Share:
Notifications
Clear all

மொழி - 09

Posts: 49
Admin
Topic starter
(@admin)
Member
Joined: 2 months ago
மொழி  - 09
 
 
“நீங்கள் எப்போது யாழ்ப்பாணம் போறீங்க?” மீட்டிங் முடிந்து அனைவரும் போயிருக்க சொரூபனும் நிஷாந்தவும் அவளும் மட்டுமே இருந்தார்கள். கடந்த இரண்டு நாளாய் ஒரே கேள்வியைக் கேட்டுக் கொண்டிருகிறாள்.
 
 
“நீர் வாறீரா?” அவளையே அழுத்தமாய் பார்த்துக் கேட்க மறுத்து தலையசைத்தவள் எழுந்து வெளியே சென்றுவிட்டாள். இரு ஆண்களுமே அவளை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
 
 
‘யாழ்பாணம் வர ஏன் தயங்குகிறாள்’ இருவர் மனதிலும் ஒரே கேள்வி.
 
 
“ஏன் போகவில்லை?” நிஷாந்த கேட்க “ச்சு அம்மம்மா இன்றும் கூட அவளை கூட்டியர சொல்லியிருக்கிறா. தனியாய் போய் பதில் சொல்லி மாளாது” எரிச்சல் நிறைந்த குரலில் கூற வாய் விட்டே சிரித்தான் நிஷாந்த.
 
 
“மச்சா நான் நைட்ல உனக்கு கோலே எடுக்க மாட்டேன்” என்றவனை துரத்த எழுந்தவனிடமிருந்து தப்பி ஓடினான் நிஷாந்த. வீடியோ கோல் பற்றிய விபரத்தை அம்மம்மா இவனிடம் கேட்க, சொரூபனே அதைப் பற்றி சொல்ல வேண்டிய ஒரு நிலை.
 
 
“இடியட்” என்றவன் முகம் சிவந்திருந்தது.
 
 
“என்ன?” என்றாள் விட்டுச் சென்ற கோப்பை எடுக்க மீண்டும் வந்திருந்த யதீந்திரா.
 
 
“எல்லாம் உன்னால்தான்”
 
 
“நான் என்ன செய்தேன்”
 
 
“ம்ம் அன்று அம்மம்மா கோல் எடுக்கும் போது...” இழுக்கவே குங்கும நிறம் கொண்டவள் அவனிடமிருந்து திரும்பி நின்றாள் “அதுதான் அன்றே முடிந்து விட்டதே இப்போது நான் என்ன செய்தேன்?”
 
 
“ம்ம் அதை வைத்து நிஷாந்த என்னைக் கழுவி ஊத்துறான்”.
 
 
“அதையே... வெயிட் நிஷாந்த அய்யாவுக்கு தெரியுமா?” அவனை நோக்கினாள். ஒப்புதலாய் தலையாட்ட “அதையேன் அவரிடம் போய் சொன்னீர்கள்?” குரலே எழும்பவில்லை அவளுக்கு.
 
 
“நான் சொல்லவில்லை” என்றவன் குரல் சிரிக்க “அம்மம்மா அவனிடம் எடுத்துக் கேட்டுவிட்டார்கள்” என்றான்.
 
 
“ஐயோ” கையிலிருந்த கோப்பில் முகத்தை மூடிக் கொண்டாள்.
 
 
அருகே வந்தவன் முகத்தை நிமிர்த்தி நாசியின் கீழிருந்த மச்சத்தில் இதழ் பதித்தான் “குத்துது” மயக்கத்துடன் சொன்னவள் இதழ்களில் தடாலடியாய் தேனருந்த “ஞானா” அவன் பெயரை முனகினாள்.
 
 
ஒரு வெற்றிப் புன்னகையுடன் “யாழ்ப்பாணம் வாரும்” மீண்டுமாய் அழைத்தான். அவள் வருவதாக சொல்லிவிட்டால் எப்படியாவது வந்தே தீருவாள். அவன் மார்பில் முகம் புதைத்தவள் மறுத்து தலையாட்டினாள்.
 
