Heart Touching Love Story உன்னை நான் யாசிக்கின்றேன் (Unnai Naan Yaasikkindren) Chapter – 05
ஆசிரியர் குறிப்பு (Author’s Note)
‘உன்னை நான் யாசிக்கின்றேன்’ (Unnai Naan Yaasikkindren) என்பது நந்தகியாகிய எனது (Nandhaki) சுயப்படைப்பு. இது முன்பு எனது தனிப்பட்ட வலைப்பூவில் வெளியானது, தற்போது முழுமையாக NandhakiNovels.com தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. காப்புரிமைப் பெற்றது.
இந்த அத்தியாயத்தில் (In this Chapter):
தம்பியின் காதலை அறிந்த அச்சுதனின் அக்கா சுபத்ரா தம்பிக்கா பெண் கேட்டு போன பொழுது என்ன நடந்தது? சுபத்ராவுக்கு சன்விதா சொன்ன பதில் என்ன? அச்சுதனே கலங்கி போகும் அளவு! கதையில் பார்ப்போம் வாருங்கோ!
யாசகம் ♥ 05
திடீரென அடித்த ஃபோன் அவனது நினைவுகளை கலைக்க எடுத்து காதில் வைத்தவன்
“எஸ் சரவணன்…”
அந்த பக்கம் அவன் சொன்னதை கேட்டு கண்களில் ஒரு கணம் பாறையின் கடினம் தென்பட “Do as I say….” அவ்வளவுதான் போனை கட் செய்தவன் மனம் மீண்டும் அவளின் நினைவுகளை சரணடைந்தது.
♥♥♥♥♥
அடுத்த நாள் காலை டைனிங் டேபிளில் சாப்பாடு எடுத்து வைத்தவாறு அவனது அக்கா சுபத்ரா பாட்டு பாடி கொண்டு இருந்தாள் “கொக்கு சைவ கொக்கு….. கொண்டை மீனை கண்டு….”
“அக்கா…..” அச்சுதன் சிறிது வெட்கத்துடன் அழைத்தவன் அத்தானுக்கு அருகில் மேசையில் அமர்ந்து கொண்டான்
அவனை பிடித்து கொண்டாள்.
“யாருடா அந்த பெண், கண் இமைக்கும் நொடியில் இவ்வளவு மாற்றதை உன்னில் கொண்டு வந்தது. அவளை சந்திக்கணும், என்ன செய்கிறாள், எப்படி இருப்பாள், கருப்பா சிவப்பா பொது நிறமா, குண்டா ஒல்லியா, உன் உயரத்துக்கு இருப்பாளா, அழகா இருப்பாளோ, எப்படி இருந்தாலும் பிடிக்கும் ஆன எப்படி இருப்பாள் என்று தெரிய வேண்டுமே…. ஹ்ம்ம்… ஆ… ஃபோட்டோ இருக்கும்ல, காட்டு காட்டு….”
இருவரும் ஒரு கையினை கன்னத்தில் ஊன்றி மறு கையை மேசைக்கு குறுக்காக வைத்து சிரிப்பை கன்னத்துக்குள் அடக்கியபடி பார்த்துக் கொண்டு இருந்தனர். அவள் ஒரு வழியாக கேட்டு முடிந்து என்று இருவரையும் நிமிர்ந்து பார்த்தாள்.
“என்ன என்ன ஆச்சு ஏன் பதில் சொல்லல” என கேட்டாள்.
“எங்க சொல்றது, பதில் சொல்றதுக்கு கொஞ்சமாவது டைம் கொடுக்கணும்ல” அவளது கணவன் அர்ஜுன் சமயம் பார்த்து காலை வாரினன்.
“பதிலை நானே சொல்லட்டுமா அல்லது அதையும் நீங்களே சொல்லிக் கொள்கிறீர்களா?” திருவிளையாடல் சிவாஜி பாணியில் கேட்டான் அச்சுத கேசவன்.
“இதுக்கு மட்டும் ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்துடுங்க” என சிணுங்கியவள் உங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு கிடையாது என்றவாறு எடுத்த கரண்டியை வைப்பது போல் நடித்தாள். அருகே எழும்பி வந்த அச்சுத கேசவன் அவளது தோளை தொட்டு “அக்கா…. அவள் எங்கே இருக்கிறாள் என்று எனக்கு இன்னும் தெரியாது”
“நீ அவளை பார்த்து எவ்வளவு காலம்”
“சரியாக அறுபது நாட்கள்”
இப்போது கணவன் மனைவி இருவரும் சிரிப்பை உதடுக்குள் மறைத்தனர்.
“இன்னும் உன்னால கண்டுபிடிக்க முடியல,”
“அப்படியில்ல….,”
“இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு” திருப்பி கேட்டாள் சுபத்ரா.
