உன்னை நான் யாசிக்கி...
 
Share:
Notifications
Clear all

உன்னை நான் யாசிக்கின்றேன்

Posts: 61
Admin
Topic starter
(@admin)
Member
Joined: 3 months ago

hi

Reply
Posts: 61
Admin
Topic starter
(@admin)
Member
Joined: 3 months ago

யாசகம் ♥ 27

ருக்கு அருகே அமர்ந்திருந்த கண்ணன் தன் வேலை சிறப்பாக முடிந்த சந்தோசத்தில் அவளை கை உயர்த்தி ஆசீர்வதித்தான்.     

♥♥♥♥♥

“அச்சுதன்...”

தன் உடலை கூட தானே பார்க்க முடியாத இருண்ட பாதை ஒன்றில் திசை தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான். அவன் ரோஸ், சன்வி அழைத்தும் அவனால் அங்கு செல்ல முடியவில்லை. கனகாந்திர இருளில் மூழ்கியது போல் இருந்தது. சுற்றும் இருள் இருள் இருள் மட்டுமே. தனது உடலை கூட தானே காண முடியாத இருள். 

வாய் திறந்து அவளை அழைக்க முயன்றால் முடியவில்லை இருளின் தூரத்தில் அவள் அழைக்கும் குரல் மட்டும் கேட்டது. சற்று நேரத்தில் அதுவும் நின்று விட தலை சுற்றி போனான். எந்த ஜாம்பவானாலும் தவிர்க்க முடியாத ஒரு நிலையில் சிக்கி எப்படி வெளிவருவது என்று தெரியாமல் தவித்தான். 

♥♥♥♥♥

அங்கே மருத்துவமனையில் அமைதியாக கண் மூடியிருந்த அச்சுதன் இதயத்துடிப்பு தாறுமாறாக ஏறி இறங்க மருத்துவர்கள் தங்களால் முடிந்ததை முயற்சிக்க தொடங்கினார்கள். 

அருண் மானஸாவுக்கு போன் எடுத்து “சன்வியை பேசச் சொல் அவசரம்...” என்றான். அவன் குரலில் தென்பட்ட அவசரத்தில் வெளியே வந்த மானசா தியானத்தில் இருந்த சன்வியை பார்த்துவிட்டு கூறினாள் “இப்போ அவளுடன் பேச முடியாது. தியானத்தில் இருக்கின்றாள்”

“தியானமா, இங்கே அச்சுதன் எமெர்ஜென்ஸி அவள் குரலாவது கேட்க வேண்டும்”

கையலதனத்துடன் சன்வியை பார்த்தவள் “இல்ல அருண் அவள் எப்போதாவது தான் இப்படி தியானத்தில் இருப்பாள் அந்த நேரம் அவளாக எழுந்தாள் தான் உண்டு யாராலும் எழுப்ப முடியாது “  

இங்கே தியானத்தில் இருந்த சன்விதா மெதுவே முணுமுணுத்தாள் “கேசவ்.....”

♥♥♥♥♥

“கேசவ்.....” ஆழ்ந்த இருட்டில் அழைத்தது அந்த குரல்.

சுற்றும் முற்றும் பார்த்தான். குரலின் அடையாளம் தெரியவில்லை, இடம் எது வலம் எது என்று கூட தெரியவில்லை அவனுக்கு.  “கேசவ்” மீண்டும் அழைத்தது இந்த முறை எங்கிருந்தோ வந்த ஒளியில் அவன் உடல் அவனுக்கு தெரிய தொடங்கியது. 

சுற்றிலும் பார்க்க இருட்டாகவே இருந்தது எங்கிருக்கின்றான் என்று தெரியவில்லை. 

“கேசவ்....” மீண்டும் அதே குரல் ஆனால் இந்த தடவை குரலை இனம் கண்டு கொண்டான். “சன்வி, ரோஸ், சன்விதா....” 

“ஹ்ம்ம் நானேதான் இங்கே” இப்போது ஒலியுடன் ஒளியும் வந்தது. திரும்பி பார்க்க எதிரே தென்பட்டாள் சன்விதா. நெற்றியில் சிறு பொட்டு, கீழே சந்தன கீற்று, தலைமுடி விரிந்து அலைபாய, அழகாய் வெள்ளை நிற உடையில் இருளுக்கு மத்தியில் ஒளி தரும் தேவதையாய் நின்றாள். 

அருகே வந்தவள் மணிக்கட்டை பிடித்துக் கொண்டாள் “இங்கேயே ஏன் நிற்கிறீங்க என்னுடன் வாருங்கள்...”

அசையாது நின்றவன் “நீ எப்படி இங்கே வந்தாய்? என்ன இடம் இது? ஏன் இவ்வளவு இருட்டு?” சுற்றி பார்த்தவாறு கேட்டான். 

“எனக்கும் தெரியலயே, ஆனால் அங்கே கண்ணன் சிலையை பார்த்தேன், அருகே விளக்கு எரிந்து கொண்டிருருந்தது. அதோ வெளிச்சம்” கைகாட்டினாள். 

கை காட்டிய திசையில் ஜோதியாய் வெளிச்சம் தெரிந்தது. கையை பிடித்து இழுக்க அசையாமல் நின்றான் அச்சுதன் “நான் எதுக்கு வரனும்”

“இங்கேயாவா இருக்க போறீங்க? இங்கே அதிக நேரம் தாமதிப்பது நல்லதல்ல, செல்வோம்” 

அருகே வந்தவன் புறங்கையால் கன்னம் வருடி மென்மையாக கேட்டான் “பிடிச்சிருக்கா.... பிடிச்சிருந்தால் வாறேன் இல்லாட்டி இப்படியே போறேன்”

அழகாய் தலைசாய்த்து புன்னகைத்தாள்.

தீடிரென திரும்பி வெளிச்சத்தை நோக்கி ஓடி ஜோதியில் ஐக்கியமாக, அவள் பின்னே துரத்தி சென்றான் அவன். 

♥♥♥♥♥

“சன்விதா.....”

மருத்துவர்கள் கோமாவுக்கு சென்றுவிட்டான் என முடிவெடுத்த நேரம் கண் திறந்தவன் அதே வேகத்தில் படுக்கையை விட்டு எழுந்தான். 

அருண், அவ்வளவு நேரம் மீட்க போராடிய மருத்துவர்கள், தாதிமார் என அனைவரும் ஆனந்த அதிர்ச்சியுடன் பார்த்து இருக்க அருகே சென்ற அருண் அவன் கையை பிடித்து முத்தமிட்டு நெற்றியில் வைத்து “தங் காட்” என்றான். 

“சன்வி எங்கே” புருவ நெறிப்புடன் அருணை கேட்க “அவள் இங்கு இல்லை. சென்னையில்.... போனில் தான் பேசினாள்” என்றான் அவன். 

“இல்லையே... என்னை அவள் தானே அழைத்து வந்தாள்... ஒரே இருட்டாக... வெளிச்சத்திலிருந்து...” தலையை பிடித்து கொண்டான். 

“டூ சம்திங்...” அருண் பதற்றத்துடன் மருத்துவர்களை பார்க்க, அதிர்ச்சியிலிருந்து தெளிந்து தங்கள் வேலையை பார்க்க தொடங்கினார்கள். 

♥♥♥♥♥

 இளங்காலை சூரியன் சற்று சூடாகவே வீட்டினுள் விழ, சன்விதா இன்னமும் பூஜையறையில் தியானத்தில் இருந்தாள். 

“கண்ணா....” சன்விதா சிறு குரலில் அழைக்கவே அவளை அடிக்கடி கவனித்துக் கொண்டே இருந்த மானசா அருகே வந்தாள். 

“அக்கா ஜிஜு எங்கே... பேச வேண்டும்” பதறி போய் கேட்டாள். 

“கொஞ்சம் பொறு எடுப்போம்” சொல்லி முடிக்கவில்லை அவள் போன் அலறியது. எடுத்து ஹலோ சொல்வதற்குள் பறித்தவள் “ஹலோ ஜிஜு அவருக்கு எப்படி இருக்கு” பதட்டத்துடன் கேட்டாள். 

அவன் பதில் சொல்வதற்குள் “அவர் இருட்டில் இருந்தார் நான் வெளிச்சத்திற்கு ஓடி வந்திட்டேன்” மானசா குழப்பமாகா பார்க்க அருண் அதிர்ந்து நின்றான். சற்று முன் கோர்வையின்றி அச்சுதன் கூறிய அதே வார்தைகள். 

“ஷ்ஷ்.... ஒன்றுமில்லடா அவன் நினைவு திரும்பிட்டு டாக்டர் ஒரு பயமும் இல்லை என்று சொல்லிட்டாங்க சரியா, ஹி இஸ் ஆல்ரைட், செக்கிங் முடிஞ்சதும் உனக்கு எடுக்க சொல்றன் சரியா?” 

அவ்வளவு நேரமிருந்த பயம் பதட்டம் அனைத்தும் அப்படியே வடிய அக்காவின் மடியில் மயங்கி சரிந்தாள்.  மடியில் மயங்கியவளை முறைத்தவள் “நீ அச்சுதனை காதலிக்கல இல்ல இப்படியே அறிக்கை விட்டுட்டு திரி” எரிச்சலுடன் முணுமுணுத்தாள். 

“நீங்கள் இருவரும் சாப்பிட வர போறீங்களா இல்லையா..” கேட்டவாறே பூஜையறைக்கு வந்த பத்மாவதி பதறி போனார். “என்னாச்சும்மா, ஏன் மயங்கிட்டாள்... “

“சொல்றன்மா, முதல்ல இவளை படுக்க வைக்க ஹெல்ப் பண்ணுங்க” 

படுக்கையில் படுக்க வைத்துவிட்டு மருத்துவருக்கு அழைத்தார் பத்மாவதி. அவர் பத்து நிமிடத்தில் வருவதாக கூறுவதை கேட்டுக் கொண்டிருந்த மானசா “அம்மா.... நான் நினைக்கிறன் இவள் அந்த அச்சுத கேசவனை லவ் பண்ணுறாள் என்று” 

“நான் நேற்று கூட கேட்டேனே இல்லை என்றாளே... “

“நீங்க வேறம்மா... அது அவளுக்கே இன்னும் புரியல, நேற்று அச்சுதனுக்கு ஒரு விபத்து அருணுக்கு தெரிவதற்கு முன்னே இவள் வந்து கேட்கிறாள். நேற்று இரவு முழுதும் உறக்கமில்லை, இவளை என்ன செய்ய” தலையில் அடித்து கொண்டாள். 

மக்களின் தலையை வருடிய பத்மாவதி “இல்லம்மா இதில் நீ தலையிடாதே இந்த விஷயத்தில் அவளாகவே தான் தெளிவு பெறணும், எனக்கு அவள் சந்தோசமாய் இருந்தால் போதும், அந்த அச்சுதனை அவளுக்கு பிடித்திருந்தால் அவனையே கட்டி வைக்கலாம் ஒரு பிரச்சனையும் இல்லை” ஆதூரமாக் கூறினார். 

“அம்மா அவரின் பெண் பழக்கம்....” தயங்கியவாறே கேட்டாள் மானசா. 

