யாசகம் ♥ 43
மேலே நின்று அவர்களையே பார்த்து கொண்டிருந்த அச்சுதன் புருவத்தை உயர்த்தி போனில் ஆகாஷுக்கு அழைத்தான்.
ஆகாஷ் பதிலளிக்க முன்னர் அதை பறித்த சன்விதா “ஆகாஷிடம் ஒரு வேலை கொடுத்திருக்கின்றேன். அவன் இப்போ வர மாட்டான்” அவள் குரலில் அனலடிக்க ஒற்றை கண்ணை மூடி “அவுச்” என்றான்.
உள்ளே வந்தவள் கீழே இறங்கி வந்தவனை கணக்கே எடுக்காமல் அழகுபடுத்த வந்த பெண்ணிடம் சென்றுவிட்டாள். அவனோ அவள் கோபத்தை கணக்கெடுக்கமால் அவளை ரசிக்கும் பணியினை மட்டுமே மேற்கொண்டான்.
அழகு கலை நிபுணர் அவளை பார்த்துவிட்டு அவள் அளவுகளை குறித்து கொண்டவர், நகைகள் தலை அலங்காரத்திற்கு குறிப்பு எடுத்தார். கன்னத்தை தடவி பார்த்து “உங்கள் ஸ்கின் நன்றாகவே இருக்கு நாளைக்கு ஏர்லி மோர்னிங் ஓரு கிளீனிங் மட்டும் செய்திருவோம்” என்றார்.
“உங்கள் கல்யாண ஆடைகள்..... அதையும் பார்த்தால் நகைகளையும் ரெடி பண்ணலாம்” என்றவரை அச்சுதன் குரல் இடையிட்டது “அதை நான் பார்த்து கொள்கின்றேன், ரிசெப்ஷன்க்கு உள்ளதை மட்டும் பாருங்கள்”
“எஸ் சார்” என்று பணிவாகவே கூறியவள் “உங்கள் எங்கேஜ்மென்ட் அன்ட் ரிசெப்டின் ஆடைகள்...” என்று கைகாட்ட அந்த பக்கம் முழுவதும் லெஹெங்கா தொங்கவிடப்பட்டிருந்தது. குறைந்த விலையே ஐந்து லட்சத்தை தாண்டும் போல் இருந்தது. அவளோ எதை எடுக்க என்று தெரியாமல் விழித்தவள் திரும்பி அச்சுதனை பார்த்தாள். ஏனோ அவன் முகம் இறுக்கமாய் இருப்பது போல் தென்பட்டது. அன்று நகை கடையில் போன்று கோபமில்லை ஆனால் ஏதோ டென்ஷன்....
சோபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு போனை பார்த்து கொண்டிருந்தவன் உதட்டுக்குள் புன்னகைத்தான். அவளுக்கு உடை தேர்ந்தெடுப்பது எப்போதுமே அலர்ஜி. பொதுவாக மனாஸாவும் அம்மாவும் அவளுக்கு வேண்டியதை தெரிவு செய்து கொடுத்து விடுவார்கள்.
“வேறு ஏதாவது வேலை....” அவன் அழகு கலை நிபுணரை பார்த்து கேட்க “இல்லை சார் டிரஸ் செலக்ட் பண்ண அதுக்கு ஏற்றால் போல் நகையும் பைனல் செய்திரலாம்” பவ்யமாக பதிலளித்தார்.
“சரி இதையும் நானே பார்த்து கொள்கின்றேன். நீங்கள் போகலாம்” உத்தரவிட்டான்.
அவர் சென்றதும் அருகே வந்தவன் “சரியான சோம்பறி... டிரஸ் எடுக்கவுமா சோம்பல்” செல்லமாய் திட்டினான்.
அவளோ அந்த ஆடைகளையே கவலையுடன் பார்த்து கொண்டிருந்தாள் “என்ன” என்றவனிடம் “இல்ல இதெல்லாம் குறைந்தது ஒரு பத்து கிலோ இருக்கும் போலயே” அவள் முகத்தை பாவமாய் வைத்து கொண்டு சொன்ன விதத்தில் உள்ளே அரித்து கொண்டிருந்த உணர்வையும் மீறி பக்கென்று சிரித்துவிட்டான்.
அவன் சிரிப்பையும் மீறி அவன் கண்ணில் இருந்த கவனமும் சஞ்சலமும் தெளிவாக விழ “என்ன..” என்றாள்.