 
“யதி” அதட்டினான்.
 
 
அவளுக்கும் அவன் நடவடிக்கைகளில் உள்ள வித்தியாசம் புரிந்தேயிருந்தது. கடந்த சில தினங்களாய் அவளிடம் நடந்து கொள்ளும் முறையில் ஒரு மாற்றம். முதலில் தன் பிரம்மை என்றுதான் நினைத்தாள். ஆனால் அவர்களின் தனிப்பட்ட தருணங்களில் காமத்தை கடந்த ஒருவித தேடலும் மென்மையும் அவன் பார்வையின் வித்தியாசமும் புரியாத அளவு மண்டூகம் இல்லை அவள்.
 
 
“நிமிர்ந்து பாரும்” கண்டிப்பாய் ஒலித்தது அவன் குரல். கன்னத்தை பிடித்து அவள் கண்களை ஆழ்ந்து பார்த்துக் கேட்டான் “என்ன பிரச்சனை?”.
 
 
“என்னை யாரென்று சொல்வீர்கள்?” அவமானத்தில் உடல் எரிய கேட்டாள்.
“அது நான் க...” குனிந்திருந்த தலையை நோக்கியவன் உதடுகள் குறுஞ்சிரிப்பில் மலர கெத்தாய் கூறினான் “அது எப்படியோ நான் சொல்லிக் கொள்கிறேன்” என்றான் அவன். 
 
 
அவனிடமிருந்து விலகியவள் உதட்டைக் கடித்தவாறே கேட்டாள் “அவர்களிடம் என்னை என்னவென்று அறிமுகப்படுத்துவீர்கள். என் கம்பனியை எதுவும் செய்யக் கூடாது என்பதற்காக படுக்க வந்தேன் என்றா? இல்ல காசுக்காக வரும் வே...” முடிப்பதற்குள் அவள் கன்னம் அதிர்ந்தது.
 
 
மனம் நடுங்கிவிட்டது. ‘வாய் கூசாமல் என்ன வார்த்தை சொல்லிவிட்டாள்’ உள்ளம் அலற கண் மூடி நின்றவளை நோக்கியவன் உடலும் பதறி நடுங்கியது. ‘அப்படியானால் அவள் என்ன நினைத்துக் கொண்டு இந்த ஆறு மாதமாய் அவனுடன் வாழ்ந்தாள்.’ மனசாட்சி அவனைப் பார்த்து நகைத்தது ‘நீ அவள் அண்டி, ஜானகி என்று வேண்டியவர்களை கடத்தி வைத்து அவள் கம்பனிகளையும் எடுத்துக் கொண்டால் வேறு எப்படித்தான்  நினைப்பாள்?’
 
 
அன்று இதை விட கேவலமாய் அவள் காதில் சொன்னது எல்லாம் அவன் ஞாபகத்திற்கு வரவில்லை. 
 
 
‘திடிரென்று உனக்கு ஞானோதயம் வந்தால் அதற்கு அவள் என்ன செய்வாள்?’
 
 
‘இந்த மாதிரி செய்பவர்களுக்கு அதுதான் பெயர்’
 
 
‘ஹாஹாஹா’ மனசாட்சி எக்காளமிட்டு நகைத்தது.
 
 
அவன் மனசாட்சியின் ஆகங்காரத்தை அவனாலேயே தாங்க முடியவில்லை. கண்கள் சிவந்து உடல் இறுக மேசையில் இருந்த பொருட்கள் அனைத்தையும் தட்டிவிட்டான். விசிட்டர் சேரை தரையில் ஓங்கி அடிக்க இரண்டானது.
 
 
அந்த அறையையே அதகளம் செய்துவிட்டான்.
 
