாள் மனஸா "நான் வரல நீயே போ, அவன் என்னிடம் சொல்லாம தானே வந்தான் ஹும்" சிறுபிள்ளையாய் மூக்கை சுருக்கி முகத்தை திரும்பியவள் வடையை எடுத்து வாயில் வைத்தாள்.

செய்தியில் "தமிழ் நாட்டின் பிரபல தொழிலதிபரான அச்சுத கேசவன் சில தினங்களுக்கு முன் பிரதமரை சந்தித்தார்" அச்சுதன் பெயரை சொன்னதும் நிமிர்ந்து பார்த்தாள் சன்விதா செய்தி தொடர்ந்து போய்க் கொண்டிருந்தது "தேர்தல் காலத்தின் போதான இந்த சந்திப்பு தமிழ் நாட்டில் பெரும் பரப்பப்பினை ஏற்படுத்தியுள்ளது....."  செய்தி தொடர்ந்து செல்ல பின்னனியில் திரைக்காட்சியாக கண்களில் கருப்பு கண்ணாடி, ப்ளஸ்ர் மேல் கோட் அணிந்து தனது பாதுகாவலர் புடைசூழ கம்பிரமாக நடந்தவனை மீடியாவால் கூட அருகே நெருங்க முடியவில்லை. அச்சுதன்  நடந்து வர மீடியாவினை நெருங்க விடாமல் பாதுகாவலர்கள் தடுத்தது கொண்டிருந்தனர். அவன் முகத்தில் இருந்த அலட்சியமும் கடுமையும் இது தான் நித்தமும் பார்க்கும் அச்சுத கேசவன் தானா என சன்விதாவிக்கு சந்தேகம் வர அம்மாவின் முகத்தை பார்த்து அவனேதான் என சந்தேகத்தை தீர்த்து கொண்டாள்.

அவள் கை எப்போதோ வடையை கைவிட்டு விட அதுவரை உதட்டில் ஒட்டியிருந்த இருந்த வடை தொப் என்று மடியில் விழ அக்காவையும் அம்மாவையும் பார்த்தாள் சன்விதா. பத்மாவதி பரிவுடன் பார்க்க சிரிப்பை அடக்கிக் கொண்ட மானஸா "சன்வி, உனக்கு தெரியும்தானே" ஆதரவாய் தோளை பற்றினாள். இல்லை என பரிதாபமாய் தலையாட்டினாள் சன்விதா. பத்மாவதியும் மானஸாவும் ஒருவரை ஒருவர் பார்த்தனர், பின் இவள் அவனை பற்றி என்ன தெரியும் என்று எதை சொன்னாள் என்பது போல்.  தொலைக்காட்சியில் வேக நடையுடன் அவனுக்கு ஈடு கொடுத்து நடந்து வந்த அருணிடம் கையசைத்து ஏதோ உத்தரவிட்டவாறே வந்தவன் தன் முன்னே வழுக்கி கொண்டு வந்து நின்ற கருப்பு கண்ணாடி போட்ட காரில் ஏறி செல்வதை காட்ட அதை பார்த்தவாறு மெதுவே தன் மடியில் படுத்தவளை பார்க்க மனஸாவுக்கு அந்த அச்சுதனிடம் காரணமின்றி கோபம் வந்தது. 

இவள் மனதை மாற்ற வேண்டுமே என நினைத்தவள் அவளது போனை பார்த்து "நீ ஷாப்பிங் போக போறியா சன்வி" என கேட்க இன்னும் தெளியாமால் இருந்தவள் ஆம் என்பது போல் தலையாட்ட "சரி எனக்கும் கொஞ்சம் திங்க்ஸ் வாங்க வேண்டும் அதையும் சேர்த்து பர்சைஸ் பண்ணிடு நோட் பண்ணு, ஏர்போர்ட்ல இருந்து கரனை நான் கூட்டி வாரன் சரியா" என்றவள் வாங்க வேண்டிய பொருட்களை சொல்ல அதை சன்விதா குறித்து கொண்டாள் மெதுவே கார்ட்டூன் சேனலை வைக்க டாம் அண்ட் ஜெர்ரியில் ஆழ்ந்தவளை இடுப்பில் கூச்சம் காட்டி சிரிக்க வைத்தாலும் மானஸாவின் மனம் எதையோ நினைத்து தெளிவில்லாமல் குழம்பியிருந்தது. நாளை கரனுடன் தனியாக பேச வேண்டும். இவளை அழைத்து சென்றாள் அவளை வாய் கூட திறக்க விடமாட்டாள்.

