யாசகம் ♥ 48
சாரி சொல்லி வெளியேறியவன் முதுகை பார்த்து ‘இவனை ‘ என்று பல்லை கடித்தாள். ‘சே இவன லவ் பண்ணாலும் பல்லு போகுது கல்யாணம் பண்ணாலும் பல்லு போகுது கண்ணா. அச்சம் மடம் நாணம் கத்தரிக்காய் வெங்காயம் எல்லாம் இருக்கிற ஒரு பொண்ணு இத விட வெளிப்படையா ஒரு எப்படி சொல்றது. பார்த்துட்டே இரு ஒருநாள் இல்ல ஒரு நாள் ரேப் பண்ணிடுறன்’ கண்ணனிடம் பொரிந்து தள்ளினாள்.
அவன் கண்களில் காதலும் ஆசையும் தெரிந்தாலும் ஏதோ காரணத்தினால் தள்ளி நிற்கின்றான் என்பது புரிந்தது. காரணம் லேசாய் புரிந்தாலும் மெல்லிய செல்ல கோபம் தான் வந்தது. சும்மா சுற்றி கொண்டிருந்த பெண்ணை மயக்கி கலியாணமும் செய்து விட்டு இப்போது அப்பாவி மாதிரி போனால் விட்டுவிடுவோமா? இன்று இவனை ஒரு வழி செய்திடுவோம். கண்ணா நீதான் ஹெல்ப் பண்ணனும்.
♥♥♥♥♥
எதோய் இதுக்குமா.... நான் கண்ணன்ம்மா.... அருகே இருந்த ருக்குவை அசடு வழிய பார்த்து வைத்தான் கண்ணன்.
♥♥♥♥♥
வெளியே வந்தவள் முகம் இயல்பாகவே இருக்க தூரத்தில் நின்று அவளையே பார்த்திருந்தான் அச்சுதன். பேச்சால் மானாசவை சிவக்க வைத்து குறும்பால் அனைவரையும் தலையில் கை வைக்க வைத்து அச்சுதனுடன் வீட்டிற்கு திரும்பினாள் சன்விதா.
காரில் வரும் போதே தாலியை கையில் வைத்து சுற்றி விளையடியவளை ஓர கண்ணால் பார்த்து கேட்டான் “வெளியே எங்காவது போவோமா?” அவ்வளவு இலகுவாய் இன்று தப்ப முடியதுடி என நினைத்தவள் “வேண்டாம் வீட்டிற்கு போவோம்” என்றாள்.
பிரஷ் ஆகி வந்து பார்க்க உடை மாற்றி நைட்டியுடன் கட்டிலில் படுத்திருந்த சன்வி மீண்டும் தாலியை பிடித்து விரல்களால் சுற்றி விளையாடியவாறே ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.
அவள் மனதை மாற்ற எண்ணி அருகே அமர்ந்தவன் “என்னடிம்மா..” என்றான். அவன் ‘டீ’ போடும் தருணங்கள் குறைவு. இடுப்பை கட்டிக் கொண்டு மடியில் தலை வைத்து படுத்தாள். கேசம் கோதியவன் கேட்டான் “உறங்கணுமா....”
நிமிர்ந்து அவனை பார்த்தவள் “இல்லை ஏனென்றே தெரியல ஃபுல் எனர்ஜியா இருக்கு” என்றாள்.
“நல்லதா போச்சு, எனக்கும் அது தான் வேணும்” என்றவன் பார்வையிலிருந்த மாற்றத்தை கவனிக்கவில்லை. “உனக்கு டயர்ட் இல்லை தானே” உறுதிப்படுத்தி கேட்க இல்லை என்று தலையசைத்து “தோட்டத்திற்கு போவோமா?”
“வா போகலாம்” கண்களை கட்டி கையில் ஏந்தினான். இரு கால்களையும் மேலும் கீழுமாய் ஆட்டியாவரே கேட்டாள் “உடை மாற்ற வேண்டாமா?”
“இதுவே அதிகம்தான்” வாய்க்குள் முனக “என்ன சொல்றீங்க” கண் கட்டியிருக்க முகத்தை அங்கும் இங்கும் திருப்பி கேட்டாள்.
“ஹ்ம்ம் ஒன்றுமில்லை வா” என்று தூக்கி சென்றான்.