“அப்படி இல்ல அக்கா அத்தான் சொல்றதுக்கு முதல் எனக்கு என்ன ஆச்சுன்னு எனக்கே தெரியல அதான்….” என்று தயங்கியவன் மேற்கொண்டு கூறினான் “இப்பதான் தெரிஞ்சிட்டே இன்னும் இரண்டு வாரத்தில் அவளை தூக்கிட்டு வந்து உங்கள் முன் நிறுத்துகின்றேன்” புன்னகையுடன் கூறினான்.
“ஏது தூக்கிட்டு வர்றியா….” அதிர்ந்து போய் பார்த்தாள் சுபத்ரா “கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வாரேன் என்று சொல்லு” செல்ல கண்டிப்புடன் கூறினாள்.
“என்ன கல்யாணம்…..” இப்போது அதிர்வது அவனது முறையாயிற்று.
அவ்வளவு நேரம் இருவர் முகத்திலும் இருந்த சந்தோசம் ஊசி குத்திய பாலுன் போல வெடித்துவிட்டது.
கணவனை நோக்கி கேட்டாள் “சுபத்ரா, நீங்கதானே சொன்னீங்க இவன் காதலிக்கிறான், கல்யாணம் செய்வான்.” விட்டால் அழுதுவிடுவாள் போல இருந்தது அவள் குரல்.
“இல்லையே, நான் எப்பவும் அவளோட இருக்கனும் என்றுதானே………..” அச்சுதன் குழப்பத்துடன் அத்தானை பார்த்தான்.
வாய்க்குள் வைத்திருந்த நீரை விழுங்காமல் கன்னம் உப்பியபடி இருக்க இருவரையும் டென்னிஸ் மாட்ச் பார்ப்பது அங்கும் இங்குமாய் பார்த்து கொண்டிருந்தான் அர்ஜுன்.
“கல்யாணம் செய்யாமல் எப்பிடிடா எப்போதும் ஒன்றாக இருக்கிறது…” சுபத்ரா தலையை பிய்த்து கொள்ளாத குறையாக கேட்டாள்.
“கல்யாணத்துக்கும் அதுக்கும் என்ன அக்கா… சம்பந்தம்”
“அப்ப துரை என்ன ஐடியல இருக்கிறீங்க?”
“யூ நோ அக்கா, எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்ல” தோளை குலுக்கியவாறே “அவள் ok சொன்ன கையோட கூட்டிட்டு வந்துடுவேன்”
“கூட்டிட்டு வந்துவிடுவாயா..”
“ஹம்…”
“நீ என்னடா கூட்டிட்டு வாரது, நானே அவள் அம்மா அப்பாட்ட போய் பேசி நல்லா மாப்பிள்ளையாக பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறான். மறந்தும் உன்னை பக்கதில விட கூடாது என்றும் சொல்றன்” உச்சகட்ட கடுப்பில் சுபத்ரா ‘டங்க்’ என்று கரண்டியை மேசையில் வைத்தாள்.
“அக்கா நோ…”,
“என்னடா நைநை… “
“அவள் எப்போதும் என்னோட தான் இருக்கணும்” அதைச் சொன்ன அச்சுதனையின் கண்களில் அப்படி ஒரு தீவிரம்.
“கல்யாணம் பண்ணாமல் அந்தப் பெண் உன்னுடன் வருவாளா?” எரிச்சலுடன் கேட்டாள் சுபத்ரா.
“கல்யாணம் செய்து கொண்டால் என்னுடன் இருப்பாளா?” கண்களில் ஆவலுடன் கேட்டான் அச்சுதன்.
தம்பியின் அப்பாவித்தனத்தில் சுபத்திராவுக்கு சிரிப்பு வந்தது, புன்னகையுடன் கூறினாள் “நிச்சயமாக”
“சரி அப்படியானால் அவளையே கல்யாணம் செய்து கொள்கிறேன்” இன்று மழை பெய்யும் என்பது போல் இலகுவாக பதிலளித்தான்.
அவளைப் பார்த்து உதட்டை சுழித்தவாறு ராகமிழுத்தாள் “நீ சம்மதித்தால் மட்டும் போதுமா அச்சு கண்ணா அந்த பெண் சம்மதிக்க வேண்டாமா”
கர்வத்துடன் சொன்னான் அச்சுதன் “சம்மதிப்பாள் அக்கா சம்மதித்தே ஆக வேண்டும்” வெட்கத்தில் ரோஜாவாய் சிவந்த அவள் முகம் நினைவில் நிழலாட புன்னகை உதட்டில் உறவாடியது.
“எனக்கு அவள் சம்மதம் முக்கியம் எங்கு இருக்கிறாள் என்று கண்டுபிடிடா, நீ போய் பேசுவதற்கு முதல் நாங்கள் சென்று பேசுகின்றோம்” அவன் சிகையை கலைத்துவிட்டு சென்றாள் சுபத்ரா.