இரவு நேர நட்சத்திரங்களை மேகங்கள் மறைக்க நிலவு  வெளியே வர அதன் வெளிச்சம் அந்த இரு சகோதரிகள் மீதும் விழுந்தது. மானஸா நிமிந்த படுத்திருக்க குப்பற படுத்திருந்த சன்விதா அக்காவின் தோள் மீது கையை வைத்து அதன் மீது தன் தடையை பதித்திருந்தவள் கேட்டாள் "அக்கா உண்மையிலேயே இந்த ராஜராஜ சோழன் அவ்வளவு பெரிய அப்பாடக்கர.." ஒரு கணம் விழித்த மானஸா சிறு சிரிப்புடன் கேட்டாள் "யாரை கேக்கிறாய், அச்சுத கேசவனையா? ஏன்?"

சிறுமியாய் கண்கள் மின்ன மேலும் கீழுமாக தலையாட்டினாள் "இல்லை கிட்டத்தட்ட இரண்டு மாதத்திற்கு மேல் என் பின்னேயே சுத்துறான் பின் இந்த வேலையெல்லாம் எப்படி பார்ப்பான்" கண்களை அழகாய் வெட்டி பார்த்தாள்.

அவள் தலையை பிடித்து ஆட்டிய மானஸா "இதை அவரிடமே கேட்க வேண்டியது தானே..." யோசனையாய் பார்த்தவள் "ஹும் சரி அடுத்த முறை பார்க்கும் போது கேட்கிறேன்" என்றவளை ஆச்சரியத்துடன் பார்த்தாள் "அடுத்த முறை பார்க்கும் போத அவரை சந்திப்பதற்கு குறைந்தது மூன்று மாதத்திற்கு முன் அப்பொய்ன்ட்மென்ட் எடுக்கனும்" என்றவளை லூசா நீ என்பது போல் பார்த்து வைத்தாள்.

"நான் போக தேவையில்லை, அவனே வருவான்." ஏதோ கேட்க வந்தவளை "எப்படி எங்கே என்று எல்லாம் தெரியாது, வரக்கூடாத இடத்திற்கு வரவே கூடாத நேரத்திற்கு வந்திருவான்" என்று உதட்டை சுளித்தாள்.

"சரி நாம தூங்குவோம்" என்றவாறு அக்காவின் கையை எடுத்து தன் மேல் போட "மூன்று கழுத வயசாகுது உனக்கு இன்னும் கைகால் போடனும் போடி" என்றவள் திரும்பி படுக்க, நீ போடாட்டி போ நான் போடுறான் என்பது போல் அக்காவை கட்டிக் கொண்டு உறங்கினாள்.

திரும்பி படுத்திருந்த மானஸா முதல் முறையாக நினைத்தாள் இவளுக்கு இவ்வளவு செல்லம் கொடுக்காமல் வளர்த்திருக்கலாமோ என்று அப்படியே அன்று தன் அன்னையை சந்தித்து சென்ற அச்சுதனை தான் சந்தித்தது நிழலாடியது.

♥♥♥♥♥

அன்று அவன் அச்சுதன் அன்னையிடம் பேசியத்தையெல்லாம் கேட்ட மனஸாவுக்கு  அவன் விடைபெற்று சென்ற பின் இருப்பு கொள்ளவில்லை நேரே கிளம்பி அவன் அலுவலகம் சென்றுவிட்டாள். ஆனால் பத்து மாடி கொண்ட அவனது அலுவலகத்தை பார்த்து பிரமித்து போய் நின்றாள். ஏதோ உத்வேகத்தில் வந்துவிட்டாள் ஆனால் இப்போது அவன் அவளை சந்திக்க ஒப்புக்கொள்வானா என்பதே கேள்வியாய் நிற்க வரவேற்பு பெண்ணிடம் சென்று அச்சுத கேசவனை சந்திக்க வேண்டும் என கேட்டாள். அதிகம் பேசாமல் அடுத்த மூன்று மாதத்தின் பின்னரான ஒரு தினத்தை கொடுத்து குறித்த நேரத்தில் சந்திக்க வேண்டும் என்ற வரவேற்ப்பு பெண் எதாவது மாற்றங்கள் இருந்தால் உங்களுக்கு தொலைபேசி மூலம் அறிவிக்கபடும் என கூடுதல் தகவல் ஒன்றையும் கூற கையிலிருந்த ஸ்லிப்பை பார்த்து விழித்துக் கொண்டு நின்றாள் மானஸா.