அவன் ஒரு இடத்தில் இறக்கி விட மூக்கை உறிஞ்சியவள் “பூக்களின் கதம்ப வாசனை, மாடியில் ஏறியது போல் இருந்திச்சே இது தோட்டமா....” விசாரித்தாள். வானை நிமிர்ந்து பார்த்தவன் முழு நிலவு வெளிவரும் நேரம் கண் கட்டை அவிழ்க்க மெய் மறந்து நின்றாள் சன்விதா. பின்னிருந்து இடையை சுற்றி அணைத்தவன் கன்னத்தோடு கன்னம் வைத்து கிசுகிசுப்பாய் கேட்டான் “பிடிச்சிருக்கா”
அவர்கள் வீட்டு மொட்டை மாடியின் மேல் இருபது அடிக்கும் மேல் உயர்த்தி இன்னொரு மொட்டை மாடி போல் நாற்பது அடிக்கு நாற்பது அடி நீள அகல இடத்தில் தோட்டம் போல் அமைத்திருந்தான். ஒரு புறம் மல்லிகை முல்லை பந்தலின் கீழ் கண்ணாடி அறை, உள்ளே கட்டில், வெளியே வட்ட மேசை அதன் மேல் குடை சுற்றிலும் எல்லா வண்ணங்களிலும் ரோஜா பூத்து குலுங்கியது. ஒரு பூவே பல வர்ணம் இருந்த அபூர்வ வகை ரோஜாவும் இருந்தது. அங்கங்கே கம்பத்தின் நுனியில் வெள்ளை மின்குமிழ்கள் இன்னும் வேறு வேறு வாசனை மலர்கள்.....
பால் போன்ற நிலவின் ஒளியில் ஏதோ புது உலகிற்கு வந்த அனுபவத்தை கொடுக்க அவனிடமிருந்து பிரிந்து அங்கே இருந்த பூக்களை அருகே சென்று ஸ்பரிசித்தாள், துள்ளினாள், கையை விரித்து கொண்டு வானம் பார்த்து சுற்றினாள்.
அவனோ அவளையும் அவள் செயல்களையும் கைகட்டி ரசித்து கொண்டிருந்தான். அவள் அருகே செல்ல அவன் கன்னம் பற்றி இதழ்களில் இதழ் பொருத்தினாள். கணங்களில் இதழும் இதழும் தொட்டு பிரிய அன்று கோவிலில் தவணை முறையில் பாய்ந்த மின்சாரம் இன்று நேராக பாயவே பிரிய மறுத்து அவளை அப்படியே இடையோடு தூக்கி முத்தமிட்டவன் பெரு முயற்சி செய்து தன்னை கட்டுப்படுத்தி இறக்கிவிட்டான்.
நெற்றியோடு நெற்றி முட்டி கண் மூடி உதட்டை கடித்து அவளிடமிருந்து திரும்பி நிற்க சன்விதாவுக்கு புரிந்தது அவனாக ஒரு போதும் வரப் போவது இல்லை. ஆனால் ‘ ஏன்’ பதில் சொல்ல கூடியவனோ தன்னை கட்டுக்குள் கொண்டு வர கை முஷ்டியாக உடல் எஃகாய் இறுக நின்றான். அருகே சென்றவள் அவன் கையை பிடித்து இறுகியிறுந்த விரல்களை பிரித்து விட சட்டென கண் திறந்தவன் அவள் கண்களை நோக்கினான்.
அவனை பார்த்து ஆறுதலாய் புன்னகைக்க “ரோஸ்” கதறலாய் அழைத்து இறுக அணைத்து கொண்டான்.
இத்தனை நாள் அவனிடம் குழந்தையாய் இருந்தவள் தாயாய் மாறினாள். “ஷ்.... ஷ்ஷ்.... ஒகே... எல்லாம் சரியாகிரும் ஒகே” அவன் முதுகை தடவி கொடுத்தாள். மெல்ல அவனிடமிருந்து தன்னை பிரித்தவள் “கொஞ்சம் பேசுவோமே” கையை பிடித்து அழைத்து சென்று கீழே மாபில் தரையில் அமர போக தடுத்து நிறுத்தினான் அச்சுதன்.
என்னவென்று பார்க்க அருகே இருந்த சிறு காபேர்ட்டில் இருந்து கம்பளம் ஒன்றை கொடுக்க விரித்து அமர்ந்து அவனை பார்த்தாள். இதை தவிர்க்க தான் வேலை என்ற பெயரில் ஓடி ஒளிந்து கொண்டு இருந்தான். எத்தனை நாள் முடியும்.