முகம் கொள்ளா புன்னகையுடன் தலையசைத்த அச்சுதன் போனை எடுத்து அனைத்து விடயங்களிலும் வலது கையாக இருக்கும் தன் நண்பன் அருணுக்கு அழைத்தான்.
♥♥♥♥♥
அச்சுதகேசவன் ஒன்றை நினைத்து அது நடக்காது என்ற பேச்சே இல்லை எண்ணி 48 மணித்தியாலத்தில் அவளது மொத்த விபரங்களும் அவனது கையில் இருந்தது.
அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது அவள் அவன் வசிக்கும் அவன் நகரில் மறுபுறத்தில் வசித்தாள். கைகளால் பின் கழுத்தை அழுத்தியவன் “நீ இவ்வளவு பக்கத்திலேயே இருக்கிறாய் நான் எப்படி உன்னை கண்டு கொள்ளாமல் விட்டேன்” தனக்குத்தானே பேசியவன் அவள் வழமையாக செல்லும் அருகில் உள்ள விஷ்ணு ஆலயத்துக்குச் சென்றான்.
அந்த கோயிலின் கண்ணின் சந்நிதி முன்னே நின்றிருந்த சன்விதா “கண்ணா ப்ளீஸ் எப்படியாவது அவனை கண்ணில் காட்டேன். நான் சின்ன பொண்ணு இல்ல எங்க போய் தேடுவேன்” கண்ணனிடம் மனு போட்டுக் கொண்டிருந்தாள்.
ஏனோ அருகே செல்லாமல் தூரத்தில் இருந்தே அவளை ரசித்துக் கொண்டிருந்தான் அச்சுதன். இன்று சாதாரண சுடிதார் அணிந்து வந்திருந்த அவன் தேவதை கண்களில் ஒரு மயக்கத்துடன் கண்ணனிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.
அவளை நெருங்கி பேச காலெடுக்க யாரோ அவன் தோளில் கைவைத்தனர். அவனது அந்த வகை பார்டி நண்பர்களில் ஒருவன் “என்ன மச்சான் புது ஆள் போல, இதுதான் பார்ட்டி எல்லாத்தையும் அவாய்ட் பண்ற ரீசனா நம்பர் இருந்தா எனக்கும் தா.. சூப்பர் ஹோம்லி பிகர், உனக்கு மட்டும் எங்கே இருந்து தான் மாட்டுதோ” அச்சுதனின் வயிற்றெரிச்சலை கொட்டியவாறு கோவிலை விட்டு வெளியே சென்றான்.
‘இவனெல்லாம் கோவில் வரல என்று யார் அழுதா….’ எரிச்சலுடன் நினைத்தவன் அவளருகில் செல்ல முன் ஒரு கணம் நிதானித்தவனின் புருவம் முடிச்சிட்டது. அவனுக்கு தான் எடுத்து வைத்திருக்கும் பெயரின் வீரியமும் ஓரளவு புரிந்தது.
அவள் கோவிலை விட்டு வெளியே செல்வதை தூணில் மறைவில் இருந்து வெளியே வந்து நின்று பார்த்தவன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு தூணில் சாய்ந்து நின்று பெருமூச்சு ஒன்றை வெளியிட்டான்.
♥♥♥♥♥
உதட்டை பிதுக்கியபடி அச்சுதனின் அறைக்கு வந்தாள் அவன் அக்கா சுபத்ரா, “அச்சு கண்ணா, எனக்கு அந்த பெண்ணை கொஞ்சம் கூட பிடிக்கவில்லை, அவளும் அவ குண்டு கண்ணும் பாக்கவே சகிக்கல” என்றவாறு அவனது அருகில் இருந்த கதிரையில் ‘தொப்’ என அமர்ந்தாள்.
அச்சுதன் தன் முன் இருந்த லேப்டாப்பில் போய் கொண்டிருந்த கான்பரன்ஸ் மெம்பர்சை பார்த்து “ஐ வில் கால் யூ லேட்டர்” என்றவாறு லேப்டாப் ஸ்கிரீனை மூடியவனின் கண்கள் திடீரென கடினமாகி அக்காவை ஆழ்ந்து நோக்கின.
“என்ன நடந்தது அக்கா… அவர்கள் அத்தானையோ உங்களையோ ஏதாவது மரியாதை குறைவாக நடத்தினார்களா?” ஒவ்வொரு வார்த்தையிலும் ஆத்திரம் எதிரொலித்தது.
“எப்ப பார் கோபத்தை மூக்கு மேல வச்சிட்டு இரு.” சுபத்ரா அவனது கவனத்தை திசை திருப்ப முயற்சிதாள்.