“அது கொஞ்சம் நெருடல் தனம்மா... இப்போது அந்த பழக்கம் இல்லை. ஆனால் அது பற்றி வேறு காரணமும் இருக்கு... நானும் அப்பாவும் விசாரித்தோம். பார்ப்போம் பத்து வருடம் வாழ்ந்துட்டு விட்டுட்டு போறவங்களும் இருக்கிற உலகம் தானே இது” சற்று நேரம் மௌனமாய் மகளின் முகம் நோக்கியவர் உறுதியாய் கூறினார் “எனக்கு சன்விதாவின் விருப்பமே முக்கியம் வேறு எதுவும் இல்லை, ஆனால் அவள் காதலை உறுதியாய் உணர வேண்டும். அதற்கு முன் என் சம்மதம் கிடைக்காது” 

சில நொடிகள் மௌனத்தில் கழிந்தது. 

“அப்புறம் உன்னை மாதவன் மிரட்டியதை பற்றி எப்போது எங்களிடம் சொல்வதாக உத்தேசம்” புன்னகையுடன் கேட்டார்.

அதிர்ந்து போய் கேட்டாள் மானசா “சன்வி சொல்லிட்டாளா?”

“கெட்டிக்காரி கண்டு பிடிச்சிட்டாள்... ஆனா அவள் சொல்லல, நீ என்ன நினைத்துக் கொண்டிருக்குக்கின்றாய்? உன் அம்மா அப்பா மக்கு மண்ணாந்தை என்றா?” பேச்சின்றி தலை குனிந்தாள் மானசா. “ஏன் நிச்சயத்தை ஆறு மாதம் தள்ளி போட்டோம்? வெறும் பணப் பிரச்சனைக்காகவா?” சற்று கடுமையாகவே கேட்டார் பத்மாவதி. 

“மன்னிச்சிருங்க அம்மா....” தாழ்ந்த குரலில் மன்னிப்பு வேண்டினாள். 

“உங்களிடம் நண்பர்களை போல் தானே அப்பாவும் நானும் பழகினோம். பின் ஏன் சொல்லவில்லை” அதில் சொல்லவில்லை என்ற வருத்தமே மேலோங்கியிருந்தது. 

சட்டென அம்மாவின் கைகளை பிடித்து கொண்டாள் “அப்படி இல்லமா நான் எப்படி சரி செய்யலாம் என்று யோசித்து கொண்டிருந்தேன். பிறகு அருண் தான் பார்த்து கொள்வதாக சொன்னார் அதான் உங்களிடம் சமயம் பார்த்து சொல்லி கொள்ளலாம் என்று....” சிறிது தயங்கியவள் தைரியத்தை கூட்டி “அம்மா அருண்... நான்.. நானும் அருணும்...” வார்தைகளை கோர்க்க முடியமால் தடுமாறினாள். 

மகளின் தடுமாற்றம் பார்த்தது சிரித்த பத்மாவதி “சரி சரி அவரை வந்து பேச சொல்லு அதற்கு முதல் யார் என்ன என்ற விபரம் வேண்டுமே” என்றார். 

“அருண் திலீபன்... அவருக்கு தனியாக கம்பெனி இருக்கு ஆனா AK இண்டஸ்ட்ரீஸ்ல தான் வேலை செய்கின்றார்” 

நெற்றியை சுருக்கி யோசித்த பத்மாவதி கேட்டார் “அவரை இன்றே சந்திக்கலாமா...?”

“இல்லம்மா... இன்று அவர் மதுரையில் அச்சுதனோடு இருக்கின்றார்” அவசரமாக அவருக்கு எதிர்புறமாக திரும்பி அமர்ந்து கடைக் கண்ணால் பார்த்தாள். 

“அச்சுதனின் நண்பர் அருணா? அவர் திருமணத்திற்கு சம்மத்தித்து விட்டாரா? ஆச்சரியம்தான்” என்றவர் அவளின் செயலை பார்த்து செல்லமாய் தலையில்  குட்டியவர் “சரி சரி அவர் வந்ததும் வந்து பேச சொல், முதல்ல வந்து சாப்பிடு” என்றவர் வெளியே அழைப்பு மணி கேட்க மருத்துவரை உள்ளே அழைத்து வர சென்றார்.

‘அருண் திருமணத்திற்கு சம்மதித்தில் இன்னும் எத்தனை பேருக்குதான் ஆச்சரியம்’ என்று ஒடிய யோசனையை மருத்துவரின் வருகை கலைத்தது. 

சன்விதாவை பரிசோதித்த மருத்துவர் “வெறும் மன அழுத்தம் தான் காரணம் நன்றாக உறங்கி எழுந்ததும் சாப்பாடு கொடுங்கள் பயப்பட ஏதுமில்லை” எனக் கூறி செல்லவே அவளை பெட்ஷீட்டால் போர்த்து மின் விசிறியை சுழல விட்டு வெளியே சென்றாள் மானசா.  

மணி பின்னேரம் ஐந்தை தாண்டியும் எழும்பாத சன்விதாவை இடுப்பில் கை வைத்து முறைத்தது பார்த்தாள் மானசா. மயக்கத்திலிருந்து எப்போதோ எழும்பிவிட்டாள்.

இரண்டு தரம் “சாப்பிட்டு படு” என்று எழுப்பியவர்களிடம் “கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்” என்று கெஞ்சியே இவ்வளவு நேரம் உறங்கிவிட்டாள். 

ஏனோ அவனுக்கு நன்றாகிவிட்டது போல் உணர்ந்த கணம் பழைய வேதாளமாகிவிட்டாள்

அவளது தொலைபேசி அழைக்க மானசா எச்சரித்தாள் “இப்ப நீ பேசாட்டி அச்சுதன் நேரே இங்கேயே வந்துவிடுவார்”

படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தவள் உதடு பிதுக்கி செல்ல கோபத்துடன் சொன்னாள் “அப்படியாவது வரட்டும்”

“சரி சரி எடுத்து பேசு கிட்டத்தட்ட இரண்டு மணித்தியாலமாக வைட்டிங்” சிரித்தவாறே சொன்னவள் அறையை விட்டு வெளியே சென்றாள். 

காதில் வைத்தது “ஹலோ” என்றாள். 

“என்னடி” தொலைபேசி வழியாக அவனின் குரல் காதில் கிசுகிசுத்தது. 

போனை வைத்துக் கொண்டிருந்த கையை மறு கையால் இறுக பிடித்தவள் “அத்.. அச்சுதன்...” என்றவளின் கண்ணில் கோடாய் வழிந்தது கண்ணீர். “எங்கே போயிருந்தீர்கள்?” தன்னை மீறிக் கேட்டுவிட்டாள்.

அத்தான் என்று அழைக்க வந்து அச்சுதன் என்று மாற்றிவிட்டாள் கள்ளி அதை உணர்ந்து  கொண்ட அச்சுதன் “ஏன் என்னை மிஸ் பண்ணுறியா?” வலியையம் மீறி சிரித்தது அவன் குரல். 

கண்ணீரை புறங்கையால் துடைத்தவள் “மிஸ் பண்ணுறதா நானா...? உங்களையா? இல்லையே இல்லவே இல்லையே” அவசரமாக மறுத்தாள். 

“ம்ஹும்...” அந்த குரலே கூறியது துளியும் நம்பவில்லை என்பதை. 

அதற்குள் அருணின் போன் மெசேஜ் தொனி வர எடுத்து பார்த்த அருண் சைகை செய்தான் ‘அவள் இன்னும் சாப்பிட குளிக்கவில்லை ஒரு நாள் முழுவதும்’ அருணிடம் தலையசைத்தவன் கேட்டான் “சாப்பிட்டியா...” 

“ஓ.... நல்laa மூன்று நேரம்” சத்தமாகவே கூறினாள்.

மீண்டும் “ம்ஹும்...” என்றவன் “ஒன்று செய் நன்றாக குளித்து சாப்பிட்டுவிட்டு நன்றாக தூங்கி எழும்பி கால் எடு பேசுறேன்.... சரியா”  

“ச்சு... இவ்வளவு நேரம் அதைத்தான் செய்தேன். இப்போது உங்களுக்கு எப்படியிருக்கு... வலிக்குதா” மென்மையாக கேட்டாள். 

தொண்டை குழி ஏறி இறங்க தடை இறுக, இந்த கணமே அவள் மடியில் படுத்து தன் வலியெல்லாம் மறக்க வேண்டும் என்ற துடிப்பை கட்டுப்படுத்த முடியாமல் கேட்டுவிட்டான் “நீ இங்கு வருவாயா?”

“ஹ்ம்ம் வருவனே....” சிறிதும் யோசிக்காமல் பதிலளித்து இருந்தாள் சன்விதா. 

அந்த பதிலிலே அவன் இறுக்கத்தை குறைக்க லேசாக சிரித்தவன் “வரத் தேவையில்லை வலி குறைக்க ஒன்று செய்யலாம்” 

“என்ன” ஆவலாய் கேட்டாள். 

“கேசவ்... சொல்லு”

கிளிப்பிள்ளையாய் திருப்பி படித்தாள் “கேசவ்....” 

“ஹ்ம்ம்” அழகாய் சிரித்தான் அவள் துரதிஷ்டம் பார்க்க கிடைக்கவில்லை.  

“ம்ஹும் முடியாது” என்றாள் கன்னம் சிவக்க

“சரி... ஏன் இவ்வளவு நேரம் சாப்பிடவில்லை” செல்லமாய் கடிந்து கொண்டான். 

“உறங்கிவிட்டேன் அதான்....”

ஆகாஷ் கதவு வழியே எட்டி பார்க்க “சரி முதல்ல பிரஸ் ஆகி சாப்பிடு, நான் பிறகு கூப்பிடுறேன்”  

“ஏன் இப்ப அப்படி என்ன வெட்டி கிழிக்க போறீங்க...” எரிச்சலுடன் கேட்டாள். 

அவளின் செல்ல கோபத்தில் மனம் விட்டு சிரித்தான் அச்சுதன். 

“அது சரி போன் எடுத்ததும் என்னை என்ன சொல்லி அழைத்தாய், அத்... அச்சுதன் அது அத்தான் தான் இல்லையா? அப்படியே கூப்பிடேன்” அவன் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவளை என்னவெல்லாமோ செய்ய ஒரு கணம் விழித்தாள். 

“இல்லையே அப்படி எல்லாம் இல்லையே... நீங்கள் எனது பாஸ் உங்களை எப்படி பெயர் சொல்லி அழைக்க முடியும்..... எனக்கு வேலைக்கு போக வேண்டும் வைக்கின்றேன்” 

“பின்னேரம் ஐந்து மணிக்கா...” கேட்டவன் குரல் சிரித்தது. 

வாயில் விரல் வைத்து கண்ணை உருட்டி விழித்தவள்... “ஐயோ சன்வி இப்படியா தக் லைப் வாங்குவாய்” தன்னை தானே திட்ட மறு பக்கம் சத்தமாய் கேட்ட சிரிப்பை அடக்க வழியின்றி போனை கட் செய்தவள் முகத்தை தலையணையில் புதைத்து கொண்டாள். மனமே ரகசியமாய் அவன் மார்புக்கு ஏங்கியது. 

உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே

உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே

உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே

உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே

நீ கேட்கையில் சலனமே இல்லையே

நான் நினைக்கையில் ஓரமாய் வலிக்குதே

என் மார்பில் காதல் வந்து மையமிட்டதே

நான் உன்னை மறந்த செய்தி மறந்து விட்டேன்

ஏன் இன்று குளிக்கும் போது நினைத்து கொண்டேன்

கண் மூடி சாயும் பொழுதிலும் உன் கண்கள்

கண் முன்பு தோன்றி மறைவதேன் ஏன் ஏன் ஏன்

நீ என்னை கேட்ட போது காதல் இல்லை

நான் காதலுற்ற போது நீயும் இல்லை

எங்கோ தூரத்தில் கேட்ட பாடல் அவள் மனதை எடுத்துரைக்க ‘மதுரை போவோமா’ என்று யோசிக்க தொடங்கினாள். 