 
பொருட்கள் விழுந்த சத்தத்தில் கண்ணைத் திறந்தவளுக்கு தன் முன் ருத்ர சொரூபனாய் நின்ற சொரூபன்தான் கண்ணில்பட்டான். கோபத்தில் இறுகியிருந்த உடலும் சிவந்திருந்த கண்களுமாய் நின்றவன் அருகில் செல்லவே யதீந்திராவிற்கு பயமாய் இருந்தது. சுவரோடு ஓட்டிப் போய் நின்றவளைப் பார்க்க பார்க்க கோபம் இன்னும் உச்சிக்கு ஏற வேகமாய் வெளியே சென்றுவிட்டான்.
 
 
வெளியே வந்தவன் கோலம் பார்த்த நிஷாந்த அவனை நிறுத்த முயன்றான் “சொரூப பொட்டக் இன்ன” (கொஞ்சம் இரு) புயல் போல் கடந்துவிட்டான்.
 
 
உள்ளே வந்த நிஷாந்தவின் கண்ணில்பட்டாள் சுவரோடு சுவராய் பல்லி போல் ஒட்டியிருந்த யதீந்திரா.
 
 
“என்ன நடந்தது?” அவளிடம் விசாரித்தால் பதட்டத்தில் பேச்சு வர மறுத்தது.
 
 
சுற்றிப் பார்க்க அறையில் ஒரு பொருள் மிச்சமில்லை அனைத்தையும் துவம்சம் செய்திருந்தான். பைல்கள் அடுக்கியிருந்த ராக் கூட விழுந்து கிடந்தது. அவளை வெளியே அழைத்து வந்து அருந்த நீர் கொடுத்தான்.
 
 
“ஷ்... ஆழ்ந்து சுவாசி” இரண்டு தரம் ஆழ மூச்சு விட கேட்டான் “இப்போது சொல், என்ன நடந்தது?”
 
 
“கோ கோபத்தில் எல்லாத்... த்தையும் அடித்து உடைத்துவிட்டார்”.
 
 
“அது தெரியுது, ஆனா எதற்கு கோபம்”
 
 
அவளுக்குமோ தெரியவில்லையே, எதை சொல்வாள். பரிதாபமாய் பார்க்க “நீ ஏதாவது சொன்னாயா?”. அவன் கேள்வியில் தன்னைத் தானே சொன்ன வார்த்தை நினைவு வர மறுத்து தலையாட்டினாள். ‘அப்படி நினைக்க வேண்டும் என்றுதானே அனைத்தையும் செய்தான். பிறகு அதை சொன்னதற்காக ஏன் கோபப்படுவான்’ என்பதுதான் அவள் சிந்தையாய் இருந்தது.
 
 
“சொரூபன்... எங்கே?” தயக்கத்துடன் கேட்டாள்.
 
 
அவன் கோபத்துடன் போனதைப் பார்த்த நிஷாந்த அவன் பின்னால் ஒரு செக்யூரிட்டியை அனுப்பியிருந்தான். அவனிடம் கோல் எடுத்துக் கேட்க “மேம்பாலாத்தின் மேல் போய்க் கொண்டிருக்கின்றார் சார்” என்றான் அவன்.
 
 
இருவரும் கேட்கும்படி ஸ்பீக்கரில் விட்டிருக்க அதைக் கேட்டவள் முகம் கவலையைக் காட்டியது. கோபத்தில் வேகமாக காரை ஓட்டி ஏதாவது விபத்து ஏற்பட்டால், நிஷாந்தவின் முகத்தை ஏறிட்டாள்.
 
 
அவள் கையிலிருந்த போன் அதிர அதைக் காதுக்கு கொடுத்தாள். மறுபக்கம் என்ன தகவல் சொன்னார்களோ முகம் காகிதமாய் வெளுக்க எழுந்து நின்றாள்.
 
 
அவளுடன் சேர்ந்து எழுந்த நிஷாந்த நடுங்கிய அவளைப் பார்த்து வினாவினான் “வாட்... வாட் ஹப்பன்”.
 
