யாசகம் ♥ 21
அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சன்விதாவுக்கு புரியவே செய்தது அவன் உண்மையை தான் சொல்கின்றான் என்று ஆனால் பார்வதி அவனை முத்தமிட்ட காட்சி கண் முன் வரவே அவளால் சகித்து கொள்ளவே முடியவில்லை. சட்டென எழுந்து போக முயல அவள் மணிக்கட்டில் பிடித்து அருகே இழுக்க நெஞ்சில் மோதி நின்றவள் முகத்தை குனிந்து நோக்கினான்.
அவள் மனதில் ஓடும் எண்ணம் புரிந்த போதும் அவளை எப்படி நம்ப வைப்பது என்று புரியாமல் "சன்வி லிஸின் டு மீ, பார்வதி யாருன்னே எனக்கு தெரியாது"
"அதை பற்றி எனக்கு அக்கறையில்லை மிஸ்டர் அச்சுத கேசவன்"
"ஓஹ் ரியல்லி....."
"ஹா ரியல்லி"
"பிறகு எதுக்குடி அந்த பார்வதியை அடித்தாய்?"
"நா நான் என்னோட பிரண்ட காப்பாத்த அப்படி செய்தேன்"
"ரியல்லி ரோஸ், என்னை முதல் முறை சந்தித்த அன்றேவா!"
"......."
"என்னை சந்தித்த முதல் நாளே சொல்லியிருக்க வேண்டியது தானேடி நீ என் பிரண்ட கிஸ் பண்ண அதான் பிடிக்கல என்று"
"......."
"ஏன் என்று நான் சொல்லவா? என்னை இன்னொரு பெண்ணோட உன்னால நினைத்து கூட பார்க்க முடியல அதான் காரணம், அதுக்கு பெயர் பொஸசிவ்னஸ்"
"இல்லை அப்படியில்லை" கிட்டத்தட்ட கத்தினாள்.
"நீ அலுவலகத்துக்கு வந்தது போன் தாரத்துக்கு இல்ல, நான் எப்படி இருக்கின்றேன் என்று பார்க்க"
"இல்ல நான் போன் தரத்தான் வந்தேன்"
"அதை வீட்டில் அக்கவிடமே கொடுத்திருக்கலாமே?"
"......."
"என்ன காரணம் என்று நான் சொல்லவா?" அவனின் செங்கபில நிற கண்கள் அவளை ஆழ்ந்து நோக்கியது
"நான் எப்படி இருக்கின்றேன் என்று பார்க்க.... அக்கறை...."
"இல்லை எனக்கு அக்கறையில்லை"
"உனக்கு அக்கறை இருக்கு"
"இல்லை அப்படியில்லை"
"யெஸ் யூ டூ"
"நோ......" கண்களில் நீர் திரண்டுவிட்டிருந்தது.
உலகத்தையே எதிர்த்து நிற்க முடிந்த அச்சுத கேசவனால் எதிர்த்து நிற்க முடியாதது அவனது அக்காவினதும் சன்வியினதும் கண்ணீர். அவள் கண்களில் நீரை கண்டதும் கையை விட்டுவிட்டான்.
"ப்ளீஸ் அவள் யாரென்றே தெரியாது சன்வி" சோர்வுடன் கூறினான் "அவளை முத்தமிட்டது உன்னை வருத்தப்படுத்தியிருந்தால் மன்னிச்சிரு, ஆனால் எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை" அவள் உடல் மொழி கூறியது இப்போது எதை சொன்னாலும் அவள் ஏற்றுக் கொள்ள போவதில்லை.
சோர்வுடன் "உனது மேஜை அதோ அங்கே இருக்கிறது" அவனது அறையின் அருகே இன்னொரு அறையாக கண்ணாடி தடுப்பு வைத்து அமைக்கப்பட்ட அறையை காட்டினான்.
வேறு எதுவும் பேசாமல் அவன் அறையை காட்டி போக சொல்ல ஒரு கணம் விழித்தவள் ஓரடி எடுத்தது வைத்தவள் திரும்பி பார்த்து ஏதோ கேட்க நினைத்து மனதை மாற்றியவளாய் திரும்பியவளை அவன் குரல் தடுத்து நிறுத்தியது.
"என்ன சன்வி எதுவாயிருந்தாலும் கேட்கலாம்" புன்னகைத்தான்.
"அந்த விபத்து...." தயங்கியவளுக்கு எடுத்து கொடுத்தான் "அந்த விபத்துக்கு என்ன?" அவள் கேட்க வருவது புரிந்த போதும் அவனுக்கு அதை அவள் வாயால் கேட்க ஆசையாய் இருந்தது.
"இல்ல அந்த விபத்தால் வேறு எந்த பிரச்சனையும் இல்லை தானே?" குனிந்தவாறு கேட்டாள்
அவன் முகத்தை பார்க்கவில்லை பார்த்திருந்தால் தெரிந்திருக்கும் சந்தோசம் மகிழ்ச்சியின் அர்த்தம். அவன் முகம் அதன் இலக்கணமாய் இருந்தது "யூ மீன், போலீசால்.... இல்லை அப்படி எதுவும் இல்லை" அப்பாவியாய் பதிலளித்தான்.
"ச்சு... அதில்லை தலையில் அடிபட்டது அத....." நிமிர்ந்து முகம் பார்த்தவள், அவன் கண்ணில் வழிந்த குறும்பில் வார்தை பாதியில் நின்றது. ‘இவனோட ஒரு வார்தையை முடிக்க முடியுதா எப்ப பார் பாதியிலேயே நிற்குது’ மனதினுள் வறுத்தாள்.
பாண்ட் பாக்கெட்டினுள் கைவிட்டவாறே அவள் முன்னே வந்து நின்று குனிந்து பார்த்தவன் கேட்டான் "அக்கறைதான் இல்லையா?"
பேச்சின்றி உதடு கடித்து தலை குனிந்தாள்.
ஒரு கணம் குனிந்திருந்த தலையை பார்த்தவன் "நீ பிடிவாதக்காரி என்று தெரியும் ஆனால் இவ்வளவு பிடிவாதமா? உன் மனம் சொல்வதையாவது கேட்கலாமே"
"........"
"நிமிர்ந்து பார் சன்வி" கண்டிப்புடன் கூறினான்
நெஞ்சின் உயரமே இருந்த அவள் அண்ணாந்து அவனை நோக்க அவன் மனம் மீண்டும் கோவிலில் அவளை சந்தித்த நாளிற்கு செல்ல மெல்லிய புன்னனகையின் சாயல் முகத்தில் நிழலாட மென்மையாக கேட்டான் "என் கடந்த காலத்தை மறந்து மன்னிக்க கூடாதா?"
அச்சுதனுக்கே ஆச்சரியமாக இருந்தது சிறு பெண்ணிடம் கெஞ்சி கொண்டிருப்பது தான் தானா என்று. அவன் பரம்பரைக்கும் வசதிக்கும் தமிழ் நாட்டில் மட்டுமல்ல பக்கத்து மாநிலத்தில் இருந்து கூட பெண் தருவதற்கு தயாராய் இருந்தார்கள். எதுவித நிபந்தனையும் இன்றி ஆனால் அவன் மனமே இந்த பிடிவாதக்காரியின் காலடியில் கிடக்கிறது. அதை விட ஆச்சரியம் அதை அவன் மனம் விரும்பியே செய்தது. அவனுக்கும் ஈகோ தொடங்கி எல்லா ஈர வெங்காயமும் இருந்ததது இருக்கின்றது.
அவன் கண்களையே பார்த்த சன்விதாவுக்கு மறந்தால் தான் என்ன என்று ஒரு கணம் தோன்றியது. மறு கணமே அன்று பார்வதியுடன் நெருக்கமாக இருந்த தருணம் கண் முன் வந்து மெல்லிய பிடிவாதத்துடன் போக அவனிடமிருந்து பார்வையை திருப்பினாள்.
கண்களிலிருந்து அவளின் மன ஓட்டத்தை படித்தவன் கண்கள் ஒரு கணம் பளிச்சிட்டது.
நாடி பிடித்து தன்னை நோக்கி திரும்பி அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தவன் உச்சி முடியை ஒதுக்கியவாறே கூறினான் "இப்போது வெளியில் போகின்றேன். நாளை சந்திக்க முடியுமா தெரியவில்லை, எப்படியும் அடுத்த இரண்டு நாட்களுக்கு உனக்கு என் தொல்லையில்லை" அவள் கண்களில் கணத்தில் ஓடி மறைந்த ஓர் உணர்வை கண்டு கொண்டவன் திருப்தியாக புன்னகைத்தான்.
"இந்த இரண்டு நாளும் அலுவலகம் வர வேண்டிய அவசியம் இல்லை. லீவு எடுப்பதானால் எடுத்து கொள், ஆ அப்படியே கண்ணனுக்கு நன்றியும் சொல்லலாம் இல்லையா? தாங்யூ கண்ணா... யூ ஆர் மை பெஸ்டி....., அப்புறம் என்ன ஆஹ் பிளையிங் கிஸ்" கூறியவனை, அவளையே அறியாமல் வந்த சிறு புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தாள் சன்விதா. என்னை இவ்வளவு தூரம் அறிவானா இவன் மனம் ஆச்சரியத்துடன் நினைத்தது.
தலை சாய்த்து அவளையே சிறு முறுவலோடு பார்த்திருந்தவன் சட்டென ஒரு கையால் இடையே பற்றி தன்னை நோக்கி இழுத்தவன், நெஞ்சில் கை பதித்து விழி விரிய நின்றவள் கன்னத்தை பற்றி வலது கன்னத்தில் கண்களுக்கும் காதுக்கும் நடுவில் உள்ள இடைவெளியில் அவள் கன்னத்தோடு கன்னம் வைத்து சிறு தாடி குத்த அழுந்த சத்தமாய் முத்தமிட்டான்.
சில கணங்களுக்கு அதிகமாகவே நின்று விலகியவன் இமைகளை தட்டி விழித்து நின்றவளின் கன்னத்தை பெருவிரலால் வருடியவன் "இரண்டு நாள் தாங்க வேண்டுமில்லையா?" தன் செயலுக்கு நியாயம் கூறினான்.
"குத்துது..." ஏதோ மயக்கத்தில் மெதுவாய் உளறினாள்.
சட்டென கன்னம் இரண்டையும் தாங்கி கொண்டவன் கண்களின் வேட்கை பார்வையில் சன்விதா கண்களை மூடி கொள்ள, அவள் கண் மூடி நின்ற மோக நிலையை விழியாகலாது பாத்தவன், கண்களை இறுக மூடி ஆழ்ந்து சுவாசித்தது சிரமப்பட்டு தன்னை கட்டுப்படுத்தி மேசையிலிருந்த போனை எடுத்தவன் வேகமாக வெளியே சென்றுவிட்டான்.
கண்ணாடி வழியே அவன் போவதை பார்த்து கொண்டிருந்த சன்விதா மெதுவே அவன் முத்தமிட்ட இடத்தை தொட அது சில்லென்று இருந்தது.
இது என்ன கண்ணா, நெற்றி கண்ணில் முத்தமிடுவார்கள், கன்னத்தில் முத்தமிடுவார்கள் இதழில் கூட இது என்ன எப்ப பார்த்தாலும் இந்த இடத்தில் தான் கிஸ் பன்றான்.
அப்ப... அவன் கிஸ் பண்ணது உனக்கு பிரச்சனை இல்லை! மனசாட்சி தெளிவுபடுத்தி கொள்ள கேட்க இன்னும் குழம்பிபோய் நின்றாள் சன்விதா.
♥♥♥♥♥
வெளியே சென்றவன் காதிலிருந்து ப்ளூ டூத்தை தட்டியவாறே காரை எடுத்தவன் "ஆகாஷ், ஒரு விபரம் வேண்டும் இன்னும் டுவெண்ட்டி போர் ஹௌர்ஸ்குள்ள பெயர் பார்வதி ராய் லாஸ்ட் இயர் டெல்லியில் நடந்த பேஷன் ஷோ வந்திருக்கலாம், ஆஹ் அதோட சன்விதாவோட பிரண்ட் ஆங்கிலோ இந்தியன் உமாகரனுக்கும் தெரிந்திருக்கும், வழமையான டிடெக்ட்டிவ் ஏஜென்சியிடம் சொல்லி விசாரிக்க சொல், தகவல் இம்மீடியட்ட வேண்டும்."
"எஸ் சார்" என்றவனிடம் "ஆஹ் இன்னொன்று" விபத்துக்கு அடுத்த நாளினை கூறி "அந்த டேட்ல இருக்க டெல்லி ஆஃபீஸ், ஆஃபீஸோட என்ரன்ஸ் பில்டிங் உள்ளே வரும் போது இருக்கும் அத்தனை CCTV பூட்டேஜ் இம்மீடியட்ட வேனும்"
"புல் டேயா சார்"
"யெஸ் இமிடியாட்டா அனுப்ப சொல்லு"
"ஸுயர் சார், இன்று நைட்டே உங்களுக்கு டீமில் ஷேர் பண்ணிறேன்"
"யா ஓகே"
அதன் பின் அவனை வேலை விழுங்கிக் கொண்டது. பல ஏற்றுமதி இறக்குமதி தொழில்கள், தொழிற் சாலைகள் மீட்டிங் என்று நேரம் இறக்கை கட்டி நின்றாலும் அவளை பார்க்காமல் நகர விட மாட்டேன் என்று மனம் அவனுடன் மல்லுக்கு நின்றது.
அன்று நள்ளிரவு மதுரை செல்லும் விமானத்தில் ஜன்னலோரம் கை முஷ்டியை வாயில் வைத்து இருந்தவன் மனமும் வெளியே ஓடும் மேகங்களுடன் உள்ளே ஓடிக் கொண்டிருந்தது.
மதுரையின் பெரிய ஜாமீன் பரம்பரை அவனுடையது. மதுரை மாவட்டத்தில் தேர்தலில் நிற்பது யாரென்பது முற்று முழுதான அவனது முடிவு. அவனை மீறி நின்றால் அவனது சிறு கண்ணசைவில் ஒரு ஒட்டு விழாது. வேட்டி சட்டை கட்டாத நாட்டாமை.
சன்வி முக்கியம் அதே அளவு அவனது கடமையும் முக்கியம் வேறொரு நேரமாக இருந்தால் ஆறுதலாக ஆற அமர ஒரு பத்து நாள் நின்று வந்திருப்பான். இங்கே அருண் பார்த்து கொள்வான் எனவே தொழிலை பற்றி கவலையில்லை. இந்த தடவை டெல்லி போய் வந்தது போல் இரண்டு நாளில் வர முடியாது. பெரிய்ய்ய கெத்தாய் அவளிடம் இரண்டு நாள் என்று சொல்லிவிட்டான். ஆனால் குறைந்தது நான்கு நாட்களுக்கு அசைய முடியாது. அதிலும் குறைந்தது இருபது மணித்தியாலம் வேலையை பார்க்க வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக அவனது குடும்பத்தின் மேல் கொலை செய்ய முயற்சி நடக்கின்றது. விசாரித்ததில் அடி அத்திவாரம் மதுரையிலிருந்து என்று வரவே அதை அடியோடு களைந்தாக வேண்டிய கட்டாயம். சன்விதா மேலும் இரண்டு தடவை கொலை முயற்சி நடந்தாகிவிட்டது. அன்று மாலில் நடந்த சம்பவத்தில் செக்யூரிட்டியை அடித்து போட்டது வேறொரு கூட்டம், சன்விதாவை துரத்தி வந்தது வேறொரு கூட்டம். பேசாமல் அவளையும் அவனுடன் அழைத்து வந்திருக்கலாம் தான் ஆனால் அதில் இன்னும் அபாயம் அதிகம்.
அனைத்தையும் பார்க்க பத்து நாளே போதாதது போல் இருக்க ஆயாசத்துடன் பின் புறமாக இருக்கையில் தலை சாய்த்தான்.
♥♥♥♥♥
இங்கோ அவன் செல்வதை கண்ணாடியுடே பார்த்தவள் தான் என்ன நினைக்கிறன் என்பதே அவளுக்கு புரியவில்லை.
கொஞ்சம் கொஞ்சமாக அச்சுதன் தன் மனதை ஆக்கிரமிப்பது புரிய தலையில் கை வைத்துக் கொண்டு இருந்துவிட்டாள். விபத்தின் போது அவனை தனியாக சந்திக்க சென்றது அவன் கூறியது போல் இன்னதென்று இனங் காண முடியாத அக்கறைதான். அவன் கண்டு கொண்டானே என்று இருந்தது.
அன்று வந்த கனவுடன் இன்று அவள் இடையே பற்றிய போது ஏற்பட்ட உணர்வும் அன்று கோவிலில் வந்தது போலவே இருக்கவே தெளிவாக குழம்பினாள். அப்படியானால் இருவரும் ஒன்றா என்ற கேள்விக்கு ஆம் இல்லை என இரண்டு பதிலும் வர தலையை பிய்த்து கொள்ளாதாது தான் குறை.
அன்று கேசவ்வை விரும்பி அவன் குணம் சரியில்லை எனக்கு சரி வராது என்று விலகினேன். பின் முகம் தெரியாத ஒருவனை கோவிலில் கண்டு காதல் கொண்டேன். இப்போது இந்த அச்சுதனை கொஞ்சம் கொஞ்சமாக பிடிக்க தொடங்குது. எப்ப எப்படி என்றெல்லாம் தெரியல. நான் என்ன மாதிரிப் பெண் கண்ணா, கண்ணனிடமே கேட்டாள்.
அவனோட காதல் உண்மையானது தான் ஆனா என்னோட காதல் உண்மையானதா? அப்படி உண்மையானதா இருந்தால் அன்று ஏன் கேசவ்வை விட்டு விலகி வந்தேன் குற்றம் குறைகளை ஏற்று எதையும் எதிர்பார்க்காது வருவது தானே காதல். சுய அசலில் சோர்வுற்று நிமிர்ந்தவள் கண்ணில் தேங்கியிருந்த கண்ணீர் கோடாய் கன்னத்தில் இறங்கியது.
கண்ணன் இரக்கத்துடன் அவளைப் பார்த்தான். அச்சுதன் அவளிடம் கேட்டது போல் அச்சுதனிடம் ஒரே ஒரு கேள்வி 'என்னை முதல் முறை பார்த்தது எங்கே?' கேட்டிருந்தால் இந்த குழப்பமே இருந்திருக்காதே.
பொசெசிவ்னெஸினால் வரும் கோபத்திற்கும் சாதாரண கோபத்திற்கும் வித்தியாசம் புரியாமல் தவிக்கும் சிறு பெண்ணை பார்க்க அருகேயிருந்த ருக்குவுக்கே பாவமாய் இருந்தது. கண்களில் கருணையுடன் கண்ணனை பார்த்து கேட்டாள். "குழந்தை தவிக்கிறாள் பாவமில்லையா?".
"அன்று உதவ வேண்டாம்.... என்றாய்?" நிறுத்தி நிதானித்து குறும்புடன் கேட்டான் கண்ணன். ருக்கு பதிலுக்கு முறைக்க "சரி சரி அவன் பத்து நாளிற்கு முன் வர முடியாத படி செய்து விடுகின்றேன் போதுமா?"
"பாவம் தவித்து விடுவாள், உங்களுக்கு இரக்கமேயில்லை"
"கனவில் சொல்லியும் புரியவில்லை. தவிக்கட்டும் அப்போது தான் சிலது புரியுமில்லையா?" புன்னகையுடன் கூறிய கண்ணனை கண்கள் மலர்த்தி பார்த்த தேவிக்கு புரிய கருணை நிறைந்த கண்களை சன்வி புறம் திருப்பினாள்.