Share:
Notifications
Clear all

மொழி - 07

Posts: 49
Admin
Topic starter
(@admin)
Member
Joined: 2 months ago
மொழி  - 07
 
 
மூன்றரைக்கு ஃபோன் அலராம் அடிக்க லேசாய் புரண்டவன் கைகளில் ஏதோ கதகதப்பாய் தட்டுபட என்னவென்று பார்த்தான். கன்னத்தில் கண்ணீர் கறையுடன் யதீந்திரா. குழந்தை போலிருந்த முகத்தைப் பார்த்தவன் உடல் எஃகாய் இறுகியது. நேற்று இரவே அவனுக்கு அனைத்து தகவல்களும் வந்திருந்தது. அவள் தன் மாமா யோகேஸ்வரனிடம் என்ன கதைத்தால் என்பது தொடங்கி இங்கே எப்படி எப்போது வந்து சேர்ந்தாள் என்பது வரை
 
 
ஏளனமாய் சிரித்தான் “என் குழந்தையை சுமக்க வேண்டுமா? நல்லதுதான், நீ என் குழந்தையை சுமக்கதான் வேண்டும். அந்த நாளிற்காக தான் காத்திருக்கிறேன். அப்போதுதான் புரியும் சில வேதனைகள். கரும்பும் கிடைத்து கூலியும் கிடைத்தால் அதை விட நான் ஒன்றும் மடையன் இல்லை. வியாபாரி லாபத்தை மட்டும் நோக்காக கொள்ளும் வியாபாரி” சவாலிட்டவன் எழுந்து மீட்டிங்க்கு தயாரானான்.
 
 
நான்கு மணிக்கு லண்டனில் இருக்கும் டேனியல், நியூசிலாந்தில் இருக்கும் சிவகாந்தன் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் ரிச்சர்ட் என்று நான்கு வேறு நாடுகளில் இருந்து தொழில் தொடர்பாக அடுத்த நடவடிக்கை பற்றிய ஒரு கலந்துரையாடல், அனைவருக்கும் பொதுவான ஒரு நேரத்தை தேர்ந்து எடுக்க இங்கே அதிகாலை நான்கு மணி. அவனைப் பொறுத்த வரை ஒரு நாளில் மூன்று மணி நேரம் உறங்கினாலே போதும்.
 
 
மீட்டிங் முடிய கையை உயர்த்தி சோம்பல் முறித்தவன் நேரத்தை பார்த்தான். மணி ஆறரையை நெருங்கிக் கொண்டிருந்தது.
 
 
சூரிய உதயத்தின் கதிர்கள் அவன் முகத்தில் விழுந்து அவன் லெமன் நிறத்தை சிவப்பு ஒருவித ஆரஞ்சு வண்ணத்திற்கு மாற்றியிருக்க அவன் முகத்தையே வைத்த விழி வாங்காது பார்த்திருந்தாள் யதீந்திரா.
 
 
சற்று நேரத்திற்கு முன்தான் அவன் கதைத்த சத்தத்தில் எழுந்திருந்தாள். அவளிடம் அசைவை உணர்ந்து லேசாய் கண் விழியை மட்டும் திருப்பிப் பார்த்தவன் உணர்வுகள் மீண்டும் கிளர்ந்தெழுந்தது. பார்வையை உதய சூரியனை நோக்கித் திருப்பியவன் ‘நல்லா பார்த்து மட்டும் வை, பக்கத்தில வந்தா ஜடம் மாதிரி இரு, பார்வையில் கர்ப்பமாக்க நான் என்ன சூரிய தேவனா’ மனதோடு புலம்பினான்.
 
 
அவள் அப்படி பார்த்துக் கொண்டிருந்தது ஏதோ செய்ய மூக்கு நுனியை ஆள்காட்டி விரலால் நெருடினான்.
 
 
ஏதோ பிசுபிசுத்தது. என்னவென்று ஆராய இரத்தம். ‘எப்படி?’ என்று யோசித்தவனுக்கு பதிலாய் தென்பட்டது பல்கனி க்ரில்லில் வேலைபாட்டில் இருந்த இரத்தம். நேற்று ஷேவ் எடுக்கும் போது விரலில் வெட்டுப்பட்டதில் வந்த புண் சோம்பல் முறிக்க கையை உயர்த்திய போது லேசாய் தாங்குபட்டு விட்டது.
 
