யாசகம் ♥ 01
சூரியனின் வரவுக்கு கட்டியம் கூறுவது போல் சிவப்பு நிற அருணனின் கதிர்கள் வானமெங்கும் வியாபிக்க, அரஞ்சு பழம் போல் சிவந்த சூரியன் கடலிலிருந்து மெதுவாய் எழுந்து கொண்டிருந்தான். மெல்லிய சிவப்பு, செமஞ்சள், மஞ்சள் என அனைத்து வர்ண ஜாலங்களையும் முடித்து வெள்ளி நிறத்திற்கு மாறும் வரை அசையாது வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
கடற்கரையருகே வானம் தொட உயர்ந்து நின்ற ஹோட்டல் ஒன்றின் மாடியின் பால்கனியில் கைகளைக் கட்டியவாறு பாத் ரோப்புடன் நின்ற அவன் கேசத்தில் அங்கங்கே ஒட்டிக் கொண்டு நின்ற நீர்த் துளிகள் சூரியனின் நிறங்களை தங்களும் உள்வாங்கி அவன் முகத்திற்கு சோபை அளித்துக் கொண்டிருந்தது. சூரியனில் இருந்து உள்ளங்கையை நோக்கித் திரும்பியது அவன் பார்வை.
மீண்டும் அதே தவிப்பு விரலடியில் ஏதோ நழுவி சென்றதைப் போல்.
உள்ளே கிங் சைஸ் கட்டிலில் படுத்திருந்த பெண் பொறுமையிழந்தவளாய் எழுந்து வெளியே வந்தாள். பின்னிருந்து அவன் இடையைச் சுற்றிக் கைகளை போட்டவள் முகத்தை அவன் பரந்த முதுகில் புதைத்தாள்.
“எகே...” தாபத்துடன் அழைத்தது அவள் குரலுடன் சேர்ந்து உடலும்.
ஒரு கணம் இறுகிப் போய் நின்றவன் அவள் கையை மெதுவே விலக்கிவிட்டான். அவனைக் குழப்பத்துடன் பார்த்த அந்தப் பெண் “என்னாச்சு ஏகே உனக்கு? லண்டன் போய் வந்ததில் இருந்து நீ நீயாவே இல்லை” அவன் முகத்தை கூர்ந்து பார்த்தவள் “என்ன அங்கே யாரையாவ...?” கேட்க எடுத்த கேள்வி பாதியில் நின்றிருந்தது.
வெறுமனவே திரும்பிப் பார்த்தவன் கண்களில் இருந்த எச்சரிக்கையில் சுதாரித்து “ச்சு... அதை விடு, இந்நேரம் வழமை போல் நீ என்னை..... நான் உறங்கியிருக்க வேண்டும்” அவன் முன்னால் வந்து அவன் பாத்ரோப்பை விலக்கி நெஞ்சில் கைகளால் ஊர்வலம் நடத்த முயன்றாள்.
அவனைத் தொட முன்னர் அவள் கையைப் பிடித்தவன் “ஆகாஷ்” எட்டி அருகே இருந்த மைக்கை தட்டி விட்டு சத்தமாய் அழைத்தான்.
அது ரிசேர்வ் செய்யப்பட்ட விஐபி அறைகளில் ஒன்று ஹோட்டல் ரூம் என்றால் சாதரண அறைகள் போலில்லை. ஆயிரத்தி ஐந்நூறு சதுர அடி, உள்ளே வந்தால் முன்னே வரவேற்பறை. இரண்டு படுக்கையறை கூடவே ஹவுஸ் கீப்பர் தங்குவதற்கான அறை, அதன் அருகே தேவையான அனைத்து வசதிகளும் கூடிய கிட்சின் என ஒரு குட்டி வீடு.