அவளைக் கண்டதும் முகம் மலர அருகே வந்தான். அவளது நல்ல நேரம் அதே இடத்தில் அருண் நின்றிருந்தான். அவளை பார்த்ததுமே அடையாளம் கண்டு கொண்டவன்  புன்னகைத்தான் "நீங்க சன்விதாவோட சிஸ்டர் தானே.." என தன்னை தானே அறிமுகப்படுத்தி கொண்டான். அவள் வந்த காரணத்தை கூற திரும்பி வரவேற்புக்கு பெண்ணிடம் "அந்த அப்பொய்ன்மெண்ட் கேன்சல் பண்ணிடுங்க" உத்தரவிட்டவன் மானஸாவிடம் "என்னுடன் வாங்க" என்றவாறு லிப்டை நோக்கி நடந்தான்.

கண்கள் தெறித்து விடும் போல் பார்த்து கொண்டிருந்தவளை அப்போது தான் அங்கு வந்த அவளுடன் வேலை செய்யும் சக பெண் உலுக்கினாள் "என்னடி ப்ரியா எதை பார்த்து இப்படி விழிக்கிறாய் கண்விழி கீழே விழுந்திட போது" அப்போதும் அசையாமல் மனஸாவுடன் சிரித்து பேசியவாறு போய் கொண்டிருந்த அருணை கையை உயர்த்தி காட்டினாள் "அருண் சார் அந்த பொண்ணு கூட சிரிச்சு பேசினாருடி" "ஏது..." என்றவள் கையில் வைத்திருந்த போத்தலை கைவிட அது டங்கென்ற ஒலியுடன் கீழே விழுந்தது.

சத்தம் கேட்டு திரும்பிய மானஸா அப்போது தான் பார்த்தாள். வரவேற்பு பெண்களுடன் சேர்ந்து அங்கங்கே வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் திறந்த வாய் மூடாமல் இருவரையுமே பார்த்து கொண்டிருந்தனர். அவளுக்காக லிஃப்டை திறக்க பொத்தானை அழுத்திய அருண் அவர்களை அதிகாரம் நிரம்பிய கண்களால் ஒரு தடவை வட்டமடித்து பார்த்தான். அவ்வளவுதான் சற்று முன் பார்த்த தோற்றம் பொய்யோ எனும்படியாக அனைவரும் அவரவர் வேலையயை செய்து கொண்டிருந்தனர்.

அவளை நோக்கிய அவன் கண்களில் சற்று முன் இருந்த அதிகாரமில்லை. ஸ்நேகமே நிரம்பியிருந்தது. கண்களால் சிரித்தவன், உள்ளே செல்லும்படி சைகை செய்தான். சுற்றிலும் கண்ணாடி தடுப்புள்ள லிஃட்.

அது பிரத்தியேகமான லிஃட் என்பது சற்று நேரம் கழித்தே புரிந்தது. அவளை ஓர் அறையில் கொண்டு வந்துவிட்டவன் "AK மீட்டிங்ல இருக்கிறான். இங்கேயே காத்திருங்கள் நான் வந்து அழைத்து செல்கின்றேன்" என்றவன் அருகே இருந்த மேசையில் அமர்ந்து தன் வேலையை தொடங்கியிருந்தான். ஒரு பெரிய நீள் சதுர அறை அது, அதில் பாதியில் அவள் இருந்த 'ட' வடிவ சோஃபாவும் சிறு கண்ணாடி டேபிள் மற்றும் LCD திரை என அடைத்திருக்க அதனை தேவைப்பட்டால் மீட்டிங் ரூமாக  கூட பயன்படுத்தலாம் என்பது புரிய திரும்பி அருண் இருந்த இடத்தை பார்த்தாள் இருவருக்கும் நடுவில் மெல்லிய வெள்ளை நிற திரைசீலை தொங்கி கொண்டிருந்தது. வரும் போது அது இருக்கவில்லையே யோசித்துக் கொண்டிருந்த போதே இண்டர்காமினை எடுத்து AK யை பார்க்க வந்திருப்பவர்கள் லிஸ்டை கொண்டு வருமாறு பணித்தான்.

