மொழி - 08
அன்றிரவு திரும்பி வந்த போது அவளுக்கு ஃபிவேர் நூற்றிரெண்டில் நின்றது. மருத்துவரை அழைத்து மருந்து கொடுங்கள் என்று விட்டு தன் வேலையைப் பார்க்க சென்றுவிட்டான்.
வேலை முடித்து வந்தவன் கட்டிலில் வாடிய மலராய் படுத்திருந்தவளைப் பார்க்க மனசாட்சி திட்டியது ‘சற்று அதிகமாய் படுத்திவிட்டாய், பாய்ந்து வைத்திருகிறாய்’ அடுத்த சில நாட்களுக்கு அவளை தொல்லை செய்யவில்லை.
யாரோ கதவைத் தட்டும் சத்தத்தில் கலைந்தவன் “யெஸ் கம்மின்” என்றதும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தது அவனது பிஏ ஜெகதீஸ். கேள்வியாய் பார்த்தவனிடம் “மிஸ் யதீந்திரா வந்து இருக்கிறா”.
ஆச்சரியத்தில் புருவம் நெற்றி மேட்டுக்கு ஏறியது. இது அவனின் லண்டன் கிளைக்கான அலுவலகம். அதோடு அன்று அவளது காதில் அன்று கூறிய வார்த்தைக்கு பின்னர் அவனிடமிருந்து ஒதுங்கியது போலொரு தோற்றம். ‘இங்கே ஏன்’ யோசித்தவன் “உள்ளே வர சொல்லுங்கள்” என்ற சொரூபன் “நிஷாந்த...” இழுத்தான்.
“இன்னும் வரவில்லை, வந்ததும் உடனே உங்களை வந்து பார்க்கச் சொல்கிறேன்” என்ற ஜெகதீஸ் கதவைத் திறந்து யதீந்திராவை உள்ளே விட்டான்.
“யெஸ்” ஏறெடுத்துப் பார்த்தான். அவனின் சந்தேகம் சரியாய் இருந்தால் நினைக்கவே நெஞ்சு நடுங்கியது. இந்த சில மாதங்களில் கொஞ்ச நஞ்ச பாடாபடுத்தியிருந்தான்.
“என்ன?”
“நிஷாந்த அண்ணாவைப் பற்றி கொஞ்சம் பேச வேண்டும்”
‘சொல்’ என்பது போல் பார்த்தான்.
“ஜானகிக்கு நிஷாந்த அண்ணாவிடம் ஏதோ ஈடுபாடு ஒன்று இருக்கு போல” சற்று நிறுத்தி முகம் பார்த்தவள் “பதினைந்து வருடத்திற்கு முன் அவள் சிறு பெண், வெறும் ஐந்தாறு வயதுதான். நான் அவளை பாதுக்காத்தேன் என்ற ஒரு காரணத்துக்காய்...” சொல்ல வந்ததை மென்று முழுங்கினாள்.
அவளையே கூர்ந்து பார்த்தவள் அவள் வார்த்தையையே திருப்பிப் படித்தான் “நீ பாதுகாத்தாய் என்ற ஒரே காரணத்துக்காய்...”.
“அஅவ அவளுக்கு நிஷாந்த அய்யாவை பிடித்து இருக்கு என்று நிநினைக்கிறன்” பெரிய விழிகளால் அவனை நோக்கினாள்.
உணர்ச்சியற்ற முகத்துடன் மேலே சொல் என்பதைப் போல் பார்த்தான்.
ஆழ்ந்து மூச்செடுத்து தன்னை நிதனித்து சொன்னாள் “அவள் ஸ்பெஷல் நீட் பெர்சன்”.
அவள் வார்த்தையில் அதிர்ச்சி முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது. ஓரளவு அவனுக்கும் சந்தேகம் இருந்தது. இப்போது அவள் வாயாலேயே கேட்கும் போது சற்று அதிர்ச்சியாய் தான் இருந்தது.