சம்மணமிட்டு அமர்ந்தவள் உதட்டுகுள் ஒளித்த சிரிப்புடன் கையை பிடித்து இழுத்து அவனை அமர வைத்தாள். அந்த ஏகாந்த நந்தவனத்தில் பாலாய் பொழிந்த முழு நிலவின் ஒளியில் தேவதை போல் அருகே இருந்தவள் மீதிருந்து கண்ணை விலக்க முடியாமல் தவித்தான் அச்சுதன்.
அவள் திரும்பிப் பார்க்க தன்னை கொக்கி போட்டு இழுக்கும் அந்தக் கண்ணிடமிருந்து தப்பிக்க அவள் மடியில் தலை வைத்து வயிற்றில் முகம் புதைத்தான். கேசத்தை அவள் விரல்கள் கோதி கொடுக்க சிறிது நேரம் மௌனத்தில் கழிந்தது.
“நான் நெருங்கி வரும் போது நீ அருவெறுத்தால் அதை தாங்கும் சக்தி எனக்கில்லடி, செத்திரு....”
“உங்களை வெறுக்க என்னால் முடியாது”
இருவரும் ஒரே நேரத்தில் சொல்ல சட்டென எழுந்து அமர்ந்தான் அச்சுதன். அவள் கன்னத்தை பிடித்து தன் கண்ணை பார்க்க செய்தவன் “இப்ப நீ..... சொன்னது.... உண்மை....” அத்தனை பேரையும் ஒரு பார்வையில் கட்டியாளும் AK தன்னிடம் தடுமாற சகிக்க முடியவில்லை அவளால்.
“என்றாவது நீங்கள் அருகில் வரும் போது அறுவெருத்து பார்த்திருக்கிறீர்களா?” அவன் கன்னம் பற்றி கேட்க அவள் கோபப்பட்டு இருக்கின்றாள். கூச்சத்தில் ஒதுங்கி இருக்கின்றாள். அருவெறுப்பு ஒரு போதும் இல்லை. அத்தனை ஆளுமையானவன் சிறு குழந்தையாய் இல்லை என்று தலையாட்ட கேசத்தை கோதினாள். காதலில் மட்டுமே இது சாத்தியம்.
“என்னில் தான் தவறு” என்றவளை வியப்புடன் பார்த்தான் அச்சுதன். தன்னை சமாளிக்க ஏதாவது சொல்கின்றாளா.
“இல்லை அம்மா சொல்லுவாங்க நீ கண்ணனை கும்பிட்ட கண்ணன் மாதிரி தான் கணவன் வருவான் ராமான் மாதிரி இல்லை என்று சரியாத்தான் இருக்கு” என்றவள் நெற்றியோடு நெற்றி முட்டினான்.
♥♥♥♥♥
“இது நல்லாவா இருக்கு. இவள் அந்த போக்கிரி பையனை லவ் பண்ணிட்டு என் மீது பழியை போடுகிறாள். இது என்ன நியாயம்” கண்ணன் காய்ந்தான்.
♥♥♥♥♥
“உண்மையிலேயே உனக்கு... பல பெண்களுடன்.... அறுவெறுப்பு.... எச்சி.... இல்லையே” கேட்கும் போதே தொண்டையில் முள் குத்தியது போல் இருந்தது.
அவளோ புன்னகையுடன் கண்டித்தாள் “என்ன பேச்சு இது, இப்போது விதவை திருமணம், மறுமணம் எல்லாம் நடக்கின்றது அப்படியானால் அதை எப்படி எடுத்து கொள்வது” ஒரு கணம் இடைவெளி விட்டு “நீங்கள் செய்தது சரி என்று கூறவில்லை, உங்கள் சூழ்நிலைக்கு அது ஒரு வடிகாலாக இருந்துவிட்டது. அதனால் அதை விட்டுவிடலாம். அதோடு கற்பு என்பது உடலுக்கு மட்டுமில்லை மனதிற்கும் தான். அந்த விதத்தில் நீங்கள் கொஞ்சமே கொஞ்சம் நல்லவர் தான். அதனால் மன்னித்து விடுகின்றேன்” என்றாள்.
தனக்காக தன்னிடமே வக்காலத்து வாங்கும் அவளை, பேச்சின்றி அவள் உள்ளங்கையில் இதழை புதைத்து பார்த்திருந்தான்.
