தொடுவானம் தொடுகின்ற...
 
Share:
Notifications
Clear all

தொடுவானம் தொடுகின்ற நேரம்

(@shakthinathi)
Active Member
Joined: 4 weeks ago
Posts: 4
Topic starter  

அத்தியாயம் 2 

 

திலகவதி சொத்து கை மீறி போவதை நினைத்து மிகவும் வருத்தப்பட்டாள். என்ன செய்யலாம் ஏது செய்யலாம் என புலம்பியபடியே வீட்டிக்கு வந்து சேர்ந்தாள். அங்கு தன் தம்பி இருப்பதை பார்த்து அவனிடம் விஷயத்தை கூறினாள். அவன் அதற்கு ஒரு யோசனையை கூறினான். அவளும் அவன் என்ன சொல்ல வருகிறான் என உன்னிப்பாக கேட்டாள். இவள் கேட்பதை இன்னொரு நபரும் மறைந்திருந்தபடியே கேட்டார். 

 

"அக்கா உனக்கு சொத்து வேணும்னா நா சொல்ற மாதிரி நடந்துக்கோ அப்பத்தான் நீ எதிர்பார்த்த சொத்து உன் கைக்கு வந்து சேரும்" என கூறினான். 

 

"டேய் நீ என்ன சொல்ல போறேன்னு எனக்கு நல்லா தெரிஞ்சுருச்சு நான் அவ கையில கால்ல விழுந்து சொத்தை வாங்கிக்கனும்னு சொல்ற அப்படித்தான" என வினவினாள். 

 

"ஐயோ லூசு அக்கா நான் என்ன சொல்ல வரேன்னு தெரியாம பேசிட்டு இருக்குற" என சற்று கோபமாகவே சொன்னான். 

 

"அப்ப என்னதான் சொல்ல போற சொல்லு ?" 

 

"சரி அப்ப நான் பேசுற வரைக்கும் குறுக்க எதுவும் பேசாத, அஞ்சனாவுக்கு கல்யாணம் ஆகி அவன் புருஷன் சம்மதத்தோடதான் சொத்தையும் எழுதி வாங்க முடியும்னு சொல்ற. அதனால நீ அவளை எனக்கு கல்யாணம் செஞ்சு கொடுத்துட்டீனா பிரச்சனையே இல்ல ஆட்டோமெட்டிக்கா சொத்து உன் கைக்கு மாறிரும். அவளை எப்படியும் சம்மதிக்க வச்சு, இல்லல்ல அந்த நாயை அடிச்சு உதைச்சாவது கையெழுத்து வாங்கிக்கலாம் எப்படி என் ஐடீயா?" என கேட்க, 

 

"டேய் சூப்பர்டா சேகரு நான் கொஞ்சம் கூட இப்படி யோசிக்கவே இல்லடா இதுக்குதான் உன்ன மாதிரி ஒரு ஆள பக்கத்துல வச்சுக்கணும்கறது."

 

"பக்கத்துல வச்சுக்கிட்டா மட்டும் போதாது நான் உனக்கு இவ்வளவு உதவி செய்றேன்ல நீ பதிலுக்கு எனக்கு ஒன்னு செய்யணும்." 

 

"என்னடா இப்படி பேசுற உனக்கு பண்ணாம வேற யாருக்கு பண்ண போற சொல்லுடா தம்பி ?" என மகிழ்ச்சியுடன் கேட்டாள்.

 

"பெருசால்லாம் ஒன்னும் செய்ய வேணாம். இந்த வீட்டை எப்படியும் வித்துட்டு வேற நல்ல வீட்டை விலைக்கு வாங்கிருவ அப்போ நீ விற்கும் போது வந்த பணத்தில் 50% எனக்கு தரணும"  என விஷமத்துடன் பேசினான். 

 

'டேய் கொஞ்சமாவது மனசாட்சியோடு பேசுடா அதெல்லாம் தர முடியாது வேணும்னா ஒரு அம்பதாயிரம் தரேன் வாங்கிட்டு போயிரு" என கூற 

 

"தோ பார்றா இவங்களுக்கு நாம நல்ல யோசனை சொல்லி சொத்தை இவங்க பேருக்கு மாத்தி தருவோமா ? ஆனா இவங்க பெரிய ஆளாட்டம் எனக்கே ஆப்பு வக்குறீயா ? அதெல்லாம் முடியாது நீ எனக்கு தந்துதான் ஆகணும் இல்லைனா உன் வண்டவாளத்தை எல்லாம் தண்டவாளத்துல ஏத்தி விட்டுருவ. எனக்கு ஒன்னும் ஜெயிலுக்கு போறது பெரிய விஷயமே இல்ல ஆனா நீதான் பாவம். இந்த வயசுல உன்னால ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்ட பட முடியுமா சொல்லு?"