 
“அவரை கொலை செய்ய முயற்சி, உடனடியாக நாம் அங்கே போக வேண்டும்”.
 
 
அவளை ஒரு கணம் கூர்ந்து பார்த்தவன் “லெட்ஸ் கோ” இருவருமாய் கீழே வர “நீங்கள் உங்கள் காரில் வாருங்கள்” என்று விட்டு சொரூபனின் காரை எடுத்தவள் கைகளில் கார் பறந்தது.
 
 
கோபத்தில் சொரூபன் அவள் கார் திறப்பை எடுத்து சென்றதோடு காரையும் எடுத்து சென்றிருந்தான்.
 
 
அவள் பின்னாலேயே சென்றான் நிஷாந்த. செக்யூரிட்டியுடன் அவனுக்கும் யதீந்திராவுக்குமாய் கான்பிரன்ஸ் கோல் போட்டவன் இன்னொரு போனிலிருந்து சொரூபனின் இலக்கத்திற்கு முயன்றான்.
 
 
அடுத்த பதினைந்து நிமிடங்களில் மேம்பாலத்தை அடைய அவன் கார் கண்ணில்பட்டது. அப்படியே சற்றுத் தூரத்தில் இருந்த ஹைவே முடியும் இடமும், சாலை விதிகள் எதையும் மதிக்காமல் ஒன்வேயில் தறிகெட்டு வந்த லொறியும். 
 
 
முகம் வெளிற பார்த்தாள் யதீந்திரா. லொறி ஒன்றினை வைத்து விபத்து போல் அவனை தீர்த்துக் கட்ட யோகேஸ்வரன் முயற்சிப்பதாக அவளுக்கு தகவல் கிடைத்திருந்தது. அதைப் பார்த்ததுமே புரிந்துவிட்டது. அது மாமாவின் ஆளாய்தான் இருக்கும்.
 
 
ஒரு கணம் நிலையை ஆராய்ந்தவள் போனில் “நிஷாந்த அண்ணா நீங்கள் எனக்கு சமாந்திரமாய் வலது பக்கமாய் வாருங்கள்” என்றாள். நிஷாந்தவிற்கும் நிலைமையின் தீவிரம் புரிய அதிகம் வாதடவில்லை.
 
 
அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த சொரூபனுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. என்ன வார்த்தை சொல்லிவிட்டாள். அந்த வார்த்தையை கொண்டு ஊரே அவளைப் பேச வேண்டும் என்றுதான் இத்தனையும் செய்தான் என்பதெல்லாம் அவனுக்கு நினைவிலில்லை. கண் மண் தெரியாத வேகத்தில் போய்க் கொண்டிருந்தவன் கார் ஹோர்ன் அடிக்கும் சத்தத்தில் நிதானித்தான்.
 
 
தறிகெட்டு வந்து கொண்டிருந்த லொறியைப் பார்த்தவன் ப்ரேக்கை மிதிக்க அது வேலை நிறுத்தம் செய்திருந்தது. ஹன்ட் பிரேக்கை போட முடியும் ஆனால் நடுவீதியில் நிற்கும் அவனை, கட்டுபாடின்றி வரும் லொறி இலகுவாய் இடித்து தள்ளிவிடும்.
 
 
முப்பது அடி உயர மேம்பாலம், குதிப்பது போன்ற சாகசம் எல்லாம் சினிமாவில் மட்டும்தான் செய்ய முடியும். இன்னும் மூன்றே மூன்று நிமிடங்களில் ஏதாவது செய்தே ஆகவேண்டும்.
 
 
அவனுக்கு சமாந்திரமாய் இருபுறமும் கார் வர கண்ணாடியை இறக்கினான். இடப்புறம் யதீந்திராவும் வலது புறம் நிஷாந்தவும்.
 
 
நிஷந்தாவுக்கு சைகை செய்தான் ‘பிரேக் வேலை செய்யவில்லை’.
 