அவள் கண்ணை பார்ப்பதை தவிர்த்து தலைக்கு மேல் பார்த்தவன் விரல் நுனியால் அவள் கேசம் ஒதுக்கினான். கரகரத்த குரலை செருமி சரி செய்தவன் “உன்னிடம் சற்று பேசவேண்டும்” என்றான்.
“சொல்லுங்கள்” அவன் அலைப்புறுதலை உணர்ந்து ஆதரவாய் அவன் புஜத்தில் கை வைத்தாள்.
நீண்ட மூச்செடுத்து தன்னை நிதானித்தவன் “உன் முதல் காதலன் யார்?”
அவன் கேட்ட விதத்தில் இருந்த வித்தியாசம் சட்டென புரிந்தது. இத்தனை நாள் போல் குறும்பு விளையாட்டுதனமின்றி சீரியஸாக... தவிப்புடன் ‘என்னாச்சு’ தனக்குள் யோசித்தவள் அவனையே கூர்ந்து பார்த்து “ஏன் திடிரென்று...”
போக்கெட்டினுள் கைவிட்டு நின்றவன் மனமோ ‘இத்தனை நாள் கேட்டும் பதில் சொல்லல சிலவேளை அக்காவிற்காக தான் திருமணத்திற்கு சம்மதித்தாளோ... அருணிடம் வேறு இன்னும் கோபமாய் இருக்கின்றாள், அது... வேறு யாருமாய் இருந்தால்...’ அந்த நினைவிலேயே உடல் எஃகாய் இறுகி விறைக்க அவன் இறுக்கத்தையம் உடல் விறைப்பையும் குழப்பத்துடன் பார்த்தாள். இத்தனை நாளும் என் வாயால் கேட்க வேண்டும் என்றுதானே... இல்லை நான்தான் தவறாக நினைத்து விட்டேனா.
“நா நான் போயிறன்...”
சன்விதாவுக்கு இன்னும் குழப்பம் மேலோங்க “எங்கே ஏன்.. ஏதாவது அவசர வேலையா” உள்ளே சென்ற குரலில் கேட்டாள். நாளை இரவு எங்கேஜ்மென்டை வைத்து கொண்டு போகின்றேன் என்றால்.
“நீ....” அந்த வார்தைகளை உச்சரிக்கவே அவனுக்கு தொண்டையில் முள் சிக்கியது போல் வலித்தது “நீ காதலி... காதலிச்சவனையே” தொண்டை அடைத்து கொள்ள செறுமி சமாளித்தான் “க... க... கல்...கல்யாணம் செய்து கொள் நான்.... நான் போ...” அவன் வாயில் வார்தைகள் சிக்கி தவிக்க.... அவனோ சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்தான். இடது பக்க மார்பினை நீவி கொண்டான்.
அதுவரை இதழில் இருந்த புன்னகை விடைபெற அதிர்ந்து போய் பார்த்து கொண்டிருந்தாள் சன்விதா.
அச்சுதானா இது...
லேர்ன் டு லவ் மீ என்று மிரட்டியவனா இவன்...
முகத்தில் இத்தனை வேதனை....
விரிந்திருந்த கண்களில் குண்டு குண்டாய் கண்ணீர் வழிந்தது கூடவே கோபமும் வழிந்தது.
அதற்குள் ஆகாஷ் “அண்ணி...” என்றவாறு வர சட்டென திரும்பி கண்ணை துடைத்து “உங்களுக்கு அது யாரென்று தெரிய வேண்டுமில்லையா?” கேட்டவளை முகத்தில் அடி வாங்கியவன் போல் பார்த்தான். ‘இல்லை அப்படி எதுவுமில்லை’ என்ற பதிலை அவளிடமிருந்து எதிர்பார்த்த மனம் வலியில் சுருண்டுவிட்டிருந்தது.
“சரி சொல்கின்றேன் ஆனால் ஒரு நிபந்தனை”
‘என்ன’ என்பதை போல் பார்த்தான்.
“ஆகாஷ் சொல்வதை செய்யுங்கள்”
ஆகாஷோ இருவர் முகத்தையும் மாறி மாறி பார்த்தான். போகும் போது நல்லாதானே இருந்தார்கள் அதற்குள் என்னாச்சு. அச்சுதனோ மேற்கொண்டு எதுவும் பேசாமல் ஆகாஷை பார்க்க ஆகாஷ் தன்னுடன் அழைத்து வந்திருந்தவனை பார்த்து கண் காட்டினான். அச்சுதன் அவருடன் செல்ல தலையை தாங்கி கொண்டு சோபாவில் அமர்ந்துவிட்டாள்.