AK யை பார்க்க வந்தவர்களில் பாதிப்பேரை அவனே சந்தித்து அவர்களுக்கு தேவையானதை செய்ய முடியுமா இல்லையா என் முடிவெடுத்து அவர்களை அனுப்பியவன் கதவில் யாரோ தட்ட "எஸ் கம்மின்" என்றான். ஒரு பெண் காபி ட்ராயுடன் வந்தாள், அவள் அவனையே வைத்த கண் வாங்காது பார்த்து கொண்டு "சார் காபி" என்றவளை கணக்கே எடுக்காமல் மானஸா இருந்த பக்கம் கை காட்டியவன் அவன் மேசையிலிருந்த சில பத்திரிகைகளினையும் எடுத்து இதையும் கொடுங்கள் என்பது போல் சைகை செய்தான்.

மானஸாவுக்கு காபி கொடுத்த பெண் கண்களை விரித்து அவளையே பார்க்க சங்கடமான ஒரு புன்னகையுடன் காபியை எடுத்து கொண்டள். அந்த பெண் பத்திரிகைகளினையும் அவளருகே வைத்து விட்டு சென்றாள். பத்திரிக்கையை புரட்டியவாறே ‘என்னடா இது எல்லோரும் ஒரு மாதிரியவே பார்க்கிறாங்க பேசாம திரும்பி போயிருவோமா’ சங்கடமாய் நினைத்து கொண்டிருக்க ஒரு குரல் கேட்டது "என்னடா இது நானே கெஞ்சினாலும் என்னை பார்க்க வந்தவர்களை நீ பார்க்க மாட்ட இன்று எட்டாவது அதிசயமா இருக்கே" என்றவாறு உள்ளே வந்தான் அச்சுத கேசவன்.

அளவாய் புன்னகைத்த அருண் "எல்லாம் காரணமாக தான் உன்னை பார்க்க ஒரு ஸ்பெஷல் கெஸ்ட் வந்திருக்காங்க". என்று கண்ணை காட்டினான்.  

"யாருடா அது?" புன்னகையுடன் கேட்டான். இன்று பாதிப்பேரை சந்திக்கும் தொல்லை விட்ட சந்தோசத்தில் இருந்தான் அவன்.

"சன்விதா..." சொல்லி முடிக்கவில்லை திரையை விலக்கி கொண்டு உள்ளே சென்றிருந்தான். அவன் பின்னேயே வந்த அருண் ".....வோட அக்கா மானஸா" என்று வார்தைகளை முடித்தான்.

தீடிரென வந்ததில் பதறி எழுந்த மானஸா சன்விதா பெயரை சொன்னதும் அவன் வந்த வேகத்தையும் ஒரு கணம் அவன் கண்களில் தென்பட்ட கடும் ஏமாற்றத்தையும் கவனத்தையும் குறித்து கொண்டாள்.

"ஓஹ்..." என்றவன் அவளுக்கு எதிரிலிருந்த ஒற்றை சோஃபாவில் நன்றாக சாய்ந்து அமர்ந்தவன் அருணிடம் கேட்டான் "ஏன்டா என் அறைக்கு கூட்டிட்டு வரல"

"பாதுகாப்பு...." ஒரே வார்த்தையில் பதிலளித்தான் அருண். அவனிடம் தலையசைத்தவன் திரும்பி மானஸாவை பார்க்க அவள் இன்னமும் நின்று கொண்டிருக்க சற்று முன்னே சாய்ந்து "ப்ளீஸ் சீட்" என்று வாயால் கூறி சைகையிலும் செய்தவன் அவள் அமர்ந்ததும் "சோ..." என்றான்.

ஓர் கணம் எப்படி ஆரம்பிப்பது என்று புரியாமல் தலைகுனிந்து இருந்தவளை அமைதியாக பார்த்து கொண்டிருந்தான். "நான் வெளியில் காத்...." என்று ஆரம்பித்த அருணை தடுத்தாள் "இல்லை அது இல்லை எப்படி ஆரம்பிப்பது....." இழுத்தாள். அச்சுதனுக்கு அவள் வந்த நோக்கம் புரிய கண்களில் கடுமை கூட நீயே சொல்லி முடி என்பது போல் அமைதியாக இருந்தான்.

