அந்த ஹோட்டலின் முன் இறங்கியவள் கையிலிருந்த கார்ட்டை நோக்கினாள். பீச் அருகே இருந்த பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஆர்ட் எஃக்சிபிசன், அதன் மூலம் வரும் வருமானத்தை விபி டிரஸ்ட்டுக்கு கொடுப்பதாக அச்சடிக்கப்பட்டிருந்தது. இங்கே அவளுக்கு சில தகவல்கள் கிடைக்கலாம் போலிருக்கவே வந்திருந்தாள்.
அந்த பார் டேபிளின் முன்னே இருந்த ஸ்டூலில் அமர்ந்து இரண்டு கைகளையும் பக்கவாட்டில் நீட்டி சாய்ந்தவாறு சுற்றுப் புறத்தை கூர்மையாய் போல் கவனித்துக் கொண்டிருந்தவன் கண்கள் அவள் உள்ளே வரும் போதே கண்டு கொண்டன. சட்டென திரும்பி சிறு கண்ணாடிக் குடுவையில் இருந்த திரவத்தை அப்படியே வாயில் கவிழ்த்தான்.
கண்கள் மூடியிருக்க மனமோ கண்ட காட்சியை மீண்டும் ஓடவிட்டது.
தோளுக்கு சற்றுக் கீழேயே நின்ற கட்டை கூந்தல், நீள் வடிவ முகம், துருதுருவென நெளிந்த புருவத்தின் கீழ் அங்குமிங்குமாய் ஓடிய விழிகள், நீண்ட நாசியின் கீழ் கீறிவிட்டது போன்ற இதழ்களுக்கு போட்டிருந்த வைன் நிற லிப்டிக் அவனை மயக்கியது. அதே நிறத்தில் உடலோடு ஒட்டிய நீள கவுன், அதில் தொடைக்கு சற்றுக் கீழிருந்து ஆரம்பித்த வெட்டு அவளின் நீண்ட வடிவான கால்களை வெளிச்சம் போட்டுக் காட்டியது. காலில் குதி வைத்த சாண்டில்.
‘நீ செய்யும் வேலையை விட அவள் ஆபத்து, இங்கிருந்து போ’ மீண்டும் எச்சரித்தது மூளை.
கண்ணைத் திறந்தவனுக்கு முன்னே இருந்த கண்ணாடியில் மேலே போட்டிருந்த கோட்டைக் கழற்றி வைப்பது கண்ணில் பட ‘வி’ வடிவில் அகன்ற கழுத்து தோளை விட்டு இறங்கியிருக்க கழுத்தும் அதன் கீழும் பளிச்சென தெரிந்தது.
“ஒஹ்” என்றான் தொண்டைக் குரலில்.
முன்னே நின்ற பார் அட்டெண்டன் “டிட் யூ அஸ்க் சம்திங் சேர்” விசாரித்தான்.
“வன் மோர் ப்ளீஸ்” சிறு கண்ணாடி குடுவையை உயர்த்திக் காட்டியவன் பார்வை மீண்டும் அவள் விம்பத்தில் பாய்ந்தது. அவனை நோக்கித் தான் வந்து கொண்டிருந்தாள்.
அவன் மனமோ பத்து நாளைக்கு முன் சென்றது.
***
அன்று கோப்பைக் கையில் கொடுத்த ஃபிக்சர் அவன் முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு தெரிந்து பீனிக்ஸ் இந்த அசைன்ட்மெண்டை எடுக்க சந்தர்ப்பமேயில்லை. ஆனால் வேறொரு காரணத்துக்காய் எடுக்க வேண்டும் என்று விரும்பினார்.
முழுமையாக கோப்பை படித்து முடித்தவன் நிமிர்ந்து பார்த்தான். அவர் முகத்திலிருந்தே அவன் மனதைப் படித்தவனாய் “டென் சி, சிக்ஸ் மன்ந்ஸ்” என்றான்.
‘ஒகே டீல் தென்”
கடந்த பத்து நாட்களாய் அவளைத்தான் நிழல் போல் தொடந்து கொண்டிருந்தான். அவன் அசைன்ட்மென்ட்டை ஏற்றுக் கொண்டதில் நாயரின் ஆட்களை பின் வாங்க சொல்லியிருந்தான் ஹிப்னோஸ்.
இந்தப் பத்து நாளில் அவள் அதிகம் செய்தது, ஊரை சுற்றுவது, பீச் போவது, தங்கியிருக்கும் அப்பர்ட்மென்டின் கீழே இருக்கும் பார்க்குக்கு வந்து அங்கிருக்கும் குழந்தைகளுடன் விளையாடுவது, பெருசுகளை வம்புக்கு இழுப்பது, அருகேயுள்ள கஃபேயில் லப்பையும் தூக்கிக் கொண்டு காஃபி குடிக்க வருவது.