ஆகாஷ் திரும்பி வந்து பார்க்கும் வரை அப்படியே தான் இருந்தாள். “அண்ணி...” தயக்கத்துடன் அழைக்க ‘என்ன’ என்பது போல் நிமிர்ந்து பார்க்க ஆகாஷ் அழைத்து வந்த நபர் வாசலை தாண்டி சென்று கொண்டிருந்தார்.
வெற்றி என்பது போல் கட்டைவிரல் உயர்த்தி காட்டினான். புன்னகையுடன் தலையாட்டியவள் கொண்டு வந்த பாக்கிலிருந்து சில மருந்துகளை எடுத்து கொண்டு மேலே சென்றாள்.
ஷவரிலிருந்து வெளியே வந்த அச்சுதன் முகம் இன்னும் தெளிவில்லாமல் யோசனையில் ஆழ்ந்திருக்க கட்டிலில் அவனது த்ரீ பீஸ் கோட் சூட். ஜீன்ஷை மட்டும் போட்டவன் தலையை துவட்ட துவாயை எடுக்கவும் அறைக்கதவு தட்டுப்படவே போய் திறந்தான்.
அவன் ஈரத்துடன் நிற்பதை பார்த்ததும் “எப்ப பார்த்தாலும் ஈரமாகவே நிற்பது உடம்ப என்னத்துக்கு ஆகும்” கடிந்தவாறே கையில் இருந்த டவலை வாங்கி நெஞ்சில் இருந்த காயத்தின் மீது இருந்த ஈரத்தை வலிக்காமல் ஒத்தி எடுத்தாள். அவனோ குழப்பம் நிறைந்த முகத்துடன் அவளையே பார்த்திருந்தான். அவன் தலையில் இருந்து சொட்டிய நீர் அவள் கன்னத்தில் விழவே நிமிர்ந்து பார்த்தவள் “ம்பச்....” என்று கட்டிலில் அமர்த்தி தலையையும் துவட்டிவிட்டாள்.
அவன் அவள் கையை பிடித்து ஏதோ சொல்ல வர “எதுவாய் இருந்தாலும் ஒரு பத்து நிமிடம் பொறுங்கள்” என்றாள்.
கையோடு கொண்டு வந்திருந்த மருந்தை எடுத்து அவன் காயங்களுக்கு போட்டுவிட்டாள். அதிகளவில் அனைத்தும் காய்ந்து இருந்தாலும் சிலது கயர் படிந்து இருந்தது. அவற்றையும் துடைத்து போட வலியில் முகம் சுளித்தான். “ஒழுங்காய் மருந்து போட்டிருந்தால் இந்நேரம் காயம் ஆறியிருக்கும்” அவனை திட்டியாவாறே மருந்தை போட்டு முடித்தாள்.
அச்சுதனுக்கோ மண்டை காய்ந்து போனது.
ஒருவனை காதலிக்கிறேன் என்றாள்.
மணமுடிக்க கட்டாயபடுத்தினால் வீட்டில் உள்ள அனைத்து சாமான்களையும் போட்டு உடைத்தாள்.
பின் தன்னை பிரிய மனமின்றி தவித்தாள்.
அருணுடன் இன்னும் கோபமாக இருக்கின்றாள்.
இப்போதோ தன் காயத்தை பற்றி கவலை படுகிறாள்.
மருந்தை போட்டு முடித்து கடைசியாக கழுத்தடியில் பல் பதிந்திருந்த இடத்தை நுனி விரலால் தொட கண் மூடி அவள் கையை பிடித்து தடுத்து நிறுத்தி கட்டிலில் இருந்து எழுந்தான். ‘என்ன’ என்பது போல் பார்க்க “உன்னிடம் சற்று பேச வேண்டும்” என்றான்.
அவன் கேட்க போவது புரிய புன்னகையுடனே தலையாட்டினாள். “அதற்கு முன் நான் ஒன்றை சொல்லிவிடுகிறேன்” கூறியவளை முறைக்க கூட முடியவில்லை அவனால்.
“நான் ஒருத்தரை டெல்லியில் சந்தித்தேன். அதுக்கு ஒரு இரண்டு மாசம் கழிச்சு டெல்லியில் மீண்டும் பார்த்தேன். வாழ்ந்தால் அது அவரோடு தான் என்று இதயம் சொல்லிச்சு” சொல்லி நிமிர்ந்து அவனை பார்க்க அவன் உடலின் ஒவ்வொரு தசை நாரிலும் இறுக்கம் பரவுவதை உணர்ந்து அவன் கையை கட்டி கொண்டவள் “அவன் எப்படி எப்போது என் இதயத்தில் வந்தான் என்று தெரியாது ஆனால் அவனின்றி நானில்லை” அவள் சொல்ல சொல்ல உதறி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை தடுக்க முடியாமல் மூச்சு முட்டி போக ஜன்னலருகே சென்று கதவைத் திறந்தான்.