“வயது வித்தியாசம் சற்று அதிகம்தான். ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கு நிஷாந்த அய்யா அவளை நல்லபடி பார்த்துக் கொள்வார்”.
“ஏன்? அப்படி என்ன அவசரம்?”
மருத்துவரின் எச்சரிக்கை காதில் ஒலிக்க அமைதியாய் இருந்தவளைப் அழுத்தமாய் பார்த்தவன் உதடுகளில் கள்ளப் புன்னகை ஒன்று தோன்றி மறைந்தது.
“நான் பிசினெஸ் மேன்” திடிரென கூற ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தாள் யதீந்திரா. ‘அது தெரிந்ததுதானே’.
“இல்ல எதையும் லாபமின்றி செய்ய மாட்டேன்” சிறு குறும்பு தென்பட்டது போலிருந்தது. கற்பனையோ என்று இமை தட்டி விழிக்க மெலிதாய் புன்னகைத்த சொரூபனை பார்த்து யதீந்திரா மயங்கி விழாதது மட்டும்தான் குறை.
மேற்கொண்டு எதுவும் சொல்வதற்கு முன் கதவு தட்டி சத்தம் கேட்கவே “கமின்” என்றான்.
“என்ன விஷயம் தேடினாயாம்?” நிஷாந்ததான் கேள்வியுடன் உள்ளே வந்தான்.
தன் முன்னிருந்த யதீந்திராவை கை காட்டியவன் “உனக்கு சம்பந்தம் பேசி வந்திருக்கின்றார்கள். அதான் என்ன சொல்லட்டும்?” குறும்பாய் கேட்டான்.
‘இன்று இவனுக்கு என்னவானது’ கேள்வியாய் நோக்கினாள் யதீந்திரா.
அவன் கதையில் இருந்தே அவனின் மனநிலை புரிய புன்னகைத்த நிஷாந்த “சம்மந்தம்தானே உனக்கும் சேர்த்து பேச வேண்டியதுதான்’ பொருள் பொதிந்த புன்னகையுடன் நோக்கினான்.
அவன் கூறியதில் என்ன புரிந்ததோ விரிந்த புன்னகையுடன் “எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அவனுக்கு சம்மதம் என்றால் எனக்கும் சம்மதம்” என்றான் யதீந்திராவிடம்.
தன்னையாறியமால் மலர்ந்த புன்னகையுடன் “சரி அவரிடம் நான் பேசுகிறேன்” என்று எழப் போனவளை தடுத்து நிறுத்தினான் நிஷாந்த “என்னிடம் என்ன பேச வேண்டும்?”.
“உனக்கு ஜானகியை பெண் பார்த்திருக்கின்றாள்”
“நானும் அவளும் சாதரணமாய்தான் பழகுகின்றோம். இருவருக்கும் அப்படி ஏதும் பிடித்தமில்லை” ஸ்பஷ்டமாய் மறுத்தான் நிஷாந்த.
அவனுக்கு பதிலாய் யதீந்திரா ஏதோ சொல்வதற்குள் மீண்டும் கதவில் தட்டி சத்தம் கேட்டது. கணணி திரையில் வெளியே யார் நிற்பது என்று பார்த்த சொரூபன் குறுஞ் சிரிப்புடன் அழைத்தான் “கமின்”
“இதோ நிற்கிறார் மாத்தையா” என்றவாறே உள்ளே வந்தாள் ஜானகி. கடந்த மூன்று மாதங்களில் அப்படி அழைக்காதே என்று சொல்லி அலுத்துவிட்டான் நிஷாந்த. முடிந்த வரை சொரூபன் முன்னிலையில் அழைக்காதவாறு பார்த்துக் கொண்டான்.
“மாத்தையா...? கேள்வியாய் கண்களை விரித்துப் பார்த்த சொரூபன் கலகலவென வாய் விட்டே சிரிக்கத் தொடங்கினான்.