Reply
Posts: 61
Admin
Topic starter
(@admin)
Member
Joined: 3 months ago

யாசகம் ♥ 28

அவளிடம் பேசி முடித்து திரும்பிய அச்சுதன் முகம் புன்னகை தொலைத்து இறுகியது. இடது காலை மடித்து ரத்தம் ஏறி கொண்டிருந்த கையை முட்டியில் ஊன்றி இருந்தவன் விரல்களில் போன் சுழல அருகே நெருங்க தாதியும் அஞ்சி நின்றாள்.

காலை எட்டு மணிக்கெல்லாம் கண் விழித்தவன் சிகிச்சையின் பின் மருந்துகளின் வீரியத்தில் உறங்கிவிட்டான். ஆனாலும் மதியம் தாண்டி எழுந்தவன் அருண் ஆகாஷ்  ஜேம்ஸ் ஆகியோரிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஏதோ பேசியவன் மருத்துவரிடம் தலை வலிப்பதாக சொல்லவே அவர் வெளியாட்கள் யாரும் பார்க்க முடியாது என்று மறுத்துவிட்டார்.   

♥♥♥♥♥

சன்விதாவுடன் பேச கேட்டதற்கு அவள் உறங்குகிறாள் என்றதும் புருவ சுழிப்புடன் கேட்டுக் கொண்டவன் வேறு எதுவும் பேசவில்லை. ஆனால் சன்வியுடன் பேசாமல் வேறு யாரையும் பார்க்க மறுத்துவிட்டான். உறங்கும் சன்விதாவையும் எழுப்பக் கூடாது என்று உத்தரவு வேறு.   

சற்று தூரத்தில் நின்று போனை கட் செய்ததை பார்த்த ஆகாஷ் அருகே வந்து “எஸ்பி வெளியே காத்திருக்கின்றார்” என்றவன் அவன் உத்தரவுக்கு காத்திருந்தான்.  

போலீஸ் மீடியா என்று அழுத்தத்தை தாங்க முடியாமல் தவித்தனர் அருணும் ஆகாஷும். அச்சுதன் நிலவரம் இப்போது வெளியே யாருக்கும் தெரியாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக எப்படியோ மீடியாவை சமாளித்து வெளியே அனுப்பிவிட்டார்கள். ஆனால் எஸ்பி அச்சுதனை பார்க்க வேண்டும் என்று இரண்டு மணி நேரமாக காத்திருக்கின்றார்.    

“ஆகாஷ்...” அழைத்து நிதானித்தவன் “சன்வி வீட்டிற்கு மெடிக்கல் டீம் ஒன்றை அனுப்பி வை எந்த நேரமாய் இருந்தாலும் ரிப்போர்ட் ரெடியானதும் எனக்கு அறிவிக்க வேண்டும் என்று சொல்”

அருணும் ஆகாஷும் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். போன் பட்டனை தட்டியவாறே “சரி சார்” என்றான் ஆகாஷ். 

“ஷியாம், கணேஷ்...?” கேட்டவனுக்கு பதிலாக “இருவரும் மாலைதீவில் உள்ள ஒரு ஹோட்டலில் கடந்த ஒரு வாரமாக விடுமுறையை கொண்டாடுகின்றார்கள், பக்காவாக தயார்” என்றான் அருண். 

“ஆகாஷ்... எஸ்பியை வரச் சொல்” உத்தரவிட்டான். 

எஸ்பி உள்ளே வரும் போதும் அப்படியே இடது காலை மடித்து ரத்தம் ஏறி கொண்டிருந்த கையை முட்டியில் ஊன்றி இருந்தவன் எஸ்பி முகத்தில் வெடித்த எள்ளையும் கொள்ளையும் பார்த்து புன்னகைத்தவன் விசாரித்தான் “வாங்க எஸ்பி சார் என்ன நடந்தது கடம்பவனத்திற்கு என்ன ஆச்சு? எப்படி இருக்கிறார்....” சற்று நிதானித்தவன் “உயிருடன் இருக்கின்றார?” நிச்சயமாக கிண்டல் இருந்தது. 

உள்ளே வந்த வேகத்தில் “எங்கே அந்த இரண்டு மடையர்களும் “ கோபத்தில் மீசை துடிக்க கேட்டார். 

“யாரை கேட்கறீர்கள்?” எதுவும் தெரியாத அப்பாவியாய் கேட்டான். 

ஆழ்ந்து பார்த்தவர் “எல்லா நேரமும் சட்டத்தின் கைகளில் இருந்து தப்ப முடியாது மிஸ்டர் அச்சுத கேசவன் ரிமெம்பெர்”

“நான் எப்போது சட்டத்தை மீறினேன்... சட்டப்படி நடக்க போய்தான் வெட்டுப்பட்டு இங்கே இருக்கின்றேன்” சாவதானமாக கூறினான். 

“அவர்களின் கோபம் புரிகின்றது ஆனால் இது சட்டத்திற்கு புறம்பானது” விளங்க வைக்க முயன்றார். 

“நீங்கள் யாரை பற்றி பேசுகின்ரீற்கள்” புரியாதது போல் கேட்டான். 

பல்லை கடித்தபடி பதிலளித்தார் எஸ்பி “ஷியாம் கணேஷ்...”

“ஹ்ம்ம் அவர்கள் மாலை தீவில் இருக்கின்றார்கள். ஏன்?” என்றவனை வாய் திறந்து பார்த்தார் எஸ்பி பத்து மணி நேரம் கூட இல்லை, இன்னும் சரியாக சொல்ல போனால் அவன் எழுந்து ஐந்து மணி நேரம் இதற்குள் கடம்பவனத்தின் கொலையை தற்கொலையாக்கி அவர்கள் இருவரையும் மாலைதீவு அனுப்பிவிட்டான். என்ன ஒரு வேகம். விவேகம். 

“எனக்கு ஒன்று மட்டும் புரியல, நீங்க அவரை கொல்லனும் என்றால் என்னை ஏன் இதில் இழுத்துவிட்டீர்கள்” எரிச்சல் மண்டிய குரலில் கேட்கவே அமைதியாக கண்களை மூடி தலையை சாய்த்தவன் சாவதானமாக கூறினான்  “நான் கொல்ல நினைத்திருந்தால் அவர் எலும்பு கூட உங்களுக்கு கிடைத்திருக்காது” 

அவனிடம் முண்ட முடியாது இருந்த இடத்திலிருந்து ஓர் கண்ணசைவில் இந்தியாவின் சில மாநிலங்களிலேயே வேலை முடிக்க கூடிய ஒருவன் முன் அமர்ந்திருப்பது புரிய கையை முறுக்கி கொண்டார். 

“ஏன்....” கண்மூடியபடியே கேட்டான் 

“அவர்களால் என் மொத்த பிளானும் பாழ்”

“என்னை வெட்ட வந்த கடம்பவனத்தை ஏன் சுடவில்லை என்று கேட்டேன்”

“.......” அமைதியாக சில நொடிகள் கழிந்தது. 

“ஆகாஷ்.... அதை அவரிடம் கொடு” என்றவன் கட்டிலை ரிமோட் மூலம் நேராக்கிவிட்டு படுத்தான். வாங்கி பார்த்தவர் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது. கடம்பவனத்தின் அத்தனை இல்லிகல் ஆக்டிவிட்டீஸ் தொடர்பான தொடர்பாடல்கள் அது சம்பந்தபட்டவவர்களின் விடயங்கள் அனைத்தும் அந்த கோப்பில் இருந்தன. 

திரும்பி பார்க்க அவன் உறக்கத்தில் ஆழ்ந்தற்கு அறிகுறியாக மார்பு சீராக ஏறி இறங்கி கொண்டிருந்தது.

♥♥♥♥♥

விளக்கு வைக்கும் மாலை நேரத்தில் வந்த வெள்ளை வேனில் இருந்து வெள்ளை உடையணிந்த மருத்துவர்கள் சிலர் உள்ளே வந்தனர். 

“இங்கு மிஸ் சன்விதா சர்மா யார்” சற்று வயதான முன் வழுக்கை விழுந்தவர் கேட்க

“அதோ அவள்தான்” என்று சன்விதா மானாசாவை கைகாட்ட அவள் முறைத்தாள். 

“அவர் உடம்பில ஓட்டை போடுவார்” செல்லமாய் சிணுங்கினாள். 

“எது ஓட்டையா...” முறைத்தாள் மானசா

“அதான், ஊசி....” அசடு வழிய சிரித்தாள். அவளுக்கு ஊசி போடுவதற்கு பதிலாக உக்ரேனுடன் சேர்ந்து ரஷ்யாவிடம் சண்டையே போடலாம் ஊசி பயத்தில் அந்த பாடுபடுத்துவாள். 

“நாங்கள் ஊசி போட வரவில்லை” தந்திரமாய் கூறினார் மருத்துவர் 

“அப்ப நான்தான் சன்வி” தைரியாமாக ஒப்புக்கொண்டாள். ஊசிதான் போடமாட்டேன் என்றுவிட்டார்களே

அவளை பரிசோதித்தார், மானசா, பத்மாவதி பூவாஜி அனைவரும் என்ன நடக்கின்றது என்பது போல் சுற்றி நின்று பார்த்தார்கள். ஊசியை எடுக்க “ஆ............” கத்தலில் அனைவரும் காதை பொத்தி கொள்ள அந்த இடைவெளியில் சிட்டாய் அறைக்குள் சென்று பூட்டி கொண்டாள். 

“ஜூஸ்டு மிஸ்ட்டு சன்வி” தன்னை தானே ஆசுவாசப்படுத்தி கொண்டு சாவி துவாரம் வழியாக வெளியே என்ன நடக்கிறது என பார்க்க மானசா அவர்களை விசாரித்துக் கொண்டிருந்தாள். 

“யார் நீங்கள் தீடீரென்று வந்து பரிசோதனை அது இது என்று...”.

“அச்சுத கேசவன் சார் உத்தரவு செய்யாமல் போனால் வேறு எங்குமே வேலை செய்ய முடியாது. ரத்த பரிசோதனை செய்ய வேண்டும்” பரிதாபமாக பார்த்தார். 

மூவரும் சிரிப்பை அடக்கி கொண்டு மருத்துவரை பார்த்தார்கள். வெறும் மயக்கத்திற்கு இவ்வளவு அளப்பறையா? 

“அவரிடம் நாங்கள் சொல்லி கொள்கின்றோம் அவளுக்கு ஒன்றும் இல்லை என்று நீங்கள் அறிக்கை கொடுத்து விடுங்கள்”

♥♥♥♥♥

அச்சுதன் மருத்துவமனையில் இருந்தே தேர்தல் தொடர்பான அனைத்து வேலைகளையும் முடித்தவன் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு தரம் என ஓர் ஐந்து நிமிடமாவது சன்விதாவிடம் பேசிவிடுவான் அவ்வளவு நேரம் தான் அவனின் வேலை பளு அவனை அனுமதித்தது. எப்போதடா இதையெல்லாம் முடித்துவிட்டு போவோம் என்றிருந்தது.  