அச்சுதன் அழுத்தம் திருத்தமாக கேட்டான் “அக்கா… அங்கே என்ன நடந்தது”
“பிடிவாதம் பிடிக்காதே அச்சு, எனக்கு அந்தப் பெண்ணை பிடிக்கல, நம் ஸ்டேட்டஸ்க்கு பக்கத்தில கூட வர இயலாது” பிடிவாதமாகச் சொன்னாள். கை விரல்கள் முஷ்டியாக இறுக கேட்டான் “கடைசி தடவையாக கேட்கின்றேன் அங்கு என்ன நடந்தது”
“அது வந்து…..” தயங்கினாள்.
அவன் அமைதியாக பார்த்து கொண்டிருந்தான். “அவங்க அந்த பெண் சன்விதாவை உனக்கு தர முடியாது என்று மறுத்துவிட்டார்கள்.” தலையை மேலும் கீழுமாக ஆட்டியவன் “அந்த பெண்..,..” என இழுத்தான்.
“அந்த பொண்ணு அம்மா அப்பா முடிவுதான் தன்னுடையதும் என்று சொல்லிட்டாள்.” சுபத்ராவின் நீண்ட விழியோரம் மெலிதாய் கண்ணீர் துளி விழவ வேண்டாமா என்று நின்றது.
அவன் அக்காவை பக்கவாட்டில் தோளோடு அணைத்தவனிடம் “ஒரு வழியா நீ கல்யாணத்துக்கு சம்மதித்தாய், ஆன அவள்……” மேற்கொண்டு தொடர முடியாமல் தொண்டை அடைத்துகொண்டது.
“ஷ்ஷ்…. அக்கா, இது முடிவு இல்ல” அவள் தலையை வருடினான்.
“இல்ல அச்சு, தனியா அவளோட பேசினேன், அவள் ஒரு வுமானஷைர கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டாள்.”
யாரோ இதயத்தை இறுக கிள்ளியது போல் ஒரு வலி, தன் வலியை திரையிட்டவன் அக்காவுக்கு ஆறுதல் அளித்தான். “எல்லாம் சரியாயிடும் இதற்கு எல்லாம் அழுவார்களா?” நிமிர்ந்து அவனை பார்த்த சுபத்ராவுக்கு அவன் கண்களில் தெரிந்த வேட்டை பார்வை இதயத்தை கிள்ளியது போல் இருந்தது.
“நீ இதை சரி செய்ய முடியுமா?” சந்தேகத்துடன் கேட்டவளுக்கு பதிலாக கண்மூடி தலையசைத்தவனிடம் மீண்டும் ஏதோ கேட்க வாயெடுக்க “ஐம் பைன்க்கா” என்றவனிடம் எல்லா பக்கமும் தலையாட்டி வைத்தவள் அறை வாசலை நோக்கி நடந்தாள்.
நிலையருகில் நின்றவள் லேசாக திரும்பி கேட்டாள் “தம்பி நீ இத யாருக்கும் தீங்கு இல்லாமல் செய்வாய்தானே” அவன் பதிலளிக்கவில்லை தலையில் மட்டும் கண்டு கொள்ளா முடியாத அளவு ஒரு மெல்லிய அசைவு. அது ஆம் என்றும் இல்லாமல் இல்லை என்றும் இல்லாமல் இருந்தது.
தனது ஃபோன் ஸ்கிரீன்னை பார்த்தான் அதில் சன்விதா பலவகையான பூக்களை கைகளில் ஏந்தி தானும் ஒரு பூவாய் சிரித்து கொண்டிருந்தாள். கடந்த காலத்தை அவன் விட்டாலும் அது அவனை விடுவதாய் இல்லை. கைகளை பாக்கெட்டில் விட்டு அண்ணந்தவன் நீண்ட மூச்சினை வாய் வழியாக விட்டான்.
“வுமனைசர்….” அந்த வார்த்தைகளை மெதுவே முணுமுணுத்தவன் அசைவின்றி சில கணங்கள் அப்படியே நின்றான். மூன்று மாதங்களுக்கு முன் யாராவது வெறும் ஒரு வார்த்தை உயிரை கொல்லும் வலியை தரும் என்று சொல்லியிருந்தால் நம்பியிருக்கவே மாட்டான் தன் அனைத்து சொத்துகளினையும் பந்தயமாக வைத்திருப்பான்.
“நீ பார்க்க ரோஜா பூ மாதிரி மென்மையாதான்டி இருக்கிறாய், ஆன குத்தும் மூள் நிறைந்த ரோஜா பூ”
குனிந்தவனின் கண்கள் பனித்திருந்தது.
தொடரும்… (To be continued)
Previous Chapter
Next Chapter
© 2025 Nandhaki Tamil Novels. All rights reserved. Unauthorized reproduction or distribution of this material is strictly prohibited.

Comments on “யாசகம் ♥ 05”