அவனை சந்தித்து இந்த ஆறு மாதத்தில் எப்போது சிரித்தாலும் வெறும் மேல் பூச்சாய் இருக்கும் இல்லையா தந்திரம் நிறைந்த கபடப் புன்னகையாய் இருக்கும். இது போல் மனம் விட்டு சிரித்துப் பார்த்திராத யதீந்திராவிற்கு அவன் சிரிக்கும் சத்தமும் முகமும் பார்க்க தெவிட்டவில்லை.
இமைக்க மறந்து பார்த்திருந்தாள்.
“ஹினாஹின்ன எப்பா” (சிரிக்க வேண்டாம்) அவனை அதட்டினான் நிஷாந்த.
அவன் அதட்டலில் வாயைப் பொத்தி சிரிப்பை அடக்க முயன்று முடியாமல் மீண்டும் மீண்டும் பொங்கி சிரித்தான் சொரூபன்.
ஜானகியின் முழங்கைக்கு மேலாய் பிடித்தவன் “உன்னிடம் எத்தனை தரம் சொன்னேன். மாத்தையா சொல்ல வேண்டாம் என்று” மேற் கொண்டு சொரூபன் எதுவும் சொல்வதற்குள் அவளை இழுத்துக் கொண்டு வெளியே சென்றிருந்தான்.
அவர்கள் செல்லவே சிரிப்பு குறைந்து புன்னகையாய் மாற தன்னையே இமைக்காது நோக்கியவள் முன்பு விரல்களை சுண்டினான் “என்ன பார்கிறாய்?”.
சிறு வெட்க புன்னகையுடன் தலையாட்டி மறுக்க கேள்வியாய் புருவத்தை உயர்த்தினான்.
“இல்ல மாத்தையா என்றால் முதலாளி என்றுதானே அர்த்தம் நெட்டில் அப்படிதான் போட்டிருந்துது. இவள் கூப்பிடுவதை வைத்து தேடினேன். அதில் சிரிக்க என்...”
“ஏன் என் சிரிப்பு நல்லா இல்லையா?
“நல்லாதான் இருக்கு” என்றவளை நோக்கி கேள்வியாய் புருவத்தை உயர்த்த “அதில்ல...” தடுமாறினாள்.
மீண்டும் சிரிப்பு மலர “சிங்கள பெண்கள் தன் கணவனை குறிப்பிடும் போது அல்லது பொது இடத்தில் வைத்து அழைக்கும் போதும் மாத்தையா என்ற வார்த்தையை பயன்படுத்துவார்கள்” விளக்கமாய் கூறினான்.
கடந்த மூன்று மாதமாய் ‘மாத்தையா’ என்று ஜானகி பின்னால் திரிவதும் அவளை அதட்டுவதுமாய் இருந்ததன் காரணம் புரிய “ஓ...” என்றவளுக்கும் சிரிப்பு வந்தது.
“நான் அவனிடம் கதைக்கிறேன், ஆளைப் பற்றி யோசிக்க தேவையில்லை. நல்லவன், அதோடு லண்டனில் இருக்கும் கம்பனியின் பாதி பங்கு அவனுடையது தான்” என்றவன் பார்வையில் குழம்பிப் போய்ப் பார்த்தாள் யதீந்திரா.
அன்றிரவு அவளை நாடியவன் தேடலில் காமத்தை தவிர வேறு ஏதோ ஒன்றுமிருந்தது. என்னவென்று புரியாமல் பார்த்தவளை கூடல் முடிய தன்னோடு அனைத்துக் கொண்டான். அதுவும் ஆச்சரியத்தையே கொடுத்தது. ஏனெனில் வழமையாய் கூடல் முடிய தேவை தீர்ந்தது என்று விலகி விடுவானே தவிர இது போல் அரவணைத்துக் கொள்ளுதல் எல்லாம் இருக்காது.
ஆச்சரியமாய் பார்த்தவள் கண்ணில் இதழ் பதித்து “படு” என்றான்.