 
புயல் வேகத்தில் வந்த யதீந்திரா “இப்ப இந்த மீட்டிங் அட்டென்ட் பண்ணித் தான் ஆகணும் என்று என்ன வேண்டுதல். ஏன் மறுபடி இரத்தம் வருது, அப்படி என்ன உடம்பைக் கூட பார்க்காமல் டென்ஷன் பிடிச்ச வேலை” அவன் கன்னம் தாங்கிக் கேட்டவளை விநோதமாய் பார்த்தான் சொரூபன்.
 
 
‘என்ன இரத்தம் எதற்கு பதறுகிறாள்’ யோசித்தவனுக்கு நொடியில் விளங்கியது. டென்சனால் மூக்கில் இருந்து இரத்தம் வருவதாக  நினைத்துவிட்டாள். இரவு உடையில் மனதை அள்ளியவளை கள்ளப் புன்னகையுடன் கைகளில் அள்ளியவன் “அப்ப என் டென்சனை நீ குறை” இதழோடு இதழ் கலந்தவாறே அறைக்குள் சென்று ஒரு காலால் பல்கனி கதவை மூடினான்.
 
 
“விடிந்துவிட்டது... வேலை” முனகியவளுக்கு பதிலாய் “இன்று ஞாயிற்றுக் கிழமை என்னை கவனிப்பது தான் உன் வேலை” என்றவன் கைகள் அவளிடையை இம்சிக்க தன் கையில் குழைந்த அவளுடலில் புதையல் தேடினான்.
 
 
“ஞானா” அவன் தேடலின் வேகத்தை தாங்க முடியாது அழைக்க அதுவே அவன் வேகத்தை இன்னும் அதிகபடுத்தியது.
 
 
***
 
 
“மாத்தையா..” நிஷாந்தவின் கையைப் பிடித்து உலுக்கினாள் ஜானகி.
 
 
அவனோ சற்று முன் சொரூபனின் பல்கனியில் நடந்ததைப் பார்த்து யோசனையில் மூழ்கியிருந்தான். நண்பனின் வலி அவனுக்கு நன்றாகவே புரிந்திருந்தது. ஆனால் மனதின் மூலையில் ஏதோ ஒன்று யதீந்திரவிடம் தவறு இருக்காது என்று ‘நைநை’ என்றது. அவன் செய்வதை ஏற்கவோ தடுக்கவோ முடியாமல் திணறினான்.
 
 
மீண்டும் அவனை உலுக்கிய ஜானகி “அங்கே என்ன மேன் பார்க்கிறாய்? தானும் தேடினாள். பூட்டியிருந்த பல்கனி கதவுதான் தென்பட்டது.
 
 
“நீ என்னவென்று அழைத்தாய்?” ஆச்சரியத்துடன் கேட்டான் நிஷாந்த.
 
 
“மாத்தையா.... அப்படிதானே ஜெகதீஸ் அழைத்தான்”
 
 
“அப்படி கூப்பிடாதே” சிவந்து விட்ட முகத்துடன் கண்டித்தவன் டிரைவர் அங்கிளைப் பார்த்து “அங்கிள் இவளை உங்களுடன்..” என்றவனை இடை மறித்தார் “எனக்கும் தகவல் அனுப்பியிருந்தாள். வாம்மா” என்று ஜானகியை அழைத்தவர் பார்வையும் பல்கனியை நோக்கி பாய நிஷாந்தவிற்கு விளங்கியது அவரும் பார்த்துவிட்டார்.
 
 
சிறு குன்றலுடன் உதட்டைக் கடிக்க, யோசனையுடன் அவனை பார்த்தவர் மேலே எதுவும் பேசாமல் போய்விட்டார்.
 
 
ஃபோனை எடுத்து டயல் செய்தவன் “ஜெகதீஸ் எனக்கு உடனடியாக இங்கே பக்கத்திலேயே ஒரு வீடு பார்” என்றான். அவர்கள் இருவரும் திருமணம் முடித்து ஒரே விட்டில் இருந்தால் நிலைமை வேறு. இன்றைய நிலையில் அவனும் இங்கே வசித்தால் யதீந்திரவை இன்னும் தரக் குறைவாய் பேசக் கூடும்.
 