அவன் அபாய கட்டத்தை கடந்துவிட்டான் என்பதே ஆறுதலாய் இருக்க அவளையும் அறியாமல் அவன் வரும் தினத்தை எதிர்பார்த்து காத்திருந்தாள்.

இப்போதெல்லாம் நேரத்திற்கு அலுவலகம் சென்றுவிடுவாள் ஏனன்றால் அவனை சந்திக்க சாத்தியமான ஒரு இடம் அதுதானே எப்படியும் அவன் வருவான் குறைந்தது அவன் வந்தால் அந்த செய்தியாவது கிடைக்கும். 

அன்று அலுவலகம் சென்றவள் தன் வேலையை பார்த்து கொண்டிருக்க சரவணன் அழைத்தான். “உனக்கும் எனக்கும் தான் ஒன்றும் இல்லையே எனக்கு எதுக்குடா போன் பண்ற” அவன்தான் அந்த அலுவலக முதலாளி என்பது கூட அவளுக்கு பொருட்டில்லை. 

“எல்லாம் என் நேரம்டி, கும்புடு பூச்சிகெல்லாம் கொம்பு முளைக்குது, ஆபீஸ் வேலை கொஞ்சம் வா”

சுட்டு விரல் கடித்தவள் அசட்டு சிரிப்புடன் சென்றாள். அப்போதும் கெத்தை விடாமல் “சொல்லுங்கள் சார் என்ன விடயம்” என்றவளை கொலை வெறியுடன் முறைத்தான் சரவணன். 

“இந்த பைலை ஒரு இடத்திற்கு கொண்டு போய் கொடுக்க வேண்டும், அப்படியே அங்கே நடக்கும் மீட்டிங்கையும் கம்பெனி சார்பில் அட்டென்ட் செய்யனும்” கோப்பை அவள் புறம் நகர்த்தினான். “வெளியே கார் வெயிட் பன்னுது போயிட்டு வா” உத்தரவாய் இட்டவன் தன் வேலையை பார்க்க தொடங்க “அட்ரஸ் யாரு இவன் தாத்தானா கொடுப்பான்” வாய்க்குள் முனகியவள் “அட்ரஸ் சார்” பதவிசாக கேட்டாள். 

“டிரைவரிடம் சொல்லி இருக்கின்றேன் போ”

உதட்டை சுளித்து பழிப்பு கட்டிவிட்டே சென்றாள்.

ஒரு கள்ள சிரிப்புடன் அவள் முதுகை பார்த்திருந்த சரவணன் யாருக்கோ மெஸேஜ் அனுப்பினான் ‘ஷி இஸ் கம்மிங்.’ 

வழுக்கி கொண்டு சென்ற காரின் தரம் அவளை யோசிக்க வைத்தது. ‘இந்த சரவணன் எப்ப இப்படி ஒரு சூப்பர் கார் எடுத்தான். பயபுள்ள சொல்லவே இல்லையே நாம வேற அவசரப்பட்டு சண்டை போட்டுட்டமே’ யோசித்தித்தவாறே கையிலிருந்த கோப்பில் பார்வை பதிக்க அது சிம்லாவில் உள்ள ஹோட்டல் சம்பந்தமானது. அவள் தயாரித்த விபரங்கள்தான், எனவே அதை பற்றி கவலையின்றி கார் எங்கே போகின்றது என பார்க்க பெரிய பில்டிங் முன்னே நின்றது. 

ட்ரைவர் இறங்கி அவசரமாக கதவை திறக்க இறங்கியவள் கையிலிருந்து ஒருவன் கோப்பை பணிவாக வாங்கினான்.

“மாம் ப்ளீஸ் இந்த வழியில்” என்று கைகாட்டி அழைத்து சென்றான். 

அது தனிப்பட்ட ஒரு பாதை போல் ஆள் அரவமின்றி இருந்தது. லிப்ட்டில் ஏறி இலக்கம் ஒன்றை அழுத்தி ஒரு அறைக்கு அழைத்து வந்தவன் கோப்பை அருகேயிருந்த மேஜையில் வைத்தவன் “இங்கே காத்திருங்கள் மாம் ப்ளீஸ்” மிகவும் பணிவுடன் சொல்லி சென்றான். அவன் பணிவாய் தென்பட்டாலும் தனிபட்ட லிப்ட்டும் aalavaramatrra paathaiyum ஏனோ பயத்தை ஏற்படுத்த சுற்றிப் பார்த்தாள்.

மறுபக்கம் அலுவலகத்தில் ஆட்கள் வேலை செய்து கொண்டிருப்பது தெரிந்தது. ஊப் என்று மூச்சைவிட்டாள். இவன் பில்டப் போட்டே பயமுறுத்திட்டான் கிராதகன் மனதினுள் நினைத்தவள் கண்கள் அந்த அறையை சுற்றி வட்டமடித்தது.  

கருப்பும் மெல்லிய சாம்பல் கலரில் பெயிண்ட் அடிக்கப்பட்டு சாம்பல் வண்ணத்தில் திரைசீலைகளுடன், சம்பல் வண்ண மாபிள் பதிக்கப்பட்ட தரை, கருப்பு நிறத்தில் கண்ணாடி போல் பளபளத்த கருங்காலி மேசை,  பின்னால் சுழல் கதிரை, கம்ப்யூட்டர் CCTV கேமிரா மொனிட்டர், பைல் ட்ராக், அருகே மின்குமிழ் பொருத்திய பாவை விளக்கு என ட்ரெடிஷனல் பிளஸ் மாடர்ன் லுக்கில் இருந்தது அந்த அறை. 

அறையின் மறுபக்கத்தில் ஒரு நீண்ட சோபாவும் அதனுடன் சேர்த்து சில சிங்கிள் சோபாக்களும் போடப்பட்டு தேவையானால் மீட்டிங் ஹால் ஆகவும் பயன்படுத்த கூடிய வசதியில் இருந்தது.  நீண்ட சோபாவில் அமர்ந்தவள் அறையின் அழகில் மயங்கி தான் போனாள் 

வாவ் என மனதினுள் வியந்தவளையே விழியாலகாது பார்த்து கொண்டிருந்தான் அவன். 

♥♥♥♥♥

“அப்பாடி இந்த தடவை எப்படியும் காதலை சொல்லிவிடுவாள் இல்லையா இனி எப்படி மூடி மறைக்க முடியும்” என்று ருக்கு கேட்க கண்ணன் மர்மமாக சிரித்தான் பின் நான் எதற்கு இருக்கின்றேன் என்பது போல்.   

♥♥♥♥♥

சோபாவில் இருந்தவாறு அந்த அறையின் அழகில் மயங்கி நின்றவளை பார்த்து மயங்கி நின்றான் அச்சுதன். அவன் சென்னை வந்து ஒரு மணி நேரமே ஆகியிருந்தது. வந்ததும் வீட்டிற்கு போகாமல் AK இண்டெர்ஸ்ட்ரீன் தலைமை இடத்திற்கு வந்துவிட்டான். 

பிரெஷ் ஆகி வந்தவனின் காயத்திற்கு கட்டு போட்டுவிட்டு மருத்துவர் சென்று விட ஆகாஷுக்கு ‘சன்விதாவின் அலுவலகம் செல்ல வேண்டும் தயாராகு’ என உத்தரவிட்டு வாஷ் ரூம் போய் வந்தவன் ஜீன்ஸ்க்கு மேல் கையில்லாத பனியன் மட்டும் அணிந்து நின்றிருந்தான். இத்தனை நாளும் ஷேர்ட்டினுள்  ஒளிந்திருந்த நெஞ்சின் ரோமங்கள் பனியனின் கழுத்துக்கு மேலாக எட்டி பார்க்க, புஜங்கள் புடைக்க, தோளையும் நெஞ்சையும் சுற்றி வெள்ளை நிற பாண்டேஜ் ஓட மார்புக்கு குறுக்காக கை கட்டியவாறு ஏக்கமும் ஆசையும் சரிவிகித்தில் நிரம்பிய கண்களினால் அவளை பார்த்திருந்தான். 

அவன் அவ்வாறு பார்த்து நின்றது சில கணங்கள் கூட இராது, சட்டென அவனை திரும்பி பார்த்தாள். அங்கு அவன் நிற்பதை பார்தததும், காற்றை கற்றையாக ஊதியவள் “இவனை.... இந்த முறை பக்கத்தில் வந்தால்தானே நீ மறைய எத்தனை தரம் மேன் சொல்றது வாரது என்றால் நேரில் வா என்று”.  

‘நேரில் தானே நிற்கின்றேன்’ குழப்பத்துடன் பார்த்தான் அச்சுதன். 

“வீடு ஆபீஸ், மால், பீச் கடைசி கோவில் எல்லா இடத்திலும்... போதாக்குறைக்கு கண்ணை மூடினாலும்.... இப்படி வந்து நின்றால் ஒரு அப்பாவி... சூதுவாது தெரியாத, சின்ன குழந்தை மாதிரி பொண்ணு (யாரு நீயம்மா) என்ன செய்யும் கொஞ்சமாவது யோசிக்க வேண்டாம்” உச்சியில் விழுந்த முடியை ஊதித் தள்ள இங்கே அச்சுதன் தள்ளாடினான். 

சட்டென அவனுக்கு தன் விம்பத்திடம் பேசுவதாக நினைத்து பேசுவது புரிய இதழ்களில் மெல்லிய புன்னகை கீற்றாக மலர்ந்தது. விழிகளில் குறும்பு மின்ன கன்னத்தை கடித்து அசையாமல் அப்படியே நின்றான். 

“இரண்டு... இரண்டு நாளில் வராதா சொன்ன இன்றோடு பத்து நாள்...... இங்கே ஒருத்தரும் வரவும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம். வருவீங்க இல்ல ரோஸ் கீஸ் என்றுட்டு அப்ப பார்க்கிறேன்” தாளித்து கொட்டினாள். சமயத்திற்கு அவள் போன் ரிங் ஆகியது. 

உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே

உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே 

நீ கேட்கையில் சலனமே  இல்லையே 

நான் நினைக்கையில் ஓரமாய் வலிக்குதே

என் மார்பில் காதல் வந்து மையமிட்டதே  

மானசாதான் போனை பார்த்து விட்டு கட் செய்து தூக்கி போட்டு திரும்பி அமர்ந்தாள். ஏனென்று அறியாமல் அந்த பாடல் வரிகளில் கண்கள் பனிக்க குத்துக்காலிட்டு முட்டியை கட்டி கொண்டாள்.  “நீங்க....” திரும்பியவள் அவனை காணாமல் நெஞ்சம் வலிக்க மீண்டும் முட்டியில் முகம் புதைத்தாள். 

சோபாவில் காலை தூக்கி வைத்து முகத்தை புதைத்திருந்தவள் காதருகே மிகமிக மென்மையாக இனிமையாக ஒலித்தது அந்த கீதம்.  

ஒரே ஒரு பார்வை... தந்தால் என்ன தேனே 

ஒரே ஒரு வார்தை... சொன்னால் என்ன மானே 

ஆகாயம் தாங்காத... மேகம் ஏது கண்ணே...

நிலாவே வா செல்லாதே வா...

எந்நாளும் உன்... பொன்வானம் நான்... 

எனை நீ தான் பிரிந்தாலும்...

நினைவாலே அணைப்பேனே...

காதருகே கேட்ட கானத்தின் இனிமையில் திரும்பி பார்க்க மூக்கும் மூக்கும் தொட்டு விடும் தூரத்தில் அச்சுதன் முகம். இரு கைகளையும் சோபாவின் பின்புறத்தில் ஊன்றி இடைவரை குனிந்து நின்றவன் அவள் திரும்பி பார்க்க இரு கண்களையும் அழகாய் சிமிட்டினான். 

‘அச்சுதன்’ சத்தமின்றி காற்று மட்டும் காற்று மட்டுமே வந்தது. 

Reply
Posts: 61
Admin
Topic starter
(@admin)
Member
Joined: 3 months ago

யாசகம் ♥ 29

‘அச்சுதன்’ காற்று மட்டும் வர வாயசைவை வைத்து உணர்ந்தவன் “ஹ்ம்” என்றான்.

அவள் கரம் மெதுவே உயர்ந்து அவன் கன்னத்தை பட்டும் படாமல் வருட ஐந்து நாள் தாடி அவள் விரல் நுனி குத்தி காண்பது நிஜம் என்றது. அவளையே பார்த்திருந்தவன் மிகமிக மென்மையாக சிரிக்க அவள் மோன நிலை கலைந்தது.   

“நீநீ நீங்...” மெல்ல தடுமாறினாள்.

“என்னடி....” கரகரத்த குரலில் கேட்டவன் கன்னத்தை வலிக்க கிள்ளினாள். “ஷ்ஷ்... வலிக்குதடி” சத்தமாக சொல்ல “அச்சுதன் நிஜமா நீங்களா?” சிறு குழந்தை போல் கேட்க குறுநகை செய்தவன் “நிஜமாகவே நான்தான், நிரூபிக்கட்டுமா?” கண் பாவை விரிந்து பெரிதாக கண்ணின் பாவை நிறம் செங்கபில நிறத்துக்கு மாற அவள் இதழ்களை பார்த்து கேட்டான்.

மெதுவே அவள் இதழ்களை நோக்கி குனிய எதிர்பாராத விதமாக சட்டென சன்விதா எழ இருவர் நெற்றியும் பலமாக மோதிக்கொண்டது. இருவரும் நெற்றியை பிடிக்க மோதிய வேகத்தில் பிடரி அடிபட விழ பார்த்தவளை மறுகையால் பிடித்துக் கொண்டான்.

“ஹேய் பார்த்து...”

சமாளித்து எழுந்து நின்றவளுக்கு அச்சுதன் நிஜமாகவே கண் முன் நிற்கின்றான் என்பது புரிய சோபாவை சுற்றி ஓடிச் சென்று அவன் கழுத்தில் கை போட்டு  கட்டிக்கொண்டாள்.

அச்சுதனுக்கு நடந்ததை உணரவே சில கணங்கள் தேவைப்பட, உணர்ந்த பின்பும் நிலத்தில் இருந்து ஓரடி உயரத்தில் அவள் தன் கழுத்தில் தொங்கி கொண்டிருந்ததை சில கணங்கள் தன்னை மறந்து கண் மூடி அனுபவித்தவன் கரங்கள் மெதுவே அவளை தழுவி கொண்டது.  

இடையை சுற்றி கையை போட்டு தூக்கி கொண்டவன் தன்னுள் புதைத்து விடுவான் போல் இறுக்கி கொள்ள அவளோ இன்னும் போதாது என்பது போல் அவன் கழுத்தை சுற்றி அணைப்பை இறுக்கி இடது தோளில் முகம் புதைத்தாள். இதற்கு மேல் இறுக அணைத்தால் வலிக்கும் என எண்ணியவனாய் அவள் கழுத்து வளைவில் முகம் புதைக்க மூடியிருந்த அவன் கண்ணோரம் ஒரு துளி நீர் உருண்டோடியது.

அவள் இன்னும் அவனுள் புதைய முயற்சிக்க மெல்ல நகைத்தவன் “இதுக்கு மேல உனக்கு வலிக்கும்டி” அவள் காதருகே கிசுகிசுத்தான். முதுகுபுற பனியனில் சிறு போட்டு போல் தோன்றிய சிவப்பு மெதுவே பெரியதாக தொடங்கியது.

அவள் அவன் கழுத்தடியில் கடித்து வைத்தாள்.

“ஷ்...” என்றவன் அவள் நிலையறிந்து “ஐ அம் ஒகே ரோஸ் ஒகே சரியா” இடது கையால் அவள் முதுகை தடவி ஆசுவாசப்படுத்தினான் காயத்தின் வலியை கூட உணராமல் நின்ற அச்சுதன்.  அவள் முஷ்டியால் தோளை குத்தினாள். நல்ல வேளையாக இடது தோளில் குத்தினாள்.

அவள் உடலில் ஓடிய நடுக்கமும் இறுக்கமும் அவனுக்கு ஆயிரம் கதைகள் கூற “நான் நல்லாத்தான் இருக்கிறேன்மா, ஷ்.... இங்கே பார் எனக்கு ஒன்றுமில்லை...” அவளை தன்னிடமிருந்து பிரிக்க முயன்றான்.  அவளோ பசைபோல் ஒட்டி கொண்டு நகர மறுத்தாள்.

அவள் நிலைமை தெள்ளத் தெளிவாக புரிய புன்னகையுடன் கணங்களே மணித்துளிகளோ என அறியாமல் அனைத்துக் கொண்டவன் சிறிது நேரம் கழித்து தலையில் முத்தமிட்டான். அவளோ சற்று தலையை திருப்பி கன்னப்பகுதியை காட்ட ஓர் கணம் என்னவென புரியாமல் பார்த்தான்.

மறுகணம் இன்னும் இறுக்கமாக அணைத்து கன்னத்தின் சற்று மேல் கண்ணுக்கும் காதுக்கும் இடையில் அழுத்தமாய் இதழ் பதித்தான். உதடுகளின் அழுத்தத்தில் அந்த இடம் கன்னி சிவந்தது.

அதன் பிறகே அவள் உடல் தளர்ந்து நிலத்தில் கால் பதித்தது நிற்க நன்றாக குனிந்து நெஞ்சில் சாய்ந்திருந்த அவள் முகம் கண்டவன் கேட்டான் “என்னடி...”

“ம்கூம்...” கைகளை அவன் இடுப்பை சுற்றி போட்டவாறே அவன் மார்பினுள் தலையசைத்தாள்.

“நீ என்னை காதலிக்கல இல்லை...”

“உம்” என்றாள்.

“என்னை உனக்கு பிடிக்காதுதானே” தலையில் நாடி பதித்து சிறுநகையுடன் கேட்டான்.

அதற்கும் “உம்” என்றாள்.

புன்னகைத்தவன் கேட்டான் “கல்யாணம் பண்ணுவோமா....?”

“ஊகும் மாட்டேன்...” கன்னம் சிவக்க விளையாட்டாய் கூறினாள்.

“அப்ப தப்பு பண்ணிட்டு கல்யாணம் பண்ணுவோம்டி” குரலில் சிறு போதையுடன் கூற நிமிர்ந்து வேட்கை கொண்ட விழி நோக்கியவள் “ச்சீய்....” செல்லமாய் அவன் மார்பில் குத்த போக கையில் ஏதோ பிசுபிசுத்தது.

என்னவென்று பார்த்தவள் இதயம் வேகமாக துடிக்க முகம் வெளுக்க நிமிர்ந்து அவனை பார்த்தாள்.  “இர.. ர இரத்தம்” வார்தையில் தந்தியடித்தாள். கையிலிருந்து துளித்துளியாக வழிந்து முழங்கையை நோக்கி சென்றது.

அவள் கையில் இரத்தத்ததை பார்த்து நெற்றி சுளித்தவனுக்கு அப்போதுதான் தன் தோள் காயத்தில் வலிப்பது மூளைக்கு சுரீலென உரைத்தது. “ஹேய் பார்க்காதே...” அவசரமாய் அவள் கையை அவள் முதுகு புறமாக வளைத்தான். 

சட்டெனெ தலை சுற்றிவிட அவன் வலது புறமாக சரிந்தாள். அவனையும் அறியாமல் வலியில் “ஷ்ஷ்ஷ்ஸ்” என்றுவிட முடிந்தவரை அவனிடமிருந்து விலகி நின்று தன்னை சமாளித்தவளை பார்த்து “என்னம்மா..” என்றான்.

“இல்லை உங்களுக்கு வலிக்கும். நா... சோ சோபாவில் இருக்கிறேன்” என்றவளை ஒரு கணம் ஆழ்ந்து நோக்கியவன் இடது கையால் இடை பற்றி தூக்கி சோபாவில் இருத்தினான். அவள் முன் மண்டியிட்டு “யூ ஆல்ரைட் “ சிறு பதற்றத்துடன் கேட்டான்.

போனை பார்த்து “கால் ஆகாஷ்...  புட் அவுட் ஸ்பீக்கர்” என்று உத்தரவிட அதுவும் ‘கால்லிங் ஆகாஷ்’ என்று பதிலளித்து டயல் போனது.

“ஹலோ பாஸ்....” ஆகாஷ் குரல் போனில் ஒலித்தது.

அந்த நிலையிலும் தனக்காக பதறுபவனை பார்க்க மனதில் உவகை பொங்க  முழு மயக்கத்திற்கு செல்ல முன் அரைக்கண்ணால் பார்த்தாள்.

“அந்த டாக்டர் போய்ட்டாரா” அவசரமாக கேட்டவனுக்கு பதிலாக “இல்லை பாஸ் இப்பவே கூட்டிட்டு வாரேன்” என்றான் அவன் மனமறிந்த அந்த ஊழியன்.

“கம் பாஸ்ட்” என்றவன் திரும்பி மயங்கிய சன்விதாவையே கவலையுடன் பார்த்தான்.

மருத்துவருடன் வந்த ஆகாஷுடன் அருண் மானசாவும் உள்ளே வந்தவர்கள் அச்சுதனை பார்த்து அதிர்ந்து போய் நின்றார்கள்

“அச்சுதா என்னடா இது” அருண் பதறி போய் கேட்டான் அருண். அவன் வெள்ளை நிற பனியன் பின்புறம் முழுதும் இரத்தத்தில் சிவப்பு நிறத்தில் இருந்தது.

மருத்துவரும் நேரே அவனிடம் வர “என்னை இல்லை அவளை பாருங்கள்” மருத்துவரிடம் உறுமினான். மருத்துவர் அருணை பார்க்க அவனுக்கு புரிந்தது அவளை பார்க்காமல் தன்னை தொடக்கூட விடமாட்டான்.

அருண் “சீக்கிரம் பாருங்கள்” என்பதற்குள் மானசா அருகே வந்து சன்வி கையை பார்த்தவள் “அவள் இரத்தம் பார்த்தது தான் மயங்கிட்டாள் வேறு ஒன்றுமில்லை முதலில் அவருக்கு பாருங்கள்” என்றவள் “அச்சுதன் ப்ளீஸ் இரத்தம் போகுது முதலில் நீங்கள் டிரீட்மென்ட் எடுங்கள்”

“இரத்தம்.. என்ன இரத்தம்” தோள் மேலாக பார்த்தவன் அவன் காயம் திறந்துவிட்டது புரிய “அவள் கையிலிருப்பது என் இரத்தமா?” ஆறுதலாக கேட்டவனை மூவருமே முறைத்தார்கள்.