 

"டேய் வேணாடா இதெல்லாம் நல்லதுக்கு இல்லை சொல்லிட்ட " என கோபமாக பேசினாள்.

 

 

 

 

"நல்லதை பத்தி நீ பேசுறீயா நீயே அந்த புள்ளைய ஏமாத்தி சொத்து எழுதி வாங்குனவதான வேணாம்க்கா நம்ம ரெண்டு பேரும் தேவை இல்லாம சண்டை போட வேண்டாம். நான் சொல்றத கேளு. உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம்   ஒரு 30% ஷேர கொடுத்துரு இப்ப என்ன சொல்ற டீலா நோ டீலா" என கேட்டான்.

 

"சரிடா நீ சொல்றதும் சரிதான் நாம எதுக்கு தேவை இல்லாம சண்டை போடணும் நீ என்ன சொல்றீயோ அதை நான் கேக்குறேன்."

 

"அப்படி வா வழிக்கு" என மனதில் நினைத்தவன், "சரி முதல்ல அவளுக்கும் எனக்கும் கல்யாணம் பண்ணி வை. அதுக்குண்டான வேலையை பாரு நான் கிளம்புற" என கூறியவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.

 

இவர்கள் பேசுவதையெல்லாம் பொறுமையாக கொள்ளபக்க கதவின் வழியாக மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு பீதி கிளம்பியது. அட பாவிகளா! இப்படியெல்லாம பண்ணுவீங்க. நான் என்ன பாவம் செஞ்சேன் இப்படிப் பண்ணுறீங்களே இல்ல இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிக்கவே கூடாது. என்ன பண்றது முதல்ல இந்த விஷயத்தை அஷோக்கிட்ட சொல்லியே ஆகணும் என நினைத்தவள் அவனை பார்ப்பதற்காக சென்றாள். 

 

வீட்டை விட்டு கிளம்பி வெளியே சென்றவள் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்த போனை எடுத்து பேசினாள். 

 

"ஹலோ அசோக் உங்களை பாக்கணும். உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி பேசணும் நாம வழக்கமா சந்திப்போமே பைரவர் கோவில் அந்த இடத்துக்கு வந்துருங்க."

 

"சரிடா தங்கம் நீ சொல்லி நான் வராம இருப்பேனா கண்டிப்பா வரேன். எப்ப வரணும் ?"

 

"நான் இன்னும் ஆலத்தூர்லதான் இருக்கேன். இன்னும் எப்படியும் அரைமணி நேரத்துல அம்பத்தூருக்கு வந்துருவேன். நீங்களும் வந்துருங்க நான் போனை வைக்குறேன்" என கூறியவள் பஸ் ஏறினாள். 

 

அம்பத்தூர்ங்கற ஊருல ஆலத்தூர் என்னும் கிராமம்தான் அஞ்சனா வசிக்கும் ஊர். அவளுக்கு எல்லாமே அந்த கிராமம்தான். என்னதான் சென்னை அவங்க ஊருக்கு மிக அருகில் உள்ள ஊராக இருந்தாலும் அவள் அங்கே எல்லாம் சென்றதில்லை ஆனால் அவள் சித்தியும், அவளுடைய பிள்ளைகள் மட்டும் போய் வருவார்கள். அஞ்சனா அந்த ஊரையேதான் சுற்றி சுற்றி வருவாள். அதை விட்டால் அம்பத்தூரில் இருக்கும் பைரவர் கோவிலுக்கு சென்று வருவாள். அப்படி போய்தான் அசோக் அவனுக்கு காதலனாக கிடைத்தான். 

 

வாரத்திற்கு ஒரு முறையாவது பைரவர் கோவிலுக்கு சென்று வருவது வழக்கம். அதுவும் அவள் சித்தியிடம் பர்மிசன் கேட்டு வீட்டு வேலைகள் எல்லாம் செய்து வைத்துவிட்ட பின்னரே அவளை அனுப்புவாள். அன்றும் வழக்கம் போல அவள் தன் வேலைகளை செய்து முடித்துவிட்டு கோவிலுக்கு சென்றாள். அங்கு தான் அசோக்கை பார்த்தாள் சின்னத்திருத்தம் அசோக்தான் அவளை பார்த்தான். 