ஆழ்ந்து சுவாசித்தவள் "உங்களை எதிர்க்கும் பலம் எங்களிடம் இல்லை ஆனால் எங்கள் சன்வி எல்லோருக்கும் செல்ல பெண், சில வேளைகளில் அவள் வாய் துடுக்கு அதிகம், இதுவரைக்கும் நீங்கள் அவளை நேரில் சந்தித்து பேசும் சந்தர்ப்பம் அமையவில்லை என்று நினைக்கின்றேன். ஆனால் இனிமேல் எப்படியென்றும் தெரியவில்லை. அப்படி பேச நேர்ந்து அவள் எதாவது எக்கு தப்பாக பேசினாள், ப்ளீஸ் அவளிடம் கோபப்படாதீர்கள் ப்ளீஸ் அவள் இன்னும் சிறுபிள்ளை போல் தான்" என கரம் குவித்தாள்.

ஒரு கணம் அவளை ஆழ்ந்து பார்த்த அச்சுதன் "என்னால் அவளிடம் கோபப்பட முடியாது" சாதாரணமாக சொன்னவன் கண்களில் இறுகிய கை முஷ்டி ஒன்று பட சுவரசியமானான். "ப்ளீஸ் கைகளை இறக்குங்கள் நான் கடவுளில்லை" ஒர விழிகளில் கை முஷ்டி தளர்வது பட சிறு நகையுடன் கூறினான் "என்னால் முடிந்ததை நான் கட்டாயம் செய்வேன் சொல்லுங்கள்"

"உங்களால் அவளை விட்டுவிட முடியுமா?" சட்டென கேட்டவளுக்கு பதிலாய் முகம் இறுக உறுதியாக மறுத்தான்.

"உங்கள் அம்மாவிடமும் இதே கேள்வியை தான் கேட்டேன் உங்களிடமும் கேட்கிறேன். சன்வி என்னை காதலித்தாள் நீங்கள் மறுப்பீர்களா?" தெளிவாக கேட்டான்.

"அவளுக்கு பிடிக்காது என்பது தானே இப்போது பிரச்சனையே" சோர்வுடன் சொன்னாள் மனஸா. "இன்னொரு விடயம், இதை நான் கேட்க முடியுமா என்று தெரியவில்லை நீங்கள் அவளை எந்த விதத்திலும் கட்டாயப்படுத்த மாட்டீர்கள் தானே..." கெஞ்சுவது போல் கேட்டாள்.

"எனக்கு என்று சில வரைமுறைகள் இருக்கின்றன இலகுவில் அதை மீற மாட்டேன். ஆனால் என் கேள்விக்கு இன்னும் பதிலில்லை " அதிலேயே ஒரே பிடியாக நின்றான்.

"அவள் சம்மதித்ததால் எதுவித பிரச்சனையும் இல்லை அவள் சம்மதிக்காவிட்டால்...." என இழுத்து நிறுத்தவே புன்னகைத்தவன் "இந்த அச்சுத கேசவன் வாழ்கையில் தோல்வி என்பதே இல்லை" கர்வமாகவே சொன்னான் "இப்போது டிசம்பர் மாதமில்லையா வரும் ஆவணி முடிவதற்குள் எனக்கும் சன்விக்கும் திருமணம் முடிந்திருக்கும்" அதை சொன்னவன் கண்களில் இருந்த உறுதி மனஸாவை பயம் கொள்ள செய்தது. தேவையில்லாமல் தூங்கி கொண்டிருந்த இருந்த சிங்கத்தை எழுப்பி விட்டுட்டோமோ.

சிறிது நேரம் மௌனத்தில் நகர "அது சரி நீங்கள் அவளுக்கு அக்கா தானே உங்களுக்கும் திருமணம் செய்ய வேண்டும் இல்லையா?, எனக்கு தெரிந்து நல்ல பையன் ஒருத்தன் இருக்கிறான் பேசட்டுமா?, என்னை மாதிரியெல்லாம் இல்லை" சிறு சிரிப்புடன் கூறினான்.

"இல்ல... இல்ல.. எனக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டார்கள் தையில் நிச்சயம்....." டப் என கேட்ட சத்தத்தில் இருவரும் திரும்பி பார்க்க அருண் கையிலிருந்த காபி கப் உடைந்து ரத்தமும் காபியோடு சேர்ந்து துளி துளியாக விழ அச்சுதனின் முகமும் சட்டென களையிழந்து தென்பட்டது. முகத்தில் வலியை கூட பிரதிபலிக்காமல் வாஷ் ரூம் நோக்கி சென்றவனை இருவரும் பார்த்திருந்தார்கள்.