‘இந்நேரம் பாஸ் வெளியே வந்திருக்க வேண்டும் இன்னும் வரவில்லை உள்ளே போவோமா வேண்டாமா’ என வரவேற்பறையில் நின்று மனதினுள் பட்டி மன்றம் நடத்திக் கொண்டிருந்த ஆகாஷ் குரல் கேட்ட மறு கணம் ஏகே முன்னே நின்றான். கூடவே கையில் சுடசுடச் காபி பிளஸ் “குட் மோர்னிங் பாஸ்” உடன்.
“குட் மோர்னிங், மேடத்திற்கு கீழ் தளத்திலுள்ள அறை ஒன்றை ஏற்பாடு செய்” என்றவன் அவன் கையிலிருந்த காபியை வாங்கினான். இரு பெண்கள் தள்ளிக் கொண்டு வந்த ஹங்கரில் இருந்த ஆடைகளைப் ஒரு கையால் ஆராய்ந்தவாறே காபியை ஒரு வாய் குடித்தவன் கேட்டான் “இன்று என்ன ப்ரோக்ராம்?”.
அரை நிமிடத்திற்கும் மேல் பதில் வராமல் இருக்க நிமிர்ந்து பார்த்தான். முன்னே நின்ற பெண்களில் ஒருத்தி முன்னே நின்றவனுக்கு தெரியாமல் கையை ஆட்டி ஆகாஷ் கவனத்தை கவர முயன்றாள். அவளைப் கேள்வியாய் பார்க்க, அவள் சிரிக்கின்றேன் என்ற பெயரில் உதட்டைப் இரு புறமும் இழுத்து வைக்கவே திரும்பிப் பார்த்தான்.
ஆகாஷ் இந்த உலகிலேயே இல்லை.
பிரமை பிடித்துப் போய் நின்றிருந்தான். அவளைப் பார்த்து உதடு பிரியாமல் மெலிதாய் புன்னகைத்தவன் அந்தப் பெண்ணிற்கு மௌனமாய் கண்ணசைத்தான். சங்கடமான புன்னகையுடன் சென்றவள் ஆகாஷ் தலையிலேயே ஒன்று போட்டாள். அதில் இந்த உலகிற்கு வந்தவன் “நிலா... நீ... பாஸ்” உளறினான்.
“நான் பாஸ்சில்லடா... என்ன செய்கிறாய், பாஸ் உன்னிடம் ஏதோ கேட்கிறார் பார்” அவனுக்கு மட்டும் கேட்கும் அடிக் குரலில் எச்சரித்தவள் “மேடம் ப்ளீஸ்” பெண்களின் ஆடைகள் தொங்கிய ஹங்கரை கை காட்டினாள்.
அவளை அலட்சியம் செய்து அவனருகே சென்றவள் “ஏகே...” என்று ஆரம்பித்தவளை மெல்லிய கையசைவில் நிறுத்தியவன் “இதோடு நிறுத்திக் கொள்வோம். இனி வரத் தேவையில்லை” சிறு மன்னிப்பு வேண்டும் குரலில் கூறினான்.
பின்னால் விழப் பார்த்த ஆகாஷைப் பிடித்து நிறுத்தினாள் நிலா.
“ஏகே... வரத் தேவையில்லை என்றால் என்னைப் பார்த்தால் காசுக்காக வரும் ***** போலவா இருக்கு” சீறினாள்.
அவனது அந்தஸ்திற்கு அந்த மன்னிப்பு வேண்டும் குரலே அதிகம். இதில் அவனிடம் விலைமாது என்பதை செந்தமிழில் கூறும் அவளை கண்ணை விரித்துப் பார்த்தாள் நிலா. இந்தப் பிரச்சனையை வேடிக்கை பார்க்கவும் மனமில்லை, அதே நேரம் பாஸை இப்படிப் பேசுவதைப் பொறுக்கவும் முடியவில்லை. ஏகே விழிகளை மட்டும் திருப்பி அவளைப் பார்க்க சட்டென தலை குனிந்தாள்.