 

அஞ்சனாவை பார்த்த அடுத்த நிமிடம் அவன் வீழ்ந்தான். அவளிடம் தன் காதலை சொன்னான். ஆனால் அவள் ஏற்கவில்லை அவன் எவ்வளவோ முயன்றும் அவள் ஒத்துக் கொள்ளவே இல்லை எப்படியெல்லாமோ முயற்சி செய்தான் ஆனால் அது தோல்வியில்தான் முடிந்தது. 

 

ஒருநாள் அஞ்சானா ரோட்டோரத்தில் நடந்து கொண்டிருந்தாள். அப்பொழுது தீடிரென லாரி ஓன்று அவள் மீதே மோதுவது போல் வந்தது. வண்டி பின்னால் வந்ததால் அவளுக்கு இது தெரியவில்லை. லாரி அவளுக்கு கிட்டே நெருங்கி வந்தது அப்பொழுது வலிய கரம் ஒன்று அவளை பிடித்து இழுத்தது. யார் நம்மை இப்படி இழுத்தது என பார்த்தவள் இவனா என எண்ணி அவன் கன்னத்திலேயே பளாரென்று ஒரு அரை விட்டாள். 

 

"உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா இப்படி தனியா போற பொண்ணுகிட்ட வந்து கைய புடிச்சு இழுக்கிற, உன்  காதலை ஏத்துக்க சொல்லி கெஞ்சி கெஞ்சி பார்த்த அதுக்கு நான் ஒதுக்குல்லனு தெரிஞ்சதும் இப்படியா அசிங்கமா கைய புடிச்சு இலுப்ப ராஸ்கல் உன்னை" என்று மறுபடியும் கையை ஒங்க,

 

"ஏம்மா! ஏம்மா! நிறுத்துமா பாவம்மா அந்த தம்பி உன்னைய காப்பாத்துறதுக்காகத்தான் அந்த தம்பி உன் கைய புடிச்சு இழுத்துச்சு.அதோ அங்க போகுது பாத்தியா லாரி அது கொஞ்சம் விட்டுருந்தா உன் மேல ஏத்திட்டு போயிருக்கும் தாயீ காப்பாத்த வந்த அந்த தம்பியை போட்டு இப்படி அடிச்சுட்டியே" என அங்கே இருந்த வயதான மூதாட்டி கூறினாள். 

 

"விடுங்க பாட்டி இவங்க எப்பவுமே இப்படித்தான் என்னைய என்னிக்குமே புரிஞ்சுக்க மாட்டாங்க" என அவளை சாவின் விளிம்பிலிருந்து காப்பாற்றிய அசோக் கூற, 

 

"என்னோமோப்பா எனக்கு மனசே கேக்கல காப்பாத்துன உன்னையவே அந்த பொண்ணு வாய்க்கு வந்தபடி பேசிருச்சு அதான் சொன்னேன் நான் வரேன்" என கூறியபடியே அந்த இடத்தைவிட்டு சென்றாள் அந்த வயதான மூதாட்டி. 

 

இருவரும் அமைதியாகவே இருந்தனர் ஒருவர் மற்றொருவரிடம் பேசிக்கொள்ளவே இல்லை. அஞ்சனாதான் முதலில் பேசினாள். 

 

"சாரிங்க என்னைய காப்பாத்ததான் நீங்க இப்படி பண்ணீங்க ஆனா நான் அதை புரிஞ்சுக்காம ஏதேதோ தெரியமா பேசிட்டேன்."

 

"பரவால்ல விடு அஞ்சனா"

 

என் பேர் உங்களுக்கு எப்படி தெரியும் ?" என புரியாமல் அவள் கேட்க 

 

"மூணு மாசமா உன்னை பார்த்துட்டே இருக்கேன் எனக்கு தெரியாதா உன்னை பத்தி நீ யாரு எப்படி பட்டவ, உங்க பாமிலி எப்படி ? நீ இப்போ எந்த மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்க எல்லா பயோ டேட்டாவும் எனக்கு தெரியும்" என கூறினான். 