உதட்டை கடித்தவாறு திரும்பிய அச்சுதன் தீடிரென கேட்டான் "நீங்க வரும் போது எல்லோரும் உங்களையே பார்த்திருப்பாங்க கவனித்தீர்களா?" சட்டென முகம் சிவக்க தலையாட்டினாள் மானஸா. "கரணம் நீங்கள் நினைப்பது இல்லை" கேள்வியாய் பார்த்தவளுக்கு பதிலாய் "அருண் எனது நண்பன் என்னை பற்றி அவனுக்கு தெரியாதது இல்லை அத்துடன் இந்த நிறுவனத்தில் எனக்கு அடுத்த நிலையில் இருப்பவன். ஆனா நானும் அவனும் பெண் விடயத்தில் இரு துருவம் அவனிடம் ஒரு பெண் நெருங்க முடியாது நெருப்பு" என்றவனின் கண்களில் தவிப்பும் வேதனையும் வெளிப்படையாகவே தெரிந்தது "நானும் அப்படியே இருந்திருக்கலாம் இல்ல" அடிவாங்கிய சிறு பிள்ளையாய்  கூறிய அவனைப் பார்க்க மானஸாவுக்கு பாவமாக இருந்தது. "அப்படியானால் நான் வருகிறேன்" என்று அவள் எழவும் அருண் வாஷ் ரூமில் புதிய ஆடை அணிந்து கையில் சிறு கட்டுடன் வரவும் சரியாக இருந்தது.

சட்டென களையிழந்த நண்பன் முகத்தை உதட்டை கடித்தவாறே பார்த்த அச்சுதன் அவன் தோளில் கைவைத்து "இது முடிவில்லை, இவர்களை விட்டு வா" என்றவனை அருண் முறைக்க மானஸா குழப்பத்துடன் பார்த்தாள். மனஸாவிடம் திரும்பிய அருண் ஸ்நேக புன்னகையுடன் போகலாம் என சைகை செய்தான்.

அன்று அருணே காரில் அவளை அழைத்து சென்று வீட்டில் இறக்கிவிட்டான். AK விற்கு அடுத்த அதிகாரத்தில் இருக்கும் ஒருவன் சாதாரண பெண் ஒருத்திக்கு தானே காரோட்டி சென்றதை அந்த மொத்த அலுவலகமும் வேடிக்கை பார்த்தது.

♥♥♥♥♥

"அவன் பேங்க் கார்ட் பர்ஸ் எல்லாத்திலயும் இங்க் ஊத்தி விடுறன்" உறக்கத்தில் ஏதோ புலம்பியவாறு திரும்பி படுத்த சன்விதா அவளை நிகழ்காலத்துக்கு கொண்டு வர “ஏது இங்க் ஊத்த போறியா நீ எல்லாம் அதுக்கு சரியே வரமாட்டடி உன்னை லவ் பண்ணி அந்த அச்சுதன் என்ன செய்ய போறாரோ தெரியல” செல்லமாய் திட்டியவாறே மானஸாவும் உறங்க முயற்சித்தாள். 

♥♥♥♥♥

அடுத்த நாள் அதிகாலையே மானஸா ஏர்போர்ட் சென்றுவிட சன்விதா அவசரமின்றி ஆடிப்பாடி தயாராகினாள். பத்மாவதி ஆச்சரியத்துடன் பார்த்தவர் வேலைக்கு போகவில்லை என வினவ "இன்று அலுவலகத்துக்கு லீவு கொடுத்துவிட்டாள் இந்த விதா...." கையையும் தலையையும் ஆட்டி பதிலளிக்க தலையில் அடித்துக் கொண்டார் பத்மாவதி "எந்த நேரத்திலடி நீ பிறந்த" "சரியாய் நடுசமாம் பன்னிரண்டு மணி" பதிலளித்தவள் "கிரெடிட் கார்டு எடுத்துட்டு போறன் பை பை" என்றவாறு  மான்குட்டியாய் துள்ளி ஓடினாள்.

ஆனால் சிங்கத்தை வேட்டையாட முடியாத சில குள்ள நரிகள் அந்த மானை வேட்டையாட காத்திருந்தன.

Reply
Page 2 / 3
Share:

error: “These tales are woven with care. Please don’t copy—let the words live here.”