“இப் யூ ஃபீல் அன்கம்போர்டஃபில் யூ கேன் கோ வெயிட் அவுட்சைட்” அவளைப் பார்த்து மென்மையாக கூறினான்.
ஒரு கணம் நிமிர்ந்து பார்த்தவள் மீண்டும் குனிந்து தலையசைத்தாள். இந்த இங்கிதம்தான் அவனிடம் வேலை செய்யும் அனைவரையும் கட்டி வைத்திருந்தது. அவள் அவனிடம் வேலை செய்பவள் அவள் உணர்வுகளைப் பற்றி அக்கறைப் பட தேவையில்லை. “ஐ வில் வெயிட் நியர் தி டோர் சேர்” மற்றப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டாள்.
அவர்கள் செல்வதைப் பார்த்து விட்டு அருகேயிருந்த சோபாவில் காலுக்கு மேல் கால் போட்டு ஒரு கையை நீட்டி அமர்ந்தவன் “தென்” என்றவன் முகத்தில் கல்லின் கடினம்.
அவன் குரலில் நிமிர்ந்த ஆகாஷ் மீண்டும் குனிந்துவிட்டான். ‘அவர்களுடன் நானும் போயிருக்கலாமோ?’ அவன் மைன்ட் வாய்ஸ் கூச்சமின்றி கேட்டது.
அவன் முழங்காலைத் தாண்டி நின்ற வெறும் வெள்ளை நிற பாத் ரொப்பிலும் அவனின் கம்பீரமும் அழகும் எப்போதும் போல் அவளைக் கவர “ஏகே” ஓரடி எடுத்து வைக்க முயன்றவளை வெறும் பார்வையிலேயே நிறுத்தியிருந்தான்.
“சாரி ஏகே, இன்று வேண்டாம் என்றால் சரி எப்போதுமே வேண்டாம் என்றால் எப்படி நாங்கள் இருவரும்...”
“திருமணமா செய்தோம்!” ஏளனமாய்க் கேட்டான்.
முகம் கன்றி விட “வீ ஆர் இன் லீவ்வின் ரிலேசன்ஷிப்” என்றாள்.
ஒரு பக்க உதட்டால் மட்டும் சிரித்தவன் “நான் உங்கள் வீட்டில் இருக்கின்றேனா இல்லை நீங்கள் என் வீட்டிலா?” அவள் வார்த்தையில் சொன்னதை வாய் விட்டுச் சொல்லாமலே உணர வைத்திருந்தான்.
“சி மிஸ் நிஷா, இன் கேஸ் யு போர்கேட், நீங்க தான் வந்து கேட்டீங்க நான் மறுக்கவில்லை. அப்போதும் உங்களிடம் இது வெறும் பிரண்ட்ஸ் வித் பெனிபிட் என்று சொன்னதாய் ஞாபகம்” அவன் குரல் உயரவே தாழவே இல்லை, அவளிடம் ஏக வசனத்தில் பேசவில்லை இருந்தாலும் நாளத்தில் இரத்தம் உறைந்தது.
அவனையே பார்த்த அந்த நிஷா மெதுவாய்க் கேட்டாள் “யார்?”.
வியப்புடன் பார்த்தவன் கேட்டான் “யார் யார்?”
“யாரையோ லவ் பண்ற இல்ல”
“டோன்ட் பி ஃவுலிஷ்...” சற்று நிதானித்து மீண்டும் உள்ளங்கையைப் பார்த்து விட்டுக் கூறினான் “இந்த டைப் வாழ்கை போதும் என்று நினைக்கின்றேன்”
“கல்யாணம் செய்யப் போறீயா?”
ஆகாஷுக்கு பிபி ஏகத்துக்கும் எகிறியது. அவனுக்கு நிஷாவை கண்ணில் கூட காட்டவே கூடாது. நிதமும் விலைமாதுவிடம் செல்லும் ஆணையும் முகம் சுளிக்க வைக்கும் திறமை அவள் ஆடைகளுக்கு இருந்தது.