 

சிறிது நேரம் மௌனம் காத்தாள் அஞ்சனா பிறகு, "என்னை பத்தி எல்லாம் தெரிஞ்சுமா என்னைய விரும்புறேன்னு சொல்றீங்க, பாக்க நல்ல படிச்சப் பையனாட்டம் தெரியுறீங்க அது மட்டுமில்லாம பெரிய பணக்கார வீட்டு பையனாகவும் தெரியுறீங்க என்னைய எதுக்கு லவ் பண்றீங்க நீங்க நினைச்சா உங்க பின்னாடி நிறைய பொண்ணுங்க உங்களை கல்யாணம் பண்ணிக்க வருவாங்க என்னைய ஏ ?" என அவள் கேட்க 

 

"நீ சொல்றது கரெக்ட்தான் நான் நினைச்சா ஆயிரம் பொண்ணுங்க கூட என்னைய கல்யாணம் பண்ணிக்க வருவாங்க. பட் எனக்கு உன்னையத்தான் பிடிச்சுருக்கு வேற யாரையும் காதலிக்கனும்னு தோணல, கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணல ப்ளீஸ் ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட் மீ "

 

அவள் எதுவும் பேசாது இருக்கவும், "என்ன அஞ்சனா எதுவும் பேசாம இருக்க சந்தேகமா இருக்கா இவன் யாரு எப்படிப்பட்டவனு, பயப்படாத இதோ இதுதான் என் போன் நம்பர், இது என் வீட்டின் விலாசம் அண்ட் இது என் ஆபிசோட விலாசம் நீ எல்லா இடத்துலயும் கேட்டு விசாரிச்சுக்கோ நான் யாரு என்னங்கிறதை அவங்க சொல்லுவாங்க அண்ட் ஒன் மோர் திங்க் என் மேல சந்தேகப்படு ஏனா அது நேச்சர் பட் என் காதல் மேல சந்தேகம் படாத அதை என்னால தாங்க முடியாது." 

 

இவன் இப்படியெல்லாம் பேசுவதை கேட்ட பெண்ணவளுக்கு அவன் மேல் மதிப்பும் மரியாதையும் கூடியது. அவனுடைய காதலை ஏற்றுக்கொள்ளலாமா ? வேண்டாமா என்னும் எண்ணமும் மனதில் வந்து போனது. 

 

"என்ன அஞ்சு வந்துலருந்து நான் மட்டும்தான் பேசிட்டே இருக்கேன் நீ எதுவும் பேச மாட்டேங்குற பதில் சொல்லு என்னைய லவ் பண்ணுறீயா ? இல்லையா ?'' என வினவினான் அசோக்.

 

"எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல எனக்கு கொஞ்சம் டைம் வேணும். யோசிச்சு சொல்லட்டுமா ?"

 

"சரி ஓகே பட் ரெண்டே நாள்தான் அதுக்குள்ள சொல்லிரனும் அதுக்கு மேல ஆக கூடாது சரியா ?" 

 

"பாக்கலாம்" என கூறியவள் அந்த இடத்தை விட்டு சிட்டாக பிறந்துவிட்டாள். 

 

வீட்டிற்கு வந்தவளுக்கு ஒரே யோசனையாகவே இருந்தது அவனை தன் காதலனாகவும், கணவனாகவும் ஏற்றுக்கொள்ளலாமா என தீவிரமாக யோசித்தாள். நீண்ட யோசனைக்கு பிறகு தீர்க்கமாக ஒரு முடிவெடுத்தாள் அவனையே  திருமணம் செய்து கொண்டு வாழலாம். ஆனால் அவனை நாம் உண்மையாகவே காதலிக்குறோமா இல்லை சூழ்நிலையை மனதில் வைத்துக் கொண்டு முடிவெடுத்தாளா என்பது அவளுக்கே தெரியவில்லை ஏதோ குருட்டாம் போக்கில் முடிவெடுத்துவிட்டாள். 

 

இரண்டு நாட்கள் கழித்து அவனிடம் தன் சம்மதத்தை கூறினாள். அவனும் அதை சந்தோஷமாகவே ஏற்றுக் கொண்டான். அவளுக்கு நிறைய பொருட்களை எல்லாம் வாங்கி கொடுத்தான். ஆனால் அவள் இதெல்லாம் வேண்டாம் இதை பார்த்தால் சித்தி என்னவென்று கேட்பாள் நான் என்னவென்று சொல்லுவது என உரைத்து மறுத்துவிடுவாள். நாட்கள் வெகு வேகமாக சென்றது. காதலிக்கும் போது அவன் அவளை நெருங்கும் போதெல்லாம் இவள் வேண்டாம் இதெல்லாம் கல்யாணத்துக்கப்பறமாதான் என கூறி மறுத்து விடுவாள் இவனும் கண்ணியத்துடன் சரி என கூறி விட்டு விட்டான். காதலிக்க ஆரம்பித்து 6 மாதங்கள் கடந்து விட்டது. இதற்கிடையில் அசோக் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் முறைப்படி நான் உங்க வீட்டுக்கு வந்து பொண்ணு கேக்குறேன் என்றான்.