மருத்துவரை பார்த்து “அவளுக்கு ஒன்றுமில்லைதானே” என்றவனை சிறு முறுவலுடன் பார்த்தவர் சன்வி அருகே சென்று நாடித்துடிப்பை பரிசோதித்தார் “இந்த பெண்ணுக்கு ஒன்றுமில்லை போபியா என்று நினைக்கின்றேன் சிறிது நேரத்தில் நினைவு திரும்பிவிடும். இப்போது உங்கள் காயத்திற்கு வைத்தியம் செய்யலாமா?”

பார்வையை அவளிடமிருந்து திருப்பாமல் தலையை மட்டும் அசைத்தான்.

பனியனை கழட்ட போக அதை தடுத்து வெட்டி காயத்தை பிரித்து பார்த்த மருத்துவர் அதிருப்தியாக முகத்தை சுளித்தார். அருண் அவர் முகத்தை பார்த்துவிட்டு எட்டி பார்க்க, அப்போதும் வந்து கொண்டிருந்த இரத்தத்தை துடைக்க சில இடங்களில் தையல் தசையை கிழித்திருந்தது.

அருண் அதை பார்த்த கோபத்தில் கூறினான் “அச்சுதா நீ சொல்வதை கேட்காவிட்டால் இப்போதே இதை பற்றி அக்காவிடம் சொல்லிவிடுவேன்” அக்கா இப்போது லண்டன் போய் இருப்பதால் பயந்து விடுவாள் என்று சொல்ல வேண்டாம் என்றுவிட்டான்.

அவன் எங்கே இவன் செல்வதை கேட்டான் அவனுக்கு தன் காயத்தின் வலியே தெரியவில்லையே. சற்று முன் நடந்ததையே அவன் மனம் எண்ணிக் கொண்டிருந்தது.

இதற்கு அர்த்தம் அவள் மனதில் நான் இருக்கின்றேன் என்பதா,

இல்லை எனக்கு வந்த ஆபத்தினால் அவ்வாறு நடந்து கொண்டாளா?

வெறுமே காதலின்றி ஆபத்துக்காக அப்படி தவிப்பாளா?

இல்லை காதலிக்கின்றாளா?

அப்படியென்றால் அதை சொல்வதில் என்ன தயக்கம்?

எனது பழைய வாழ்கை முறை அவளை தள்ளி வைக்கின்றதா?

இல்லையே அவள் என்னை அணைத்த போது அவளின் உடலின் இறுக்கம், அணைப்பின் இறுக்கம் எனக்கு ஒன்றுமில்லை என்றதன் பின்னான தளர்வு எனக்கு ஏதோதோ செய்தி சொன்னதே.

அவன் பார்வை அசையாது சன்விதாவை நோக்கி இருந்தாலும் அவன் எண்ணங்கள் எங்கேங்கோ அலைந்து கொண்டிருந்தது.

சில கணங்கள் கண்மூடி மனதை ஒன்றுபடுத்தி சிந்திக்க ஒரு சிறந்த பிசினெஸ் மேன்னாக அவனுக்கு சன்விதா தன்னை காதலிப்பது புரிந்தது ஆனால் அவனுள் ஒளிந்திருந்த காதலன் அதை அவள் வாயால் கேட்க ஆசை கொண்டான்.  அவனது எண்ணத்திற்கு உரமூட்டுவது போல் அமைந்தது மான்ஸாவின் பேச்சு.

♥♥♥♥♥

அவ்வளவு நேரம் வேடிக்கை பார்த்த கண்ணன் எல்லாம் நீங்கள் விரும்பும் வண்ணமென்றால் நான் எதற்கு இங்கே என்பது போல் அருகே இருந்த ருக்கு தடுப்பதற்குள் புன்னகைத்து கண்ணை சிமிட்டினான்.

♥♥♥♥♥

சன்விதா மெதுவே புருவத்தை சுருக்க அவ்வளவு நேரம் அவளையே பார்த்திருந்த அச்சுதன் கண்மூடி சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். அவளை கவனிக்காத மானசா “சீக்கிரமே அம்மாவிடம் சவால் விட்டது போல் பெண் கேட்டு வருவீர்கள் போலவே, இல்லையா அச்சுதன்” என்றாள். 

“அதற்கு அவளின் சம்மதம் வேண்டுமே” பெருமூச்சுவிட்டான் அச்சுதன். இத்தனை நடந்தும் வாய் திறக்கவில்லையே.

“இந்த ஐந்து நாளும் அவள் வீட்டில் அடித்த கூத்தை பார்த்திருந்தீர்கள் என்றால் இப்படி சொல்ல மாட்டீங்க” என்றாள் மானசா சிறுநகையுடன்.

முழுமையாக மயக்கம் தெளிந்த சன்விதா ‘என்ன சவால் அதுவும் அம்மாவுடன் கொஞ்சம் அமைதியா இரு சன்வி என்ன நடக்கின்றது என்று பார்ப்போம்’ என்று தன்னை தானே அமைதிப்படுத்தியவள் அவர்கள் பேச்சை கவனிக்க தொடங்கினாள்.

வீட்டில் அவள் அடித்த கூத்தை மானசா சிரிப்புடன் கூறினாள் “எல்லாவற்றையும் விட பீக் குளிக்க போற என்று வெளியே போனதுதான்”.  ‘ஐயோ இனியும் இப்படியே இருந்தால் இந்த அக்கா மானத்தை கப்பலில் இல்லை விமானத்திலேயே ஏற்றி விட்டுடுவாளோ.... உன் வீரதீர பராக்கிரமத்திற்கு இப்படியாடி ஒரு சோதனை வரனும்! கண்ணா’ என மனதோடு புலம்பினாள்.

ஏன்னென்று புரியாமல் அச்சுதன் காது மடல் வரை சிவந்தான்.

“ஆனால் நீங்க ஹொஸ்பிடலில் இருந்த இந்த ஐந்து நாளில் சரியா சாப்பாடு தண்ணியும் இல்லை, ரொம்பவே பயந்துட்டாள் பாவம்” தலையை ஆதுரத்ததுடன் வருடிவிட்டாள்.

“அப்ப நாளை குறிக்கலாம் என்று சொல்லு” என்று அச்சுதன் தோளில் கையை போட்டான் அருண்.

“அப்ப சன்வி மேடம் சீக்கிரமே அண்ணியாயிருவாங்க இல்லை, பாஸ் சொல்லியடிப்பர்” என்று ஆர்பாரித்தான் ஆகாஷ்.

தேவையில்லாமல் தெலுங்கு பட ஹீரோவா புகழ்வது போல் புகழ்ந்து படுத்திருந்த சன்விதாவின் வயிற்றிலும் காதிலும் கண்ணுக்கு தெரியாத புகை வரவைத்து ஹீரோவை வில்லனாக்கிய புண்ணியத்தை கட்டிக்கொண்டனர் மூவரும்.

இதற்கு மேல் நடித்தது எதுவும் தெரிய வரப் போவதில்லை போல் தோன்றவே சன்விதா மெதுவே எழுந்து அமர முயற்சிக்க அச்சுதன் அருகே வந்த வேகத்திற்கு துள்ளி விலகினாள் மானஸா.

“உனக்கு ஒன்றும் இல்லையே... சன்வி” பதறினான் அச்சுதன்.

திரும்பி மருத்துவரை பார்த்து கண்ணசைக்க அருகே வந்த மருதுவர் அவளது நாடி துடிப்பையும் பிரஷரையும் பரிசோதித்து “ஷி இஸ் ஆல்ரைட் ரெஸ்ட் எடுத்தால் சரியாகிவிடும்” என்றார்.

தன் முன்னால் மண்டியிட்டு அமர்ந்திருந்த அச்சுதனை பார்த்தாள் சன்விதா புதிதாக ஒரு ஷர்ட் அணிந்து வலது கையை தொட்டில் போல் கட்டி தொங்கவிட்டிருந்தான்.

‘உங்களுக்கு எதுவும் இல்லையே’ என்று கேட்க துடித்த நாவை கட்டுப்படுத்தியது மயக்கத்தில் இருந்து விழித்து கொண்ட போது கேட்ட பேச்சு, கண்களால் அவனை அவசரமாக மேலிருந்து கீழாக ஆராய்ந்தாள்.

கண்ணில் தென்பட்ட களைப்பும் துளித்துளியாக நெற்றியில் பூத்திருந்த சிறு சிறு வியர்வை துளிகளும், சற்று வெளிறியிருந்த முகமும் தவிர அவனிடம் பெரிதான வேறு மாற்றம் எதுவும் தென்படவில்லை. ஆனால் அந்த ஏசி அறையிலும் அவனுக்கு வியர்த்து இருக்க கவலையை நிரம்பிய கண்களால் நிமிர்த்து மருத்துவரை பார்க்க அவர் புன்னகை புரிந்தார் “அவருக்கு ஒன்றுமில்லை, ஏதோ பாரம் தூக்கியுள்ளார் அதுதான் தையல் பிரிந்துவிட்டது, நன்றாக ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும், ஆனால்” சற்று நிறுத்தி இருவரையும் குறும்பாக பார்த்தவர்  “இன்னும் 20 நாட்களுக்கு பாரம் தூக்க கூடாது” என்றார்.

“ஹா...” என்று ஒரு கணம் விழித்தவள் திரும்பி அச்சுதனை பார்க்க அவன் கண்களில் தென்பட்ட குறும்பில் அவன் தூக்கிய பாரம் எதுவென புரிய முகம் சிவக்க தலையை குனிந்து கொண்டாள்.

இடது கையால் அவள் தலையில் வைத்து “யூ ஒகே”எனக் கேட்ட அச்சுதனிடம் “மானம் போச்சு” என்று வாய்க்குள் முணுமுணுக்க சிறு சிரிப்புடன் எழுந்து அவளருகே அமர்ந்தான் அச்சுதன்.

அவன் பார்வையில் இருந்து தப்ப திரும்பியவள் கண்களில்பட்டாள் மானசா “ பொன்னம்பலம் நீ எங்க இங்கே” என்றவளை பார்த்து சிரித்த மருத்துவர் “இந்த போபியா அபாயமில்லைதான் ஆனால் மயங்கும் அளவு விடுவது நல்லதும் இல்லை குணப்படுத்த கூடியதுதான் டிரீட்மென்ட் எடுக்கிறது நல்லது” என்றவர் அச்சுதனிடம் கண் காட்டியவாறே ஊசியை எடுக்க சன்விதா துள்ளி எழுந்து ஓட முயன்றால் அதற்குள் அச்சுதன் இடது கையால் இடையை வளைத்து பிடித்து மார்போடு அனைத்தவன் “சும்மாயிரு காயம் மறுபடியும் இரத்தம் வரும்” என்றான்

அந்த ஒரு வசனம் மந்திரமாய் அசைய விடமால் கட்டி போட “ஊசி வேண்டாம்” சிணுங்கினாள்.

“ஊசி உனக்கில்லை எனக்கு”

“யாருக்குமே வேண்டாம் வலிக்கும்”

“அதற்கு தான், ஊசியே”

“ஹா...”

“வலிக்காமல் இருக்க தான் ஊசியே” கிண்டலாக கூறினான்.

“ஓட்டை போட்டு முடிஞ்சுதும்மா” கேலியாக மருத்துவர் கூற அச்சுதன் வியப்புடன் பார்த்தான் “ஓட்டையா?”