அவனுக்கும் பாஸின் நிலை ஆதியோடந்தாமாக தெரியும். இருந்தாலும் இது போல் தரம் குறைந்தவர்களிடம்... மனம் பொருமியது. நிஷா ஏகே அலுவலகத்தில் இருக்கும் ஒருவரைக் கூட மதிக்கமாட்டாள். ஆனால் அனைவரும் அவனுக்கு பிடிக்கும் என்பதற்காக பொறுத்துக் கொண்டார்கள். கடந்த ஆறு மாதமாய் அவளின் அட்டகாசத்தைப் பொறுத்துக் கொள்ளேவே முடியவில்லை.
அவன் பாஸிடம் நேராகவே கேட்டிருந்தான் “உங்களுக்கு வேண்டுமானால் வேறு பெண் பார்க்கவா?”
அதற்கு ஏகே “கல்யாணத்துக்கா எனக்கு இண்டரஸ்ட் இல்லை” என்றதற்கு “மண்ணாங்கட்டி, இந்தக் கருமத்திற்கு தான்” என்றிருந்தான். அவனோ சிரிப்பை அடக்கியபடி “நீ எனக்கு பிஏ வேலை பார்பதற்கு தானே சம்பளம் வாங்குகின்றாய்?” என்று கேலி செய்ததுடன் விட்டுவிட்டான்
“ஏகே நானும் ஒன்றும் சாதரணப் பெண் இல்லை, கல்யாணம் செய்வதற்கு எனக்கும் பரிபூரண சம்மதம்” என்றாள்.
“சோ யு கேன் மிஸ் ட்ரீட் மை பாமிலி அல்சோ” கடுமையாகக் கேட்க ஆகாஷ் முகம் சோர்ந்தது. கடைக் கண்ணால் ஆகாஷை கவனித்தவனுக்கு முகத்தின் சோர்வுக்கு காரணம் புரிய பொங்கிய சிரிப்பை உதடு தாண்டமால் தடுத்தவன் “நீங்கள் போகலாம், இந்தப் பிழை நடந்ததுக்கு நானும் காரணம் அதனால் உங்களை எதுவும் செய்யவில்லை ஆனால்” என்று நிறுத்தியவன் கண்களில் பாறையின் கடினம் “எதிர் காலத்தில் என் ஸ்டாப்ஃபிடம் மரியாதைக் குறைவாக நடந்தால்...” முழுதாக முடிக்கவிட்டலும் நிஷாவிற்கு அதன் தற்பாரியம் விளங்கவே செய்ததது.
லேசாக தலையை திருப்பி அழைத்தான் “நிலா” அவன் முன்னே வந்தவள் முகமும் சோர்ந்திருந்தது. “மேடம் ப்ளீஸ்” மரியாதையாகவே அழைத்தாள். “ஹவுஸ் கீப்பரை அழைத்து செல்ல சொல், அதோடு அந்த ஹவுஸ் கீப்பரையும் வேலையை விட்டு நீக்கிவிடு, என் ஆடைகளை எடுத்து தா” உத்தரவிட்டவாறே எழுந்தவன் சற்றும் எதிர்பாரத வண்ணம் ஆகாஷ் கன்னத்தில் அறைந்திருந்தான்.
ஆடைகளை எடுத்து வந்த நிலா அதை கீழே விட்டு விழும் முன் பிடித்தாள். அவன் ஜீன்ஸ் சேர்ட் மட்டும் இருந்த ஹங்கரை மட்டும் கொடுக்க ஆகாஷோ எதுவும் பேசாமல் குனிந்து நின்றிருந்தான். மீதி ஆடைகளை வழமை போல் கட்டிலில் வைக்கப் போக முகத்தைச் சுளித்த ஏகே “அங்கே வேண்டாம்” என்றான்.