கடலலையோடு விளையாடிய பௌமி...
குழந்தைகளுடன் குழந்தையாக ஐஸ்க்ரீம் குடித்த பௌமி
பெஞ்சில் அமர்ந்து சண்டை போட்ட மனைவியை சமாதனபடுத்த முயன்ற வயதானவர் கையில் ரோஜாவை வைத்து சென்ற பௌமி
யாரும் பார்க்கவில்லை என்று நினைத்து ஜெர்மன் செப்பார்ட் நாயுடன் சம்மணமிட்டு அமர்ந்து சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட பௌமி,
இத்தனை காலம் இறுகிப் போயிருந்த அவன் மனதை இளக வைத்த பௌமி
அவன் நாள் முழுதும் பௌமியால் நிறைந்தது.
தலை கோதியவன் அப்படியே பிடரியை பிடித்துக் கொண்டு அண்ணாந்து வானம் பார்த்தான்.
இது என்ன உணர்வு என்றே அவனுக்கு புரியவில்லை. இத்தனை நாள் இறுகியிருந்த அவன் மனம் இலவம் பஞ்சாய் பறகின்றது. சிரிக்கவே தெரியாத அவன் இதழ்கள் அவளை எங்கு கண்டாலும் அனுமதியின்றி புன்னகையில் விரிகின்றது. அவன் கைபேசி சத்தம் போடவே எடுத்து காதுக்கு கொடுத்தான். கண்களோ உள்ளே சென்ற அவளையே பார்த்துக் கொண்டிருந்தது.
“நாளை ஒரு ஆர்ட் எச்சிபிசன்...” ஃபிக்சர்தான் எடுத்திருந்தார்.
***
“ஹாய்” உற்சகமாய் குரல் கேட்க சலனமின்றி திரும்பிப் பார்த்தான்.
“பிரஜன் ரைட்” கையை நீட்டினாள் “நான் பௌலோமி அலைஸ் பௌமி, அன்று சரியாய் அறிமுகப்படுத்த சந்தர்பம் கிடைக்கல”
“எஃக்ஸ்கியூஸ் மீ, பட் உங்களை எனக்குத் தெரியுமா?” சலனமின்றிக் கேட்டவன் கிளாசில் இருந்த திரவத்தை உறிஞ்சினான்.
“நிச்சயமா அன்று நீங்கள்தானே என்னைக் காப்பற்றியது. பத்து நாளைக்கு முதல் அந்த முட்டு சந்து”
“லுக் மிஸ்... இப்ப என்ன பெயர் சொன்னீர்கள்?” வேண்டுமென்றே யோசிப்பது போல் நடித்தவன் “அஹ் பௌலோமி அலைஸ் பௌமி, மே பி ஜஸ்ட் ஸ்மால் ஹெல்ப் ஆபத்தில் உதவி செய்திருப்பேன். இதையெல்லாமா ஞாபகம் வைத்திருப்பார்கள்?” அவளிடமிருந்து பார்வையை திருப்பி கையிலிருந்த கண்ணாடிக் குடுவையை பார்த்தவாறே கேட்டான்.
வேண்டுமென்றே நடிக்கிறான் என்பது புரிய பௌமிக்கு சட்டென முகம் விழுந்துவிட்டது.
“ஒஹ்” என்று திரும்பியவள் கண்களில் விழுந்தான் நாயர்.
‘இவனுக்கு மறக்காததை ஞாபகபடுத்துவதை விட வந்த வேலை முக்கியம்’ என எண்ணியவளாய் “ஸீ யூ” என்றவள் கூட்டத்திடையே நுழைந்து நாயரைப் பின்தொடர்ந்தாள்.
அந்த இடம் கொச்சினின் தொழிலதிபர்களால் நிரம்பியிருந்தது. ஆண் பெண் வயதானவர் இளைஞர் யுவதிகள் என பாதிபேராவது அந்த டிரஸ்ட்டை நம்பி உதவும் எண்ணத்துடன் வந்திருந்தனர். ஒரு புறமாய் வரைந்த சித்திரங்களை வைத்திருக்க, மறுபுறத்தில் இடத்தில் பஃபே உணவு முறை, பழசாறு என்றிருந்தது.
இன்னொரு இடத்தில் டிஜே பார் என்று களை கட்டியது.