அவள் வீட்டிற்கு வந்த அதே மருத்துவர் தான், அதை விட சரியாக சொல்வது என்றால் தனக்கு பார்க்கும் மருத்துவரையே அங்கு அனுப்பி வைத்தான்.

அவர்கள் கேலியிலிருந்து தப்பிக்க “அக்கா நீ எங்கே இங்கே” பேச்சை திசை திருப்பினாள். 

ஒரு கணம் விழித்த மானசா “நீ மயங்கிவிட்டாய் என்று ஃபோன் வந்தது அதுதான் வந்தேன்” என சமாளித்தாள். பின் அவளிடம் சொல்லவா  முடியும் அச்சுதன் வந்ததும் அவளை பார்க்க போக பிடிவாதம் பிடிப்பான் என்று தெரிந்து அருண் அவளை இங்கே அழைத்தது வர ஏற்பாடு செய்தான் என்று அது அறிந்துதான் இங்கே வந்தேன் என்று.

“சரி போவோம் வா” என்றவாறு எழுந்தாள் சன்விதா.

அவள் எழுந்ததிலிருந்து செய்யும் அனைத்தையும் அமைதியாக பார்த்த அச்சுதனுக்கு சிரிப்பு வந்தது சிறிது நேரத்திற்கு முன் தன்னிடம் இருந்து விலக மறுத்த சன்விதா இப்போது திரும்பி கூட பார்க்காமல் இருப்பதை பார்த்து சிறு முறுவல் கொண்டவன் கேட்டான்

“எங்கே போகப் போகிறாய்?”

“என் வீட்டுக்குத்தான் வேறு எங்கு உங்கள் வீட்டுக்கா” இடக்காக பதில் சொன்னாள் சன்விதா.

“ஒரு கணம் அவள் கண்களை ஆழ்ந்த நோக்கியவன் அதற்கு இன்னும் காலம் இருக்கிறது ஆனால் ரொம்ப நாள் ஆகாது என்று நினைக்கின்றேன்” என்று மென்மையாகச் சிரித்தான்.

அவன் கூறியதன் அர்த்தம் அவளை தவிர அனைவருக்கும் புரிய அங்கே சிறு சிரிப்பொலி எழுந்தது. சுற்றி இருந்த அனைவரையும் பார்த்து அவள் விழிக்க அச்சுதனே மீண்டும் கேட்டான் “அது சரி நீ ஏன் இங்கு வந்தாய்”

“அலுவலக வேலையாக வந்தேன்”

“வந்த வேலை முடிந்து விட்டதா...” முகம் சாதாரணமாக கேட்பது போல் இருந்தாலும் ‘வந்த’ வில் இருந்த அழுத்தமும் அதில் இருந்த குறும்புத்தனம் அவளுக்கு புரியவே செய்தது.

அவன் குரலில் சட்டென நிமிந்து பார்த்த சன்விதா அவன் பார்வையில் தலை குனிந்து கொண்டு பதில் அளித்தாள்.

“இல்... இன்..  இ அது வந்து...” எந்த பதில் சொன்னாலும் அது அவனுக்கு சாதகமாக அமையும் போல இருக்கவே குழம்பினாள் சன்விதா. வந்த வேலை முடிந்ததது என்றால் அவனை பார்க்கவே வந்தது போல் ஆகும். இல்லையென்றால் இன்னும் பேச வேண்டும் என்பது போல் ஆகும். இரண்டும் இல்லை வேறு வேலையென்றால் வந்த வேலையை மறந்து அவனிடம் பேசி கொண்டிருந்தது போல் ஆகும்.

‘இவனை....’ என்று பல்லை கடித்தவள் ‘அச்சோ மறுபடியு என் பல்லு போச்சு’ மனதோடு புலம்பினாள். 

“என்ன....” என்றவன் சிறு கண்ணசைவில் பழச்சாறு கொண்டு வந்து சன்விதாவின் முன் வைத்தார்கள்.

“குடி” என்றான்.

நிமிர்ந்து அவனைப் பார்த்த சன்விதா “எனக்கு தேவையில்லை உங்களுக்கு தான் தேவை நீங்கள்தான் பத்து நாள் பட்டினி கிடந்தது போல் இருக்கின்றீர்கள்” என்று அவன் புறம் நகரத்தினாள்.

உண்மையிலேயே அவன் முகம் மிகவும் களைத்துப் போயிருந்தது ஓய்வெடுக்க விட்டால் போதும் என்பது போல் இருந்தான். அருண் கையசைவில் இன்னொரு பழசாறு வர அதை கையிலெடுத்த அச்சுதன் கண்ணால் காட்டினான் குடி என்பது போல்.

இருவரையும் பார்த்தவர்கள் சத்தமின்றி மெதுவே ஒருவர் பின் ஒருவராக அந்த அறையை விட்டு வெளியேறினார்கள்.

“மனு என்ன யோசனை” என்ற அருணின் குரல் மானாசாவின் சிந்தனையை கலைக்க “இல்லை இந்த சன்வி நடவடிக்கை கொஞ்சம் யோசனையாக இருக்கு ஏதோ சம்திங்....” இழுத்தவள் “சிலவேளை நாங்கள் பேசியதை மயக்கத்தில் கேட்டிருப்பாளோ” சந்தேகத்துடன் கேட்க சிறிது யோசித்த அருணுக்கு புரிந்தது அப்படி கேட்டிருந்தால் அச்சுதன் தன்னை வெறும் சவலுக்காக காதலித்தது போல் புரிந்தகொள்ளும் சந்தர்ப்பம் இருக்கும்.

இருவரும் யோசனையுடன் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

Reply
Posts: 61
Admin
Topic starter
(@admin)
Member
Joined: 3 months ago

யாசகம் ♥ 30

பழச்சாறை குடித்தவாறே கண்ணாடி க்ளாஸுக்கு மேலால் அவனை பார்க்க, என்ன என்பது போல் ஒற்றை புருவத்தை உயர்த்தினான் அச்சுதன். 

குடித்துக் கொண்டிருந்த பழச்சாறு புரையேற “பார்த்து குடி” என்றவாறே தன் பழச்சாறை டேபிளில் வைத்து விட்டு அவளுடையதையும் வாங்கி வைத்தவன் மெதுவே தலையில் தட்டி டிஸ்ஸு பேப்பரை கொடுத்தான்.

“சோ பிடிச்சிருக்கு தானே” அவன் குரல் குழைந்து வந்தது. மாட்டிக் கொண்டது போல் விழியை உருட்டியவள் அவனுக்கு எதிர் திசையில் திரும்பி அமர்ந்தாள். 

புன்னகையுடன் அவள் கழுத்தை பற்றி தன்னை நோக்கி திரும்பியவன் “இதற்கு மேல் என்னால முடியாதுடி” தாழ்ந்த குரலில் சொன்னது அவனுக்கே கேட்டதோ தெரியவில்லை. அவள் முகம் அருகே இருக்க அவள் இதழ்கள் முடியும் இடத்தில் முத்தமிட்டான். சற்று முன் அவள் குடித்த பழச்சாறு அவன் இதழில் தித்தித்தது.

முகம் குங்கும நிறம் கொள்ள அவனிடமிருந்து விலகியவளை பிடித்து வைத்து அவள் முகம் பார்த்து ரசித்தான். “அவனவன் எதையெல்லாமே பார்த்து காதலிக்கிறான். நீ இப்படி சிவக்குறதுல தான் தலை கீழா விழுந்திட்டன்டி” அவன் குரலில் காதல் நிரம்பி வழிந்தது.

அவளோ கடைக் கண்ணால் பார்க்க “அப்படி பார்க்கதேடி, அப்பறம் சேதாரத்திற்கு நான் பொறுப்பில்லை” என்று எச்சரித்தவன் “அது சரி இதுக்கே இப்படி சிவந்தால்....” காதில் ரகசிய குரலில் ஏதோ சொல்ல மொத்தமாக அதிர்ந்து நாணத்தில் எழும்பி ஓட முயன்றவளை இடையில் கை போட்டு அவள் முதுகு மார்பில் சாய பின்புறமாக தன்னோடு அணைத்து தோளில் நாடி பதித்து கழுத்தில் ஊதினான்.  

சருமம் கூசி சிலிர்க்க நிமிர்ந்து அவன் கண்களை கடைக்கண்ணால் பார்க்க அவளுக்கு மட்டுமே என அத்தனை காதலையும் அந்தக் கண்களில் தேக்கி வைத்திருந்தான் அவன். அவள் நெற்றியோடு நெற்றி முட்டி கண்மூடி “இதுக்கு மேல என்னால முடியாதுடி பேசாம யெஸ் சொல்லிரு” என்றான். இடையில் இருந்த கைகளின் அழுத்தம் அவன் உணர்ச்சிகளின் விளிம்பில் நிற்கின்றான் என்பதை உரைக்க அவன் மோன நிலை பார்த்தவள் உள்ளமோ இப்படியே அவன் கழுத்தை கட்டிக் கொண்டு கால காலத்துக்கும் உன்னை விடமாட்டேன் என்று சொல்லு என்றது. 

கணங்களோ மணி துளிகளோ கண்ணனை கண்ட ராதையாய் மயங்கி நின்றாள் சன்விதா.  

“நீ மட்டும் உம் என்று ஒரு வார்த்தை சொல் நானே வந்து உன் அம்மா அப்பாவிடம் பேசுகின்றேன்” என்றான்.

‘அம்மாவிடம் பேசுகின்றேன்’ என்ற வார்த்தை அவளை கட்டியிருந்த மாய வலையை அறுத்தெறிய முழுதாக விழித்தாள்.

அவன் கூறியதன் அர்த்தம் ஏற்கனவே தன்னை வேண்டாம் என்பதையும் மறந்து தன் நிலையை விட்டு இறங்கி வந்து பேசுகின்றேன் என்பது ஆனால் அவள் விளங்கி கொண்டதோ அம்மாவிடம் விட்ட சவாலில் ஜெயித்தது விட்டேன் அதனால் வந்து பேசுகின்றேன் என்று.      

சட்டென உதறி விட்டு எழுந்திருந்தாள் சன்விதா. 

அவள் கை உதறி எழுந்த வேகத்தில் சோபாவில் பாதி சரிந்த நிலையில் இருந்தவன் “என்னடி...” என கையை பிடிக்க பழச்சாறை காட்டியவள் “குடிக்கனும் நீங்களும் குடியுங்கள்” என்று எடுத்து குடித்தவளை புன்னகையுடன் பார்த்திருந்தான். முழு ஜீவிதத்திற்குமான சிரிப்பை இன்றே சிரிப்பது போல்.   

அவள் கைகளை பிடித்தபடி புன்னகை மாறாமல் கேட்டான் “எங்கே ஓடுகின்றாய்..” எழுந்து அவளை அணைக்க முயன்றவனை உதற சற்று தடுமாறி நின்றவன் புருவம் நெறிந்தது.   

அவனை சமாளிக்க கேட்டாள் “நீங்கள் குடிக்கவில்லையா?” கேட்டவளுக்கு பதிலாக ஒரே மூச்சில் குடித்தது மேஜையில் வைத்தவன் அவள் குடித்து முடிக்கும் வரை அசையாது அவளையே உதட்டை கடித்தவாறு பார்த்திருந்தான்.

‘பார்வையை பாரு, எல்லாம் வெறும் வேஷம், எல்லாமே சவாலில் வெற்றி பெறவும் இந்த உட’ வாய்க்குள் முணுமுணுத்தாள். உடம்பிற்கு என்று சொல்ல வந்து முழுமையாக சொல்லாமல் நிறுத்திவிட்டாள்.  