தழும்புகள் இருந்த அவன் நெஞ்சை தடவி விட்டவள் கவலை நிறைந்த கண்ணுடன் “எனக்கு ஒரே ஒரு கவலைதான்...” என்று இழுத்தாள். ‘என்ன’ என்பது போல் பார்க்க இல்லை “அப்போதே உங்களை சந்தித்திருந்தால் உங்களுக்கு இந்த துன்பம் எதுவும் நேர விட்டிருக்க மாட்டேன் இல்லையா?” என்றவளுக்கு பதிலாய் இறுக அணைத்து கொண்டான்.
அவள் அசையவே அவளை விட்டவன் “என்ன?” என்றான்.
“இல்லை இப்படி ஒரு பிரச்சனை இருந்தது என்பதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை”
“எப்படி...”
“இந்த போதை மருந்து அதன் காரணமாக....”
“அது... அ..... அது பயம்”
“யாருக்கு உங்களுக்கு” கேலியாக கேட்டாள்.
தலையாட்டி ஆமோதித்தவன் “ஏற்கனவே பெண்கள் பழக்கம் என்ற முத்திரை. இதில் போதை பழக்கமும் சேர்ந்தது என்றாள் திரும்பி கூட பார்க்க மாட்டியோ என்ற பயம்.” என்றான். அவன் கண்களைப் பார்க்க உண்மையை தான் சொல்கிறான் என்றது.
இவனின் அத்தனை காதலும் நேசமும் கெஞ்சலும் கொஞ்சலும் தயக்கமும் பயமும் கண்ணீரும் ஏன் கோபமும் தனக்கு மட்டுமே இவன் தடுமாறுவன் என்பது கூட யாருக்கும் தெரியாது அதுவும் என்னிடம் மட்டுமே மனதினுள் கொஞ்சி கொண்டாள்.
“என்னடி பார்வையெல்லாம் பலமா இருக்கு” அவள் மையல் பார்வையில் தத்தளித்து “அப்புறம் என்னை குறை கூறதே” என்றான்.
“க்கும்....” கழுத்தை வெட்டி நொடித்தவள் “சும்மா நானும் ரவுடி தான் என்று டூப் விட்டுட்டு” அவனுக்கு கேட்கும்படியே முணுமுணுத்தாள்.
“வேணாம் நீ தாங்க மாட்ட”
“அதான் பார்த்தேனே ஒரு மாசமா உங்கள் வாய் பேச்சு வெட்டி வீரத்தை” மறுபுறம் திரும்பி சிரிப்பை அடக்கினாள். அவளை கண்டு கொண்டவன் இன்னும் நெருங்கி அமர்ந்து மெல்லிடையை இறுக பற்றியவன் “அதற்கு நீ இத்தனை கஷ்டப்பட வேண்டாம். ஒரே ஒரு வார்தை போதும்” என்றான்.
‘என்ன’ என்பது போல் கடைக்கண்ணால் பார்த்தவளுக்கு பதிலாய் அவள் பக்கவாட்டு நெற்றியில் நெற்றி முட்டி “அத்தான்” என்றான்.
திரும்பி வேட்கையில் நிறம் மாறியிருந்த செங்கபில நிற கண் பாவை பார்த்தவள் “ம்கூம்” கன்னம் சிவக்க தலையாட்டினாள்.
நாசியால் கன்னம் தீண்டியவன் குரல் கொஞ்சி கெஞ்சியது “பிளீஸ் சொல்லடி”
“ம்கூம்...” வெட்கத்துடன் மறுத்தாள்.
“சரி அப்படியானால் நான் போகின்றேன்” எழுவது போல் நடிக்க அவன் கையை பிடித்து தடுத்து வேகமாக அழைத்தாள் “அத்தான்...”
“ஹே....” வேகத்தில் அவளை கண்டு கொண்டு லேசாய் கூச்சலிட்டான்.
சட்டென நாக்கை கடித்து அவன் மார்பிலேயே முகத்தை மறைக்க குனிந்து “கள்ளி.....” என்று எதையோ அந்தரங்கமாய் அவள் காது கூச கூற உடல் முழுவதும் சிவந்தாள் சன்விதா. அவன் உள்ளங்கையின் கீழ் அவள் சருமம் கூசி சிலிர்க்க அதற்கு மேல் தாங்காது என்பது போல் அவளை கைகளில் அள்ளி கொண்டு கண்ணாடி அறையை நோக்கி நடந்தான் அச்சுதன்.