 
அடுத்த நாளே நிஷாந்த அவனிடம் வந்து நின்றான் “மச்சா நான் வீடு பார்த்துட்டேன்” டையைக் கட்டிக் கொண்டிருந்தவன் கைகள் ஒரு கணம் நின்று மீண்டும் வேலை செய்ய “யாருக்கு வீடு” சாதரணமாய் கேட்டான் சொரூபன்.
 
 
மேலுக்கு சாதரணமாய் இருந்த அவன் குரலின் ஆபத்து புரியவே செய்தது. இருந்தாலூம் பதிலளித்தான் “எனக்குத் தான்”
 
 
“ஏன்?” கேள்வியே இதை இத்துடன் விடு எச்சரித்தது.
 
 
“வீண் பெயர் வரும்”
 
 
“யாருக்கு?”
 
 
“ய...” சொல்ல வந்தவன் இடையில் நிறுத்தி முறைக்க “அதுதானே நமக்கும் தேவை” அவன் தோளில் விளையாட்டாய் குத்தி கதவை நோக்கிச் நடந்தவன் நிலையில் ஒரு கை வைத்து நின்று “நான் வேண்டாமென்றால் நீ தாரளமாக வேறு வீட்டுக்கு போகலாம்” என்று விட்டு சென்றுவிட்டான்.
 
 
 
 
அவள் மருத்துவ அறிக்கையை முன்னே வைத்த மருத்துவர் அதிருப்தியுடன் அவளைப் பார்த்தார். அவள் தலை குனிய “ஒரு நிறுவனத்தை வைத்து நடத்துகிறாய். கெட்டிக்காரி, உனக்கு சொல்லித்தான் தெரிய வேண்டுமா? இன்னொரு தரம் சாப்பிடமால் இங்கே மருந்தெடுக்க வராதே” என்றார் அவர்.
 
 
ஆயாசத்துடன் தலையை ஆட்டி வைத்தாள் யதி.
 
 
“ஈவ்னிங் வா, இன்னும் சில பரிசோதனை முடிவுகள் வர வேண்டும் வந்ததும் சொல்கிறேன்”.
 
 
மறுபேச்சின்றி எழுந்து வந்துவிட்டாள்.
 
 
அன்று காலை எழுந்தது முதல் வயிற்று வலியில் சுருண்ட யதிக்கு புரட்டிக் கொண்டு வரவே குளியலறைக்கு ஓடிப் போய் ஓங்களித்தாள். அப்படியே குளித்து உடை மாற்றி வந்தவள் சண்முகம் அங்கிளுடன் மருத்துவமனை வந்திருந்தாள்.
 
 
“என்னாச்சும்மா என்ன சொன்னார்” வெளியே வந்தவளிடம் கவலையாய் விசாரித்தார். சிறு விடயத்திற்கு எல்லாம் மருத்துவமனைக்கு செல்லும் ஆளில்லையே அவள்.
 
 
“பயப்பட ஒன்றுமில்லை, அல்சர் தான்” புன்னகையுடன் சொன்னவள் காரில் ஏறிக் கேட்டாள் “ஞானா இப்போது எங்கே?”
 
 
“லண்டன் கிளை அலுவலகத்தில்”
 
 
“அங்கே போங்கள்” என்றவள் கண் மூடி சாய்ந்து அமர்ந்தாள்.
 
 
அவர் பார்வை கவலையுடன் அவளில் பதிந்தது. சொரூபன் வந்த பின் கடந்த மூன்று மாதமாய் தான் அவள் சிரித்து பார்த்தார். ஆனால் இப்போது முதல் இருந்ததே பரவாயில்லை என்று நினைக்குமளவு இன்னும் இறுகிப் போயிருந்தாள். போதக் குறைக்கு திடீர் உடல் மெலிவு வேறு.
 
 
 
‘மாறன் தம்பியிடம் இது பற்றி பேச வேண்டும்’ தனக்குள் நினைத்துக் கொண்டார்.
 
 
***
 
 
விலாசமான அந்த அலுவலக அறையின் நடுவே போட்டிருந்த மேஜையின் பின்புறம் சுழல் நாற்காலியின் கையில் முழங்கையூன்றி நாடியை தாங்கிக் கொண்டு சாய்ந்து கண்மூடி அமர்ந்திருந்தான் சொரூபன். நெற்றியில் விசன ரேகைகள்.
 