 

"இல்லை அசோக் எங்க சித்தியை பத்தி உங்களுக்கு சரியா தெரியாது. நீங்களோ பெரிய இடத்து பிள்ளை. எங்க சித்தி சரியான பொறாமை பிடிச்சவ நான் மட்டும் உங்களை கல்யாணம் பண்ணிகிட்டேனா அவ்ளோதான் என்னைய ஏதாவது பண்ணிருவா. அதுமட்டுமில்லாம உங்க வீட்டுல என்னைய ஏத்துக்குவாங்களா சொல்லுங்க நீங்க வீட்டுக்கு ஒரே பையன்னு வேற சொல்றீங்க உங்க அம்மாவும், அப்பாவும் உங்க கல்யாணத்தை பத்தி எவ்வளவோ கனவு கண்டுருப்பாங்க கடைசில அது நடக்காம போனா வருத்தப்படுவாங்கதான." 

 

"ஏய் கொஞ்சம் நிறுத்துறீயா அஞ்சு, கெழவியாட்டம் பேசிட்டு, எங்க அம்மாவையும், அப்பாவையும் நான் கன்வின்ஸ் பண்ணிக்குவ. நீ முதல்ல அந்த வீட்டை விட்டு வெளியே வந்துரு உன்னைய நான் ராணி மாதிரி வச்சு பாத்துக்குற. 

 

"ஐயோ நான் மாட்டேன்பா வீட்டை விட்டு வரதா என்னால முடியாது."

 

"அப்பனா நமக்கு கல்யாணம் ஆகாது" என கூறிவன் உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்தான். 

 

"என்ன அசோக் இப்படியெல்லாம் பேசுறீங்க ?" 

 

வேற எப்படி பேச சொல்ற முறைப்படிவந்து பொண்ணு கேட்டாலும் பொண்ணு தரமாட்டாங்கனு சொல்ற சரி வீட்டை விட்டு வெளிய வான்னு சொன்னாலும் வரவும் மாட்டேங்குற நான் என்னதான் பண்ணட்டும். இங்க பாரு அஞ்சனா நம்மகிட்ட இருக்குறது இந்த ஒரு வழிதான் நீ அந்த வீட்டைவிட்டு வெளியே வரதுதான் நல்லது. உனக்காக அங்க வருத்தப்பட யாருமே இல்ல அப்புறம் எதுக்கு நீ அங்க இருக்கனும். பேசாம நான் சொல்வதை கேள் அஞ்சு."

 

"அதுக்கில்லை நான் வீட்டை விட்டு ஓடி வந்துட்டா அப்பறம் எங்க அப்பா கட்டி காப்பதின மரியாதை, மானமெல்லாம் காத்தோட பறந்துரும் அதான் யோசிக்கிறேன்" அசோக் என அமைதியாக பேசினாள். 

 

"நீ இன்னும் எந்த காலத்துல இருக்க அஞ்சனா, ஊர்க்காரங்க என்ன கொஞ்ச நாள் உன்னைய பத்தி பேசுவாங்ககளா அப்புறம் வேற நியூஸ் கிடைச்சுருச்சுனா அதை பத்தி பேச ஆரம்பிச்சுருவாங்க. என்னைய கல்யாணம் பண்ணதுகப்பரமா நீ இந்த ஊருக்கே வர போறதில்ல அப்புறம் ஏன் இதை பத்தியெல்லாம் யோசிக்கிற. நீ நான் சொன்ன விஷயத்தை மட்டும் யோசி."

 

"சரி அசோக் எனக்கு கொஞ்சம் டைம் கொடு" என கேட்டாள்.

 

ஏண்டி அன்னிக்கு லவ் சொல்றதுக்கு டைம் கேட்ட இன்னைக்கு கல்யாணம் பண்ணிக்குறதுக்கும் டைம் கேக்குற உன்னைய என்னால புருஞ்சுக்கவே முடியல. சரி இன்னும் ஒரு வாரம்தான் டைம் உனக்கு, இல்லல்ல எனக்கு, ஏ தெரியுமா ? கல்யாணதுக்கு உண்டான ஏற்பாட்டை பண்ணனும், என்னோட பிரெண்ட்ஸுங்களை சந்திச்சு இதை பத்தி பேசி அவங்க ஹெல்ப்பை கேக்கணும் நாம ரெண்டு மட்டும் போய் கல்யாணம் செஞ்சுக்க முடியாதுல அதான் இந்த ஒரு வாரம் டைம் எனக்கு. உனக்கு இனி எந்த டைமும் குடுக்க போறதில்ல அண்டர்ஸ்டாண்ட்" என கூறியவன் அவள் அடுத்து என்ன பேச போகிறாள் என கேட்கக்கூட நிற்காமல் காரை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டான். 