அவன் முகத்தில் அவ்வளவு நேரமிருந்த புன்னகை துடைத்தது போல் மறைய கண்களில் மெதுவே வெறுமை சூழ்ந்தது. லட்சம் பேருக்கு மத்தியில் நின்று பேசினாலும் அவனுக்கு புரியும் ஓர் அறையில் ஐந்தடி தூரத்தில் நின்று பேசுவதா கேட்காது. அவனுக்கு நைதரசன் ஆசிட்டை அப்படியே ஊற்றியிருந்தால் கூட இதயத்திற்கு இவ்வளவு வலித்தியிருக்காதோ என்றிருந்தது. தோளில் பட்ட காயம் கூட இவ்வளவு வலிக்கவில்லையே.

எங்கோ மென்மையான அவன் அகம் அடியுண்டுவிட்டது. கண்களின் நீர் சுரப்பி அவனுக்கு இன்று தான் வாழ்க்கையில் முதல் முறையாக வேலை செய்தது. முகத்தை திருப்பி அவள் அறியாமல் பெரு விரலால் கண்ணீரை துடைத்தான்.     

குடித்து முடித்த பின்பும் அவன் அப்படியே பார்த்திருக்க ‘என்ன தீடிரென்று கோபமா இருக்கான், அப்படியே எஸ்கேப் ஆகிருவோமா’ மைண்ட் வாய்ஸ் அவளிடமே கேட்க அவள் வாயோ “என்னாச்சு ஏன் கோபமாய்.....” எப்படி கேட்க என்று தெரியாமல் விழித்தாள். 

“அதை தான் நானும் கேட்கிறேன் என்னாச்சு” அழுத்தமாய் கேட்டான்.

“ஹா...” எதை கேட்கிறான் என்று புரியாமல் விழித்தாள்.

முதல் முறையாக அவன் கண்கள் அவளை கடுமையாக பார்த்தது. நடுங்கிவிட்டாள் சன்விதா. 

அவள் முகம் சுணங்கினாலே துடிக்கும் அவன் உள்ளம் இன்று அவள் பயத்தை பார்த்தும் அசைவின்றி இருக்க அதற்கு மேல் அவன் முகத்தில் எதுவித உணர்ச்சியும் தென்படவில்லை. 

சற்று நேரம் கண்மூடி சோபாவில் சாய்ந்து சிந்தித்தவன் அந்த நிலையில் இருந்து அசையாமல் அரைக்கண் திறந்து கேட்டான் “உங்களுக்கு எப்போது மயக்கம் தெளிந்தது மிஸ். சர்மா”

“சற்று முன்னர் தான்” திருட்டு முழி முழித்தாள். ஏனோ வழமை போல் ‘நீங்கள் தான் பார்த்து கொண்டிருந்தீர்களே என’ அவனிடம் வாயாட முடியவில்லை அவன் தோற்றம் தீடிரென்று அவளை அந்நியமாய் நிறுத்தி வைத்தது போல் உணர அதை ஏற்று கொள்ள முடியாமல் தவித்தாள் சன்விதா. 

மனிதர்களை திறந்த புத்தகத்தை வாசிப்பது போல் எடை போடும் அவனுக்கு முதலில் உள்ளே வந்த போது நடந்து கொண்டதிற்கும் மயக்கம் தெளிந்த பின் நடந்து கொண்டதிற்கும் வேறுபாடு புரிய ஆராய்ந்தவனுக்கு விடை இலகுவாக கிடைத்து விட்டது அந்த விடையை அவள் திருட்டு முழி ஊர்ஜிதம் செய்ய அவன் வாழ்க்கையில் முதல் முறையாக தன் கணிப்பு சரியானதை வெறுத்தான். 

சில நேரம் அறியாமையே எவ்வளவு பெரிய வரம் என்பதன் முழுமையான அர்த்தம் அவனுக்கு இன்று புரிந்தது. 

அவள் தன்னை வேண்டாம் என்று சொன்ன போது கூட வலிக்கவில்லையே ஆனால் தன் காதலை கொச்சசைப்படுத்திவிட்டாள். வெறும் உடலுக்காக..... சவாலா.... அவனுக்கு சீ... என்றாகிவிட்டது. என் காதலை புரிந்து கொண்டது இவ்வளவுதானா, இதயம்  போர் கொடி தூக்க இதற்கு அந்த வெட்டு கழுத்தில் விழுந்து இறந்தே இருக்கலாம். மனம் நைந்து போனது.   

இத்தனை நாளில் ஒரு கணம் கூட தன் காதல் உண்மை என்ற எண்ணமே இல்லையா? அவன் இதயம் மூளையிடம் கேள்வி கேட்க, அவன் இதயத்தை குத்தி கிழிக்க விரும்பாத மூளை அமைதி காத்தது.. 

எல்லாவற்றையும் விட அவள் மீது கோபம் வரும் என்பதே இன்றுதான் அவனுக்கே தெரிந்தது. 

“வந்த வேலை முடிந்து விட்டதா மிஸ் சர்மா” சற்று முன் கேட்ட அதே கேள்வி வித்தியாசம் மலைக்கும் மடுவுக்குமாய் இருக்க என்ன நடந்தது என்று புரியாமல் விழித்தாள் சன்விதா.  அருகே சென்று “என்னாச்சு” சிறிது அச்சத்துடன் கேட்டாள்.

அவளுக்கு புரியவில்லை தன் முன் இருப்பது AK யின் விஸ்வரூபம் அவளை விட தொழிலில் புலிகள் கூட அவனை நெருங்க முடியாமல் திணறி இருக்கின்றார்கள். இவள் வெறும் சிறு பெண் அவளால் எப்படி அணுக முடியும்.

அவன் தோளில் கைவைக்க போக சட்டெனெ விலகி ஜன்னல் அருகே நின்றவன் கேட்டான் “நீங்கள் வந்த வேலை என்னவென்று கேட்டேன்” 

அவன் குரலில் தென்பட்ட அந்நிய தன்மையில் விக்கித்து நின்றாள் சன்விதா. 

“அச்சுதன்....”

உடல் எஃகாய் இறுக கழுத்து நரம்புகள் புடைக்க நின்றிந்தான் அச்சுதன். அவள் வாயிலிருந்து தன் பெயரை ஒரு தடவை கேட்க  மாட்டோமா என்று எத்தனை நாள் ஏங்கியிருப்பான்.  அருணை உரிமையுடன் ஜிஜு என்று அழைக்கும் போது ஒவ்வொரு முறையும் வெந்து தணிந்தானே. ஆனால் இதயத்தில் விடாது தொடர்ந்த வலி அவனை நிதானமாக சிந்திக்க விடவில்லை. 

சிரமப்பட்டு மூச்செடுத்து தன்னை நிதானித்தவன் “நீங்கள் போகலாம் மிஸ் ஷர்மா” என்றான். 

அவனருகே வந்து இடது கை விரல்களை பற்றி கொண்ட சன்விதா “ப்ளீஸ் இப்படி  யாரோ மாதிரி நடக்காதீங்க எனக்கு கஷ்டமாய் இருக்கு....” நிமிர்ந்து விழி விரித்து பார்க்க அதுவரை தேங்கி நின்ற கண்ணீர் உடைப்பெடுத்தது கன்னங்களில் கோடாய் வழிந்தது.  

அவளை இப்படி பார்க்கவும் முடியவில்லை இப்படி அழ வைக்கவா அவள் பின்னே அலைந்து காதலித்தாய் மனசாட்சி கேட்க பதிலின்றி அவளை விட்டு விலகி நடந்தான்.  

கடைசியாக தொட்டு கொண்ட கைவிரல்கள் பிரிந்தன. 

“ஆகாஷ் காரை ரெடிபண்ணு” அச்சுதன் குரல் உச்ச ஸ்தாயியில் உத்தராவாய் ஒலிக்க வெளியே வந்த AKயை அதிர்ச்சியுடன் பார்த்து நின்றார்கள் அருணும் ஆகாஷும். 

ஒரே பார்வையில் மானாஸாவிடம் “நீ போய் சன்விதாவை பார், சீக்கிரம்” என்றவாறே ஆகாஷிடம் கண் காட்ட விரைவாக லிஃப்டை திறந்து அச்சுதன் போக தயார் செய்தான் ஆகாஷ்.

ஒரு நொடி நின்ற அச்சுதன், அருணிடம் “அவர்களை வீட்டில் விட்டுவிடு” என்றவன் போய்விட்டான்.   

அருண் உள்ளே சென்று பார்க்க சன்விதா அசைவின்றி நிற்க மானசா அவளை உலுக்கி கொண்டிருந்தாள். “ஏய் ஏதாவது பேசுடி” கன்னத்தில் தட்டினாள் ஒரு பயனும் இல்லை. கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்தது. 

“மானசா விலகு” என்றவன் ஒரு அறைவிட்டான். ஓங்கி அறையவில்லை ஆனால் வலிக்கும்படி அறைந்தான். அந்த அறையில் தன் நிலை அடைந்தவள் “அச்சுதன்....” ஓட போனவளை இழுத்து அணைத்து கொண்டான் அருண்.

“ஜிஜு அச்சுதன்...” சிறு குழந்தையாய் அவன் மார்பில் சாய்ந்து அச்சுதன் போன திசையை கைகாட்டி அழுதாள். 

“முதலில் இதை குடி” மானசா கொண்டு வந்த கிளாசை அவள் கையில் திணித்தான். ஒரே மூச்சில் குடித்தவளை அருகே இருந்த இருக்கையில் இருத்தி கேட்டான் “என்ன நடந்தது” 

“எனக்கும் தெரியலையே ஜிஜு” அடி வாங்கிய குழந்தையாய் கண்ணை விரித்தாள். ஆனால் அவளை நன்கு அறிந்த மானசா முறைத்தாள். “ஒழுங்கு மரியாதையா நாங்க வெளியே போனதிலிருந்து நடந்ததை சொல்லு” மிரட்டினாள். 

‘என்ன இது’ என்பது போல் அருண் பார்த்தான். 

“சும்மாயிருங்கள் நீ சொல்லடி” அதட்டினாள். 

“கல்யாணம் செய்வோமா என்று கேட்டார், அம்மா அப்பாவிடம் வந்து பேசுவதாக சொன்னார் நான்.... ஒன்றும் சொல்லவில்லை பழச்சாறு குடிக்க சொன்னேன் தீடிரென்று யாரோ போல் நடக்க தொடங்கிவிட்டார்”

“நீ வேறு எதுவுமே சொல்லவில்லையா...?” அழுத்தமாய் கேட்டாள் மானசா.

“இல்லையே...” என்று இழுத்தவளுக்கு ஞாபகம் வந்தது “பார்வையை பாரு, எல்லாம் வெறும் வேஷம், எல்லாமே சவாலில் வெற்றி பெற....” என்று தான் முணுமுணுத்தது. ஆனால் வாய் திறக்க மறுத்துவிட்டாள். இப்பொது புரிந்தது அவள் வார்தைகள் தான் அவனை வலிக்கச் செய்துவிட்டது  

கண்களில் மீண்டும் நீர் திரையிட கூறினாள் “என் மீது தான் தப்பு”

Reply
Page 6 / 6
Share:

error: “These tales are woven with care. Please don’t copy—let the words live here.”