 
‘புரிந்தது’ என்பது போல் தலையாட்டிய நிஷாந்த, கைகள் இரண்டையும் முஷ்டியாக்கி ஒன்றோடு ஒன்று மோதிக் காட்டி, தன் காரின் பின்னால் வந்து மோதும் படி பதிலுக்கு சைகை செய்தான்.
 
 
முன்னால் வந்த லொறிக்கும் சொரூபனின் காருக்கும் இருபது அடி தூரமே இருக்க போனில் நிஷாந்தவிடம் “சொரூபனின் கார் கீழே விழுந்து விடாமல் கார்ட் பண்ணுங்கள்” என்றவள் நொடியில் தன் காரால் சொரூபனின் காருக்கு பக்கவாட்டில் இடித்தாள்.
 
 
இரண்டாவது தரமும் இடிக்க சொரூபனின் கார் வீதியின் வலது புறத்திற்கு செல்ல சொரூபனின் கார் நின்ற இடத்திற்கு யதீந்திராவின் கார் வந்திருந்தது.
 
 
யதீந்திரா சொன்னது போல் வலப்புறம் வந்த காரை விழாமல் தன் காரைக் கொண்டு நிஷாந்த தடுத்து நிறுத்தினான். ஹன்ட் பிரேக்கை விட்டு விட்டு பிடித்ததில் வேகம் குறைந்து நிஷாந்தவின் காருடன் மோதி நின்றது சொரூபனின் கார்.
 
 
அனைத்தும் நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் நடந்து முடிந்திருந்தது.
அப்படியே ஸ்டியரிங் வீலில் சரிந்தான் சொரூபன். மீண்டுமொரு முறை மரணத்தை இருபது அடி தூரத்தில் சந்தித்தது அவன் சக்தியை தற்காலிகமாய் உறிஞ்சியிருந்தது. வாய் வழியே காற்றை கற்றையாய் ஊதியவனுக்கு அவன் காரை யதீந்திரா தள்ளிவிட்டது நினைவு வர கோபத்துடன் நிமிர்ந்தான்.
 
 
அதே நேரம் நடந்ததும் விளங்க முகம் காகிதமாய் வெளுத்தது.
 
 
லொறியில் அடிபட்ட யதீந்திராவின் கார் மூன்று தடவை சுழன்று மேம்பாலத்தின் பக்கச் சுவரில் மோதி நின்றது காரின் பக்க கண்ணாடியில் தெளிவாய் விழுந்தது.
 
 
கைகள் நடுங்க கார் கதவைத் திறக்க முயன்றான் சொரூபன். அது இறுகிப் போய் நான் திறப்பேனா பார் என்று அவனுடன் மல்லுக்கு நின்றது. அதை விட்டு பின் சீட்டுக்கு தாவியவன் பின்பக்க கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே வந்தான்.
 
 
மற்ற காரிலிருந்து இறங்கி ஓடி வந்த நிஷாந்தவும் சொரூபனை பின்தொடர்ந்து யதியின் காரை நோக்கி ஓடினான். அவனை பாதையில் இருந்து இடித்து தள்ளி விட்டு அவளும் பின்னால் வருவதாகதான் போனில் சொன்னாள். அதை நம்பித்தான் முன்னே சென்றான்.
 
 
“யதிஈஈ....” என்ற கூவலுடன் சொரூபன் கார் கண்ணாடியை கையால் உடைத்து கதவைத் திறந்தான்.
 
 
ஸ்டீயரிங் வீலின் மேல் சாய்ந்திருந்த யதியை நிமிர்த்தியவன் கைகள் நடுங்கியது. வலப் பக்க நெற்றியிலிருந்து ரத்தம் கோடாய் கன்னத்தை தாண்டி இறங்கி கொண்டிருந்தது.
 
 
“யதி” அவள் கன்னம் தட்டினான். மூச்சு பேச்சில்லை அவளிடம்.
 
Reply
Share:

error: “These tales are woven with care. Please don’t copy—let the words live here.”