அவளிடமிருந்து ஆடைகளை வேண்டிக் கொண்டு அவன் உள்ளே செல்ல “ஹனி...” வெளியே பார்த்து அழைக்க “என்னையா?” என்று அருகே வந்தான் ஆகாஷ்.
“உனக்கு விழுந்தது காணாது இரு பாஸிடம் சொல்லி இன்னும் இரண்டு போடச் சொல்கின்றேன்” என்று சொல்லவும் உள்ளிருந்து கேட்ட சிரிப்புச் சத்தத்தில் இருவரும் அமைதியானார்கள். உள்ளே வந்த பெண் நிலாவின் கண்ணசைவில் கட்டிலின் விரிப்பை மாற்றிச் சென்றாள்.
ஆகாஷிடம் நிலா ஐஸ் பாக்கைக் கொடுக்க அதை கன்னத்தில் வைத்து அழுத்தினான் ஆகாஷ். சேர்ட் கை பட்டனைப் பூட்டியவாறே வந்தவன் கண்ணில்பட்டது அந்த காட்சி. அருகே வந்து அவன் கன்னத்தைத் திருப்பிப் பார்த்தவன் “பச்... பலமாய் தான் அடித்துவிட்டேன் இல்லையா என்ன செய்ய நிலா பெண் பிள்ளை இல்லையா? அடிக்க முடியாது அதான்” என்று விட்டு தலையை வாரினான்.
நிலாவோ அப்பாவியாய் ‘எதுக்கு இந்தக் கொலை வெறி இந்தத் தடிமாடிடம் என்னைக் கோர்த்து விடுவதில் என்னதான் சந்தோஷமோ’ அவள் நினைத்து முடிக்கும் முன்னேயே “உனக்கும் சேர்த்து தான் அடி வாங்கியிருக்கேன், ஐஸ் பாக்கை நீயே வைத்து விடு” கன்னத்தை நீட்டினான் ஆகாஷ். “போடா” என்று அவனைத் தள்ளிவிட்டவள் ஏகேயிடம் சென்றாள்.
“சார்...” தலையை வாரியவாறே கண்ணாடியில் பார்த்தவன் “ஹ்ம்ம்” என்றான் அவன்.
வேஸ்ட் கோட், அதற்கு மேலாய் கோட்டை என்று போட உதவியவாறே “அது வந்து நீங்கள் இந்த...” கேட்க முடியாமல் திணறினாள்.
கோட் பட்டனைப் போட்டு விட்டுத் திரும்பியவன் கைகளைக் கட்டியவாறே இருவரையும் பார்க்க இருவருமே தலை குனிந்தார்கள்.
“ஆகாஷ் ஏன் அடித்தேன்?”
“அதை விடுங்கள் பாஸ். நீங்க...” என்பதற்குள் அவன் குரல் அழுத்தமாய் குறுக்கிட்டது “ஏன்?”.
“அது நிஷா மேடம் என்னை அடித்தது...”
“நீங்கள் இருவரும் என்னுடைய நேரடியான பிஏ, ஒருவர் உங்களை அவமானப்படுத்துவதும் சரி என்னை அவமானப்படுத்துவதும் சரி” கண்டிப்பான குரலில் கூறினான். “நீ என்னுடைய தம்பி, என்னை அண்ணா என்று அழைக்காவிட்டாலும் தம்பிதான். உன் மீது ஒருத்தி கை வைத்திருக்கின்றாள். என்னிடம் ஒரு வார்தை சொல்லவில்லை” அவன் குரலில் நிச்சயமாய் கோபம் இருந்தது.
“நான் உங்களை நினைக்கும் அளவிற்கு நீங்கள் என்னை நினைக்கவில்லை இல்லையா?” அவன் காட்டிக் கொள்ளவிட்டாலும் அவன் கண்களில் மெல்லிய வருத்தம் தென்பட்டது.