 
மூன்று மாதம் கண்ணிமைக்கும் நொடியில் ஓடியிருந்தது. இந்த மூன்று மாதத்தில் யோகேஸ்வரனின் கம்பனிகளில் நாலில் மூன்று பங்கு அவன் பெயருக்கு வந்திருந்தது. அவர் அடகு வைத்திருந்த பெறுமதி மிக்க சொத்துகளின் கடனை எல்லாம் தன் பெயருக்கு மாற்றியிருந்தான். அவர் செய்த சில சட்ட விரோத செயல்களுக்கு ஆதாரங்களை திரட்டியிருந்தான். இன்னும் ஒரே மாதத்தில் நடுத்தெருவில் நிற்கும் அவரை போலிஸ் கைது செய்து விடும். நீதிமன்றில் வாதாட லோயருக்கு கொடுக்க பணம் கூட இருக்காது அவரிடம்.
 
 
இதெல்லாம் அவன் சிந்தனையை தொல்லைப்படுத்தவில்லை. யாரோ ஓருவர் பின்னலிருந்து உதவி செய்கிறார்கள். யாரென்று தெரியவில்லை, என்ன நோக்கம் என்றும் விளங்கவில்லை. இதனால் அவர்களுக்கு ஏதாவது லாபமா என்றாலும் தெளிவாக தெரியவில்லை. வியாபாரத்தில் எதிரே நிற்கும் எதிரியை விட மறைந்து நிற்கும் எதிரியிடமிருந்தே ஆபத்து அதிகம் வரும்.
 
 
கடைசியாய் ஒரு சந்தேகம் ஒருவர் மீது...
 
 
அதை உறுதிப்படுத்திக் கொள்ளத்தான் நிஷாந்தவை அனுப்பி வைத்திருந்தான்.
 
 
சில நாட்களுக்கு முன் நடந்தது மீண்டும் நினைவில் ஆடியது.
 
 
அன்றும் இரவு முழுதும் அவளுடன் சல்லாபித்து விட்டு எழுந்தவனுக்கு அருகே தென்பட்ட அவளின் நிம்மதி நிறைந்த முகம் அவன் நிம்மதியை இல்லாமல் செய்தது.
 
 
ஒழுக்கத்தை பெரிதாய் மதிப்பவள் இது போல் திருமணமற்ற உறவுக்கு நிர்பந்தித்தால் அழுது கரைவாள் என்று பார்த்தால் அவளோ அவனுடன் இன்னும் ஒன்றினாள். அவன் கண் பார்த்து நடந்தாள். அதில் அவனுக்கு இன்பம்தான் தன் மனசாட்சியிடம் தானே மறுக்க முடியாது ஏற்றுக் கொண்டிருந்தான். கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் தன்னந் தனியாய் லண்டனிலேயே வாழ்ந்தவன் இதுவரை பெண் வாசம் பட்டதில்லை. இவளை தொட்ட நாள் முதல் அவள் வாசமின்றி உறக்கமில்லை.
 
 
அவனுக்கு எரிச்சலாய் இருந்தது. அப்படி என்னதான் இருக்கு இவளிடம். சுற்றும் முற்றும் பார்த்தவன் கண்ணில்பட்டது குளிர் நீர் இருந்த டம்ளர். சட்டென எடுத்து முகத்தில் எத்தினான்.
 
 
ஆழ்ந்து உறங்கியவள் முகத்தில் குளிர் நீர் படவே அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்தாள் யதீந்திரா. கொஞ்ச நீர் மூக்கினுள்ளும் போயிருக்க இருமி சரி செய்தவளை உணர்ச்சியற்ற முகத்துடன் பார்த்திருந்தான் சொரூபன்.
 
 
“எஎ என்ன?” திணறிப் போய்க் கேட்டவளை ஏளனமாய் பார்த்துக் கேட்டான் “இது என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா இருந்து சாப்பிட?”.
 
 
ஐந்து நாட்களுக்கு முன் லண்டன் சென்றவன் நேற்றுதான் திரும்பி வந்திருந்தான்.
 
 
மீண்டும் மீண்டும் அவளை நாடி கூடல் முடித்து விலகும் போது விடிந்திருந்தது. களைப்பிலும் மயக்கத்திலும் ஒரு மணி நேரம் கூட ஆழ்ந்து உறங்கியிருக்க மாட்டாள். அவள் முகத்தில் தண்ணீர் அடித்து எழுப்பியிருந்தான்.
 