பூ போல மொத்தையில் கிடத்தி தானும் சரிந்தவன் போனில் தட்டிவிட அனைத்து மின் விளக்குகளும் அனைந்தது. நெற்றியோடு நெற்றி வைக்க அவன் கைகளில் அவள் உடல் கூசி சிலிர்த்தாலும் அவளிடமிருந்த தயக்கம் உணர்ந்து மயக்கத்துடன் கிறங்கி போய் கேட்டான் “என்னடி”.
“யா.. யாரவது...” காற்று தான் வந்தது.
அவளின் தயக்கத்தின் காரணம் உணர்ந்து “இங்கே வருவதானால் நாமிருக்கும் அறை வழியாக தான் வர வேண்டும் அதைத்தான் பூட்டிவிட்டேனே” என்றான்.
கண்ணில் மையலுடன் நோக்கி “ஜித்தன்...” என்றவளை மேற் கொண்டு பேச அவன் அனுமதிக்கவில்லை.
♥♥♥♥♥
நேரம் நடுசமாத்தை நெருங்கி கொண்டிருக்க உச்சியை நெருங்கியிருந்த பாலாய் ஊற்றிய பௌர்ணமி நிலவு அச்சுதன் வீட்டு மொட்டை மாடி கண்ணாடி அறைகுள்ளும் வஞ்சனையின்றி தெறித்திருந்தது.
உள்ளே போட்டிருந்த அந்த பெரிய கட்டிலில் முதுகு சாய்த்து அமர்ந்திருந்த அச்சுதன் தன் அருகே கம்பளி போர்வையால் உடலை சுற்றியபடி களைத்து போய் உறங்கும் மனைவியையே அந்த நிலவின் வெளிச்சத்தில் பார்த்திருந்தான். அவள் கேசத்தை கோதி கொடுக்க ஆழ்ந்த உறக்கத்திலும் அவன் தொடுகையை உணர்ந்து அவன் மடியில் தலை வைத்து படுத்தவள் சற்று முன்தான் ஷவரிலிருந்து வந்திருந்த அவன் கேசத்திலிருந்து சொட்டிய நீர் அவள் முகத்தில் விழ உறக்கத்தில் சிணுங்கினாள்.
“அத்தான்.... தண்ணி தெளிக்காதீங்க” மடியில் முகம் புரட்டியவள் எதிர்பார்த்த அவன் மார்பை காணாமல் பாதி கண் திறந்து பார்க்க, அச்சுதன் சிறு சிரிப்புடன் கை நீட்டி அழைத்தான் “மேலே வா” சட்டென மேலே சென்று மார்பில் மஞ்சம் கொண்டவள் விட்ட உறக்கத்தை தொடர்ந்தாள்.
குனிந்து பார்த்தவன் செல்லமாய் திட்டினான் “சரியான கும்பகர்ணி” நேரத்தை பார்க்க பன்னிரண்டுக்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. போனை எடுத்து சிறு குழந்தைகளின் அட்டகாசங்களை சிறு சிறு வீடியோவாக போட்டிருந்ததை பார்த்து கொண்டிருக்க ஒரு இரட்டையரின் குறும்பில் அவள் உடலும் சிரிப்பில் குலுங்க “தூங்கவில்லை” குனிந்து பார்த்தான். சோம்பலாய் தலையசைத்தாள்.
“எனக்கும் இரட்டையர் வேணும்” ரகசியமாய் அவன் மார்புக்குள் சொல்ல புருவம் உயர்த்திக் கேட்டான் “அது என்ன இரட்டையர்”
“ரெம்ப கியூட் இல்ல” அவள் வீடியோவை பார்த்துக் கூற உச்சியில் இதழ் பதித்து “போய் குளித்து வா” என்றான்.
“இப்போவா.... ம்கூம்...” செல்லமாய் மறுத்தாள்.
“ப்ளீஸ்...” அவன் ப்ளீஸில் நிமிர்ந்து கண் பார்த்தவள் மூக்கை சுருக்க போனவள் இடையில் நிறுத்தி “சரி” என்றாள். மூக்கை சுருக்கினாலே அவள் இதழ்கள் அவனிடம் சிறைப்பட்டு விடும். எதுக்கு வீண் வம்பு. அவனோ அவளை கண்டு கொண்டு மூக்கு நுனியில் சுண்டி சென்றான்.