“அப்படியில்லை பாஸ், உங்களுக்கு அவர்களைப் பிடித்து…. அதை விடுங்கள், இந்த டைப்…. இதை இன்றுடன் தலைமுழுகி விட்டீர்களா?” ஆர்வமாய் கேட்டான்.
இன்றைய காலத்திற்கு ஏற்ப நகரிகமாய் வாரியிருந்த தலையை கண்ணாடியில் பார்த்தவன் சட்டையின் கை டை என சரி செய்தவாறே பதிலளித்தான் “இன்று காலை கூட முழுகினேனே”
ஆறடி உயரத்தில் அதற்கேற்ற உடலவாகுடன் ஆணகழகனாய் நின்றவனை கண்ணாடியில் கண் வெட்டமால் பார்த்த நிலாவை நிலவைப் பார்த்து புருவத்தை உயர்த்த, அவள் வேகமாய் தலையை அசைத்து ஆகாஷை முன்னே தள்ளிவிட்டாள்.
அவனுக்கு அவர்கள் இருவரும் எதை அறியத் துடிக்கிறார்கள் என்பது விளங்கினாலும் அவனும் அதை இலகுவில் சொல்வதாய் இல்லை.
நிலா தள்ளியதில் அவன் முன்னால் வந்து நின்ற ஆகாஷ் “ச்சு அதில்லை அண்ணா” லேசாய் சினுங்கினான்.
சற்று அவன் புறம் குனிந்தவன் “போடா” என்று விட்டு வெளியே சென்றவாறே அழைத்தான் “மிஸ். நிலா”
“யெஸ் பாஸ்” காலைத் தரையில் உதைத்து ஆகாஷ் தலையில் ஒன்று போட்டு விட்டு அவன் பின்னால் சென்றாள்.
“இன்றைய மீட்டிங் ஷெடுள் சார், ஒன் ஹவர் ஹெட் ஆபீஸில் இருக்க வேண்டும். கைத்தொழில் அமைச்சருடன் ஒரு மீட்டிங் இருக்கு, கார்மென்ஸ் வேலைக்கு அவர் ஏரியாவில் இருந்து ஆள் எடுக்க முடியுமா என்று கேட்பது தான் பிரதான நோக்கம். ஜோசப்பிடம் சொல்லி செக் செய்து விட்டேன். முதல்வரும் உங்களை சந்திக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கான காரணத்தை அறிய அருண் சார் அதைப்பற்றி விசாரிப்பதற்காக சொன்னார்” வேலை மூவரையும் விழுங்க ஆரம்பித்தது.
“அவர் அனுப்பும் ஆட்கள் அனைவருமே வேலை சரியில்லை, போன தடவை எடுத்தவர்களுடன் தலையுடைக்க வேண்டியதாய் போயிற்று. கடை நிலை ஊழியர்கள் என்றால் கூட பரவாயில்லை புராஜக்ட் மேனேஜர்ஸ் வேலையை கேட்கிறார். அவர் பரிந்துரை செய்த அனைவருமே அவரின் கையாட்கள், இதற்கு முன்னும் மோசடியில் ஈடுபட்டவர்கள்” மேலதிக தகவல்களை ஆகாஷ் வழங்க கவனமாய் கேட்டுக் கொண்டான்.
மூவருமாய் லிஃப்டில் ஏற ஆகாஷ் தொமே என்று கூலிங் கிளசை ஏகேயிடம் கொடுக்க திரும்பிப் பார்த்தான். என்ன செய்தானே ஆகாஷ் கன்னத்தில் அடி வாங்கிய தடமே இல்லை “வலிக்குதா” கேட்டான்.
“அதை விடுங்கள் பாஸ்…” மேற் கொண்டு கேட்பதற்குள் லிஃப்ட் கதவு திறந்து கொண்டது.