 
உறக்க கலக்கத்தில் அவன் என்ன சொல்கிறான் என்றே முதலில் விளங்காமல் விழித்தாள்.
 
 
“என்ன பார்க்கிறாய்?” எரிந்து விழுந்தான்.
 
 
பதில் சொல்லாது விழிக்கவே “போ போய் பிரேக்பாஸ்ட் ரெடி செய். இன்று போடும் ட்ரெஸ் ஐயர்ன் பண்ணி வை, அப்படியே என் ஷூவுக்கும் பொலிஷ் போட்டு வை. இனிமேல் இதெல்லாம் நீதான் செய்ய வேண்டும்” உத்தரவிட்டான்.
 
 
திருமணம் முடித்து மனைவியிடம் அன்பும் உரிமையும் செல்ல சீண்டலுமாய் கேட்டிருந்தால் எப்படியோ.? ஆனால் அவளிடம் சொன்ன விதம் ஸ்பஷ்டமாய் தெரிவித்தது ‘உன்னை வேலைக்காரி போல் தான் நடத்துகிறேன்’.
 
 
கீழே சென்று சட்டினி அரைத்து வைத்து தோசைக்கு மாவை ரெடி செய்தாள். அவளுக்கு செய்ய தெரிந்த ஒரே ஒரு உணவு வகை. மேலே வந்தவளுக்கு இன்று அணியும் ஆடைகளை ஐயர்ன் செய்ய சொன்னது நினைவு வந்தது. ‘எதை போடப் போகிறான்’ யோசிக்க கட்டிலில் ஆடைகளை எடுத்து வைத்திருந்தான்.
 
 
அயர்ன் செய்கிறேன் என்று கையை சுட்டுக் கொண்டாள். பாதியில் கலைந்த உறக்கமும் நேற்றைய இரவின் மிச்சமுமாய் உடல் அடித்து போட்டது போலிருக்க கைகால்களை கூட அசைக்க முடியவில்லை. குளித்து வெளியே வந்தவனிடம் உடைகளைக் கொடுக்க இடையை பற்றி அருகே இழுத்தான்.
 
 
நெஞ்சில் மோதி நின்றவள் காதில் குனிந்து “சும்மா சொல்லக் கூடாது....” அந்தரங்கமாய் எதையோ கூற துடித்து விலகினாள் யதீந்திரா. அவன் காதில் கூறிய வார்த்தையை விட தாசி என்ற சொல் கூட மரியாதையாய் இருந்திருக்கும் போலிருந்து அவளுக்கு.
 
 
கலங்கிய கண்களின் ஊடே கலங்கித் தெரிந்தது அவன் விம்பம்.
 
 
என்ன வார்த்தை சொல்லிவிட்டான். இத்தனை நாளில் அவன் செயல்களும் வார்த்தையும் வலித்த போதும் அவனிடம் ஒரு நாளும் கோபம் கொண்டதில்லை. இவனை காதலித்த பாவத்திற்கு இன்னும் எதையெல்லாம் தாங்க வேண்டி வரும். மனம் நொந்து விட்டிருந்தது.
 
 
குளிர் ஜுரம் வந்தது போல் தேகம் நடுங்க வலியுடன் பார்த்தவளை திருப்தியாய் பார்த்தான் சொரூபன். எப்படியோ சமாளித்தவள் கீழே வந்து தோசையை ஊற்றிக் கொடுத்தவள் அவன் சென்றதும் அறையில் அடைந்து விட்டாள்.
 
 
அவள் என்ன செய்கிறாள்? எங்கே இருக்கிறாள்? யாரை காதலிக்கிறாள்? என்பது இதுவரை அவளைத் தவிர யாருக்கும் தெரியாத ஒன்று. சிறு வயது முதலே படிப்பு முடியும் வரை ஹோஸ்டல் வாசம். அதன் பின் தனியாய் பிளாட்டில்.
 
 
அவள் அவனை காதலிப்பதும் உண்மை, மாமாவிடம் சொன்னது போல் வாரிசுக்காக அவனிடம் பழகுவதும் உண்மை. முரண்பாடுகளின் உறைவிடமாய் இருப்பவளை விளங்கிக் கொள்வானா?
 
 
Reply
Share:

error: “These tales are woven with care. Please don’t copy—let the words live here.”