******
அவன் ஆழ்ந்த உறக்கத்தை கெடுப்பேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அடித்துக் கொண்டிருந்தது அவனின் ஃபோன். பக்கவாட்டில் திரும்பிப் படுத்தவாறே பாதி உறக்கத்தில் பதிலளித்தான் “ஹலோ”.
“ஞானா! எப்படி இருக்கிறாய்?”
“ம்ம் நல்லா இருக்கிறேன் அம்மம்மா” ஒரு கையயால் கண்ணைக் கசக்கினான்.
“யாருண்ட வீடியோ பார்க்கிறீங்க சொரூபன்” அவன் மார்புக்குள் உறங்கிய யதீந்திரா கங்காரு குட்டிப் போல் போர்வைக்குள் இருந்து எட்டிப் பார்த்தாள்.
“வீடியோ இல்ல அம்மம்மா ஸ்கைப்ல கோல் எடுத்து இருக்கிறார்கள்” இயல்பாய் கூறியவன் தாங்கள் இருக்கும் நிலை உறைக்க ஒரு கணம் அப்படியே உறைந்து போய் மார்பினுள் உறங்கியவளையும் ஸ்கைப்பில் இருந்த அவனின் அம்மம்மாவையும் சில நொடிகள் மாறி மாறி பார்த்தான். வீடியோவில் அனைத்தும் தெளிவாய் விழுந்து விட்டது.
கோழி திருடிய கள்வனாய் முழிக்க, அவன் மார்பில் பாதி உறக்கத்தில் இருந்தவள் மூளை அவன் வார்த்தைகளை கிரகித்தது. ‘அம்மாம்மா ஸ்கைப்ல கோல் எடுத்து இருக்கிறார்கள்’ சட்டென திரும்பிப் பார்த்தவள் மீண்டும் அவன் மார்புக்குள் ஒளிந்து போர்வையைப் போர்த்திக் கொள்ள அவள் செயலில் அவனுடல் சிரிப்பில் குலுங்கியது.
அவள் திரும்பி ஃபோனை பார்த்ததில் அவள் முகம் அவருக்கு தெளிவாகவே தென்பட்டிருந்தது.
“ஐய்யோ அதை ஓப் பண்ணுங்கள்” அவன் மார்பில் குத்தினாள்.
சட்டென சுதாகரித்து ஒப் செய்தவன் ஒரு நிலைக்கு வருவதற்கு முன்னர் மீண்டும் போன் அடித்தது மீண்டும் அவரே தான் ஆனால் இந்தத் தடவை வீடியோ கோல் எடுக்கவில்லை.
“இன்னும் இரண்டு நாளில் அந்தப் பிள்ளையையும் கூட்டிட்டு நீங்களும் யாழ்ப்பாணம் வாருங்கோ” உத்தரவாய் இட்டவர் ஃபோனை கட் செய்து விட கேள்வியாய் நோக்கினாள் யதீந்திரா.
“உம்மை யாரு வெளியே எட்டிப் பார்க்க சொன்னது. பேசாமல் அப்படியே படுத்திருக்க வேண்டியது தானே” சிறு சிரிப்புடன் கேட்க “எதோ சத்தம் கேட்டுதே என்று” சிணுங்கினாள்.
“இப்ப அம்மம்மா வரட்டாம்”
“சரி போயிட்டு வாங்கோ” என்றவள் சற்று தயங்கிக் கேட்டாள் “எத்தனை நாளில் திரும்பி வருவீர்கள்” ஒரே அசைவில் தன் கீழ் கொண்டு வந்தவன் “உம்மையும் சேர்த்து கூட்டிட்டு வரட்டாம்” என்றான்.
“ஐய்யய்யோ என்னால் முடியாது”
“இன்னும் இரண்டே நாளில் யாழ்ப்பணத்தில் நிற்க வேண்டும்” என்றவன் அவளை மீண்டும் கொள்ளையிட தொடங்கினான்.