திடீரென வேறு உலகினுள் சென்றது போல் மின்னலாய் மின்னியது. அவனை நோக்கி ஓடி வர முயன்ற மீடியாவை சுற்றிலும் நின்ற கார்ட்ஸ் தடுத்து நிறுத்த பாதுகாப்பு வளையத்தில் நடந்தவன் திடீரென்று “ஆகாஷ் பிரெஸ் மீட்டிங் ஏற்பாடு செய்” என்றான்.
நொடியில் அந்த ஏழு நட்சத்திர ஹோட்டல் வரவேற்பின் ஒரு பகுதியில் மேசை, மேசை மீது ஒரு விரிப்பு, ஒரு பூங்கொத்து, விதவிதமாய் மைக், அதன் பின் ஒரு இருக்கை, என்று பிரெஸ் மீட் தயாராகிவிட்டது.
பிரெஸ் மீட் என மீடியா ஒரு இடத்தில் கூட கொஞ்சமே கொஞ்சம் தனிமை கிடைத்தது.
அவன் தனிப்பட்ட ஃபோன் ரிங் ஆகவே அதில் வந்த இலக்கத்தை பார்த்து புன்னகைத்தான். “ஆகாஷ் பிரெஸ் மீட் முடிய முன்னர் யாரும் என்னைத் தொடர்பு கொள்ள கூடாது. யாராய் இருந்தாலும் பார்த்துக்கொள்” அழுத்தமாய் கூறியவன் போனுக்கு பதிலளித்தவாறே ஒரு பக்கமாய் ஒதுங்கினான்.
இனிமையான பெண் குரல் “அது யாரோ பிசினஸ் டைனோசராம் அதாம்மா டைகூன்” என்று இனிமையாய் நகைத்தது.
“மழை வரும் போலிருக்கு இந்த திருவிழா எப்ப முடிஞ்சு நான் எப்ப வாரது. டெல்லி போகனும் லேட் ஆகுது. மழைக்குள் வந்தால் நான் சக்கரகட்டி கரைந்து விடுவேன் எல்லாம் அந்த டைனோசரால் வந்த விணை”
மறுபுறம் லைனில் இருந்த அவன் அக்கா சுபத்ரா “சொல்லுங்க பிசினஸ் டைனோசர்’” என்றாள். “அக்கா ப்ளீஸ்” சிரிப்பை அடக்கியவன் குரலை கண்டு கொண்ட சுபத்ரா “அந்தப் பெண் யார் என்று தெரியுமா விசாரி” ஆர்வமாய் கேட்டாள்.
இருவருக்கும் நடுவே தடுப்பு இருக்க அவளைப் பார்க்க முடியவில்லை, அவள் வெண்ணிற அனார்கலி மட்டும் லேசாய் தெரிந்தது.
காதில் மாட்டியிருந்த ப்ளூடூத்தில் ஒற்றை விரலால் தட்டி விட்டு “ஜோசப் லோஞ்ச் அருகே ஒரு பெண் நிற்கிறாள். டாக்ஸி அரேஞ்ச் செய்து கொடு. அப்படியே பப்ளிக் டிஸ்ரப் ஆகாதா மாதிரி பார்த்துக் கொள்” உத்தரவிட்டான்.
♥♥♥♥♥
“இவன் இப்போதைக்கு சரி வர மாட்டான்” ருக்மணி பெருமூச்சு விட்டார்.
“பிறகு இது சிறுகதையாகி விடும் பரவாயில்லையா” புன்னகையுடன் கேட்டான் கண்ணன்.
♥♥♥♥♥
அன்று முழுவதும் வேலைகிடையில் ‘பிசினஸ் டைனோசர்’ என்ற அவளின் குரல் காதில் ஒலிக்க முகத்தில் ஒரு புன்னகையுடன் வேலையை செய்தான் அச்சுதன். அடிக்கடி அவன் மீது பாய்ந்த ஆகாஷின் குறுகுறு பார்வையை ஒரு முறைப்பில் தள்ளி வைத்தான்.