அவள் மனநிலையை தெளிவாக கூறுவது போல் காற்றில் தவழ்ந்தது அந்த கீதம்.
உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா கிருஷ்ணா.....
உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
நிதம் காண்கின்ற வான் கூட நிஜமல்ல
இதம் சேர்க்கும் கனாக் கூட சுகமல்ல
நீ இல்லாமல் நான் இல்லையே
உன்னை காணாமல் (4)
சில கணங்கள் கண் மூடி நின்று பாடலில் கரைந்தவள் “ அப்போ என்னால அவர் கூட பேச முடியல திரும்பவும் ஒரு ஆறு மாதம் கழித்து அவரை பார்த்தேன் ஆனால் எனக்குதான் அவரை அடையாளம் தெரியல ஏன்ன அன்று அவர் முகத்தை சரியா பார்க்க முடியல அதால அவரிடம் என் காதலை சொல்ல முடியல அவர் யாரென்று உங்களுக்கு தெரிய வேண்டாமா?” அருகே சென்று கேட்க வேண்டாம் என்று தலையசைத்தான்.
“ஆனால் நான் சொல்லியே ஆகவேண்டும் ஏனென்றால் உங்களை இது போல் இன்னொரு தரம் நான் பார்க்க கூடாதே” கையை பிடித்து தன்னோடு அழைத்து செல்ல கீ கொடுத்த பொம்மை போல நடந்தவன் என்னை விட்டுவிடேன் என்பது போல பார்த்தான்.
“நான் முதன் முதலாக பார்த்தது ஒரு விபத்தில்....” இதுவரை ஜீவனற்ற உடல் போல் நின்றிந்தவன் கண்களில் ஒளியெழ சட்டென திரும்பி அவளை பார்த்தான். அவன் கண்களை பார்த்தவாறே “இரண்டு மாதம் கழித்து கோவிலில் பார்த்தேன் அதை விட அவர் மேல் விழுந்தேன் என்று சொன்னால் சரியாக இருக்கும்” கண்ணில் மெல்லிய நீர் படலத்துடன் சிரிப்புடன் குருவியாய் தலை சாய்த்து சொன்னாள்.
அவள் புஜங்களை வலிக்க பிடித்த அச்சுதன் நம்ப முடியாமல் பார்க்க தலையாட்டி ஆமோதித்தாள். ஆர்வம் மேலிட அவள் கன்னத்தை பிடித்து கொண்டவன் சற்று தலையை சரித்து குழப்பத்துடன் பார்க்க “அன்று கோவிலில் அவர் முகம் பார்க்கவில்லை, ஆனால் அவர் என்னிடம் விட்டு சென்ற உணர்வு...” சில கணங்கள் அமைதியாய் கண்மூடி நின்றவள் மெதுவே கண் திறந்து அவன் கண்ணுடன் கண் கலந்தவள் “என்னோட முதலும் கடைசியுமான ஒரே ஒரு காதல் அவர் தான்” என்று கை காட்ட யாரை காட்டுகிறாள் என்று புருவம் நெரித்து திரும்பிப் பார்த்தான்.
முன்னே இருந்த கண்ணாடியில் அவன் பிம்பம். அவன் கன்னத்தை பிடித்து தன் புறம் திருப்பி கூறினாள் “ஐ லவ் யூ கேசவ் அத்தான்”
அவள் கன்னத்திலிருந்து கை எடுத்தவன் அவளிடமிருந்து விலகி அவளை பார்த்தவாறே அப்படியே பின்னோக்கி நடந்தான்.
மீதி பாடல் ஜன்னல் வழி கசிந்தது.
உடலணிந்த ஆடை போல்
எனை அணிந்து கொள்வாயா
இனி நீ இனி நீ கண்ணா
தூங்காத என் கண்ணின்
துயிலுரித்த கண்ணன் தான்
இனி நீ இனி நீ
இது நேராமலே நான்
உன்னை பாராமலே நான்
இந்த முழு ஜென்மம் போய் இருந்தால்
என்று அதை எண்ணி
வீண் ஏக்கம் ஏங்காமலே
உன்னை மூச்சாகி வாழ்வானேடா