 

அசோக் பேசியதை கேட்ட அஞ்சனாவிற்கு கால்கள் நகர மறுத்தது. இப்பொழுது என்ன செய்வது என கையை பிசைந்தவள் அவன் கூறுவது சரிதான் இந்த சித்தி என்னும் நரகத்திடமிருந்து தப்பிப்பதற்கு இது ஒன்றுதான் சரியான வழி என பல கோணத்திலிருந்து யோசித்தவள் வீட்டிற்கு வந்தாள். அப்பொழுதுதான் அவளது சித்தியும், சேகரும் பேசியதை கேட்டாள். அதனால்தான் அசோக்கிற்கு போன் செய்து கோவிலுக்கு வர சொன்னாள். 

 

கோவிலுக்கு வந்தவள் அசோக் அங்கு இல்லாது காணவும்  கோவிலை சுற்றி அவனை தேடினாள். ஆனால் அவன் இன்னும் வரவில்லை. நேரம் கடந்துக் கொண்டே போனது அஞ்சனாவிற்கு பயம் தொற்றி கொண்டது. எங்கே இன்னும் காணோம் என கண்கள் முழுவதும் அலைபாய்ந்த படியே இருந்தது. தீடீரென்று ஒரு கரம் அவளது தோள்பட்டையில் அழுத்தமாக பட்டது. யாரென்று திருப்பி பார்த்தவள் அஷோக்தான் என தெரியவும் அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டாள். 

 

"ஏய் அஞ்சனா என்னாச்சு என் இப்படி பதட்டமா இருக்க எனி ப்ராப்லம் ?"

 

அவனிடமிருந்து விலகியவள் கோவிலில் உள்ள தூணில் சாய்ந்தபடியே அழுதாள். 

 

"எதுக்காக இப்படி அழுகுற என்னாச்சு சொல்லு அஞ்சு ?" என அவள் அருகே வந்தான்.

 

"நாம நாளைக்கு காலையில கல்யாணம் பண்ணிக்கலாம் அசோக், நான் இன்னைக்கு நைட் வீட்டுல எல்லாரும் தூங்குனதுக்கு அப்புறமா வீட்டு முக்குல இருக்குற பிள்ளையார் கோவிலுக்கு பின்னாடி நிக்குற வந்துருங்க" என அழுகையுடன் பேசினாள். 

 

இதை கேட்டவன் என்னாச்சு இவளுக்கு நேத்துதான் எனக்கு டைம் வேணும் மானம், மரியாதை அப்படி இப்படினு பேசிட்டு இருந்தா இப்ப இப்படி சொல்றா ஒன்னும் புரியலையே என யோசித்தவன், "சரி ஓகே நீ சொல்ற மாதிரியே பண்ணிக்கலாம். என்னாச்சுன்னு சொல்லு, உனக்கு அங்க ஏதாவது பிரச்சனையா ?''

 

"ஆமா அசோக்" என்றவள் சித்தியும், சேகரும் பேசியது அனைத்தையும் கூறினாள். 

 

"எனக்கு தெரியும் அஞ்சு இப்படி ஏதாவது உங்க சித்தி கோல்மால் வேலை பண்ணும்னு நான் நினைச்சது நடந்துருச்சு. ஓகே, நீ சொன்ன மாறியே பிள்ளையார் கோவிலுக்கு பின்னாடி இரு, நான் வந்து உன்னைய பிக்கப் பண்ணிக்குறேன் மத்ததெல்லாம் அப்புறமா பாத்துக்கலாம் சரியா?" என கேட்டவன்,

 

இவளும் பதிலுக்கு சரி என கூறியவள் நாளைக்கு அவளுக்கு நடக்கும் விபரீதம் எதுவும் தெரியாமல் தான் காதலித்தவனையே கை பிடிக்க போகிறோம் என நினைத்து  அவனை அணைத்து நெற்றியில் முத்தமிட்டு அந்த இடத்தை விட்டு வீட்டிற்கு வந்தாள். 

 

தொடுவானம் தொடரும்.  

 

 



   
Quote
Share: