Share:
Notifications
Clear all

மொழி - 16

Posts: 45
Admin
Topic starter
(@admin)
Member
Joined: 2 months ago
மொழி  - 16
 
 
“எப்படி இருக்கு பிங்கி மாத்தையா?” லெகனவை விரித்து பிடித்தபடி தன்னைத் தானே சுற்றிக் காட்டினாள் ஜானகி. இருவரும் அந்த நட்சத்திர ஹோட்டலின் சிறு ஹோலுக்கு செல்லும் வழியில் நின்றிருந்தார்கள்.   
 
 
“லஸ்ஸனாய்” என்றவன் பார்வை ஒரு கணம் மாற, மாற்றத்தை கண்டு கொண்டு மீண்டும் தயங்கினாள் அவள்.
 
 
அவளருகே நெருங்கி வந்த நிஷாந்த பான்ட் பொக்கேடினுள் கையை விட்டவாறே சற்றுக் குனிந்து “யமு” என்றான் அறையை கைகாட்டி.
 
 
அவன் வாசம் நாசியை நெருட லேசாய் தலையாட்டியவள் தனக்குள் என்ன நடக்கிறது என்று தெரியாத குழப்பத்துடன் நடக்க, உதட்டினுள் சிறு முறுவலுடன் பின் தொடர்ந்தான் அவன்.
 
 
யதியும் சொரூபனும் உள்ளே வர மெல்லிய வெளிச்சத்துடன் அதீத அலங்கரமின்றி இருந்தது. உள்ளே நிஷாந்த, ஜானகி, மாறன், ஜெகதீஸ் என்று தெரிந்த சிலருடன், அறிமுகமில்லாத இன்னும் சிலரும் நின்றிருந்தார்கள். நேரடி அறிமுகம் அற்ற போதும் அவர்களை தெரிந்தே வைத்திருந்தாள் யதீந்திரா. சொரூபனின் நெருங்கிய நம்பிக்கை வட்டத்தில் உள்ளவர்கள். இவர்கள் இங்கே என்ன செய்கின்றார்கள்.
 
 
அந்த அறையில் நடுவிலிருந்த மேசையில் கேக் இருக்கவே சொரூபனை கேள்வியாய் நோக்கினாள்.
 
 
“ஹப்பி பர்த்டே” மெல்லிய முறுவலுடன் வாழ்த்து சொன்னான். அவள் மறுத்து ஏதோ சொல்ல வர “ஐ நோ, அதான் சின்னதாய்... ப்ளீஸ் வாரும்” அழைத்தான்.
 
 
அவள் தயக்கத்தை கண்டு கொண்டு அவனே கையை பிடித்து அழைத்து சென்று கேக்கை வெட்ட வைத்தான். ஜானகிதான் அழுகையுடன் அவளைக் கட்டிக் கொண்டாள். இத்தனை வருடத்தில் ஒரு நாள் கூட கேக் வெட்டியதில்லை.
 
 
அவனே எடுத்து அவளுக்கு ஊட்டி விட அவளுக்கோ நடப்பது அனைத்தும் குழப்பாமாய் இருந்தது. சிகரம் வைத்தது போல் அவள் கையில் மோதிரம் ஒன்றை அணிவித்து விட பிறந்த நாள் பரிசு என நினைத்து சிறு புன்னகையுடன் ஏற்றுக் கொண்டவள் கைவிரலில் இருந்த மோதிரத்தை திருப்பி அழகு பார்த்தாள்.
 
 
இன்னொரு மோதிரத்தை அவன் கையில் வைத்து அழுத்த அவனை ஏறிட, கையை நீட்டி கண்களாலேயே சொன்னான் ‘போட்டு விடு’. சுற்றிப் பார்க்க மாறன், ஜானகி, நிஷாந்த என்று அனைவருமே அவளை ஆர்வமாய் நோக்கினார்கள்.
 
 
“யதி” அழுத்தமாய் அழைத்தான் சொரூபன்.
 
 
“ஹா”
 
 
“போட்டு விடு” அவள் கண்களை ஆழ்ந்து பார்த்து கையை நீட்டினான்.
 
 
மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல் அவன் விரலில் மோதிரத்தை அணிவிக்க அனைவரும் கை தட்டினார்கள். பளபளவென காமர பிளாஷ் விழவே நிமிர்ந்து பார்த்தாள் ஐந்தாறு பேர் கையில் புகைப்பட கருவியுடன் நின்றார்கள்.
 
 
என்கேஜ்மென்ட்,
 
 
நாளை இருவரினது என்கேஜ்மென்ட்டும் அனைவருக்கும் தெரிந்து விடும்.
ஆனாலும் ‘ஏன்?’ என்ற கேள்வி மனதைக் குடைந்தது.
 
 
யோகேஸ்வரனை மட்டும் பழி வாங்குவது சொரூபனின் நோக்கமில்லை தன்னையும் பழிவாங்க தான் சொரூபன் அனைத்தையும் செய்தான். அனைத்தும் தெரிந்தேதான் அவனுடன் இருந்தாள். இன்று ஏன் இந்த திடீர் நிச்சயம்? ஓரமாய் ஒதுங்கி நின்று யோசித்தவளை சொரூபனின் சிறு கண்ணசைவில் யாரும் தொந்தரவு செய்யவில்லை.
 
 
வழமையாய் அவளிடம் செல்லம் கொஞ்சும் ஜானகி தன் குழப்பத்தில் பழசாறு ஒன்றை கையில் வைத்துக் கொண்டு ஒதுங்கி நின்றிருந்தாள்.
 
 
அருகே வந்த சொரூபன் பிளஸ் குறீயிட்டில் தலையில் இருந்த பிளாஸ்டரை வருடி விட்டு “எனக்கு கொஞ்ச நாள் தாரும். எல்லாத்தையும் சரி செய்திட்டு உம்மிடம் விளக்கமாய் சொல்கிறேன்” என்றான்.
 
 
“நிஷாந்த அண்ணா லண்டன் போகலையா? மெல்லிய குரலில் கேட்கவே “உங்கள் இருவரின் எங்கேஜ்மென்ட் பார்க்கனும் அதான் போகல” என்றவாறே மறுபுறம் வந்து நின்றான் நிஷாந்த.
 
 
“ஜானகி” என்று ஆரம்பிக்கவே “நீங்கள் இருவரும் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்ததும் பார்ப்போம்” அப்போதைக்கு தள்ளிப் போட்டான்.
 
 
தன் பிரச்சனைகளை மறந்து கையை மார்புக்கு குறுக்கே கட்டி “என்ன பிரச்சனை” விசாரித்தவள் குரலில் சொல்லியே ஆகவேண்டும் என்ற தொனி.
 
 
சற்று நேரம் கையில் வைத்திருந்த கண்ணாடி கிளாஸை பார்த்திருந்தவன் “வயது” என்றான்.
 
 
“உங்களுக்குதான் அவள் நிலை பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறேனே. வயது வித்தியாசம் இருந்தால்தான் நல்லது”
 
 
“யோசித்து சொல்கிறேன்”
 
 
மார்புக்கு குறுக்கே கை கட்டி, அருகே இருந்த கண்ணாடி சுவரின் மீது சாய்ந்து தன் நண்பனை அன்பால் அதிகாரம் செய்தவளை ரசனையாய் பார்த்துக் கொண்டிருந்த சொரூபனின் பார்வையை கவனித்த நிஷாந்த தொண்டையை செருமினான் “க்கும்”.
 
 
திடுக்கிட்ட சொரூபன் நண்பனின் பார்வையில் வெட்கத்துடன் பின் தலையை கோத வாய் விட்டே சிரித்தான் நிஷாந்த “நான் சாப்பிட்டு இடத்தை காலி பண்ணுறேன்” கேலி செய்தவாறே சாப்பிட செல்ல இருவரும் லேசாய் சிவந்த முகத்துடன் அவனை பின் தொடர்ந்தார்கள்.
 
 
“பிங்கி நானும் வாரேன்” என்றவாறே ஜானகி வரவும் இப்போது சொரூபன் சத்தமாய் நகைத்தான்.
 
 
அவன் நகைப்பில் மீண்டும் தயங்கினாள் பேதை.
 
 
***
 
 
உடை மாற்றி கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் யதி. கைபேசியை சுழற்றியவாறே யோசனையில் இருந்தவளை கலைத்தது சொரூபனின் குரல்.
 
 
“ஹெலோ” கைபேசியில் உரையாடியவாறே அவள் மடியில் தலை வைத்தான். “நாளை காலை எனக்கு வேண்டும்.” என்றதுடன் அதை துண்டித்து கட்டிலில் எறிந்து விட்டு “நித்திர கொள்ளல” அவள் முகம் நோக்கி கேட்டான்.
 
 
“வரல”
 
 
“ஹம்” கண்ணை மூடினான். அவன் கை நெஞ்சில் இருக்க அதிலிருந்த மோதிரத்தை இரு விரலால் திருப்பியவாறே கேட்டாள் “ஏன்?”.
 
 
‘விட மாட்டாள் போல இருக்கே’ கண்ணைத் திறக்கமால் புன்னகைத்தான்.
 
 
“கேட்கிறேனே” அப்படியே தலையணைக்கு நழுவினான்.
 
 
அவனருகே சரிந்தவள் விரல் திறந்திருந்த சட்டையின் வழியே அவன் மார்பு உரோமங்களில் விளையாடியது. அவள் கையை இறுக்கிப் பிடித்தவன் “அஹ் ஹா” என்றான் அவள் கண்ணோடு கண் கலந்து.
 
 
வியப்புடன் பார்க்கவே “இரண்டு நிபந்தனை” என்றான் சொரூபன்.
 
 
சற்றுப் பயத்துடன் ‘என்ன’ என்பது போல் பார்த்து வைத்தாள்.
 
 
“முதலாவது டப்லேட் பயன்படுத்தக் கூடாது, அல்சர் கூடிரும். அதோடா” அவன் ஒரு கை அவளின் ஆலிலை வயிற்றை தடவ கூறினான் “இங்கே எனக்கு பேபி பம் பார்க்கனும். உள்ளே பேபி அசைவது தெரியனும்” அந்தக் கைகயின் கீழ் அவள் சருமம் கூசி சிலிர்க்க “போய்யா” அவனுக்கு முதுகு காட்டிப் படுத்தாள்.
 
 
“ஏன் வேண்டாமா?” பின்னிருந்து அணைத்து கன்னத்தோடு கன்னம் இழைத்தான். அவன் குரல் மனதை ஏதோ செய்தது.
 
 
விழிகள் எங்கோ நோக்க கூறினாள் “குழப்பமாய் இருக்கு”
 
 
“சரி தெளிந்து வா” அணைத்துக் கொண்டு கண்ணை மூடினான்.
 
 
“சொரூபா” அவன் மார்பில் புதைய “சொரூபா இல்ல ஞானா, தூங்கும்மா” தலையை வருடிக் கொடுத்தான்.
 
 
“சரிஈ....”
 
 
“என்ன சரி” அவளிடமிருந்து விலகி ஆர்வமாய் நோக்கினான்.
 
 
அவன் சட்டை பொத்தானை திருகியவாறே “டேப்லேட் யூஸ் பண்ணல” முணுமுணுத்தாள்.
 
 
“ப்ராமிஸ்” அவள் கையை எடுத்து தன் தலை மீது வைத்துக் கேட்டான்.
 
 
ஆமோதிப்பாய் தலையசைத்தவள் அவன் முரட்டு இதழ்களுடன் தன் இதழ்களை இணைத்துக் கொண்டாள். முதல் முறையாக அவள் கொடுத்த முத்ததில் கிறங்கிப் போனான் சொரூபன்.
 
 
“இன்று உங்களை தவிர எனக்கு வேறு எதுவும் ஞாபகம் இருக்கக் கூடாது” அவன் கழுத்தை சுற்றி கையைப் போட்டு காதில் கூறவே அப்படியே அள்ளிக் கொண்டான்.
 
 
வழமையாய் ‘ஞானா ஞானா’ என்று அவளைப் புலம்ப விடுபவன் இன்று அவளின் இசைவிலும் அசைவிலும் ‘யதி யதி’ என்று அவள் பெயரையே மந்திரமாய் உச்சரித்தான். இத்தனை நாளில்லாத இணக்கத்தைக் காட்ட அதுவே அவன் மோகத்திற்கு தீ மூட்டியது.
 
 
கைகளில் களைத்து சோர்ந்து போய் இருந்தவள் நெற்றியோடு நெற்றி முட்டி “இத்தனை நாள் எங்கேடி வைச்சிருந்த, ட்ராக் அடிக்ட் மாதிரி உனக்கு அடிக்ட் ஆகிருவேன் போலேயே” கண்களை நோக்கி கிறக்கமாய் கேட்க நாணத்துடன் அவன் மார்பில் ஒளிந்து கொண்டாள்.
 
 
 
 
“மச்சா இத விட சொன்னேன் உன்ன” சீறினான் நிஷாந்த.
 
 
“நீ இதில் தலையிடாதே” பதிலுக்கு பாய்ந்தான் சொரூபன்.
 
 
“தங்கச்சி பாவம்டா நீ சொல்வது செய்வது எல்லாம் உண்மையென்று நம்பிட்டு இருக்கு”
 
 
“நானா நம்ப சொன்னேன். கொஞ்சமாவது மண்டைக்குள் திரவியம் இருக்கணும் இல்லாட்டி இப்படித்தான்” ஏளனமாய் பதில் கொடுத்தான் சொரூபன்.
 
 
இருவரும் தோட்டத்தில் சண்டை பயிற்சியில் ஈடுபட்டவாறே கதைத்து கொண்டிருக்க சத்தமின்றி மெதுவே அங்கிருந்து நகர்ந்தாள் யதி.
 
 
அவளுக்கு எதிர்புறத்தில் இன்னொருவனும்.
 
 
யதி வந்ததையே சென்றதையோ கவனிக்காத இருவரும் அவன் செல்வதைப் பார்த்து சத்தமின்றி சிரித்துக் கொண்டனர்.  
 
 
காலையில் எழுந்ததும் அவன் முகம் காண தேடி வந்திருந்தாள். நல்லதாய் போயிற்று. கண்களில் நிறைந்த நீர் கன்னத்தில் வழிய அறைக்குச் சென்றவள் கைபேசியை எடுத்து மாறனுக்கு அழைத்தாள்.
 
 
“அந்த கோப்புகளை வீட்டிற்கே அனுப்பி விடுங்கள். இன்று அலுவலகம் வர இயலாது” என்றவள் “அன்று நீங்கள் சொரூபனிடம் என்ன சொன்னீர்கள். டென்ஷனா இருந்தார்” நேரடியாகவே கேட்டுவிட்டாள்.
 
 
“உன் அப்பா விபத்துக்கு முன் வீட்டிற்கு வந்து போனது, விபத்தின் போது நான் உன்னருகே இருக்க முடியாமல் போனது பற்றி பேசிக் கொண்டிருந்தோம் வேறு எதுவுமில்ல, ஏன் என்னாச்சு அவன் ஏதாவது சொன்னான?” அவர் கூறிய பதிலில் அவள் கேள்விக்கு விடை கிடைத்திருந்தது. திடீரென்று பேபி பற்றி ஏன் பேசினான் என்பதும் புரிந்தது.
 
 
‘சோ நௌவ் ஹி க்னோ அபௌட் த டீட்’
 
 
அவள் கண்ணில் கண்ணீர் இல்லை.
 
 
கடந்த சில நாட்களாய் இளகியிருந்த மனம் மீண்டும் இறுகிவிட்டிருந்தது. உள்ளங்கையில் போனை தட்டியவாறே யோசித்துக் கொண்டிருந்தாள்.
‘அடுத்து என்ன செய்வது’
 
 
சொரூபன் மீண்டும் உள்ளே வந்த போது கட்டில் உறை மாற்றி நீட்டாய் இருந்தது. என்றுமில்லாத உற்சாகத்துடன் காலையில் எழுந்தவன் அவளையும் எழுப்பினான். உறக்கத்தில் அரைக் கண் திறந்து பார்த்தவள் “ஞானா, தூக்கம் வருது” சிணுங்கியவாறே புரண்டு படுக்க நெற்றியில் இதழ் பதித்து சென்றுவிட்டான்.
 
 
மனமெல்லாம் ஒரு வித சந்தோசம் வியாபித்திருக்க அவளைத் தேடினான் சொரூபன். பல்கனியில் நின்று தலையை துடைத்துக் கொண்டிருந்தாள். கேசத்தை உதறி முதுகில் எறிய பின்னால் வந்து நின்றவன் முகத்தில் மோதி விழுந்தது.
 
 
“நைஸ் சம்போ” என்ற குரலில் துள்ளி விலகவே “ஹேய் பார்த்து” தோளைப் பிடித்து நிறுத்தினான்.
 
 
திடிரென எதிர்பாரமால் வந்ததில் என்ன சொல்வது செய்வது என்று புரியாமல் தலை குனிந்து நின்றாள் யதி. குனிந்திருந்த அவள் முகம் பார்த்தவன் உதட்டில் அழகாய் புன்னகை பூக்க பெரு விரலால் அவள் கழுத்து வளைவில் வருடினான்.
 
 
“சொரி” அவன் ஆண்மை நிறைந்த குரல் கிசுகிசுப்பாய் ஒலித்தது.
 
 
அவன் தொடுகையில் தேகம் சிலிர்க்க தடுமாறினாள் “எஎன்ன?” கீழ்க் கண்ணால் பார்க்க அவனின் அடையாளம். அருகே நெருங்க அவளோ விலகினாள். புருவம் சுருக்கி கேட்டான் “என்ன?”
 
 
“குளிச்சிட்டேன் வியர்வை நான் நீங்க” வார்த்தைகள் தனித்தனியாய் விழுந்தது.
 
 
“இன்னொரு தரம் என்னுடன் சேர்ந்து குளி” கண்களில் குறும்பு மின்ன நெருங்கி வந்தான்.
 
 
“ச்சு இன்று அலுவலகம் போகணும் வேலை இருக்கு” அவன் மார்பில் கை வைத்து தள்ள முயல “ச்சு நிமிர்ந்து முகத்தை தான் பாரேன்” அவன் குரல் கெஞ்சியது.
 
 
அவளோ சிலை போல் நிற்க சட்டென குனிந்து அவன் அடையாளத்தில் இதழ் பதித்தவன் “இன்று பன்ஜாபி போட்டுட்டு போம்” என்று உள்ளே சென்று விட்டான்.
 
 
அவன் இதழினதும் கன்னத்தில் உரசி சென்ற கேசத்தினதும் ஸ்பரிசமும் எங்கோ அழைத்து செல்ல கையிலிருந்த டவலில் முகம் புதைத்தாள் பாவை.
 
 
 
 
நெற்றியில் இருந்த தழும்பை சிறு கண்ணாடியில் பார்த்தவாறே கேட்டாள் “பத்து மாதம்”
 
 
ஒரு கணம் ஆழ்ந்து பார்த்த மருத்துவர் “அது என் கையில் இல்ல” என்றார்.
 
 
***
 
 
“நான் சொன்னது போலவே செய்து விடுங்கள் அங்கிள்” என்றாள் யதி.
 
 
“நீ வரமாட்டாய் என்றான் மாறன்”
 
 
“காயத்திற்கு மருந்து கட்டப் போனேன்”
 
 
“தனியாகவ போனாய்? சொரூபனிடம் உண்மையை சொல்லலாம்தானே”  ஆதங்கமாய் கேட்டார் இளங்கோ.
 
 
சற்று நேரம் யோசித்து விட்டு “இன்று சொல்கிறேன். உங்களுக்கு என் நிலைமை தெரியும். சோ நான் சொன்னது போலவே செய்துவிடுங்கள். கார்மென்ஸ் கம்பனி சொத்துகள் அனைத்தும் என் உழைப்பில் உருவானது ஜானகிக்கும் அன்டிக்கும் என்று எழுதியிருக்கிறேன். அதையும் பார்த்து செய்து விடுங்கள்” என்றவள் முகத்தில் உணர்வு என்பது மருந்துக்குமில்லை.
 
 
மாறன் கோப்புகளை கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கிக் கொண்டவள் “வருகிறேன்” என்ற வார்த்தையுடன் விட பெற்றாள்.
 
 
அவள் முதுகையே ஆதங்கமாய் பார்த்திருந்த இளங்கோவை பார்த்த மாறன்  தந்தைக்கு ஆறுதலளித்தான் “சொரூபன் படு கெட்டிக்காரன், இரண்டு நாட்களுக்கு முன் சிறிதாய் கோடுதான் காட்டினேன். நிச்சயம் வரை கொண்டு வந்து விட்டான். இதையும் லேசுபாசாய் அவன் காதில் போட்டால் போதும் மீதியை அவன் பார்த்துக் கொள்வான்.”
 
 
“காலம் கடந்து விட்டதோ என்று தான் யோசிக்கின்றேன்” பெருமூச்சை விட்டார் அவர்.
 
 
மாறன் நினைத்தது போல் சொரூபனிடம் சொல்லியிருந்தால் அனைத்தும் மாறியிருக்குமோ என்னவோ, இல்லை அதுதான் விதியோ! அவர் அவனிடம் கதைப்பதற்கு முன்பே அடுத்த நாள் அதிகாலை விமானத்திலேயே கொழும்புக்கு புறப்பட்டிருந்தான்.
 
 
Reply
Share:

error: “These tales are woven with care. Please don’t copy—let the words live here.”