நாயர் திறந்து சென்ற கதவின் முன்னே இரண்டு பேர் காவலுக்கு நிற்க உள்ளே செல்ல முடியவில்லை. அதற்கு அருகிலேயே விதவிதமான பழசாறுகளை கண்ணாடி தாங்கிகளில் பைப்புடன் வைத்திருந்தார்கள். பழசாறுகளை பார்ப்பது போல் அந்தக் கதவையே கவனித்துக் கொண்டிருந்தாள்.
“அந்த வூட்அப்பிள் நல்லா இருக்கும்” என்றான் அருகே பழசாறை பார்வையிட்டுக் கொண்டிருந்த அவன்.
ஆச்சரியமாய் பார்க்க “ஹாய் ஐம் சங்கர்” தன்னைத்தானே அறிமுகபப்டுத்தினான்.
“பௌலோமி” என்றவள் பார்வை மீண்டும் கதவு நோக்கி பாய “எனக்கும் சேம் டவுட்தான்” என்றான் அவன். எதுவும் பேசவில்லை, ஆனால் சற்று எச்சரிக்கையாய் நோக்கினாள்.
“பயப்பட வேண்டாம், சிபிஐ” தாழ்ந்த குரலில் கூறியவன் “நீங்க பௌலோமி சிவகுமார்தானே” அவள் அடையாளத்தை உறுதிப்படுத்தினான்.
அவள் யாரென்பதை எதிரிகள் நன்றாகவே அறிவார்கள். எனவே அடையாளத்தை மறைக்கக் பெரிதாய் முயற்சி எடுக்கவில்லை. ஆமோதிப்பாய் தலையை அசைத்து வைத்தாள்.
பாரின் முன் போட்டிருந்த ஸ்டூலில் இந்தப் பக்கம் திரும்பியிருந்து இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த பிரஜன் தடை இறுக கையிலிருந்த கிளாசை அப்படியே வாயில் கவிழ்த்தான்.
திரும்பி பார்க்கமால் அதை பின்புறமாய் எறிந்தவனுக்கு சற்று முன் தெரியாது என்று அனுப்பி வைத்தது எல்லாம் நினைவில் இல்லை. அந்த புதியவன் குனிந்து அவள் காதில் ஏதோ சொல்ல, இங்கே இவனுக்கு ஏகத்துக்கும் எகிறியது.
“இது சரி வராதுடா பிரஜன் என்ட்ரியை போடு” நிதானமாய் நடந்தவன் வழியில் வந்த பேரரின் தட்டிலிருந்த பழசாறு நிரம்பிய கிளாசை எடுத்தவாறே சென்றான்.
“அந்த மூன்றாவது வரிசையில் பத்தாவது கிளாஸ். ஐந்தாவது வரிசையில் பதின்மூன்றாவது கிளாஸ். ப்ரீயா இருக்கும் போது ட்ரை பண்ணுங்கள்” கண்களை சிமிட்டியவாறே தனக்கு ஒரு கிளாசை எடுத்துக் கொண்டான். கெட்டிக்காரன்தான் நாசூக்காய் தன் கைபேசி இலக்கத்தை சொல்லிவிட்டான்.
“இவர் எந்த ரவுடிகளிடமிருந்து காப்பற்றினார்” பௌமியின் தோளை சுற்றி கையைப் போட்டவன் சங்கரைப் பார்த்த பார்வையில் சங்கர் பஸ்பமாகமல் இருந்ததே அதிசயம். அவனின் ஆழ்ந்த கருநிறக் விழிகள் முன்னிருந்தவனை அளவிட நொடியில் இனங் கண்ட மூளை எச்சரித்தது ‘அவன் போலிஸ்’.
“அஹ் போலீஸ்” மிகமிக மென்மையான குரலில் சொன்னான். அந்தக் குரலின் தற்பாரியம் அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்.
“பிரஜன்” கண்களை விரித்தாள் பௌமி.
புதிதாய் இணைந்தவனை அழுத்தமாய் பார்த்தது சங்கரின் கண்கள் “சங்கர்” கைகளை நீட்டினான். ஒரு பார்வையில் தன்னை அடையாளம் கண்டவனை வியக்கமால் இருக்க முடியவில்லை.
“ஒஹ் நைஸ் டு மீட் யூ” வேண்டுமென்றே அழுத்தமாய் பிடித்து கை குலுக்கினான் பிரஜன்.
“ஸ்ட்ரோங் ஹா” சிறு கேலியாய் கேட்ட சங்கர் “இட்ஸ் வோண்டேர்புஃல் டு மீட் யூ மிஸ்டர் பிரஜன்” கிளாசை உயர்த்தி காட்டி விட்டு விலகி காதில் மாட்டியிருந்த ப்ளூடூத்தில் கேட்டான்.
“பீனிக்ஸ் எப்ப கொச்சின் வந்தான்?”